விழி மொழியாள்!
பகுதி-3
ஏன்டி பூங்கோதை, கயல் வந்துட்டாளடி ஸ்கூல் விட்டு பக்கத்து வீட்டு அலமு மாமி கேட்டாள்.
இன்னும் இல்லை மாமி. அவ வர நேரம் தான்… ஹ்ம்ம்.. சரிடி வந்தால் ஆத்துக்கு சத்த வந்துட்டு போக சொல்லுடி..
சரிங்க மாமி.
மாமி மட்டும் இல்லைனா பூங்கோதை என்னவாகி இருப்பாளோ அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.
கணவன் மாணிக்கம் இறந்த பிறகு என்ன செய்யறதுனு ஒன்னும் புரியாமல்,
குழந்தைகள எப்படி வளர்ப்பது என
முழிச்சிட்டு வாழ்க்கை பற்றிய பயத்தில் இருந்தாள் பூங்கோதை.
அந்த சமையத்தில் ஆபத்பாண்டவனாக அலமு மாமி மட்டும் வரவில்லை என்றால் நான் என்ன ஆகியிருப்பேன் என பழைய நினைவில் மூழ்கினாள்.
மாணிக்கம் இறந்த பின் வீட்டுக்குள்ளயே முடங்கி கிடந்த பூங்கோதைக்கு அலமு மாமி தான் எல்லாமாக இருந்தாள்.
ஏன்னா …. இந்த பூங்கோதை இன்னும் எம்புட்டு நாள் தான் ஆத்துக்குள்ளர அடைஞ்சி கிடப்பாள் அவா ஆத்துக்காரர் உத்தியோகத்துல இருக்கிறச்ச தானே மாண்டு போனார் … அப்போ அவா பாக்குற எடத்துல இவளுக்கு வேலை கிடைக்குமேனா….
அலமு மாமியோட ஆத்துக்காரர் அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர்.
ஆமா கிடைக்கும் அலமு என்றார்.
அப்போ அவாளுக்கு எதுனா வழி பண்ணுங்கோ னா பாவம் 3 புள்ளைகள வச்சிட்டு எப்படிதான் காலம் தள்ள போறாளோ… அவாளுக்கு எதுனா உதவி பண்ணுங்கோணா.
சரிடி அலமு நீ சொல்லிட்டா அப்பில் ஏது நேக்கு…
ஹுக்கும்.. காலப்போன காலத்துல ரொமான்ஸ்கு ஒன்னும் குறைச்சல் இல்லை ஹுக்கும்…. என்று வெட்கப்பட…
ஹாஹாஹா மாமா சிரித்து விட்டார் … அலமு நீ வெக்கப்படுறத பாக்குறப்போ இன்னும் அழகா இருக்கே டி…… எனக்கு இளமை திரும்புதடி.
அய்யோ போங்கோ நா. எங்கேடி போக சொல்லுற நேக்கு நீயும் நோக்கு நானும் தான டி …..
அலமு கண்கலங்கறது பார்த்து சரி சரி பேச்ச மாத்த… எங்கே டீ சின்ன வாண்டடுவ காணமே அவ ஸ்கூல் க்கு போயிருக்கா அவா அம்மாட்ட சொல்லி விட்டுருக்கேன்.. (வேற யார சொல்லுவா எல்லாம் இந்த கயலு புள்ளைய தான் )
குழந்தை இல்லாத அலமேலு மாமிக்கும் பரசுராம் மாமாக்கும் கயல் தான் அந்த வீட்டின் செல்லம். கயல் தான் இவர்களின் ஏக்கத்திற்கு ஒரு வடிகால்.
சரிடி நா சத்த கோவில் வர நடை போய்ட்டு வரேன் … அலமு..
ஹ்ம் சரிங்கோ நா…..
கற்றது உலகளவு கல்லாதது கையளவு!
அடி பாவி… என்னடி
சொல்லிக்குடுத்துட்டு இருக்க… பசங்களுக்கு கேட்டுக்கொண்ட வந்தாள் சந்தியா… இவள் கயலின் பள்ளி தோழி.
…ஹிஹி அதுவா
பசங்களுக்கு பாடம் சொல்லித்தரேன்டி….”
ஹ்ம்ம் ஹுக்கும் …
விளங்கிடும்.. இப்படி சொல்லிக்குடுத்தா…
வாடி…நமக்கே இருக்கு படிக்க இதுல பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கறாலாம் அதுவும் தப்பு தப்பா விளங்கின மாதிரி தான் ….
நான் எங்க தப்பு தப்பா சொல்லி தரேன் சரியா தான் சொல்லி தரேன்.
என்னது சரியா சொல்லி தரயா ஏண்டி திருக்குறள் தப்பா சொல்ற இதுல பேசுற பேச்ச பாரு….
என்ன தப்பு .. நான் சொன்னது சரி தான் என்றாள் கயல்.
கற்றது உலக அளவு கல்லாதது கை அளவு என்று சொன்னேன் உண்மை தான்.
குழந்தைகள் கிட்ட நீ படிக்க வேண்டியது நெறைய இருக்குனு சொன்னா பயம் தான் வரும். அதுவே நீ நெறைய படிச்சிட்ட இன்னும் கையளவு தான் இருக்குனு சொன்னாக்க
சீக்கிரமா ஆர்வமா படிப்பாங்க அதான் அப்படி சொல்லிக் குடுத்தேன்.
உனக்கு பொறாமைடி எங்க நான் சொல்லி கொடுத்து இவங்க எல்லாம் பெரிய ஆளா ஆகிட்டா அதான்…… ??
அப்படியே நெஞ்சில கை வைத்து உட்கார்ந்து விட்டாள் சந்தியா. அது எப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பேச முடியுது உன்னால என்றாள்.
ஹிஹிஹி…. ” அதெல்லாம் வரும் போதே வீட்டுல மாட்டி வெச்சுட்டு வந்துட்டேன்டி …..
இப்படி சொன்னதும் குபீர்ரென சிரித்தாள் தோழி. உன்னால மட்டும் தாண்டி இப்படிலாம் பேச முடியும்….
சரி வாடி வகுப்புக்கு நேரம் ஆச்சு. கயலை இழுத்துக் கொண்டு ஓடினாள் சந்தியா.
கயல்விழியும் சந்தியாவும்
1ம் வகுப்பில் இருந்து +12 வரை இணைப்பிரியா தோழிகள்.
அவளுக்கு பிடிக்காதது கணக்கு வகுப்பு தான். அந்த நேரம் வரும் போது டிமிக்கி குடுத்துடுவா கயல்.
சின்ன வகுப்பு பசங்களுக்கு பாடம் சொல்லி தரேன் பேர்வழினு தப்பு தப்பா கற்று கொடுப்பது தான் அவள் வேலை.
மற்றவர்கள் பார்வைக்கு அப்படி தோன்றினாலும் கயலை பொறுத்த வரை தன் மனதுக்கு ஏது சரியன்று பட்டதை தான் செய்கிறாள். யோசித்து பார்த்தால் அவள் பாடம் எடுக்கும் முறை சரியென்று தோன்றும். கயல் பிறவி ஞானம் கொண்டவள்.
ஹேய்ய்……. வாடி கயல்
அந்த சோடா புட்டி மாம் போய்டுச்சு … வா கிளாஸ்க்கு போலாம்.
இதுக்கு மேல நாம இங்க இருந்தா சந்தியா பத்திராகாளி ஆகிடுவா கிளம்பறதே உத்தமம் என்று கிளம்பினாள்.
கண்டிப்பா அந்த சோடா புட்டி மாம் போய்டுச்சா டி….அப்படி கேட்டவளை
… வெட்டவா குத்துதவா .. முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் சந்தியா.
ஏண்டி உனக்கு கொஞ்சகூட பயமே இல்லையாடி .. எனக்கு அந்த மாம் பாத்தாலே பயமா இருக்கு நீ.. என்னடானா தைரியமா டிமிக்கி குடுத்து இங்க வந்துடுற …. ஆனா சரியா எல்லா பாடத்துலேயும் நல்ல மதிப்பெண் எடுத்துடுற அதான் எப்படினு புரிய மாட்டுது.
ஹாஹாஹா … அதுக்கு எல்லாம் மூளை வேணும்டி …. உனக்கு தான் அது இல்லையே அவ முறைக்குறத பார்த்ததும் ஹிஹி .. நீ கடன் குடுத்துட்டு வந்துட்டேன்னு தெரியும்முடி…சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடிவிட்டாள் கயல்.
என்னடி சொன்ன எனக்கு மூளை இல்லையா… அவளை துரத்திட்டே.. .ஓடினாள் சந்தியா.
அங்கே வகுப்பில் ஆசிரியை சொல்லித் தரும் பாடத்தை கவனமா கேட்டுக் கொண்டுடிருந்தாள். அப்படி நடித்து கொண்டு இருந்தாள்..
வெளியே வாடி உன்ன கவனிச்சிக்கிறேன் என்று சொன்ன தோழியை உதட்டை மடித்து பழிப்பு காட்டினாள் கயல்.
கயல்விழி பாடத்தில் படு சுட்டி அதனால் அவளை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவ தான் பள்ளியில் முதலிடம் பிடிக்கும் மாணவி. என்ன குறும்பு தனம் பண்ணாலும் படிப்பில்
படு சுட்டி.
இன்னும் ஒரு காரணமும் இருக்கு அவளுடைய சுட்டிதனம் இங்க மட்டும் தான் என்று அந்த பள்ளி தலைமை ஆசிரியைக்கு தெரியும்.
ஓரளவு கயல்விழி குடும்ப சூழ்நிலை பற்றி தெரியும் என்பதால் அவள் செய்யும் குறும்புகளை கண்டும் காணாமல் இருந்து கொண்டார்.
கயல்.... நாளைக்கு வீட்டுக்கு வாடி... அம்மா உன்ன வர சொன்னாங்க என்றாள் தோழி. ஹ்ம் சரி வரேன்டி அவளோ நேரம் முகம் மலர்ச்சியோட இருந்த கயல்விழி அமைதியா எழுதி கொண்டிருந்தாள்.
என்னடி அமைதியாகிட்ட ஒண்ணும்மில்லை அம்மாகிட்ட என்ன சொல்லிட்டு வரது யோசிக்கிறேன்.
ஏன் கயல் பேசாம ஆண்ட்டிகிட்ட சொல்லிடேன்.
என்ன சொல்ல சொல்லுற…
ஹ்ம்..அம்மா அம்மா நான் வீட்டுக்கு வரும் போது நீ … என் கண்ணுல படமா இருகணும்னு அண்ணா சொல்லுறாங்க மா னு சொல்லு.
கயல் அமைதியா சிரித்தாள்…
…கயல் அமைதியா இருக்கறது பிடிக்காம ஏய்.. கயல் நாளைக்கு என் அண்ணன் ஊர்ல இருந்து வரார்டி.
அவள் சந்தோசம் படுவாள் என்று நினைத்தால், ஒரு மாதிரி ஆகிட்டாளே….
இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்காளோ….
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…