விழி மொழியாள்..பகுதி 26
—*
மச்சான்… நாமெல்லாம் இருக்கோம்ல விடுங்க பாத்துக்கலாம் சந்தோசமான விசியம் நடந்து இருக்கும் போது அவனை பத்தி ஏன் மச்சான் பேசுறீங்க…
ஹாஹா….. சரவணன் மச்சான் பாத்தீங்களா அம்மா சரின்னு சொன்னதும் அவன் முகம் போன போக்க பாக்கணுமே..
அப்படியே இஞ்சி தின்ன குரங்கு போலயே இருந்தான்… அய்யோ ஹாஹா என்னால முடில சிரிச்சி சிரிச்சி வயிறு தான் வலிக்குது அய்யோ அம்மா….
அவன் நினைச்சு இருப்பான் கணேஷ் அண்ணா மறுப்பு சொல்லுவாங்க … அண்ணா மறுப்பு சொல்லிட்டா அம்மா கண்டிப்பா யோசனை பண்ணி சொல்லுறேன்னு சொல்லிடுவாங்கனு….
அதான்.. அண்ணாவ பேச விடாமலேயே ஓகே சொல்ல வச்சேன் எப்புடி…
ஹ்ம்ம்… சூப்பர் சுரேஷ் மச்சான் நான் கூட கணேஷ் ஒத்துக்க மாட்டாரேனு பயந்துட்டு இருந்தேன்.
அவர் சரின்னு சொன்னதும் சத்தியமா என்னால நம்பவே முடியல …. கணேஷ் மச்சானா ஓகே சொன்னதுனு…
ஹாஹா… உங்க கணேஷ் மச்சான் ஒன்னும் தானா ஓகே சொல்லல நா சொல்ல வச்சேன்னாக்கும் ….
அப்படியா…?
ஆமா மச்சான் அண்ணா என்கிட்டே வசமா மாட்டி இருக்கார்… அதனால மறுத்து பேசுனா நான் எதுனா அம்மாகிட்ட சொல்லிடுவேன்னு அவர்க்கு பயம் .
அதான் உடனே சரின்னு சொல்லிட்டாரு….
எப்புடி… சுரேஷ் நா யாருனு நினைச்சீங்க … நான் சொன்னதை தான் செய்வேன்…
அதானே.. என் மச்சான்னா சும்மாவா.. தேங்ஸ் மச்சான்..
எதுவும் முன் கூட்டியே அத்தை கிட்ட கேக்கமா அம்மாவை வேற கூட்டிட்டு வறோம்னு பயந்துட்டே வந்தேன்…
நல்ல வேலை எல்லாம் நல்லா படியா நடந்தது.. ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏதோ ஒரு உறுத்தலாவே இருக்கு மச்சான்…
என்ன உறுத்தல் சரவணன் மச்சான்
என்கிட்டசொல்லுங்க …. என்னால உதவி பண்ண முடிததானு பாக்குறேன்…
நான் போய் மித்ரன் கிட்ட பேசிட்டு வரேன்..
ஏன்… மச்சான்?? அவன் கிட்ட என்ன பேசபோரிங்க…
போய்ட்டு வந்து சொல்லுறேன் மச்சான் ….
ஹ்ம்ம் …சரி சரவணன் மச்சான் கவனமா இருங்க அவன்கிட்ட.
ஹ்ம்…ஓகே மச்சான்.
எந்த பக்கம் இருக்கு அவன் ரூம் .
வலது பக்கம் திரும்பி போங்க அங்க பாருங்க ஒரு ரூம் பால்கனியோட சேர்ந்து இருக்கும் அதுல தான் அவன் இருக்கான்.
சரி மச்சான் நான் அவன் கிட்ட பேசிட்டு வரேன்..
ஹ்ம்ம்….
சரவணன்… மித்ரன் ரூம் கதவை தட்டினான்… உள்ளே இருந்து ஒரு அசைவும் வராததால் மறுபடியும் தட்டினான்….
எஸ்….. கமின்.
உள்ளே சரவணன் நுழையவும் …
அங்கே மித்ரன்கண்கள் சிவக்க சுவற்றில் ஆள் உயர இருக்கும் கயல்விழி போட்டோவையே பார்த்த படி டிரிங்ஸ் பண்ணிக் கொண்டிருந்தான்…
உள்ளே வந்த சரவணன்
மிதுரனையே பார்த்துக் கொண்டிருந்தான்…
மித்ரன் கோவத்தில் கையில் வச்சிருந்த ட்ரிங்ஸ் சை கயல் விழி (படத்தில்) முகத்தில் வீசி அடித்தான்..
சரவணன் மித்ரனின் ஆக்ரோஷத்தை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
ஹேய்ய்.. … நீ எதுக்குடா வந்த
.வெளியே போ… மித்ரன் கத்தினான்…
மித்ரன் உங்க கிட்ட பேசணும்…
ஹேய்…
என்ன எனக்கு ஆறுதல் சொல்ல வந்தியா..
இல்லை என்ன வெறுப்பேத்த வந்தியா ….
நீயெல்லாம் ஆறுதல் சொல்லுற அளவுக்கு என் தகுதி ஒன்னும் தாழ்ந்து போகலடா…
ஓ.. ஒரு வேல இப்படி இருக்குமோ
கொலை வெறியுடன் சரவணணை பார்த்து, என்னை சவால்ல ஜெயிச்சிட்டேன்னு சொல்ல வந்தியா….
இல்லை .. மித்ரன்..
ஹேய்… யார பேர் சொல்லி கூப்பிட்ற …நீயெல்லாம் என் பேர் சொல்லி கூப்பிட்ற அளவுக்கு சமம் கிடையாது மைண்டிட் கை நீட்டி எச்சரித்தான்…
ஓகே … சார் கூப்பிடல .
ஹ்ம்… எதுக்கு வந்த..
சார் … நான் ஜெயிச்சிட்டேன்னு நினைச்சு என்னை சார்ந்தவங்கல எதுனா பண்ணி பிளாக் மெயில் பண்ணலாம் னு ஐடியா வச்சி இருப்பிங்களே…
கரெக்ட்டா
ஹாஹா அப்படி எதுனா நீங்க பண்ணீங்கனா உண்மையிலே நீங்க தோத்துட்டதா தான் நான் நினைப்பேன்…
என் அளவுக்கே கடத்துறது லாம் சீப்பான விசயம்…
சார் யாரு … பெரிய ஆளு உங்க ரேஞ்க்கு வேற தான் ட்ரை
பண்ணிவீங்கனு தெரியும்… எதுனாலும் உங்களுக்கும் எனக்கும் மட்டும் தான் எந்த பாதிப்பா இருந்தாலும் ஓகே வா சார். டீலா..
நீ… எனக்கு ….. டீல்
சொல்லுறியா..ஹாஹா நேரம் டா..ஆமா இப்போ எதுக்கு என்ன தேடி வந்த..
மித்ரன் நீ… கோவபடணும் நினைச்சா என் மேல தான் கோவம்படனும் …
கோழை மாதிரி பொம்பளைங்க கிட்டலாம் காமிக்காத புரிதா. சரவணன் கோவத்துல பேச…
மித்ரன் வேகமா எழுந்து வந்து பளார்னு விட்டான் …
யார் யார பார்த்து கோழைனு சொல்லுற தொலைச்சிடுவேன் தொலைச்சு மிருகமாய் உறுமினான்…
ஹேய் என்ன பத்தி உனக்கென்னடா தெரியும்… நான் நடக்கறதுலாம் சொல்லிட்டு இருக்க மாட்டேன்… செயல்ல பாக்கும் போது நீயே தெரிஞ்சிக்குவ…..
எனக்கும் திரும்ப அடிக்க தெரியும் மித்திரன் நான் அடிச்சா அது உனக்கு தான் அசிங்கம். தேவையில்லாத பிரச்சினை வேணாம்னு பாக்குறேன்.
சரவணன் ஒரு விதத்தில் நிம்மதியானான்..
மித்ரனால கயல்க்கும் அத்தைக்கும் இனிமே ஆபத்து வராது..
மித்ரனை வேற மாதிரி தூண்டி விட்டா தான் அவன் கவனம் முழுதும் என் பக்கம் இருக்கும் இல்லனா கயல் பக்கம் திரும்பிடும்… அதை மனதில் நினைத்து தான் சரவணன் மித்ரனை பாக்க வந்தான்.
அவன் வந்த வேலையும் முடிஞ்சுது.. ஆசுவாசமாய் மூச்சுவிட்டான்… ஓகே மித்ரன் சார் பாக்கலாம் … இனிமே பிரியா பத்தி பேச தேவைபடாதுனு நினைக்கிறேன்.
..இருந்தாலும் என் பாதுகாப்புகாக எப்ப வேணும்னாலும் அந்த விசயத்தை அத்தை கிட்ட சொல்லவும் தயங்க மாட்டேன் ..
டேய்ய்… அதுக்கு ப்ரியா உயிரோட இருக்கணுமே என்று நக்கலாய் கேட்டான்..
ஹாஹா…. நீங்க.. நினைக்குற மாதிரி பிரியா ஒன்னும் செத்து போகல.. என் பாதுகாப்புல தான் இருக்காங்க … மித்ரன் சொல்லியபடி கிளம்ப எத்தனிக்க.
ஓ…. அவளை ஆள் அடையாளம் தெரியாமல் அழிக்க சொன்னாக்க இவனுங்க கோட்டை விட்டுட்டு இருக்கானுகளே… ச்சே இடியட்… அவனுகள… பல்லை கடித்தான் போய் கவனிச்சிக்கிறேன் அவனுகள….
மிதப்பாய் ஓர் பார்வை பார்த்து பிரியாலாம் ஒரு ஆளுனு என்கிட்டேயே பேச வந்துருகயே … ஹாஹா உன்னலாம் என்ன சொல்லுறது..
ஹலோ….
சுடக்கு போட்டு நிறுத்தினான்..கோதை ஆண்ட்டி ஓகே சொல்லியாச்சே … சவால்ல நாம தான் ஜெயிச்சிட்டோம்னு மட்டும் கனவு காணாத சரவணன் …
கயல் கழுத்தில் யார் தாலி கட்டுறாங்க அதுதான் முக்கியம்…அவள் கழுத்தில் நான் தான் கட்டுவேன் பாக்கறியா..சேலன்ஞ்..
ஒரு வேல நீ நினைச்சுது நடந்துட்டா அப்போ ஒத்துகிறேன் நீதான் ஜெயிச்சுடனு.
அது வரை நீ ஜெயிச்சவன் இல்லடா ….
உனக்கு சம்மதம் சொன்ன இதே ஆண்ட்டி வாயாலா மித்ரன் தான் இந்த வீட்டு மாப்பிளைனும் , கயல்விழி தானாவே நான் மித்ரனையே
கட்டிக்கிறேன்னு சொல்ல வைக்கிறேன் பாருடா …. வெயிட் அண்ட் சி…
ஹாஹா…… என் கயல் ஒரு நாளும் அப்படி சொல்ல மாட்டா நீ நினைச்சது ஒருகாலும் நடக்காது….
ஹாஹா….. அப்படியா.
ஆமா…னு சொல்லும் போதே
சரவணன்க்கு கால் வரவும் யார் பண்ணுறாங்க பார்க்க சந்தியானு தெரியவும் இவ எதுக்கு இப்போ போன் பண்ணுறா எதுனா ப்ராப்லமா என்ன அவசரமா எடுத்து பேசினான்…
ஹலோ சந்தியா.. சொல்லுமா..
மறுமுனையில் அழுதுகொண்டே பேசினாள்.. அ… அண்ணா…
சந்தியா அழுதுட்டே பேசவும் சரவணன் பதட்டமானான்…. என்ன என்ன ஆச்சு அழுகாப சொல்லு சந்தியா ….
அண்ணா… நம்ம கடை தீ…. பிடிச்சிடுச்சு நா….
என்ன……?? என்ன சொல்லுற நீ ….அதிர்ச்சியில் பேச்சே வராமல் நின்றிருந்தான்…
ஹலோ.. ஹலோ அண்ணா .. சந்தியா கத்திக் கொண்டிருந்தாள்…
ஆஹான் ….. சுயணர்வு வந்ததும்… சந்தியாஅமைதியா இரு நீயும் டென்ஷன் ஆகி அப்பாவையும் டென்ஷன் படுத்திடாத… கோவபட்டான்..
அய்யோ… அண்ணா… ஓ.. னு கதறி அழுதாள்.
பச்… சந்தியா அழாதனு சொல்லுறேன்ல…
அண்ணா … அப்பாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க…. அழுது கொண்டே சொன்னாள்..
என்ன…..?? சொல்லுற அப்பாக்கு என்னாச்சு….
கடையில தீ பிடிச்சிதுலா அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு அண்ணா ….
எனக்கு பயமா இருக்கு
நீயும் அம்மாவும் . சீக்கிரமா கிளம்பி வாங்கனா அழுதுகொண்டே பேசிட்டு இருந்தாள்..
நீ பயப்படாம இருமா இதோ நானும் அம்மாவும் கிளம்பி வறோம் அது வர அப்பாவ கவனமா பாத்துக்கோ… நீயும் ஜாக்கிரதையா இரு .. சரியா…
ஹ்ம்ம்ம்… சரி னா..
போன்.. கட் பண்ணதும் … மித்ரனை பார்த்து முறைத்தான் .. கண்டிப்பா இவனோட வேலையா தான் இருக்கும்… சந்தேகமே இல்ல…
மித்திரன்… ஸ்டைல்ல கால்மேல் கால் போட்டு கொண்டே …
என்ன உன் தங்கச்சியா பேசுனது… எப்படி இருக்கான் உன் அப்பன் இருக்கானா இல்ல போய் சேர்ந்துட்டானா அய்யோ …. பாவம்.. போ .. போ சீக்ரம்மா போய் பாரு கிளம்பு..கிளம்பு
டேய்ய் …. மித்ரன் சட்டையை பிடிச்சி இழுக்கவும்… கையை அசால்ட்டா தட்டி விட்டான்…
என் கிட்ட மோதின பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும்… இது ஆரம்பம்.. இன்னும் பாக்க தான போற ….மித்ரன்னோட ஆட்டத்த ஹாஹா…
டேய்ய்…. உனக்கு நான் தான எதிரி ஏன்டா என் அப்பவும் கடையும் என்னடா பண்ணுச்சு கோவத்தில் கத்தினான்…
உனக்கு
10மினிட்ஸ் தான் டைம் இங்க இருந்து நீ கிளம்ப .
அப்படி கிளம்பாம இருந்தேன் வை …. அதுக்கு அப்பறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பல்ல சொல்லிட்டேன்
உன் தங்கச்சி அங்க தனியா தான இருக்கா??.. ஒரு மார்க்கமா கேட்டான்.
மித்ரன்… அலறினான்…
ஹாஹா ….. எஸ் மித்ரனே… என் கிட்டேயே மோதிட்டேல … உன்ன என்னெல்லாம் பண்ணுறேன் பார்…
சரவணன்… ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல்… உடனே செயல் பட்டான்… நேரா அம்மாவிடம் வந்து கிளம்பலாம் அம்மா … அவசர படுத்தினான்..
அவனின் அவசரம் திலகத்துக்கு .. என்னவோ சரியில்லைனு மனதில் .. .. திக் என்று ஆனது….
என்ன சரவணா ஏன் இவளோ டென்ஷனா இருக்க… என்னடா சொல்லு…
அம்மா எல்லாம் அப்பறம் சொல்லுறேன் இப்போ பேச எல்லாம் நேரமில்லை வாங்க போலாம்.. வரேன் அத்தை சுரேஷை பார்த்து கயல்விழிய காட்டி பார்த்துக என சொல்லியபடி … கயல்விழிக்கு கண்ணால் விடை பெற்றான்….
…….. விழியில் ஈரம்.