விழி மொழியாள்! பகுதி-32

0
640

கோதைக்கு மனசு ஆறாமல்
ச்சே எப்படில்லாம் என் பொண்ண தப்பா பேசிட்டா
வேற யாராச்சும் என் பொண்ண நாக்கு மேல பல்ல போட்டு பேச முடியுமா பேசுற வாயை இழுத்து வச்சு தைச்சிருப்பேன்.

இவளா போய்ட்டா பழகின தோஷத்துக்கு எதுவும் பேச வேணாம்னு வந்துட்டேன்…
கோவத்தில் புலம்பி கொண்டே வந்தாள்.

அம்மா.. அதான் தெரிஞ்சுருச்சுல அவங்க லட்சணம் விடுங்க மா சும்மா அதையே நினைச்சு புலம்பி உங்க உடம்ப எதுக்கு கெடுத்துகிறீங்க.

கோதை… ஹ்ம்… கவலையோட மனதுக்குள் பொறிஞ்சு தள்ளிய படியே வந்தவள் நெஞ்சை அழுத்தி பிடிக்க… அப்படியே மயங்கி சரிந்தாள்.

கணேஷ் பயந்து போனான்… அம்மா என அலறியவன் ஹாஸ்பிடல்க்கு காரை திருப்பினான்…

பிரசர் அதிகமா ஆகியிருக்கு அதான் மயக்கம் வந்துருக்கு ஊசி போட்டு இருக்கேன் ஒரு மணிநேரம் கழிச்சு போய் பாருங்க டாக்டர் சொல்லி விட்டு போக..

கணேஷ்…
மித்ரன்க்கு கால் பண்ணினான்…

ஹலோ.. பாஸ்…

ஹ்ம் சொல்லுஙக கணேஷ்..

நாங்க ஹாஸ்பிடல்ல இருக்கோம் பாஸ்.

வாட்…? என்னாச்சு கணேஷ்…

அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க…

எப்படி ஏன் மயக்கம் போட்டு விழுந்தாங்க…?

கணேஷ் சரவணன் வீட்டுக்கு போனதுல இருந்து ஹாஸ்பிடல் வந்தது வரை எல்லாம் சொல்லி முடித்தான்.

எல்லாம் கேட்டுட்டு இருந்த மித்திரன் சந்தோசமாய் கணேஷ் மச்சான் என கூப்பிட்டான்.

கணேஷ் அதிர்ச்சியில் என்ன… என்ன சொல்லி கூப்பிட்டீங்க பாஸ் …. என்னை…. தன் காதுகளையே நம்ப முடியாமல் மறுபடியும் கேட்டான்…

ஹாஹா.. மச்சான்னு கூப்பிட்டேன் கணேஷ்.

அடாடா கேக்கவே நல்லா இருக்கு பாஸ்…

ப்ச்… இன்னும் என்ன பாஸ்னு சொல்லிக்கிட்டு நீங்களும் மச்சான்னே கூப்பிடலாம் கணேஷ்…

ஹ்ம் சரிங்க மச்சான்..

அந்த சரவணனும் உன் தம்பியும் வாய்க்கு வாய் இப்படி தான கூப்பிட்டுபாங்க..

அப்பலாம் செம கடுப்பு ஏறும் ஆனா இப்போ நாம சொல்லிக்கும் போது செமையா இருக்கு மச்சான் பீல்..

. ஐ லைக் இட்.. ஏதோ ஒரு உணர்வு நெருக்கமா பீல் பண்றேன்…

இப்போ எப்படி இருகாங்க அத்தை நா ஹாஸ்பிடல் வரவாமச்சான் இல்லனா வேற ஹாஸ்பிடல் பாக்கலாமா…

அதெல்லாம் வேணாம் மச்சான் டாக்டர் ஒரு மணிநேரம் கழிச்சு கூட்டிட்டு போலாம்னு சொல்லிட்டார்.

நாங்களே இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவோம் கயல் கிட்ட எதுவும் சொல்லாதீங்க
நாங்கநேர்ல வந்து பேசிக்கிறோம்… ஒகே வா மச்சான் .

ஹ்ம் அதுவும் சரி தான் மச்சான் நான் எதுனா சொல்ல போக உங்க தங்கச்சி இதுக்கும் நான் தான் ஏதோ திட்டம் போட்டு பேசவச்சிட்ட மாதிரி நினைப்பா, தேவையா எனக்கு நீங்களே வந்து சொன்னா தான் நம்புவா முக்கியமா அத்தை சொல்லுறத தான் கேப்பா உங்க தங்கச்சி…
.
ஹ்ம்… ஆமா அதுக்கு தான் நாங்களே சொல்லுறோம்னு சொன்னேன் ஒகே மச்சான் டாக்டர் வந்துட்டார்..மத்ததுலாம் நேர்ல பேசிக்கலாம் பை மச்சான்…

ஒகே மச்சான் பை… யாகூஊ…..

மித்ரன் சந்தோச மிகுதியில் திளைத்தான்… கயல் இனி எனக்கே எனக்கு மட்டும் தான்.. அவளின் மென்மையான ஸ்பரிசம் மனதுக்குள் முகர்ந்தவன்… மூச்சை இழுத்து பெருமூச்சு விட்டான்..

உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்டி … என் உயிரே நீ தான்.
மித்திரன் மகிழ்ச்சியில் மிதந்தான்‌…

அம்மா அம்மா என கூப்பிட்டு கொண்டே வந்தான் சரவணன்.
எல்லா அறையிலும் தேடி பார்த்தும் எங்கேயும் காணாமல் போக… எங்க போய்ட்டாங்க அப்பாவ தனியா விட்டுட்டு.. கோவில்க்கு போயிட்டாங்களா என்ன…?
இருக்காதே அப்பா இப்படி இருக்கும் போது தனியா விட்டுட்டு போக மாட்டாங்களே…ஒரு வேலை மாடில இருப்பாங்களோ … மேல வந்து பார்த்தான்..

அங்கே கண்களில் நீர் ததும்ப வானத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் திலகம்.
சரவணன் கிட்ட வந்து அம்மானு கூப்பிட்டான்…

அசைவே இல்லாமல் வானத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

தோளில் கைவைத்து அம்மானு கூப்பிட்டான்..

திரும்பி சரவணனை பார்த்ததும் கதறி அழுதாள்.

சரவணன் பயந்து போனான்… அம்மா என்னாச்சு ஏன் அழறீங்க. அப்பாக்குஎதுனா…..

அப்பாக்குலாம் ஒன்னும் இல்லடா அவர் நல்லா தான் இருக்கார்..

அப்பறம் எதுக்கு மா அழுறீங்க. சந்தியாவா நினைச்சு அழுறீங்களா. அவளுக்கு ஒன்னும் ஆகாது ..

நீங்க பயப்படாதீங்க மா … வாங்க கீழே போகலாம் அப்பா மட்டும் தனியா இருக்காருவாங்க..

.ஹ்ம்ம் … சரவணா என் பொண்ணு பத்திரமா வந்துருவா தானே…

அம்மா… என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..

அதெல்லாம் இருக்கு டா இருந்தாலும் ஒரு வயசு பொண்ணு காணாம போய்ட்டா அதுவும் கடத்தி வச்சிருக்கான் அந்த படுபாவி மித்ரன்..

அவன்லாம் நல்லாவே இருக்க மாட்டான் டா … திலகத்தின் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது.

ப்ச் அம்மா அவனை பத்தி நமக்கு ஏன் விடுங்க..
நமக்கு வேண்டியது சந்தியா மட்டும் தான் … அவளை எப்படி மீட்கனும்னு யோசிக்கனும் மா ..

நீங்க வாங்க எல்லாம் நான் பாத்துக்கறேன் …

திலகம் சரவணன் முகத்தையே பார்த்து கொண்டிருக்க..

என்னம்மா ஒரு மாதிரியா இருக்கீங்க எதுனா என்கிட்ட சொல்லனுமா…. சொல்லுங்க மா …

சரவணா… அது வந்து..

ஹ்ம் சொல்லுங்க..

வந்து..

சொல்லுங்க மா..

கோதை அக்காவும் கணேஷும் வந்து இருந்தாங்க… டா

ஓ… அப்படியா ஆச்சிரியமாய் கேட்டான்… என்ன மா சொன்னாங்க சாப்பிட்டு தான போனாங்க … அப்பாவ பாத்தாங்களா மா…

ஹ்ம்ம் பாக்கல எங்கோ வெறித்து பார்த்து கொண்டே சொன்னாள்..

ஓ.. ஏன் மா அப்பாவ பாக்காம போனாங்க.. சரவணனுக்கு என்னமோ சரில்லனு உள்ளுணர்வு சொல்லியது… அம்மானு அழுத்தமா கூப்பிட்டான்..

திலகம் கதறி அழவும்… சரவணன் பதறி போய் அம்மா என்னாச்சு ஏன் அழுறீங்க… என்ன விசயம்னு சொன்னா தானமா தெரியும்.. நீங்க பாட்டுக்கு அழுதா என்ன அர்த்தம்…

அத நான் சொல்லுறேன் பா… உள்ளே இருந்து பதில் வரவும் .. திலகமும் சரவணனும் திரும்பி பார்த்தார்கள்….

சரவணன்னோட அப்பா வெளியே வந்தார்… வந்தவர்… உன் அம்மா வந்தவங்கள அவமானபடுத்தி அனுப்பிட்டா… கோவத்தோட சொல்ல…

என்ன அப்பா சொல்லுறீங்க….? அதிர்ச்சியோட அம்மாவை பார்த்தான்..

ஆமா. டா.. கோதையும் கணேஷும் வந்தாங்க… அவங்கள உள்ளே கூட வரவிடாம கேவலமா பேசி அனுப்பிட்டா டா உங்கம்மா…. அவர் நடந்தது எல்லாம் சொல்ல சொல்ல…

அதிர்ச்சியில் பேச்சே வராமல் திக் பிரமை பிடிச்சவன் போல நின்று விட்டான் சரவணன்.

திலகம் கல்லு போல இறுகி நின்று இருந்தாள்.

எல்லாம் சொல்லி முடித்ததும் … திலகத்தை பார்த்து கேட்டார்… ஏன் திலகம் நீயும் ஒரு பொண்ண பெத்தவ தான இன்னொரு வீட்டு பொண்ண இப்படி தான் கேவலமா மனசாட்சியே இல்லாம பேசுவியா…

கோதைக்கு எப்படி இருந்து இருக்கும் பெத்த பொண்ண பாத்து இப்படி தப்பா பேசிட்டாளேனு வயிறு எறிஞ்சு இருக்கும்டி. உன்கிட்ட இத நா எதிர் பாக்கவே இல்லை திலகா…. கோவமாய் கூறினார்.

ஆமா நா மனசாட்சி இல்லாதவ தான் இப்போ என்ன சொல்ல வரிங்க…
அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு நினைக்கறீங்களா அதுக்கு முதல என் பொண்ணு எப்படி போனாலோ அப்படியே திரும்ப வரணும்.

என் பொண்ணு வீட்டுக்கு வரட்டும் அப்புறமா இந்த கல்யானத்தை பத்தி பேசலாம்..
கோவத்தோட பேசிய திலகம் விறு விறுவென உள்ளே சென்று அறை கதவை அடைத்து கொணடாள்…

……விழியில் தாய்மையின் பரிதவிப்பு!FB_IMG_1554778052486|690x297

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here