10.கண்ணாளனின் கண்மணியே!!!

0
600

கல்யாணத்திற்கான விஷயங்கள் அனைத்தும் துரித கதியில் நடந்து கொண்டிருக்க அந்த விழாவின் நாயகன் நாயகியோ இதற்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருந்தனர்…

கல்யாணத்திற்கு இரு தரப்பிலும் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் என்றும் ரிசப்ஷனுக்கு நட்பு வட்டாரம் மற்றும் தொழில்முறை நட்புக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்…..

கல்யாணம் எளிமையாக கோவிலில் நடத்த திட்டமிட்டிருந்தனர்… பெண் அழைப்பு போன்ற சடங்குகளுக்கு அபய் மறுத்ததால் கல்யாணத்திற்கு முந்திய நாள் வரை இருவராலும் ஒருவருக்கொருவர் பார்க்க முடியாமலேயே போனது…

திருமணம் கோவிலில் என்பதால் கோவிலுக்கு அருகிலேயே ஒரு பெரிய ஹோட்டலில் இரு குடும்பத்தினருக்கும் ரூம் புக் பண்ணி இருந்தது.. அபய் மட்டும் தான் வீட்டில் இருந்தே வந்து விடுவேன் என்று கூறியதால் அவனுக்கு துணைக்கு பாலாவை அமர்த்தியிருந்தார் காமாட்சி அம்மாள்…

காமாட்சி அம்மாள் தன் பேரனுடைய திருமணம் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு விஷயத்தையும் பாலாவின் உதவியுடன் மெனக்கெட்டு செய்து கொண்டிருந்தார்…

திருமண நாளும் வந்தது… ஹோட்டலில் பியூட்டிசியன் உதவியுடன்
எளிமையான ஒப்பினையுடன் தயாராகிக்கொண்டிருந்தாள் மகிழினி…

இங்கோ பாலா விடியற்காலையிலேயே
அபயை எழுப்பிவிட அவனோ எழுந்திரிக்காமல் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தான்… ஒருவழியாக அவனை எழுப்பி தயார் படுத்தி இருந்தான் பாலா..

பாலவிற்கோ அபயின் பிகேவியர் குழந்தை தனமாக இருந்தது… டேய் அபய் உன்ன ரெடி பண்றதுக்குள்ள எனக்கு போது போதும்னு ஆயிருச்சு….
ஆனா மாப்புள சும்மா சொல்ல கூடாது இந்த பட்டு வேட்டி சட்டைல செமையா இருக்கடா… பொண்ணு உண்ண பாத்த உடனே மயங்கிருவா பாரேன்… என்க அதற்கு அபயோ நக்கலாக பரவால்ல மச்சான் அவ மயங்கிட்டானா அவளுக்கு இந்த கல்யாணம் புடிக்காம விஷம் குடிச்சுட்டான்னு கல்யாணத்தை நிறுத்திரலாம் என்றான்..
பாலவோ நீ செஞ்சாலும் செய்வடா… பேசாம வாய மூடிட்டு வாடா என்று அழைத்து சென்றான்….

கோவிலுக்கு சென்று பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகொண்டு மணமேடையில் அமர்ந்தான் அபய் மாப்பிள்ளை தோழனாக பாலாவே உடன் இருந்தான்… இதில் ஐயர் வேறு அதை சொல் இதை சொல் இதை அதுல போடு அதை இதுல போடு என்று சொல்ல கடுப்பின் உச்சிக்கே சென்று கொண்டிருந்தான் அபய்…

அவனின் பொறுமையை அதிகம் சோதிக்காமல் எளிய ஒப்பனையுடன் அழகு பதுமையாக வந்து சேர்ந்தாள் மகிழினி…

தங்க சிலை போல் வந்த மங்கை அவளை பார்த்தவனின் மனமோ அழகில் மயங்குவதற்கு பதிலாக கோபக்கணலில் எரிந்து கொண்டிருந்தது… யாரை இவன் வார்த்தைக்கு வார்த்தை பட்டிக்காடு என்றானோ அவளே இவன் வாழ்வின் பாதியாக வருவதை அபயால் ஏற்று கொள்ள முடியவில்லை இருந்தும் இதிலிருந்து மீண்டு வர முடியாத சூழ்நிலை கைதியாகி போனான் அபய்…

மகிழினிக்கும் அதே நிலைமை தான்
யாருடன் 8 மணி நேர வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்ததோ அவனுடனே இனி வாழ்நாள் முழுவதும் இதிலும் அவன் குணம் அறிந்திருந்ததால் இவனுடன் கழிக்கும் நொடி பொழுதும் ரணமாக தோன்றியது அவளுக்கு…..

இருவருக்கும் போட்டோ பாக்காமல் இருந்தது எவ்வளவு முட்டாள் தனம் என்று தோன்றியது….

மகி மெதுவாக நடந்து வந்து அவன் அருகில் அமர்ந்தாள் பெண் தோழியாக அவள் உறவினரில் அவள் வயதை ஒத்த ஒரு பெண் நின்றிறுந்தாள்…

அபய் மற்றும் மகிக்கு அணல் மேல் இருந்தது போல் ஒரு தவிப்பு…
ஐயர் அவளுக்கும் சில சடங்கு சம்பிரதாயங்கள் சொல்ல கிதை பயத்துடனே செய்து கொண்டிருந்தாள் மகி…

சில நிமிடங்களில் மேள தாளங்கள் முழங்க மங்கை அவள் கழுத்தில் மங்கள நாணை அணிவித்தான் அபய்…

ஒருவருக்கு வாழ்வின் எது இன்பமான தருணமோ அதுவே இவர்களுக்கு வேண்டா வெறுப்பாய் அமைந்தது…

அவர்களின் இல்லறம் சிறக்குமா????

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here