–––
அங்கே…
அப்பா ஐ சி யு வில் அட்மிட் ஆகிருந்தார். சரவணன் நேர ஆஸ்பத்திரி போகவும்
திலகம் சரவணா ஏன்டா இங்க எதுக்கு வரோம் நேர வீட்டுக்கு, போக வேண்டியது தானே….
அம்மா.. கொஞ்ச நேரம் சும்மா இருமா.. அங்க போனதும் நீயே தெரிஞ்சிப்ப… கோவப்பட்டான்..ஏன்டா இப்போ என்ன கேட்டுட்டேன்னு என் மேல கோவம் படுற…
ச்சே… அம்மா மேல தேவை இல்லாம கோவம் பட்டுட்டோம்னு பீல் பண்ணினான் சாரி மா ஏதோ டென்ஷன் ல பேசிட்டேன்…
ஹ்ம்ம் .. சரி டா இப்பயாவது சொல்லு …. யார்க்கு உடம்பு சரில்ல… என் மனசு பட படனு வேற அடிச்சிக்குது..
அம்மா… அப்பாக்கு உடம்பு சரியில்லனு சந்தியா கால் பண்ணிருந்தா மா…
டேய்ய்.. என்னடா சொல்லுற …?? அப்பாக்கு என்ன என்ன ஆச்சு …. எங்க இருக்காரு …. நா உடனே உங்க அப்பாவ பாக்கணும்… கூட்டிட்டு போடா …. பதறினாள்..
அம்மா .. அம்மா டென்ஷன் ஆகாதீங்க இதுக்கு தான் சொல்லாம இருந்தேன்…
எங்கடா அப்பாவ சேர்த்து இருக்காங்க …. வாடா வா வேகமாய் ஓடினாள்…
அம்மா மெதுவா போங்க மா …. சரவணன் கத்தி கொண்டே பின்னாடியே ஓடினான்..
சந்தியா அம்மாவை பார்த்ததும் அம்மானு அழுதுகிட்டே ஓடிவந்து கட்டிக்கொண்டாள்…. அம்மா அப்பாக்கு … அப்பாக்கு சொல்லமுடியாமல் திணறினாள்…
அப்பாக்கு ஒன்னு ஆகாதுல …. பாவம் அவள் தான் என்ன பண்ணுவாள்.. கடை இப்படி ஆனதுக்கு அழுவாளா இல்லை அப்பாக்கு இப்டி ஆகிடுச்சேனு நினைச்சு அழுவாளா… எதுனு சொல்லமுடியாமல் அழுது கொண்டிருந்தாள்…
அதெல்லாம் ஒன்னு ஆகாதுடா… அழாத..திலகம் சொல்லிக் கொண்டிருக்கையில்.. டாக்டர் வரவும் சரவணன்னும் திலகம்மும் டாக்டர்ரிடம் போனார்கள்.
டாக்டர்… அப்பாக்கு இப்போ எப்படி இருக்கு …..
சீவியெர் அட்டாக் தான்.. நல்லா வேலை சரியான நேரத்துக்கு கொண்டு வந்துட்டாங்க.. இல்லைனா ஆபத்தான நிலைமை தான் ஆகிருக்கும்….
ஓ … சரவணன் அதிர்ச்சியில் இருக்க … திலகம் நெஞ்சில் கைவைத்து அப்படியே அமர்ந்துவிட்டாள்.. நா ஊருக்கு போகும் போது நல்லா தான இருந்தாரு.. அதுக்குள்ள என்ன ஆகிருக்கும் யோசனையோடவே இருக்க..
டாக்டர் இன்னும் 2, 3 நாள்ல கூட்டிட்டு போகலாம் என்று சொல்லிட்டு போக
அம்மாவிடம் வந்தான்..
அம்மா.. தயக்கமாய் அழைத்தான்…
ஆஹான்.. என்ன டா அப்பாக்கு இப்படி கண் கலங்கினாள்.
அம்மா … நா கடை வரை போய் பாத்துட்டு வரேன் நீங்களும் சந்தியாவும் பத்திரமா இருங்க…
இப்போ ஏன்டா கடைக்கு போற…?? ஹ்ம் சரிடா கடையை பூட்டிடு வந்துடுடா..
எதுவும் சொல்லாமல் ஹ்ம்ம்ம் .. சொல்லவும்..
சீக்கிரமா போய்ட்டு வா டா நா பாத்துக்கிறேன்…
சரிம்மா..போகும் முன் சந்தியாவை கூப்பிட்டு அம்மாகிட்ட இப்போ எதுவும் சொல்லாத சரியா…
ஹ்ம்.. சரி னா..
நா வரும் வரை பத்திரமா இரு அம்மாவையும் பத்திரமா பாத்துக்கோ சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்…
நேர கடைக்கு வந்து பாத்ததும் எதுவும் மிஞ்சாது தோன்றியது . இதுக்கு எல்லாம் காரணம் அந்த மித்ரன் தான் நினைக்கும் போதே கோவத்தில் பல்லைக்கடித்தான்…
மித்ரன்….
உனக்கு இதே போல திருப்பி அடிக்கிறேன் டா….. இறுகி போன முகத்தோட அமர்ந்து இருந்தான்.
கடைக்கு இன்சூரன்ஸ் போட்டு வச்சிருக்கார் அப்பா.. … சட்டப்படி பாத்து செய்யணும்.. அம்மா கிட்ட எப்படி சொல்லுறதுனு தான் முழிச்சிட்டு இருந்தான்…
திலகமே… கால் பண்ணவும்… இதோ வரேன் மா… பேசிட்டு வைத்ததும்…
அவன் சென்றது பிரியாவை பார்க்க தான்..ப்ரியாவை பார்த்து பேசி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றான்.
ஹாஸ்பிடல் உள்ள சென்ற சரவணன்.திலகத்திடம் அப்பாவை பாத்திங்களா மா …… கேட்க..
ஆமா டா … பாத்தேன் …
பேசுனரா மா… பயத்தோடவே கேட்டான்..
ஹ்ம்ம்… என்னமோ சொல்ல வந்தாரு டா அதுக்குள்ள இந்த சந்தியா பொண்ணு ரொம்ப பேசக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காரு பா ரெஸ்ட்
எடுங்கனு சொல்லிட்டா…
அவராலையும் எதுவும் பேச முடில… மயக்கம் ஆகிட்டார்…. எனக்கு என்னமோ பயமா இருக்கு டா … திக் திக்குனு இருக்கு நடக்க கூடாதது நடந்த மாதிரி இருக்கு டா…
அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை மா அப்பாக்கு ஒன்னும் ஆகாது … கவலைபடாதீங்க…
ஹ்ம்ம் ..
சரி மா சாப்பிட்டீங்களா… சந்தியா எங்க …
இங்க தான் இருந்தா.. டாக்டர் மருந்து எழுதி குடுத்தாரு வாங்க போயிருப்பா…
ஓ .. சரி மா நா போய் உங்களுக்கு சாப்பிட எதுனா வாங்கிட்டு வரேன் அப்படியே சந்தியாவை அழைச்சிட்டு வரேன்
சரி டா..
கேன்டீன் ல போய் டிபன் வாங்கிட்டு சந்தியாவை தேடி போனான்…
எதிரே சந்தியா வரவும் … அண்ணனிடம் ஓடினாள்.. அண்ணா அப்பாக்கு நினைவு திரும்பிடுச்சி நா ..நினைவு வந்ததும் அம்மாகிட்ட சொல்ல போனார்..
அவற நா சொல்லவிடல.
ஹ்ம். சரி . நீ அப்பாகிட்ட எதுனா சொல்லிடுவியோனு பயந்துட்டேன்.. அம்மாவால அப்பாக்கு ஆனதே அதிர்ச்சியா தான் இருக்கும் இதுல இன்னொரு அதிர்ச்சி கொடுத்தா அம்மா தாங்கிக்க மாட்டாங்க … அத நினைச்சு தான் உன்ன சொல்ல வேணாம்னு சொன்னேன்..
ஆனா அம்மாகிட்ட இந்த விஷயம் சொல்லாம இருக்க முடியாதே அண்ணா.
தெரியும் மா …சொல்லலாம் ஆனா இப்போ வேணாம்..
சரினா.. நீ சொல்லுறதும் கரெக்ட் தான்..
ஹ்ம்ம் வா போகலாம் அம்மா பசியோட இருக்கும்..
ஹ்ம் வா…
அங்கே .. கயல்விழிக்கு குழப்பமாவே இருந்தது. என்ன ஆச்சு சரவணன் ஏன் அவளோ அவசரமா அத்தைய கூட்டிட்டு போனார்… எதுவும் தெரிலயே.. சுரேஷ் அண்ணா கிட்ட கேட்டு பாக்கலாமா… யோசித்து கொண்டிருந்தாள்..
இதே நிலைமை தான் சுரேஷ்கும் .. என்ன ஆச்சு மச்சானுக்கு .. எதுக்கு அவளோ அவசரமா கிளம்பிப் போனார்னு தெரியலயே.. கால் பண்ணாலும் எடுக்க மாற்றாரே..
மித்திரன் ஆக்ரோஷமா சிரித்து கொண்டான்… சரவணா.. என்கிட்ட இருந்து இனி நீ தப்பிக்கவே முடியாது…
இன்னும் இருக்கு இதுக்கே கலங்கிடாத…. தனக்குள்ளவே பேசிக் கொண்டே தூங்கி போனான்…
விடிஞ்சதும் எழுந்து வெளியே வந்தவன், வீட்டு ஹாலில் பிரஸ் மீடியா குழுமி இருக்கவும் …. ஒரு நிமிடம் தான் எங்க இருக்கோம் இவர்கள் எதற்கு இங்கே வந்தார்கள் என புரியாமல் முழித்தபடி நின்று இருந்தான்.
……… விழியில் ஒளிக்கீற்று!!
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…