வாடிய முகத்துடன் அமர்ந்திருந்த ராகவியின் அருகில் வந்தார் வாணி.
இருவரும் அந்த பூங்காவில் சந்திப்பதை வழக்கமாக்கி இருந்தனர்.
“ என்னமா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” வாணி கேட்கவும்
“ ப்ச், ஒன்னுமில்ல ஆன்ட்டி” என்றாள் விரக்தியாக.
“ ஒன்னுமில்லாததுக்கா இப்டி முகம் வாடி போய் இருக்கு?” என்றார் அவரும் விடாமல்.
“ எல்லாம் அந்த பெண்ணை பத்தி தான் ஆன்ட்டி” என்று எங்கோ பார்த்தபடி அவள் கூற
“ எந்த பொண்ணு?” என்று இவர் புரியாமல் கேட்டார்.
‘ கெட்டுச்சு போ’ என்று எண்ணி கொண்டவள்
“ அதான் அன்னைக்கு ரோட்ல பார்த்தோமே என் கூட படிக்குறா சொன்னேனே… அந்த பொண்ணு தான்” என்று ராகவி கூறவும்
புரிந்தது போல தலையாட்டியவர்,
“ சரிமா, அவளை நினைச்சு நீ ஏன் கவலை படனும்?” என்றார்.
“என்னோட கவலை அவளை பத்தி இல்லை ஆன்ட்டி. அவ குணம் தான் எனக்கு தெரியுமே. ஒரு நல்ல வசதியான பையன பார்த்தா போதும் உடனே மடக்கிடனும் நினைப்பா… அவளோட வலைல வசந்த் மாட்டிக்கிட்டாரேன்னு நினைச்சு தான் கவலை” என்றாள்.
தான் எண்ணியது போலவே அந்த பெரியவரின் முகம் அதிர்ச்சியை காட்ட உள்ளுக்குள் குதூகளித்தாள்.
“ என்ன சொல்ற ராகவி?” அதிர்ந்து போய் வாணி கேட்க
“ அச்சோ, உலறிட்டனா ஆன்ட்டி… நான் ஏதோ ஒரு நினைப்புல சொல்லிட்டேன். நீங்க அதை மனசுல வச்சிக்க வேணாம்” என்று படப்படத்தவளை ஓர் பார்வை பார்த்தார்.
“ என்ன சொல்ற நீ? யார் அந்த பொண்ணு? அவளுக்கும் வசந்த்க்கும் என்ன சம்பந்தம்?” என்று கோபக்குரலில் கேட்டார்.
“ அது அந்த பொண்ணு தான் ஆன்ட்டி. பேரு மாலினி.
வசந்த் கிட்ட ரொம்ப நெருக்கமா பழகும். காலேஜ் முழுக்க ரெண்டு பேரும் விரும்புறதா சொன்னாங்க. ஆனா நான் நம்பல.
நேத்து அந்த மாலினியும் வசந்த்தும் பேசிட்டு இருந்ததை கேட்டேன்.
அவ சொல்றா,
“ நம்ம காதல் விவகாரம் வீட்ல தெரிஞ்சாலும் பரவாயில்ல. அவங்க ஒத்துக்கிட்டாலும், ஒத்துக்காட்டாலும் நாம கல்யாணம் பண்ணிக்குவோம். சீக்கிரமே ரெண்டு பேரும் தனி குடித்தனம் போயிடலாம்”னு பேசிட்டு இருந்தா…
அவ அழகுல அவ சொன்ன எதையும் காதுல வாங்காம அவளையே பார்த்துட்டு இருந்தார் வசந்த்.” என்று கண்ணீருடன் கூற கேட்டு கொண்டிருந்தவரின் முகம் சிவக்க தொடங்கியது.
‘ யோசித்தபடி செய்து முடித்து விட்டாள். ஆனால் அடுத்து இந்த அம்மாள் எடுக்கும் முடிவு என் எண்ணப்படியா இல்லை.. வேறொரு வழியா?’ என்று யூகித்து கொண்டிருந்த அவளின் மூளையை வாணியின் குரல் கலைத்தது.
“ யார் அந்த பொண்ணு? அவளை நான் பார்க்கணுமே!” என்று கூறி இவளுக்குள் பூமழையை பொழிந்தார்.
‘ அப்படியா??? சரி என்ன விஷயம்ன்னு நான் என் பையன் கிட்ட விசாரிக்கிறேன்’ என்று அவர் கூறிவிட்டால்,
இவளால் ஒன்றும் செய்ய முடியாது. அதை தடுக்கும் பொருட்டு வேறு யோசிக்க வேண்டும்’ என்று எண்ணி கொண்டிருந்தவள் அவர் நேரடியாக மாலினியை சந்திக்க கேட்கவும் சந்தோஷம் தாளவில்லை.
“ சரி ஆன்ட்டி, ஆனா ஆன்ட்டி அவ ரொம்ப நாடகமாடுவா… அப்டியே அவ நடிக்கிறது நமக்கு தெரிஞ்சு கேட்டா… ரொம்ப திமிரா பேசுவா” என்று கூறினாள்.
“ அவ எவ்ளோ திமிரா பேசுனாலும்…. அதை விட ஒரு படிமேல இருப்பேன் நான். நீ அவள சந்திக்க மட்டும் ஏற்பாடு பண்ணு” என்று கூறிவிட்டு சென்றார்.
“ தேங்க்ஸ் ஆன்ட்டி, நீங்க இப்டி தான் தெரியும். ஆனா உங்களுக்கு தான் அவளை சரியா தெரியல. தன்னை மதிக்காத யாரையும் அவளும் மதிக்க மாட்டா… எனக்கும் அது தான் வேணும்” என்று கூறி சிரித்து கொண்டாள் ராகவி.
***
இரண்டு நாட்கள் கழித்து மாலினி வந்திருந்த அந்த ரெடிமேட் ஷோ ரூமிற்கு வாணியை அழைத்து வந்திருந்தாள் ராகவி.
“ ஆன்ட்டி, அதோ அவ தான்” என்று கை காட்டியபடி அவரை அவளின் அருகில் அழைத்து சென்றாள்.
“ க்கும்” என்று செருமலில் திரும்பி பார்த்த மாலினி ராகவியை பார்த்ததும் முறைத்தாள்.
கல்லூரியில் எப்போதும் தன்னை ஜாடையாக அவளின் ஸ்டேட்டஸ் உடன் ஒப்பிட்டு வம்பிழுக்கும் இவளை முடிந்த மட்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசி விட்டு நகர்வாள்.
அவளே இப்போது தன்னிடம் வலிய வர இருக்கும் இடம் உணர்ந்து முறைக்க மட்டும் செய்தாள்.
“ நீ தான் மாலினியா?” என்று வாணி கேட்கவும் தான் அவர் அருகில் நிற்பதை உணர்ந்தாள்.
“ஆமா, நீங்க?” அவளும் பதிலுக்கு கேட்க,
“ அது உனக்கு தேவை இல்லாத விஷயம். காலேஜ் போனா படிக்கிற வேலைய மட்டும் பாக்கணும் தெரியாதா?” என்று அவர் குரலை உயர்த்தவும்
மாலினி தனக்குள் மீண்ட கோபத்தை அடக்கி கொண்டு,
“ அது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்… முதல்ல எனக்கு அட்வைஸ் பண்ண நீங்க யாருங்க?” என்று அடிக்குரலில் சீறினாள்.
அவளின் அந்த பதிலில் கோவம் தலைக்கேற முறைத்த வாணி
“ என் பையன் பின்னாடி நீ சுத்துறத இனிமே நான் பாக்கவோ கேள்வி படவோ கூடாது சொல்லிட்டேன். வசதியான பசங்க கிடைச்சா போதுமே உடனே கிளம்பிடுவீங்களே”
“ ஷட்டப்… வாட் நான்சென்ஸ்” என்று அவள் கத்த சுற்றி உள்ள அனைவரும் இவர்களை ஏறிட்டனர்.
ஓர் நொடி நீண்ட மூச்சுடன் ஆசுவாசம் அடைந்தவள்,
“ இதோ பாருங்க வயசுல பெரியவங்கனு மரியாதை கொடுத்து பேசிட்டு இருக்கேன். இல்லனா என்னோட அணுகுமுறை வேற மாறி இருக்கும். உங்க பையன வளைச்சு போட எனக்கு என்ன தலையெழுத்து… யார் உங்க பையன்? கண்டவங்க பேச்சை கேட்டு கண்டதையும் உளற வேணாம் சொல்லிட்டேன்”
வார்த்தையில் கடுமையை கூட்டி இவள் கூற
அவளின் ‘கண்டவள்’ என்ற சொல் தனக்கு தான் என புரிய அவளை முறைத்தாள் ராகவி.
“ பாத்தீங்களா ஆன்ட்டி சொன்னேன்ல இவ இப்டி தான்னு” என்று வாணியிடம் கூற
“ ஓஹ், என்னை பத்தி நீ சொல்லி இருக்கியா? அப்போ கண்டிப்பா நல்ல விதமா தான் சொல்லி இருப்ப” என்று நக்கல் தொனியுடன் கூறினாள் மாலினி.
“ இதோ பாரு… இது தான் உனக்கு கடைசி வார்னிங்… இனிமே வசந்த் கூட பழக கூடாது… அவனை பார்க்கவோ பேசவோ கூடாது…” என்று வாணி கூறவும் அதிர்ந்தாள் மாலினி.
‘என்ன சொல்கிறார் இவர்? இவர் வசந்தின் அம்மாவா?’ என்று.
ஆனால் மறு நொடி,
“ சாரி ஆன்ட்டி, நீங்க யாருன்னு தெரியாம அப்டி பேசிட்டேன். நானே உங்கள பாக்க வரணும் நினைச்சிட்டு இருந்தேன்.. எப்டி இருக்கீங்க ஆன்ட்டி?” என்று கேட்க
“ அதான்… நீ என்னை பார்க்க வரும் முன்னயே நான் உன்னை பார்க்க வந்தேன். நான் சொன்னது நினைவிருக்கட்டும்…” என்று கூறினார்.
“ ஆன்ட்டி, என்ன சொல்றிங்க? நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க….” அவள் கூற வரும் முன் கையமர்த்தியவர்
“ உன்னை பத்தி எனக்கு தெரிய வேண்டியதில்லை… நான் என் பையனுக்கு வேற நல்ல பொண்ணை கல்யாணம் பேசி இருக்கேன்…”
அவள் அதிர்ந்து நோக்க அதை சட்டை செய்யாமல்
“ என்ன பாக்குற? இதோ இந்த ராகவி தான் எங்க குடும்பத்துக்கு ஏத்த மருமகள். படிப்பு முடியவும் ரெண்டு பேருக்கும் கல்யாணம்… நடுல புகுந்து குழப்பம் பண்ணலாம்னு நினைச்சே… நடக்கிறதே வேற” என்று கூறி விட்டு திரும்பியவர்
ஒரு முறை நின்று அவளிடம், “ இதை எல்லாம் என் பையன் கிட்ட சொல்லி என்னையும் அவனையும் பிரிக்க நினைச்சா… உனக்கு சொல்ல தேவை இல்லை… உன்னோட வசியத்துல இருந்து அவனை எப்டி மீட்டனும்னு எனக்கு தெரியும்…” என்று கூறி நிற்காமல் சென்று விட்டார்.
அவர் சொல்லி சென்ற வார்த்தையில் கற்சிலையாகி நின்றாள் மாலினி.
சிறிது நேரம் கழித்து வாணியிடம் ஏதோ காரணம் கூறிவிட்டு உள்ளே வந்த ராகவி,
“ என்ன மாலினி அதிர்ச்சியா இருக்கா? நான் தான் சொல்றேனே… உன்னோட தகுதிக்கு ஏத்த மாதிரி தான் ஆசைப்படனும்.. அதை விட்டுட்டு நீயெல்லாம் கொம்பு தேனுக்கு ஆசை வைக்கலாமா? சொல்லு..
ஆன்ட்டிக்கு தெரிஞ்சு இருக்கு… அவங்க ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மருமகள் யாருன்னு? இனிமேலாவது கொஞ்சம் தராதரம் அறிஞ்சு பழக கத்துக்கோ” என்று கூறிவிட்டு சென்றாள்.
மற்றைய நேரங்களில் ராகவி இது போன்று கூறி இருந்தால் மாலினியின் பதில் அவளுக்கு சம்மட்டியால் அடித்தது போல் வந்து விழும்.
ஆனால் இப்போதோ அவள் தன்னை மறந்து வாணி கூறி சென்ற வார்த்தையில் அவளின் சிந்தை சுற்றி கொண்டிருக்க ராகவியின் பேச்சு காதில் விழுந்ததாக தெரியவில்லை.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…