விழி மொழியாள்…. பகுதி…. 4

0
698

.உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்… என் நாவல் படிக்கும் அன்பு உள்ளங்கள்களுக்கு மனமார்ந்த நன்றிகள்………

விழி மொழியாள்…. பகுதி…. 4 *

பிளவ்ர் வேளைக்கு போய்ட்டு வந்தாச்சா … வர நேரம் இது இல்லையே, எதுனா உடம்புக்கு முடியலயோ.. அம்மா மா… அழைத்து கொண்டே உள்ளே சென்றாள் கயல்.

வாடா… போய் முகம் கை கால்
கழுவிட்டு வா.
அம்மா உனக்கு சூடா பஜ்ஜி சுட்டுருக்கேன்.
பஜ்ஜி யா…..ஹய்யா அம்மானா அம்மா தான் இதோ இப்ப வரேன் மா என்று ஓடினாள்.

மாமி உன்ன வர சொன்னாங்க பாரு போய் பாத்துட்டு வா.. ஹ்ம் சரிம்மா .

அம்மா… ??

என்னடா ,,.

அண்ணா வந்து இருக்கா?

ஆமா டீ உள்ள இருக்கான் பாரு.
சரி மா..

என்னடி சரிம்மா சரிம்மா னு சொல்லிக்கிட்டு இங்க நின்னுட்டு இருக்க.

இல்ல வந்து…..?

என்ன இல்ல வந்து போயினு இழுக்குற என்ன விசயம்னு சொல்லு.

அண்ணா திடிர்னு வந்து இருக்கே அதான் கேட்டேன் மா.

நீ போய் மாமிய பாத்துட்டு வா.. பேசலாம்.

அப்பறம் போய் பேசிக்கறேன் மாமிகிட்ட
நீ சொல்லு மா.

உன் அண்ணா நம்மள சென்னைக்கு கூப்பிடுறான்…
.
ஏன் மா..?
அண்ணா அங்கேயே வேலை பாக்குது நம்மள எதுக்கு கூப்பிடனும்.

மாசா மாசம் வந்து பாத்துட்டு போக சிரமமா இருக்கான்டி .. அதான் கூப்பிட்றான்.

ஓஹோ அப்போ சுரேஷ் அண்ணா காலேஜ்க்கு எப்படி போகும்…??

அதெல்லாம் உங்கண்ணா பாத்துப்பான்.
எனக்கு உன்ன நெனச்சா தான் கவலையா இருக்கு
+12பாதில சேரமுடியமோ இல்லையானு.

இவங்க பேசுறது எல்லாம் கேட்டுட்டு வந்த கணேஷ் அதெல்லாம் ஒரு கவலையும் பட வேணா மா எனக்கு தெரிஞ்ச ஸ்கூல்ல பேசிட்டேன் அங்க சேத்துடலாம்.

கயல்ல சேர்த்துகிறேனு சொல்லிட்டாங்களா
அது எப்படி டா சேர்த்துப்பாங்க…

அத பத்தி நீங்க கவலைபடாதீங்க மா எல்லாம் நான் பாத்துக்கிறேன்.

அதெல்லாம் பணத்த அடிச்சா போதும்.
பெரிய பசங்க படிக்கற ஸ்கூல் அது எல்லாம் பணக்கார பசங்க தான் படிக்குறாங்க…
பிரின்ஸ்பால்கிட்ட
பேசிட்டேன் மா.

என்னடா சொல்லுற….?
அவளோ பெரிய ஸ்கூல் எதுக்கு .. நம்ம வசதி கேத்த மாதிரி பாக்க வேண்டியது தான?

அம்மா உங்க பையன் சென்னையில்… பெரிய எடத்துல வேலை பாக்குறேன்.

என் ஸ்டேட்டஸ் க்கு ஏத்த மாதிரி தான்…
பாக்கமுடியும்.

ஒழுங்கா நான் சொல்லுறத கேளுங்க சுரேஷ் கும் அங்க காலேஜ் போக ரெடி பண்ணிட்டேன்.

சும்மா அது இதுனு சொல்லிட்டு இருக்காதிங்க சீக்கிரமா இங்க இருந்து கிளம்பணும் சொல்லிட்டேன் ஆமா.

நான் ஒரு வாரம் தான் லீவ் ல வந்து இருக்கேன் மா. எல்லாம் முடிச்சிட்டு உங்கள கூட்டிட்டு போகணும்.

அங்க எங்கடா தங்குறது?

நீயே உன் பிரண்ட் கூட ஷேர் பண்ணிட்டு இருக்க இதுல எங்கள வேற கூப்பிடற.

அம்மா…. இவளோ பண்ணின எனக்கு வீடு பாக்க கூடவா தெரியாது.. அதெல்லாம் பாத்தாச்சு.

பிளாட்.. .. வாடகை வீடு தான். நல்ல பெரிய வீடு மா வசதியா இருக்கு. முக்கியமா தண்ணீர் நல்லா இருக்கு.

லோன் போட்டு இருக்கேன் சீக்கிரமா வீடு வாங்கி போய்டலாம்.

என் பாஸ் ரொம்ப நல்லவர் மா.
உங்கள சுரேஷ், கயல் விழிய… பார்த்துக்
இருக்கார். அவர் தான் சொன்னாரு.
அடிக்கடி ஊருக்கு போறத விட பேசாம இங்கே வர வச்சிக்கோ குடும்பத்த கணேஷ் உனக்கு கஸ்டம் இல்லாம இருக்கும்.

அதான் யோசிச்சு இதெல்லாம் பண்ணிட்டேன்.
நீங்க கிளம்பணும் அவளோ தான் சரியா.

அப்பறம் முக்கியமான ஒரு விசயம் உங்கிட்ட பேசணும். அம்மா உங்க வேலைய விட்டுருங்க மா…..

அங்க வந்து வேலைக்கு லாம் போக வேணாம்.

என்னடா சொல்லுற …..?

ஆமாமா … வீட்டுல இருங்க எங்களலாம் எவ்வளவு கஷட பட்டு வளர்த்து ஆளாக்கி இருக்கீங்க…போதும் நீங்க கஷடப்பட்டது .

உங்கள பாத்துக்க தான் நாங்க இருக்கோம் பாத்துக்க வேண்டியது எங்க கடமை..

கணேஷ் கூறியதை கேட்டவுடன் பூங்கோதை கண்கள் ஈரமாகின.
அவள் பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை……

சரிப்பா. நீ சொல்ற மாதிரி பண்ணிடலாம். இந்த வீடு ….? என்றபடியே மகனை பார்த்தாள்.

வித்துடலாம். கண நேரம் கூட யோசிக்காமல் பட் என்று கூறினான் கணேஷ்.

என்னடா சொல்லுற வித்துடலாமா…..? அதிர்ச்சியுடன் கேட்டாள் பூங்கோதை.

ஆமா ….

உங்க அப்பா கஸ்டபட்டு வாங்குனது டா…அவர் மூச்சு இங்க தான் இருக்கும் ..

நா விக்க அனுமதிக்க மாட்டேன்..கறார சொல்லிவிட்டாள் பூங்கோதை.
அவளுக்கு சொல்லும் போதே மூச்சு வாங்கியது. கண்கள் குளமாகியது.

அம்மா…..?

வேலைக்கு போகாதனு சொன்ன சரினு சொன்னேன்.
உன் கூடவே வர சொன்ன…அதுக்கும்
சரி னு சொன்னேன்.

ஆனா வீடு மட்டும் விக்க ஒத்துக்க மாட்டேன். என் முடிவு இதான்.

அம்மா…வேலயை விட்டுட்டு அங்க வரேன்னு சொன்னதே பெரிய விசயம்.

வீடு பத்தி மெதுவா பேசிக்கலாம் என்று மனதுக்குள்ளே பேசி கொண்டான் கணேஷ்.

மேற்கொண்டு நடக்கிறப்போ பாத்துக்கலாம்……

கணேஷ்….. .”
சொல்லுங்க அம்மா ..

உன் பாஸ் எப்படி….?
ஏன்மா கேக்குறீங்க…
தங்கமானவர் மா நாம இருக்க போற வீடு கூட அவருடையது தான்..

ஓஹோ…….?

என்னமா என்னடா தங்கமானவர்னு சொன்னான் வீடு வாடகைக்கு விட்டு இருக்கானு யோசிக்கிறீங்களா.

அவர் சும்மாதான் மா கொடுத்தார். நான் தான் வாடகை வாங்கிக்கிறதா இருந்தா எடுத்துகிறேன் சார் னு சொன்னேன்.

அப்பறம் தான் வாடகை வாங்கவே சம்மதிச்சார்.

கணேஷ் என்னவோ அவங்க பாஸ் பத்தி அப்படி இப்படி னு சொன்னாலும்

தாய் உள்ளம் நுட்ப்பமான அறியும் ஆற்றல் பெற்றது.

ஏதோ சரியில்லை என்று அவள் உள் உணர்வு சொல்லியது….FB_IMG_1550154772616|690x297

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here