நான் வைக்க போற செக்ல அவன் எப்படி ஆட போறான் பாரு குறி பார்த்து தாக்கும் கழுகுவின் தீட்சண்ணியம் அவன் பார்வையில் குடி கொண்டிருந்தது.
அந்த நேரம் மட்டும் மித்ரன் முகத்தை பார்த்து இருந்தால் அவனின் அனல் பார்வையில் பொசுங்கி போவார்கள். வன்மத்தின் முழு உருவமாய் நின்று
இருந்தான்.
யார் சார் சரவணன் உங்களுக்கு போட்டியா…? வர்றது அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்..? என வக்கீல் கேட்டார்.
எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதோ வரான் பாரு இவனுக்கும் எனக்கு மட்டுமே சம்பந்தம்… வாயில் சிகரெட் வைத்து கொண்டே சொன்னான் மித்திரன்.
என்ன இவனுக்கும் உங்களுக்குமா சம்பந்தம்…?? புரியலயே..
இவனோட தங்கச்சி..தான் நா கல்யாணம் பண்ண போறேன்..
ஓ…. அப்படியா சார்.
ஆமா..
அது சரி .. இவன் தங்கச்சிய தான கல்யாணம் பண்ண போறீங்க.. அப்புறம் ஏன் அந்த சரவணன் உங்க கிட்ட பிரச்சனை பண்ணுறான்.
மித்ரன் அமைதியா இருக்கவும்..
அவருக்கு சொல்ல விருப்பம் இல்லனு புரிந்துகொண்டான் ..
கணேஷ் வரவும் மூவரும் காபி சாப்பிட்டு கிளம்பினர்..
ஆஸ்பத்திரி வராண்டாவில் டிவி பார்த்து கொண்டிருந்தான் சரவணன். மித்ரன் பத்தி செய்தி வருதானு பார்த்துட்டு நின்னுட்டு இருந்தான்.
அண்ணா … அம்மா காபி கேட்டாங்க நான் போய் கேண்டின்ல வாங்கிட்டு வரவா இல்லை நீ போறியா அண்ணா…
இங்க தான இருக்கு சந்தியா நீ போய் வாங்கிகொடு நான் ஒரு முக்கியமான நியூஸ்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…
ஹ்ம்.. சரி அண்ணா.. சந்தியா போய் விடவும்..
சரவணன் டிவியே பார்த்துட்டு இருந்தான்.. என்ன நாம எதிர் பார்த்த நியூஸ் வரவே இல்ல..?
அவன் எதிர் பார்த்த நியூஸ் வரும் வரும்னு வெயிட் பண்ணி பார்த்தும் வராமல் போகவும் ஏமாற்றமாய் உணர்ந்தான்…. அது எப்படி மிஸ் ஆச்சு யோசனைபண்ணிட்டு இருந்தான் இதுக்கு அப்பறம் எங்க வர போகுது நாம எதிர் பார்த்த நியூஸ் அப்பாவையாவது பார்க்கபோலாம்….
சரவணன் உள்ளே வரவும்..
வாடா சரவணா…
அப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு டாக்டர் சொல்லிட்டார் டா
ஓ… சரிம்மா கிளம்பலாம் நா போய் டாக்டர் கிட்ட பேசிட்டு பில் செட்டில் பண்ணிட்டு வரேன்.. வேற எதுனா சொன்னாரா அம்மா..அப்பாவை பத்தி .?
ஆமா டா சொன்னார்
அதிர்ச்சியானா விஷயம் மட்டும் எதுவும் சொல்ல கூடாதுனு சொன்னார் டா டாக்டர்..
கடை இப்படியானது என்னாலேயே தாங்கிக்க முடியலையே…. பாவம் அவர் 40 வருஷமா கஷ்டபட்டு உழைச்சு மேல கொண்டு வந்தவர் டா அவரால எப்படி தாங்கிக்க முடியும் … கண் கலங்கினாள்..
சரவணன்கே… கஸ்ட்மா இருக்கும் போது கடை தான் உயிர் னு வாழ்ந்தவர் ஆச்சே ..
சரவணன்…
திலகத்திடம் கடையை பத்தி சொன்னதுமே மயங்கி விழுந்து விட்டாள்… நல்லா வேலை இது ஆஸ்பத்திரி என்பதால் உடனே டாக்டர் வந்து பார்த்தாரு இல்லனா என் பாடு திண்டாட்டம்மாய் போயிருக்கும் .
ஹ்ம்ம். கரெக்ட் தான் மா.. அப்பாவோட உயிரே அந்த கடை தானம்மா….
ஆமா.. டா கண் தொடைத்து கொண்டே ….. .. என்னமோ போடா யார் கண் பட்டுதோ…. நடக்க கூடாது லாம் நடந்துட்டு இருக்கு… ஆமா
எங்கடா சந்தியா… ஆளையே காணோம்..ரொம்ப நேரமா. ?
அப்போ தான் .. கவனித்தான் ஆமால காபி வாங்க கேண்டின் போறேனு சொன்னாலே …. இன்னுமா வரல..
காபி வாங்க நீ போகலையா…
இல்ல மா அவ போறேன்னு சொன்னா.. சரி இங்க தான இருக்கு போய்ட்டு வா நான் டாக்டர பார்த்துட்டு வரேன்னு சொன்னேன்….. (எங்க டிவி பாத்துட்டு இருக்கேன் நீ போனு சொன்னேனு சொன்னா திட்டு விழும்மே ).. அத மறைக்க இப்படி சொல்லவும்….
ஓ.. சரி டா இன்னும் வரல போய் எங்க இருக்கானு பாரு … நா அதுக்குள்ள எல்லாம் பொருளும் எடுத்து வைக்கிறேன்…
ஹ்ம் சரி மா.. சரவணன் சென்று விட …
திலகம் …. துணியெல்லாம் பையில் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்..
கேண்டின் முழுவதும் எங்க தேடியும் சந்தியாவை காணாமல் போகவும் சரவணன்க்கு திக் என்று ஆனது…
எங்க போயிருப்பா ஆஸ்பத்திரி முழுவதும் தேடிட்டேன் … எங்கேயும் காணோமே .ஒன்னும் புரியாமல் தலையில் கை வைத்து உக்காந்து விட்டான்…
அந்நேரம் பார்த்து
சரவணன்க்கு கால் வரவும் .. யார்நம்பர் இது புதுசா இருக்கே யோசனை பண்ணிட்டே எடுத்து பேசினான் .
ஹாலோ…
ஹாலோ… சரவணன் .. என்ன ஹாப்பி யா இருக்க போல நக்கலாக கேட்டான். உன் கடை என்னாச்சு பாத்தியா. ஆமா உன் அப்பன் இருக்கானா இல்ல போய் சேர்ந்துட்டானா… அப்பாக்கு ஹார்ட் அட்டாக்னு
கேள்வி பட்டேனே அச்சச்சோ பாவம்…
ஹேய்… நீயெல்லாம் பாவம் படுற அளவுக்கு நாங்க ஒன்னும் தாழ்ந்து போகல டா…
ஓஹோ… சரி சரவணன்
உன் தங்கை எப்படி இருக்கா.. மித்திரன் எதிர்முனையில் சிரிக்க…
டேய்ய்….. மித்ரா.. நீ மட்டும் என் கண்முன்னாடி இருந்தேன் வை உன்ன கொன்னுட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன் டா ராஸ்கல்… என்னடா பண்ண என் தங்கச்சிய..சொல்லு டா…
ஹாஹாஹா….. ச்சுச்…என்ன சரவணன் டென்ஷன் ஆகிட்டு… நீ … என்கிட்டயே நேரடியா மோதி இருக்க இந்த தில்லு தான்டா உங்கிட்ட எனக்கு பிடிச்சது… இதுக்கே கலங்கலாமா…. இன்னும் … இன்னும் என்னவெல்லாம் பாக்க போற நீ …
என்னை யாருனு நினைச்ச
நான் மித்திரன் டா.
டேய்ய்… கொலைவெறியுடன் கத்தினான் என் தங்கச்சிக்கு மட்டும் எதுனா ஆச்சு… உன்ன பல்லைக் கடிக்கவும்…
ஹாஹா.. அச்சச்சோ உன் தங்கச்சிக்கு ஒன்னும் ஆகாம இருக்கறது உன் கையில தான் இருக்கு….
டேய்ய்… என்ன சொல்லுற …. என் கையில இருக்கா புரியல.
எஸ்..
நா.. நான் என்ன பண்ணனும் சொல்லு பண்றேன் என் தங்கச்சிய விட்டுடு…
விட்றேன் விட்றேன்… எனக்கு எதுக்கு உன் தங்கச்சி… எனக்கு வேண்டியது எல்லாம் அந்த பிரியா அவளை பாதுகாப்பான இடத்துல ஒளிச்சு வச்சிருக்கயே அத மட்டும் சொல்லிடு உன் தங்கச்சிக்கு எந்த வித சேதாரம் இல்லாம பத்திரமா உன்கிட்ட அனுப்பி வைக்கறேன்.
டேய்.. பொறுக்கி…பெரிய பிஸ்னஸ் மேன் பீத்திக்குற.. இப்படி கேவலமான வேலை செய்யறியே உனக்கு வெக்கமா இல்லை…
கொஞ்ச கூட இல்லை.. டாமிட்… உனக்கு எவளோ தைரியம் இருந்தா என் இமேஜ்யே ஸ்பாயில் பண்ணுவ…. இந்த பொசிசன் வர நா எவளோ கஷ்டபட்டு இருப்பேன்… உனக்கு தெரியுமா அவளோ சீக்கரத்துல தர மட்டமாக்க பாத்தியே.. உன்ன எப்படிடா சும்மா விட்றது… நெவர்…
கோவமாய் பேசிட்டே திரும்பியவன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்….
மித்ரனை அதிர்ச்சியோட பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.
மித்ரனுக்கு ஒரு நொடி என்ன சொல்லி சமாளிக்கிறது இவ எப்போ வந்தானு தெரியாமல் அதிர்ச்சியில் பார்த்து கொண்டிருக்க….
கயல் கோவில் போய்ட்டு உள்ளே வரும் போது தான் மித்ரனை கைது பண்ணி கூட்டிட்டு போனார்கள்… வண்டியில் போகுறதை மட்டும் தான் கயல்விழி பார்த்தாள்… போலீஸ் வண்டி எதுக்கு வந்துட்டு போகுது சந்தேகத்தோடவே உள்ளே சென்றவள் … அங்க அம்மாவும் அண்ணாவும் பேசி கொண்டு இருந்ததை.. கவனித்தாள்..
ஓ.. இதுக்குதான் போலீஸ் வந்துருக்காங்களா.. மித்ரன் சார பார்த்தா அப்படிபட்டவர் போல தெரியலயே… அண்ணா சொல்லுற மாதிரி யாரோ தான் பொய்யான புகார் கொடுத்து இருக்கனும்…அன்னைக்கு கூட நா சாதாரணமா பாடினது கூட நல்லா இருக்குனு பாராட்டினாரே… அவர போய் இப்படி மாட்டி விட்டுட்டாங்களே ச்சே …. என்ன பொறாமை புடிச்ச மனுஷங்களோ… அண்ணா சொன்ன மாதிரி அவர் தப்பு பண்ணலனா சீக்கிரமா வெளில வந்துடுவார்ல அப்போ போய் பார்த்து பேசிட்டு வரலாம்… என நினைத்து இருந்தவள்..
மித்ரன் ஜாமின்ல வந்தது தெரிந்ததும் அவனை பார்க்க வந்தவள் அவன் பேசினதை அணைத்தும் கேட்டு அதிர்ச்சியில் திக்பிரமை பிடித்த மாதிரி நின்றுவிட்டாள்…
…… விழியில் கலக்கம்!