அத்தியாயம் 10
அண்ணி இங்க வாங்க என்று அகி
டார்லிங் எனக்கு கொஞ்சம் காபி தரியா என்றான் மகி
அம்மு எனக்கு இதை சொல்லி தா என்றான் தமிழ்
ஒருஒருத்தங்களா கேளுங்கடா எனக்கு என்ன பத்து கையா இருக்கு
டேய் அகி நீ எதுக்கு கூப்பிட்ட… இங்க வாங்க அண்ணி வந்து பாருங்க இந்த மகி பையன் பண்ணி வச்சிருக்க வேலைய பாருங்க
அப்படி என்னதான் பண்ணி வச்சிருக்கான்
அண்ணி என் ஃபேஸ்புக் அக்கவுன்ட்
பாஸ்வேர்டை எப்படியோ கண்டுபிடிச்சு என் போன்ல இருந்து மூன்று பொண்ணுங்களுக்கு மாத்தி மாத்தி கடலை போட்டுட்டு இருக்கான்
மகி உனக்கு இதெல்லாம் டூ மச்சா தெரியல
டார்லி நானே இப்பதான் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன்… இவன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஆல் செட் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கான்
இவன விட்டுட்டு என் கிட்ட போய் கேக்குறீங்க
நான் ரொம்ப சமத்து புள்ள ஏன் டார்லிங் யாரை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கையை கட்டுறாங்களோ.. அவள கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிப்பேன்..
இவன மாதிரியே நான் கிடையாது டார்லிங்
உனக்கு எப்படிடா தெரியும
டே அண்ணா அவனுக்கு மட்டுமில்ல எனக்கும் தெரியும் என்று தமிழ் சொல்ல
அகி இசையை பார்த்து நீங்க சொன்னீங்களா என்று கேட்க
இல்லடா இதுங்க ரெண்டும் உன்கிட்ட இருந்து போட்டு வாங்குது ங்க அது தெரியாம நீயே போய் மாட்டிக்கிட்டஅகி என்று இசை செல்ல
மகியும் தமிழும் hi-fi போட்டுக்கொண்டனர் ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டான்
இருந்தாலும் இந்த வயசுல லவ் பண்றாது எல்லாம் கொஞ்சம் டூ மச் தான் டா என்று இசை சொல்ல
அண்ணி நானாவது இருவது வயசுல தான் லவ் பண்றேன் ஆனா எங்க அண்ணன் 19 வயசுல உங்கள லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாரு…
எனக்கு குருநாதரே அண்ணன்தான்…..
ஆமா கேக்கணும் நெனச்சேன் நீ ஏன்டா மலர்க்கு ட்ராக்கிங் பேண்ட் குடுத்த …
ஓஒ டார்லி அப்ப சார் லவ் பண்றது மலர் தான
அண்ணி நல்லா மாட்டிவிட்டிட்டிங்க
அகி இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது தெரியதான போகுது … சரி சொல்லுடா
அண்ணி மலர்க்கு 13 வயசு இருக்கும்போது மணிமேகலை அத்தை ஒடம்பு முடியாம இறந்துட்டாங்க மலரோட தூரத்து சொந்தக்காரங்க அவள இனி நாங்க பத்துக்குறோம்னு சொல்லி அவள மதுரைக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க
எனக்கு சின்ன வயசுல இருந்தே அவள புடிக்கும் அண்ணி என்ன மாமானு சொல்லி கூப்பிட்ட மொத பொண்ணு அவதான். நா காலேஜ் விஷயமா மதுரைக்கு போயிருந்த அப்போ அவளஅங்க நடு ரோட்ல போட்டு அடிச்சிட்டு இருந்தாங்க… என்னால அவள அந்த நிலமைல பார்கவே முடில்ல அண்ணி செத்துட்டேன்.. அவகிட்ட போய் என்னாச்சுன்னு கேட்டேன் அவ அழுதுட்டேய் என்ன கட்டிபுடிச்சிட்டா அண்ணி… அந்த நிமிஷமே அண்ணனுக்கு போன் பண்ணிவரவச்சி இங்க கூட்டிட்டு வந்துட்டேன்…. வந்த புதுசுல யார்கூடயும் பேசமாட்டா எங்கயும் தனியா போகமாட்டா சிரிக்கக்கூடமாட்ட இப்போதான் கொஞ்சநாளா நார்மலா இருக்கா அவளுக்குள்ள நெறய பயம் இருக்கு அண்ணி.. அதுக்கு தான் அவளுக்காக பேண்ட் ரெடி பண்ணேன்…. இனி எப்போதும் அவ பயப்படதேவைல்லா……[ அகி மறைமுகமாக சொல்லவருவதை இசை புரிந்துகொண்டால்]
டேய் அப்போ நீதாண்டா லவ் ல சீனியர் என்று மகி சொல்ல
டேய் சத்தமா பேசாத டா என்று அகி சொல்ல
மலர் ரொம்ப சின்ன பொண்ணு அகி அவ நல்லா படிக்கட்டும் அவளை டிஸ்டர்ப் பன்னாத
அதுலாம் பண்ணமாட்டேன் அண்ணி என்று பச்சை குழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டான்.. டேய் இதுமாரி முகத்தை வைக்காத இந்த பூனையும் பால் குடிக்குமான்னு பார்த்த புள் பீர் அடிக்குது என்றான் மகி
இவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்துக்கொண்டே அங்கு வந்த இனியன்… இசை இடம் இன்னைக்கு நைட் நான் ஊருக்கு போறேன் நீயும் வரியா போயிட்டு ரெண்டு நாள்ல வந்து விடலாம் என்று கேட்க
டேய் அய்யனார் ஏதோ பிளான் பண்றாரு …….காப்பாத்துங்க டா
இவர்கள் வாய் திறப்பதற்குள் அங்கு வந்த கவி அண்ணா நீ மட்டும் போயிட்டு வா அண்ணி இங்க இருக்கட்டும் என்று அழுத்தமாக சொன்னான் …வேணும்னா எல்லாரும் போலாம் என்று கவி சொல்ல
[ நானே அவ கூட தனியா இருக்கலாம்னு பார்த்தா விடமாட்டீங்க போல என்று மனதுக்குள் அனைவரையும் திட்டிக் கொண்டிருந்தான்..]
ஏன்டா இவளை கூட்டுப் போன உங்களுக்கெல்லாம் என்ன வந்துச்சு.. அப்படிலாம் ஒன்னும் இல்ல நிச்சயதார்த்த வேலை இருக்குல அதுக்கு புடவை எல்லாம் எடுக்க வேண்டும் அதனால் தான்
அதுக்கு என்னடா நீயும் கயலும் போய் பார்த்து எடுத்துட்டு வாங்க அதுக்கு எதுக்கு இசை இங்க இருக்கணும்…
அண்ணி செலக்ட் பண்ணா நல்லா இருக்கும் ஃபீல் பண்ணேன்
சரி எப்படியோ போங்கடா என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் இனியன் ..
டேய் எனக்கு ஒரு சந்தேகம் உங்க அண்ணா என்ன பழி வாங்குறதுக்கு தானே கல்யாணம் பண்ணாரு.. ஆனா அவர் பண்றது பாத்தா அப்படி தெரியலையே.. நான் கூட உங்க அண்ணன் என்ன ஆடு மேய்க்க சொல்லுவாரு மாடு மேய்க்க சொல்லுவார் என்று நிறைய எதிர்பார்த்தேன்… ஆனா இங்க எனக்கு எந்த வேலையும் இல்லையே சாப்பிட்டு ஜாலியா தான் இருக்கேன்.. அப்புறம் ஏன் இந்த கல்யாணம் ஆனதில் இருந்து வேலைக்காரி வேலைக்காரினு சொல்லிட்டு இருக்காரு..
எப்படி டார்லிங் உன்ன பொய் எங்க அண்ணனால வேலை வாங்க முடியும்…13 வருஷமா உன்னை பத்தியே பேசிட்டு இருக்கும்..உன்ன தேடாத இடமே இல்ல தெரியுமா..ஊருல எல்லாரும் அண்ணன்கிட்ட நீ கிடைக்க மாட்டேன் சொன்னாலும் அண்ணன் மட்டும் நம்பிக்கையா இருந்துச்சு அவ்ளோ லவ் உன்மேல பட் அதுக்கு அத எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு தெரியல…
அண்ணா அடிக்கடி எங்க கிட்ட சொல்லும் நீ எங்களை அம்மா மாதிரி பார்த்து பண்ணு ஆனா ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன்னை நேர்ல பார்க்க வந்த போ நீங்க அண்ணனை வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சொன்னதுனால தான் அண்ணனுக்கு கோபம்..
ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை இசை நினைத்து பார்த்தாள்
ஆனா டார்லி உன்ன பார்த்தா பேய் புடிச்ச மாதிரி தெரியலையே
என்னடா சொன்ன..
மோகினிப் பிசாசு ஏதாவது புடிச்சு இருந்துச்சா ன்னு கேட்டேன் உங்க வீட்டுல பேய் ஆட்டம் ஆடுநியாமே மறுபடி அது மாதிரி ஆடு பாப்போம் டேய் உன்ன இன்னிக்கு கொள்ளலாமா விட மாட்டேன் டா என்று சுற்றும் முற்றும் ஏதாவது கிடைக்குதா என்று அவள் பார்க்க
வேண்டாம் பார்லி என்ன கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு போக வேணாம்.. உன்ன நம்பி இங்க நிறைய பேர் இருக்காங்க நான் தான்
உங்களை நம்பி இருக்கேன் சின்ன வயசுல இருந்தே தனியா இருந்துட்டேன் ரொம்ப ஆசையா இருக்கும் நிறைய பேர் கூட கூட்டுக்குடும்பமாக வாழணும்னு எனக்கு சித்தி பொண்ணு இருக்கா லீவ் டைம் அவ கூட தான் ஸ்பென்ட் பண்ணுவேன்.. பட் என்னதான் இருந்தாலும் அவ கூட என்கிட்ட டிஸ்டன்ஸ் மேய்டேன் பண்ணுவா அது ஏன்னு எனக்கு தெரியல.. ஆனா நீங்கள்லாம் என் மேல காட்டுற பாசத்தை பார்த்தா 13 வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டேன் தோணுது டா . இனிமேல் லைப் லாங்.. எங்கேயும் போகமாட்டேன் என்று கண்ணை துடைத்து கொண்டுஇசை செல்ல
டேய் ஏண்டா அம்முவ அழ வைக்கிறீங்க என்று தமிழ் சொல்ல
அதுலாம் இல்லடா கண்ணு வேர்க்குது என்று இசை சமாதானமாக கூற
ஆனா இந்த கிராமத்துல நீங்க மட்டும் எப்படிடா இவ்வளவு ஸ்மார்டாஇருக்கீங்க
அண்ணா ரொம்ப நல்லா படிக்கும் அண்ணி 12 ல இந்த மாவட்டத்தில் அது தான் ஃபர்ஸ்ட்.. அம்மாவும் அப்பாவும் இறந்ததுக்கு அப்புறம் அதுமேல படிக்காம எங்களுக்காகசம்பாதிக்க போயிடுச்சு அப்ப எங்க கிட்ட சுத்தமா காசு இல்ல அண்ணி .. வெறும் நிலம் மட்டும்தான் இருந்துச்சு கஷ்டப்பட்டு விவசாயம் பண்ணி அதுல வர காசை வட்டிக்கு விட்டு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ரைஸ்மில் வாங்குச்சு.. அதோட கனவு எங்க எல்லாரையும் நல்ல படிக்க வைக்கணும் என்று தான் எங்கள பெஸ்ட் காலேஜ் ல ஜாயிண்ட் பண்ணுச்சு.. தோ இவன டாக்டர் ஆக்ணும்னு ரொம்ப ஆசைப்படுது என்று தமிழை பார்த்து மகிசொல்ல இசை உனக்கு என்ன ஆகும்னு ஆசைப்படுற என்று கேட்க
எனக்கு ஒசான்னோலஜி ( oceanology ) படிக்கணும்னு ஆசை பட் அதுக்கு இங்கெல்லாம் காலேஜ் இல்லை மும்பை டெல்லி அங்க போய் தான் படிக்கணும்…அம்மு
இனிமே என் அம்முவ விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன் சோ
அண்ணா ஆசைப்படியே இங்கே ஒரு மெடிக்கல் காலேஜ் இல்லைனா இன்ஜினியர் காலேஜில் சேர்ந்து வேண்டியதான்
ஒசானோலஜி படிக்கிறது செம்ம ஸ்கோப் இருக்கு.. ஸ்கூபா டைவிங் எல்லாம் பண்ணலாம் சூப்பரா இருக்கும்
. டார்லிங் உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்.. டேய் நான் எப்போ ஹாப்பியா இருகனோ அப்போலம் ஸ்கூபா டைவிங் பண்ணுவேன்… அதே மாதிரி நான் ரிலாக்ஸா ஃபீல் பண்ணும்போது பைக் ஓட்டுவேன் ரொம்ப நாளாச்சு பைக் ஓட்டி உன் பைக் கொடு
இப்ப ஒரு டிரைவ் போயிட்டு வரேன்
அண்ணி ஒரு திருத்தம் இப்ப அந்த பைக் என்னோடது இல்லை உங்க வீட்டுக்காரர் ஓட பைக் அவர்கிட்ட போய் கேளுங்க
சரி வா
போய் கேப்போம் என்று அவனையும் இழுத்துக் கொண்டு இனியன் முன் நின்றாள்
கேளுங்க அண்ணி
டேய் நீ கேள் டா
ஐயோ என்ன திட்டுவார்.. நீங்க கேளுங்க
இருவரும் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசுவதை சோபாவில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான் இனியன்
அண்ணா உன் பைக் சாவி கொஞ்சம் கூடுங்க
ஏன்டா உனக்கு தான் வண்டி இருக்குல்ல
எனக்கு இல்லன்னா அண்ணி ஒரு ரைட் போகனுமா
சரி வர சொல்லுடா நான் கூட்டிட்டு போறேன்
இல்ல மகி நானே போய்க்குறேன்
என்னது நீ வண்டி ஓட்டு வியா என்று இனியன் அதிர
இப்ப நான் என்ன சொல்லிட்டேன் இவன் இப்படி ஷாக் ரியாக்ஷன் கொடுக்கிறான்
ஹலோ நான் பைக் ரேஸ்சர்னு சொல்லுடா உன் அண்ணன் கிட்ட
அப்போ இவ தான் இன்னைக்கு என்ன வந்து மோதினால இப்ப பாக்குறதுக்கும் அப்ப பாக்குறதுக்கும் ரொம்ப வித்தியாசமா இருக்கு….
(இதுதான் நல்ல சான்ஸ் இனியா மிஸ் பண்ணிடாத டா என்று அவன் மனசாட்சி சொல்ல)
சரி நான் உனக்கு ஏன் பைக் தரேன் என்றதும் இசையின் முகம் ஆயிரம் வார்ட்ஸ் பல்பு போட்டது போல ஜொலித்தது
ஆனா என்றவன்
என்ன என்று பார்த்தால் இசை நீ என்கூட ஊருக்கு வரணும்
அதெல்லாம் முடியாது என்று உடனடியாக அவள் மறுக்க
அப்ப என்னால பைக் தர முடியாதாது என்று இனியன் சொல்ல
வேணும்னா ஒண்ணு பண்ணலாம் உங்க அண்ணன சீட்டுக்கட்டில் என்ன ஜெயிக்க சொல்லு அவர் என்ன ஜெய்ச்சுட்டா நான் ஊருக்கு வரேன் அவர் தோத்துட்டா வண்டிய எனக்கு கொடுத்திடனும்
இவ கூட சீட்டுக்கட்டு எல்லா விளையாடி ஜெயிக்க முடியாது கண்ண பாத்து இவை எல்லாத்தையும் கண்டு பிடிச்சிடுவா
கேடி கேடி
சீட்டு கட்டு வேணாண்டா கபடி விளையாடலாம்
பார்லி ஒத்துக்காத அண்ணன்
கபடியில் சாம்பியன்
அத ஜெயிக்கவே முடியாது
என்னடா உங்க அண்ணிக்கு தோத்துடுவோம்னு பயம் போல என்று இனியன் வேணும்னே இசையை உசுப்பி விட
பயமா எனக்கா ஹாஹாஹாஹாஹாஹா என்று இசை சிரிக்க
டேய் உங்க அண்ணா ஆசை ஆசையா வாங்குன அந்த வண்டியை எனக்கு தாரைவார்த்துக் கொடுக்க ரெடியா இருக்கு சொல்லு
பார்ரா
ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது டா சொல்லிவை
இனியன் கவி ஆகி ஒரு டீ ம் ஆகவும் இசைத்தமிழ் மகி மூவரும் ஒரு டீம் ஆகவும் விளையாடத் தொடங்கினார்
டார்லி இனியன் அண்ணாவை மட்டும் அவுட் பண்ணிட்டா கவி அண்ணாவையும் அகியையும் ஈசியாஅவுட் பண்ணிடலாம்
ஃபர்ஸ்ட் இனியன் அண்ணன் தான் வரும் எப்படியாவது அதை புடிச்சு நீ இழுத்து அந்த பக்கம் தள்ளி விடு
டேய் உனக்கு இதுஅநியாயமா தெரியல உங்கண்ணனை நான் பிடிச்சு தள்ள முடியுமாடா …இரும்பு மனுசன் டா அவரு..
நம்ம தான் ஜெய்க்குறோம் நம்பிக்கைய விட்றாத டார்லி … பைக் நமக்குத்தான்
இனியன் கபடி கபடி கபடி என்று சொல்லிக்கொண்டே உள்ளே வர முதலில் மகியை அவுட் செய்துவிட்டு இசையை பிடிக்க வர இசை பின்னாலிருந்து அவனை கட்டிக்கொண்டாள்
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத இனியன் … ஒன்றும் புரியாமல் கபடி கபடி என்று சொல்லிக்கொண்டே அவளின் அருகாமையை ரசிக்க ஆரம்பித்தான் அவனால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை… இவ தெரிஞ்சு தான் பண்றாள தெரியாம பண்றாள ஐயோ கடவுளே இப்படி இம்சை பண்றாளே.. அதற்குள் இனியன் அசந்த நேரத்தில் அவனை அந்தப்புரம் தள்ளி விட்டனர்
ஆமாண்டா இப்ப நீ போயி அங்க யாரையாவது அவுட் பண்ணிட்டு வா
மகி சென்று கவியை அவுட் செய்துவிட்டு வர இனியன் அகியிடம் சென்று டேய் நீ எப்படியாவது யாரையாவது அவுட் பண்ணிடு அப்பதான் நான் உள்ளே வர முடியும் என்று சொல்ல சரி அண்ணா என்று அவனும் ஒத்துக் கொண்டான்
அகி தமிழை அவுட் செய்ய இனியன் உள்ளே வந்தான் ..இசை கபடி கபடி கபடி என்று சொல்லிக்கொண்டே இனியனை பிடிக்க சென்றாள் …என்ன எப்படி அவுட்டாககுண இருக்குடி உனக்கு மாட்டுன எப்படி ஊருக்கு தூக்கிட்டு போறேன் மட்டும் பாரு.முதலில் அவள் அகி யை அவுட் செய்துவிட்டு இனிகனிடம் வர இனியன் பின்னாலிருந்து அவள் கைகளை இரண்டையும் சேர்த்து கட்டிப்பிடித்துக் கொள்ள இசை அவன் கைகளில் விடுபட போராடும்போது அவள் ஒரு கை பிளவுஸ் கிழிந்துவிட ..அவள் கைகளைப் பார்த்து அதிர்ச்சியாகினர் அங்குஇருந்த அனைவரும்…. வட்டவடிவில் கை முழுவதும் தீக்காயம்
இனியனும் அதிர்ச்சியில் அவள் கையை விட்டுவிட இசை வெற்றி கோட்டை தொட்டு ஜெய்த்துவிட்டால்
ஆனால் யாரும் அவள் வெற்றியை கொண்டாட வில்லை
அம்மு கை புல்லா காயமா இருக்கு.. ஒன்னும் இல்லடா சூடு தண்ணீ ஊத்திகிட்டேன் … என்று சொல்லி அவ்ளோதான் என்பது போல ரூம்க்கு சென்றால்
இனியன் அவள் பின்னாடியே சென்று என்னடி இது கையெல்லாம் தீ காயம் ..சிகிரேட்டால உனக்கு சூடு வச்ச மாதிரி இருக்கு உண்மைய சொல்லுடி
அதற்கும் அவள் பேசாமல் இருக்க உன் வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க கேட்டுட்டு தானே இருக்கேன் என்று இனியன் கத்த…
இனியும் நீ பேசாம இருந்தா நான் என்ன பண்ணுவேன் என்று தெரியாது என்று சொல்லி வெளியே சென்றான் இனியன்
எப்படி சொல்லமுடியும் அவளால் .. அவன் செய்த கொடுமைகள் அப்படி…
இனியன் நேராக சென்றது முருகேசன் கடைக்குத்தான் ஏற்கனவே இசை மீது உள்ள கோவத்தை யார் மீது காட்டுவது என்று தெரியாமல் முருகேசன்டம் காட்டினான்…
டேய் உனக்கு டைம் கொடுத்து 2 நாளாச்சு ஒழுங்கா பணத்தை எடுத்து வை இல்லைனா உங்கடைய உடச்சிடுவேன்..
என்று கட்டையை எடுத்துக்கொண்டு அந்த கடைய உடைக்க போக அங்கு தொங்க பட்டுஇருந்த நியூஸ் பேப்பரை பார்த்து அதிர்ந்தான்
என் இசைதான இது என்று இன்னொரு முறை பார்த்தான் .. இசை தான் … அவனால் அவன் கண்களை நம்பமுடியவில்ல.. அப்படி அந்த நியூஸ் பேப்பர்ல என்னதான் இருந்தது ….
பார்ப்போம்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…