அடுத்த எபியோட முடிவடையும் விழி மொழியாள்….

வாசலில் போலீஸ் ஜீப் பார்த்தும் அதிர்ந்த கோதை மித்திரன் தம்பி… மித்திரன் தம்பி என கூப்பிட்டு கொண்டே வந்தாள்..

மித்ரன் கயலை துப்பாக்கி முனையில் இழுத்து வருவதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

மித்திரன் தம்பி என்ன பண்றீங்க ?
கயல்விழிய விடுங்க ஒன்னும் பண்ணிடாதீங்க.

அம்மா என கதறி அழுதாள் கயல்.

தம்பி உங்களுக்கு தானே கயல கட்டி கொடுக்கறதா சம்மதம் சொல்லிடேனே அப்புறம் ஏன் இப்படி பண்றீங்க…

நீங்க சம்மதம்னு சொல்லிட்டீங்க
ஆனா உங்க பையன் சுரேஷீம் அந்த சரவணனும் சேர்ந்து திட்டம் போட்டு இந்த கல்யாணத்த நடக்க விடாம தடுக்கறாங்க.

கயல்விழி எனக்கு தான் எனக்கு மட்டும் தான் வேற யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் கண்ணில் வெறியோடு கூறினான் மித்திரன்.

போலீஸும் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் நின்றனர்.
மித்திரன் கையில் துப்பாக்கி இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மித்திரன் மரியாதையா என் தங்கச்சிய விட்ரு நீ வசமா மாட்டிக்கிட்ட போலீஸ் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது சுரேஷ் கோபமாக பேசவும்..

இன்ஸ்பெக்டர் சார் என்ன பாத்துட்டே இருக்கீங்க அவன அரெஸ்ட் பண்ணுங்க.

சுரேஷ் கொஞ்சம் பொருமையா இருங்க அவன் கையில துப்பாக்கி இருக்கு அவசர பட கூடாது உங்க தங்கச்சி உயிருக்கு ஆபத்தா போயிடும் என கூறிய இன்ஸ்பெக்டர்;

மித்திரனிடம் திரும்பி செல்வம் வாக்குமூலம் கொடுத்துட்டான் நீ இனிமே சட்டத்துல இருந்து தப்பிக்கவே முடியாது ஒழுங்கா கயல விட்டுட்டு சரண்டர் ஆகிடு அதான் உனக்கு நல்லது மித்திரன்..

ஹா ஹா… என்ன ஒன்னுமே பண்ண முடியாது உங்களால இன்ஸ்பெக்டர்.
நான் கயல்விழி கழுத்துல தாலி கட்டுறத யாராலையும் தடுக்க முடியாது.

இப்ப என்ன இங்க இருந்து போக விடுங்க இல்லனா கயல சுட்டுட்டு நானும் தற்கொலை பண்ணிப்பேன்.
எனக்கு கிடைக்காத கயல் யாருக்குமே கிடைக்க கூடாது.
துப்பாக்கியை கயலின் நெற்றி பொட்டில் அழுத்தியபடி கோவமாய் கூறினான்.

அப்பொழுது தான் உள்ளே வந்த கணேஷ் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

மித்திரன் சார் ஏன் இப்படி பண்றீங்க கயல விடுங்க உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு…

கணேஷ் நீ ஒரு வேஸ்ட் உன்னால எனக்கு எந்த யூஸீம் இல்ல. உன்னால உன் தம்பிய கூட கட்டுபடுத்த முடியல.

கோதை, சரவணன், சுரேஷ், கணேஷ் போலீஸ் யார் பேச்சையும் சட்டை பண்ணாமல் துப்பாக்கி முனையில் கயலை இழுத்து கொண்டு காரில் ஏறி தப்பிக்க வெளியே வந்தான்.

மித்திரனின் பிடியில் கயல் இருப்பதால் அனைவரும் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர்.

கயல் விழியை தர தரவென வேகமாக இழுத்து கொண்டு கார் அருகில் சென்று கார் கதவை திறந்த பொழுது
டுமில் … டுமில்…
ஆ…ஆ…..சத்தமிட்டபடி இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தான் மித்திரன்.

கையில் துப்பாக்கியுடன் கண்ணில் கொலை வெறியோடு காரிலிருந்து இருங்கினாள் பிரியா.

என்ன மாதிரி எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணியிருக்க டா நீ எல்லாம் இந்த பூமியில வாழ தகுதியே இல்லாதவன்.
இனிமே ஒரு பொண்ணு கூட உன்னால பாதிக்கப்பட்ட கூடாது.
பிரியாவின் கண்களில் காளியின் பிரதிபலிப்பை காண முடிந்தது.

துப்பாக்கி சத்தம் கேட்டு
அய்யோ என் பொண்ணை யாராவது காப்பாத்துங்களேன் என கோதை அலறியபடி மயங்கி விழவும் ..

அம்மானு கணேஷ் தாங்கி பிடித்து கொள்ள சரவணன், சுரேஷ் மற்றும் போலீஸ் உட்பட அனைவரும் பதறி கொண்டு வெளியே ஓடினர்…

அங்கே அவர்கள் கண்ட காட்சியில் …மூவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்..

மித்ரன் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தான்… கயல்விழி அதிர்ச்சியில் திக்பிரமை பிடித்தவள் போல் நிற்க… கையில் துப்பாக்கியோடு பிரியா காளியின் உக்கிரத்தோடு நின்றுந்தாள்.

சரவணனும் சுரேஷும் வேகமாக கயல் விழியிடம் வந்தனர்….
கயல் கயல்னு சரவணன் கன்னத்தை தட்டவும் அதிர்ச்சியில் இருந்து மீண்டவள், சரவணன்னை பார்த்ததும் பயத்தில் இறுக்கமா கட்டிக்கொண்டாள் …..

சுரேஷை ஓர் பார்வை பார்த்தான் சரவணன்……
சுரேஷின் கண்ணசைவில் கயல்விழியை அங்கிருந்து உள்ளே கூட்டிச் சென்றான்…

மயக்கத்தில் இருந்த கோதை முகத்தில் கணேஷ் தண்ணி தெளிக்கவும் எழுந்து மகளை தேடினாள். …

சரவணன் கயலை அணைத்தபடி உள்ளே வந்து கொண்டிருப்பதை பார்த்ததும் கோதை மனம் நிம்மதி அடைந்தது…
என் மகளுக்கு இவன் தான் பொருத்தமானவன் எப்படியாவது திலகத்திடம் பேசி கயல்க்கு இவனையே கல்யாணம் பண்ணி வச்சிடனும் மனதில் திடமாய் முடிவு எடுத்து கொண்டாள்…

உள்ளே வந்த கயல் அம்மாவை பார்த்ததும் அம்மானு ஓடி வந்து கட்டி கொண்டாள். அவள் உடல் பயத்தில் நடுங்கியது….

ஒன்னும் இல்லாம பயப்படாத அம்மா இருக்கேன்ல … முதுகை ஆதரவாய் தடவி குடுத்த கொண்டே சுரேஷிடம் பார்வையால் ஏதோ சொல்ல …
சுரேஷ் புரிந்து கொண்டு ..
உள்ளே போய் குடிக்க தண்ணி கொண்டு வந்து கயலிடம் குடுக்க வாங்கி வேகமாய் குடித்தாள்….
கொஞ்சம் ஆசுவாசமாய் உணரவும்… அவள் நடுக்கமும் குறைந்தது.

கணேஷ்க்கும் மித்ரன் மேல் கோவம் வந்தது ச்சே அவன் இவளோ மோசமானவனா… ஏதோ கயல் மேல இருக்கும் பாசத்தால ஏதோதோ செய்யுறான் பார்த்த கடைசியில் என் தங்கச்சியே கொல்ல பாத்துட்டானே……

நல்ல வேலை அந்த பொண்ணு வந்து காப்பாத்திட்டா.. இல்லனா கயலை பாத்து இருக்கவே முடியாது அதை நினைக்கும் போதே உடம்பு நடுங்கியது கணேஷ்க்கு …

ஒரு அண்ணனா இருந்தும் நானே அவள் வாழ்க்கையை அழிக்க பாத்தேனே…
ச்சே என்ன நினைச்சாலே எனக்கே அருவருப்பா இருக்கு….
கயல்க்கு ஏத்தவன் சரவணன் தான் … அவனை எப்படி யாவது கயல்கூட சேர்த்து வச்சா தான் நா பண்ண பாவம் கொஞ்சம் குறையும் …
மனதில் தெளிவு வரவும் கயல்விழியை பாசத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்..

சரவணன் …. அப்போ நா கிளம்புறேன் மச்சான்னு என்று சொல்லவும், அங்கிருக்கும் அனைவர் முகமும் வாட்டமாய் மாற …
அதை கவனித்த சரவணன் என் அம்மாவை கூட்டிட்டு வரேன் அத்தை ….. கயல் விழியை பொண்ணு கேக்க இல்ல…
என சொல்லி நிறுத்த…

அனைவரும்முகமும் அதிர்ச்சி காட்டின..

ஹாஹா… கல்யாணதுக்கு நாள் பாத்துட்டு நிச்சயம் பண்ண கூட்டிட்டு வரேனு சொல்ல வந்தேன்.

இதை கேட்டு அனைவரும் ஆனந்தமாக சிரித்தனர்.

கோதை மட்டும் மௌனமாக இருகிய முகத்துடன் காணப்பட்டாள்.

சரவணன் கயல்விழி மீது காதல் பார்வை வீச, அவள் நாணத்தால் தலையை குனிந்து கொண்டாள்.

மித்திரன் தான் பெரிய பிரச்சனையா இருந்தான் மா இப்ப எல்லா பிரச்சனையும் சரியாகிடிச்சு மா இனிமே நிம்மதியா கயல்- சரவணன் கல்யாணத்த பண்ணிடலாம் மா என சுரேஷ் கூறியதை கேட்ட கோதை முகத்தில் எந்த சலனமோ சந்தோசமோ இல்லை.

ஏன் மா ஒன்னுமே பேசாமா இருக்கீங்க …

இல்லடா சுரேஷ் எனக்கு இன்னமும் திலகம் பேசினது காதுல கேட்டுட்டே இருக்கு…..அவ என் பொண்ண தப்பா பேசினத மறக்கவே முடியாது டா…

கயல் ஆசை பட்டுடா அதனால நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க தயாரா இருக்கேன் ஆனா திலகம் என் பொண்ணு ராசி இல்லாதவ, அதிர்ஷ்டம் கெட்டவ, அப்படி இப்படினு வாய்க்கு வந்த படி மோசமா பேசுனது மனசுக்கு நெருடலவேஇருக்கு..

என் பொண்ணு காலம் முழுக்க அங்க தான் வாழ்ந்தாகணும் அதுக்கு திலகம் பேசுனது தப்புனு அவ உணரணும் இல்லனா இந்த கல்யாணம் நடக்காது டா என தீர்க்கமாக கூறினாள் கோதை.

கயல் விழி அழுது கொண்டே
உள்ளே ஓடி விட..

கோதை சொன்னதை கேட்டு கொண்டிருந்த சரவணன் முகம் சுருங்கி போனது. அவன் இதயத்தில் இடி தாக்கியதை போல உணர்ந்தான்.

அந்த இடத்தில் ஒரு மயான அமைதி நிலவியது.

…….. விழியில் உஷ்ணம்!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago