மித்திரன்…
வெளியே வர முகத்தில் பளிச் பளிச் போட்டோ… வின் ஒளி படவும் கண்ணை மறைத்தபடியே எதுக்கு வந்தீங்க நீங்க எல்லாம் யார் வர சொன்னது வெளிய போங்க எல்லாரும் இல்லை போலீஸ கூப்பிட வேண்டி இருக்கும்… கத்திக் கொண்டிருக்க..
பத்திரிகைகாரர் ஒருத்தர் நீங்க எதுக்கு சார் கஷ்டபடுறீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்களே வந்துடுவாங்க உங்ககளுக்கு எதுக்கு கஸ்ட்ம்.
வாட்… அதிர்ந்தான்..?
ஆமா சார் உங்கள கைது பண்ண அவங்க தான வரணும்..
டாமிட்…. யார் யார அரஸ்ட் பண்ண வரது… நான் மித்திரன்… என் மேல காரணமே இல்லாம கை வச்சா … அவங்கல இல்லாம பண்ணிடுவேன்.. மைன்ட் இட்.
சார்… நீங்க கொலை பண்ணிடதா உங்க மேல புகார் வந்து இருக்கு சார். புகார் கொடுத்தவரே எங்களுக்கும் தகவல் சொன்னாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல பேப்பர் ல வந்துடும்..
புகார் தானே வந்து இருக்கு நான் தான் பண்ணேன்னு கான்போர்ம் ஆகல ல
என் மேல சொல்றது பொய்யான குற்றச்சாட்டு அத நான் கோர்ட்ல நிரூபிப்பேன்.
வாட்….? கொலை யா..?
கணேஷ் பயந்துதான் போனான்… பாஸ் கொலை பண்ணிட்டாரா.. மித்ரனை பயத்தோட பார்க்கவும்…
கணேஷை பார்த்து நா இதெல்லாம் பண்ணிருப்பேனு நீயும் நம்புறியா ….கணேஷ்..
இல்…இல்லை பாஸ்.. தடுமாற்றமாவே பதில் சொன்னான்….
ஹ்ம்.. கணேஷ் நீ என் வக்கீலுக்கு கால் பண்ணு…
ஹ்ம் சரிங்க பாஸ்… கணேஷ் மொபைல் எடுத்து கால் பண்ணிட்டு இருக்கும் போதே ..
போலீஸ் உள்ளே வந்து மித்ரன் கிட்ட நீங்க பிரியாங்கற பொண்ண ரேப் பண்ணி கொலை பண்ணிட்டதா பிரியாவோட அண்ணன் புகார் கொடுத்து இருக்காரு..
நாங்க சட்டபடி உங்கள கைது பண்ணுறோம் …. நீங்க எதாவது சொல்லனும்னா அத போலீஸ் ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க …
இப்போ போலாமா சார்…
வெயிட் … என் வக்கீல் வந்துடுவாரு.
சாரி சார் …. உங்க வக்கீல் ஸ்டேஷன்க்கு வர சொல்லுங்க…
இன்ஸ்பெக்டர்… நீங்க யாருகிட்ட பேசுறீங்கனு பாத்து பேசுங்க…. கோவமாய் முறைக்கவும்…
சார் நீங்க பெரிய புள்ளி தான் ஒத்துகிறேன் ஆனா என் வேலையை நான் பாத்தே ஆகணும் எனக்கு தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்க.
மித்ரனை போலீஸ் கூட்டிட்டு போகவும் …
கோதை பயந்து போனாள்… கணேஷ் என்னடா இந்த தம்பிய போலீஸ் கூட்டிட்டு போறாங்க… என்ன பண்ணாரு.. கேட்க…
அம்மா என் பாஸ் எந்த தப்பும் பண்ணல … அவர் பெரிய பிஸ்னஸ் மேன் இல்லையா.. எவனோ பொறாமை புடிச்சவன் பாஸ் மேல அபாண்டமா பொய் புகார் கொடுத்து இருக்கான்…
நீங்க வேணா பாருங்க என் பாஸ் போன வேகத்தில் திரும்பி வருவாரு… எனக்கு நம்பிக்கை இருக்கு என் பாஸ் மேல..
கணேஷ் இவளோ தூரம் எடுத்து சொன்னதும்..
அதானே பாத்தேன் இந்த தம்பி தான் நல்லா பையனுஆச்சே கயல் விசயத்துல தெரிந்ததே…
அவர் கயல்ல கட்டிக்கிறேன் கேட்டு இல்லைனு சொன்னோம்… சரவணன் வீட்டுல கேட்டதும் சம்மதம் சொல்லிட்டோம் அதுவே அந்த தம்பி கோவபடாம எவளோ பெருந்தன்மையா விட்டு கொடுத்து போனாரு … நல்ல பையன் டா….
ஹ்ம்ம் … சரிம்மா பாஸ் என்ன வக்கீல கூட்டிட்டு ஸ்டேஷன்க்கு வர சொல்லிருக்கார் நா போய்ட்டு வரேன்.. நீங்க பத்திரமா இருங்க…
ஹ்ம் சரி டா.. பாத்துபோய்ட்டு வா
மித்திரன் ஸ்டேஷன் உள்ளே நுழையவும் … லாயர் ஜாமின் வாங்கி கொண்டு வந்து சேர்ந்து விட்டார்…..
போலீஸிடம் முன்ஜாமின் வாங்கி
இருக்குனு காட்டி மிதுரனை வெளியே கொண்டு வந்து விட்டார்.. மித்ரன் அந்த போலீஸ் காரனை ஓர் பார்வை அழுத்தமா பார்த்து விட்டு கிளம்பினான்… அந்த பார்வைக்கு அர்த்தம் இனி நீ இங்க இருக்க மாட்ட சொல்லாம சொல்லறது…
வெளிய வந்ததும் … எப்படி ஜாமின் கிடைச்சது … வக்கீலை பார்த்து கேட்டான்.
வக்கீல் கணேஷை கண் காட்டினார்.
மித்ரன்…
புரிந்து கொண்டு கணேஷ் இப் யு டோன்ட் மைன்ட் … எங்க ரெண்டு பேருக்கும் காபி வாங்கிட்டு வர முடியுமா.. காலைல எழுந்ததும் காபி கூட குடிக்காம கூட்டிட்டு வந்துட்டாங்க … ப்ளீஸ்.
கணேஷ்கோ .. மித்ரன் நார்மலா சொன்னாலே செய்பவன் இதுல ப்ளீஸ் போட்டு கேட்டு இருக்கான் சும்மா வா இருப்பான் …. அடுத்த நொடியே காபி வாங்க கிளம்பி விட்டான்.
ஹ்ம்.. சொல்லுங்க வக்கீல் சார்… எப்படி இவ்வளவு சீக்கிரமா ஜாமின் கிடைச்சது….
அதுவா அந்த பொண்ணு பேரு என்ன சார் தாடையை சொறிந்த படி யோசித்த… வழக்கறிஞர் பிரியா தானே சார், அவளை போட்டு தள்ள பிளான் பண்ணிட்டு இருந்தீங்கல அதான் எப்படினாலும் இந்த பிரச்சனை வரும்னு முன்கூட்டியே ஜாமின் வாங்கி வச்சிட்டேன்….
குட் … முகேஷ் உன்ன மாதிரி வக்கீல் தான் எனக்கு வேணும்.. குட் ஜாப்.
ஆமா சார் அந்த பிரியா என்ன பண்ணுறா எங்க இருக்கானுனே தெரியாதப்ப யார் பிரியா பேர யூஸ் பண்ணி புகார் கொடுத்தது…
ஹ்ம்…
டாமிட் என் கூட போட்டி போட தகுதியே இல்லாதவன் பண்ணின வேலை… கோவத்தில் கையை குத்தி கொண்டான்…
யார் சார் அவன்…
அவன் பேரு சரவணன்…. அந்த இடியட் பண்ணின வேலை தான் இது…
உங்களுக்கு சமமா இல்லைனு சொல்லுறீங்க … ஆனா அவன் தான் உங்கள ஸ்டேஷன்ல நிக்க வச்சிருக்கான் …
அவன் தைரியமா உங்க மேல கம்பளைண்ட் குடுத்து இருக்கானா அவன் கிட்ட எதுவோ பலமான ஆதாரம் இருக்குனு அர்த்தம்..
ப்ச்… அதான் அந்த பிரியா அவன் பாதுகாப்புல தான் இருக்கா… அதான் இவளோ தைரியமா என்கிட்ட மோதி இருக்கான்….
இந்த மித்ரன் பத்தி இன்னும் அவன் சரியா புரிஞ்சிக்கல….பிரியா லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லனு அந்த முட்டாள்க்கு அது தெரியாம போச்சு…
கண்கள் சிவக்க கோபத்தோட பேசினான்.. என் நிழலை தொட்டாலே காலி பண்ணுறவன் நான், கஷ்ட பட்டு சேத்து வச்ச பேரு புகழை ஒரே நாள்ல அழிச்சுட்டான் அவனை சும்மா விடுவேனா… கர்ஜித்தான்…
நான் இனிமே அடிக்க போற அடியில அவன் எப்படி ஆடி போக போறானு பாருங்க …. அவன் பேச்சில்பழிக்கு பழி வாங்குவேன்னு உக்கிரம் நிறைந்து இருந்தது…
…… விழியில் உக்ரம்!