10.என்னவள் நீதானே

0
582

சிவாவோ ஆராதனைவை ஓரக்கண்ணால் பாத்தபடியே மொபைலில் மூழ்கியிருக்க ஆராதனாவோ ஆதவிடம் அன்று நடந்த பிரச்சனையை பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள்.

ஆரா,”ஏன்னா அன்னிக்கு யார் ஆக்சிடெண்ட் பண்ணங்கன்னு கண்டு பிடிச்சுட்டீங்களா”

ஆதவ்,”இல்லமா ஒரு சில பேரு மேல சந்தேகம் இருக்கு யாருன்னு இன்னும் கண்டு புடிக்கல”

ஆரா,”உங்க கிட்ட ஒன்னு கேட்கவா, தப்பா நினைக்கமாட்டீங்கல”

ஆதவ்,”சொல்லு மா…”

ஆரா,” எனக்கு கூட பொறந்தவங்க யாரும் இல்லை… அதனால உங்களை உரிமையா அண்ணனான்னு கூப்பிடறேன் அதுல உங்களுக்கு ஒன்னும் ப்ரோப்ளேம் இல்லையே”

ஆதவ் மனதிற்குள் மகிழ்ந்து தான் போனான், இருக்காதா பின்ன சிவா ஜானுவை பாத்து இந்த உலகில் எத்தனை உறவுகள் இருந்தாலும் அண்ணன் தங்கை உறவு சிறந்தது என எண்ணியவன் ஆரா பேசியதை கேட்ட பின்பு புன்னகையுடன் சிவாவை நோக்க அவனோ ஆதவ்வையே ஆர்வமாக பாத்து கொண்டிருந்தான்….

சிவாவின் பார்வையை உணர்ந்தவன் ஆராவிடம்,”என்னடா இப்படி சொல்லிட்ட நீ மொதல்ல அன்னிக்கு என்ன காப்பாத்திட்டு அண்ணானு கூப்பிடும் போதே நான் உன்ன என் தங்கச்சியா தான்டா பாத்தேன்”..

ஆரா ஆதவிடம் மகிழ்ச்சி பொங்க புன்னகைத்து விட்டு சிவாவை பாக்க,

அதை கவனித்த ஆதவ்….ஆராவிடம்,”என்னடா என்ன நீ அண்ணனா ஏத்துகிட்டு இதோ இங்க இருக்கறானே என் உயிர் நண்பன் அவனையும் உனக்கு அண்ணனா ஏத்துக்கிறயானு கேட்டவன் பின் நினைவு வந்தவனாய் வேணாம் அண்ணனா நான் உனக்கு இருக்கேன் நீ வேணாம் தம்பியா நினைச்சுக்கோ”னு நக்கலா சொல்ல… அவன் சொல்லும் போதே இருவரின் முக மாறுதல்களையும் கவனித்திருந்தான்…..

ஆரா,” இல்லனா அவருக்கு எப்படியும் உங்க ஏஜ் இருக்கும் நான் எப்படி தம்பினு சொல்ல முடியும் அதும் இல்லாம அவரு பெரிய பிசினஸ் மேன் அதனால தம்பினு சொல்ல முடியாது வேணும்னா உங்களுக்காக நாங்க பிரண்ட்ஸ் ஆகிடறோம்னானு” அவ சொல்லி சமாளிக்க… சிவாக்கு அப்போ தான் மூச்சே விட முடிஞ்சது இருந்தும் கெத்த மெயின்டைன் பண்ணிட்டு இருந்தான்.

சிவாவோ,மவனே உனக்கு இன்னிக்கு இருக்குடா என்று ஆதவை மனதுக்குள் திட்டியபடியே அவனை மொராச்சுட்டு இருந்தான்..

அப்போ தான் நேம் ரெஜிஸ்டர் பண்ண போன ஜானு திரும்பி வர ஆதவ் வேற ஒரு பொண்ணு கூட பேசரத பாத்திட்டு கடுப்பாகி வேகமா வந்தா…

இருக்காதா பின்ன ஒரு வருசத்துக்கு முன்னாடி தன் அண்ணனை பழைய நிலைமையில் இருந்து மீட்க அவனது நண்பனான ஆதவ்க்கு உதவி பண்ணும் போதே ஆதவ்வை பற்றி நன்கு அறிந்த பின் அவனின் மேல் அவளுக்கு ஆசை எழ அதை அறிந்த ஆதவ்வோ அவளை பிடித்திருந்த போதும் நண்பனுக்காக அவளின் ஆசையை முளையிலேயே வெட்டியவன் ஆயிற்றே…..

ஜானு, என்ன வேணாம்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு இன்னொருத்திகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருக்கான்…..

கோபமாக வந்த ஜானுவோ ஆதவ்வை நோக்கி கையை கட்டிக்கொண்டு…. தன் அண்ணன் அறியாமல்,இவங்க யாருனு குரலில் கோபம் காட்டாமல் கண்ணில் கோபக்கனல் கொண்டு கேட்க…

ஆதவ், இவ ஏன் இப்படி கோபமா பாக்கரானு யோசிக்க….

சிவா,ஜானுவிடம் இது “ஆதவோட புது சிஸ்டர்டா”னு சொல்ல

சிவா,ஜானுவிடம் அன்று நடந்ததை மேலோட்டமாக கூறினான்..(ஆக்சிடெண்ட் பத்தி ஏதும் சொல்லாம ஜஸ்ட் கார் இடிக்கிற மாதிரி வந்துச்சுனு மட்டும் சொல்லிட்டான்)

ஜானு ஆதவ்வை முறைக்க அப்போ
ஆராதனா ஆதவ்விடம்,”அண்ணா இவங்க யாருனு” கேக்க அவளின் அண்ணா என்ற அழைப்பில் பின் தான் ஜானுவின் கோபம் குறைந்தது…

ஆதவ்,” இவ பேரு ஜானு சிவாவோட சிஸ்டர்”அப்போ தான் நியாபகம் வந்தவனாய் இனியன் எங்கனு ஜானுட்ட கேட்டான்..

ஜானு,”அவன் பசங்க கூட பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு போனான்னு சொன்னா”

ஆதவ் ஆராவிடம் சரிடா என் தம்பியை உனக்கஅறிமுகப்படுத்தலாம்னு நினைச்சேன் அவன் பேரு இனியன் அவன் வந்ததும் உன் கிட்ட காட்டறேனு சொல்ல….

ஜானு ஆதவ்விடம், “உங்க சிஸ்டர்கிட்ட எங்க கிட்ட அறிமுக படுத்த மாட்டீங்களோனு கேட்க….

ஆராவே ஜானுவிடம் தன்னை அறிமுக படுத்திக்கொண்டு இருவரும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டார்கள்…அவளின் குழந்தைத்தனம் ஜானுவுக்கும் பிடித்திருந்தது…

அப்போ தான் ஆதவ் அன்னிக்கி ஜானுவோட அம்மா மயங்குனப்ப அவ பண்ணத பத்தி எல்லாம் சொன்னான்…

அவளை புரிந்து கொண்ட ஜானு அவளருகில் சென்று அவள் கரத்தை பற்றி ரொம்ப தேங்க்ஸ்னு சொல்ல… ஆராவோ போதுங்க அன்னிக்கே உங்க அண்ணன் நிறைய தேங்க்ஸ் சொல்லிட்டாரு…

ஆரா ஜானுவிடம்,”நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு தானே நம்ம வா… போ… னே பேசிக்கலாம்… இந்த வாங்க போங்க எல்லாம் ரொம்ப பார்மலா இருக்கு பா”

ஜானுவும் சிரித்துவிட்டு சரி என்றாள்…
அதற்குள் ஆராவின் வானர பட்டாளமும் வந்து விட இவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பினாள்…

ஜானுவோ ஆதவ்வை முறைத்துவிட்டு போட்டியில் கலந்துக்க சென்று விட்டாள்…

ஆதவ்வோ எதுக்கு இவ மொரைச்சிட்டு போறான்னு யோசனையில் இருந்தான்…அவளின் மனம் அறிந்தும் அறியாதது போல்……

இதற்கிடையில் கண்ணன் ஆராவை பழி வாங்கும் நோக்கோடு அவள் செல்லுமிடமெல்லாம் பின் தொடந்தவன் ஆரா ஆதவிடம் பேசியதை பார்த்துக்கொண்டே வெறியோடு சென்றான்….

போட்டியும் சிறிது நேரத்தில் தொடங்கியது…
கொஞ்ச நேரத்துலயே ஜானு பாட மேடை ஏறி தனக்கு மிகவும் பிடித்த பாடலான செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் பாடி முடிக்க மேடை எங்கும் பலத்த கரகோஷம்…சிவாவும் ஆதவ்வும் கை தட்டி ரசித்து கொண்டிருந்தனர்….

அடுத்த கொஞ்ச நேரத்தில் ஆரவோட குரூப் டான்ஸ் வர…. அந்த டீம் ஒரு ஆல்பம் சாங்க்கு பெர்பார்ம் பண்ண…அவங்களோட நடனமும் ரொம்ப அருமையா இருந்துச்சு…

தன்னவளின் நடனத்தை ரசித்து பாத்திருந்த சிவாவோ, இவளுக்கு வாய் மட்டும் தானு நினைச்சேன் டான்ஸ்லயும் பின்றானு தனக்குள்ளேயே அவளை புகழ்ந்து தள்ளி கொண்டிருந்தான்….

இனியனோட பெர்பார்மன்ஸ்க்கு கொஞ்சம் டைம் ஆகும்னு அதனால எல்லாரும் கொஞ்சம் டீ குடிக்கலாம்னு கேன்டீன்க்கு செல்ல… அப்போ தான் சிவாக்கு ராமிடம் இருந்து கால் வர…
அதை பார்த்தவன்..
ஆதவிடம்,”மச்சான் நீ ஜானுவை கூப்பிட்டு போ, நான் பின்னாடியே வரேன்”

ஆதவ்,”சரிடா,சீக்கிரம் வாடா”னுட்டு போயிட்டான்…

அப்போது தான் ராம் சிவா இவ்ளோ நாள் தேடிட்டு இருந்த நபரை பத்தின தகவல் வர அதை கேட்டு மகிழ்ந்தான்…

சிவாவின் மகிழ்ச்சி ஒரு நிமிடம் கூட நிலைக்கவில்லை…. அதற்குள் ஆராவின் அலறல் இவன் செவியை வந்தடைந்தது………

ஆராவை சிவா காப்பாற்றுவானா???

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here