வாங்க மச்சான்
உள்ளே போலாம்.. பேச்சுவாக்கில் சுரேஷ் கூப்பிடவும் … கணேஷ்ஷும் மித்ரனும் … என்னது மச்சானா …? அதிர்ச்சியாய் பார்த்து கொண்டிருக்க….
சுரேஷ் … இருவரையும் கண்டுக்காமல்.. சரவணையும் திலகத்தையும் உள்ளே கூட்டிச்சென்றான்..
மித்ரனுக்கு எதுவோ சரி இல்லை னு உள்ளுணர்வு சொல்லியது… அவர்கள் பின்னாடி மித்ரனும் போனான் என்ன பேசுறாங்கனு எனக்கு தெரியணும்..
அம்மா யார் வந்து இருகாங்க பாருங்க …. சுரேஷ் சொல்ல.. கோதை திரும்பி பார்த்தாள்.. அடடே வா திலகா.. எப்படி இருக்க அண்ணா சந்தியா லாம் எப்படி இருகாங்க… கோதை மூச்சு விடாமல் பேசவும் …
ஹ்ம்ம் மெல்ல பேசுங்க அக்கா பாருங்க எப்படி மூச்சு வாங்குது.. நான் கேக்கவேண்டியது எல்லாம் நீங்க கேக்குறீங்க … சிரித்துகொண்டாள்.
இப்போ பரவாயில்லயா அக்கா எங்கே கயல்ல காணோம்.. சுத்தி பார்வையை வீசிய படியே கேட்டுக்கொண்டிருந்தாள்.
சரவணனும் சுரேஷிடம்… மச்சான் நா வரேன்னு கயல்லிடம் சொன்னிங்களா இல்லையா…
ஹிஹி… சுரேஷ் இளிக்கவும்…
என்ன ஒரு மார்க்கமா இளிக்கிறீங்க… அப்போ சொல்லல அப்படி தான…
சாரி மச்சான் ஏதோ டென்ஷன் ல சொல்ல மறந்துட்டேன்…
அதானே பார்த்தேன் நான் வந்து இருக்கேன் தெரிஞ்ச இந்நேரம் கயல் வந்து இருப்பாளே… மிதரனை பார்த்துகொண்டே சொன்னான்…
சுரேஷ்ஷும் ஆமாமாம் அவனும் கூட சேர்ந்து ஆமா சாமி போடவும்…
மித்ரன் பல்லை கடித்தான்..
அவள் உள்ளே இருப்பா திலகாஇரு சுரேஷ் கூப்பிட சொல்லுறேன்…
சரிக்கா “
அதுக்கு அவசியமே இல்லாமல் கயல்விழி அழகாய் அலங்காரம் பண்ணி கொண்டு.. கையில் காபியோட வந்து கொண்டிருந்தாள்..மித்ரன். சுரேஷ், கணேஷ், திலகா கோதை உட்பட எல்லாரும் கயல்விழியை ஆச்சிரியம் மாய் பார்க்க ..
சரவணன் மட்டும் கயல் விழியை காதலால் பருகு பருகு பருகி கொண்டிருந்தான்.. அவனுக்கு தெரியும் கயல்விழிக்கு நான் வர போறதை அவள் உணர்வாள்.. என்பது… அதை பொய்யாகாமல் கயல் வரவும் அவளை காதலோடு பார்த்துக்கொண்டிருந்தான்…
கோதையே ஆச்சிரியம் மா பார்த்ததுகொண்டிருந்தாள் . என் பொண்ணு கயல்விழி தானா இது எவளோ .. அழகா புடவை கட்டி தலை நிறைய பூ வைச்சி தேவதை மாதிரி வந்து நிக்குறாளே …
கயல் விழியைகூர்ந்து கவனித்தால்..அவள் . பார்வையில் வித்தியாசம் கண்டு தாய் உள்ளம் கண்டு கொண்டது …. மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.
மிதரனுக்கோ… கயல்விழியின் பார்வை சரவனை னையே பார்துக்கொண்டிருக்க கடுப்பாகி போனான் .
இவனுக்காக தானஇப்படி அலங்காரம் பண்ணிக்கொண்டு வந்து நிக்குற . …. உன்னை பாத்துக்கிறேன் டி..இது வரை கயல்விழி யை காதலால்மட்டுமே பார்த்து கொண்டிருந்தவன்…குரோதமோ பார்க ஆரம்பித்தான் ..
கணேஷ்ஷை நக்கலா ஒர் பார்வை பாத்து அன்னைக்கு என்கிட்டே என்னமோ சொன்ன உன் தங்கச்சிய பத்தி ..தப்பா பேசாதீங்கஅப்படி இப்படி னு சொன்னியே டா பாத்தியா .. உன்னதங்கச்சி லட்சணம்.
கணேஷ் கோவத்தில் பல்லைக்கடிதான்.. கயல்விழியை பார்த்து.
.கயல்விழி கணேஷ்ஷை பார்த்ததும் பயந்தாள்..
சுரேஷ் கணேஷின் பார்வையை கண்டு கயல் பயப்படுறாள்னு புரிந்து கொண்டான்
மெதுவா எழுந்து வந்தவன்.. கணேஷை முறைபோட பார்த்துட்டே
கயல்லிடம் நான் இருக்கேன் பயப்படாத கயல் அம்மா கிட்ட நல்ல விஷயம் பேச தான் மச்சானும் ஆண்ட்டியும் வந்து இருகாங்க … அம்மா உன்கிட்ட கேட்டாங்க னா சம்மதம்னு சொல்லு சரியா யார்க்கும் பயப்படாத…
ஹ்ம்ம்..” சரின்னா..
மித்ரன் கணேஷ் பக்கம் பார்க்காமல் தவிர்த்தாள்..
திலகம்…. கோதைக்கா உங்க கிட்ட நல்ல விஷயம் பேசாதான் வந்துஇருக்கேன் நியாமா பாத்தா சரவணன் அப்பாவோட வந்து இருக்கனும் அவர்க்கு இப்போ வர முடியாத சூழ்நிலை அதை தவிர்க்க முடியல.. தப்பா எடுத்துக்காதீங்க அக்கா…
என்ன திலகம் பீடிகை எல்லாம் பலமா இருக்கு… சிரித்துக்கொண்டே கேட்டாள்..
அது வந்து அக்கா.. என் பையன் சரவணன்க்கு நம்ம கயல்ல கேக்க வந்து இருக்கேன் ..கயல் எனக்கு மருமகளா வர ஆசைப்படுறேன்
சந்தியாபத்தி சொல்லவே வேணாம் உயிர் தோழி.. உங்க அண்ணா பத்தி உங்களுக்கே தெரியும் நான் எதுவும் சொல்லத்தேவையில்ல… எங்க வீட்டுக்கு கயல் வந்தா ஒரு குறையும் இருக்காது சந்தோசமா இருப்பா… கா..
நீங்க
என்ன அக்கா சொல்லுறீங்க….
கோதை
க்கும் சந்தோஷமே.. ஏனெனில் சரவணன் நல்ல பையன்…நல்ல வேலையில் இருக்கான் சின்ன புள்ளைலருந்தே நான் பாத்து வளர்ந்தவன்…கயல்விழிகும் சரவணன் பிடிச்சிருக்குனு நினைக்குறேன்.
.சரவணை பார்க்கும் போதுலாம் கயல்க்கு பொருத்தமா இருப்பான்.
உடம்பு சரியானதும் அண்ணாவிடம் திலகத்திடமும் இத பத்தி பேசணும் னு நினைச்சிட்டு இருந்தாள்…
நல்லவேல திலகமே வந்து பொண்ணு கேட்டதும் கோதை என்ன மறுப்பா சொல்லப்போறாள்.இருந்தாலும் கணேஷ்ஷயும் சுரேஷ்யும் பார்த்தாள்.. சுரேஷ் எனக்கு சம்மதம் மா னு சொல்லவும் .. கோதை கணேஷ்ஷை பார்த்தாள்.
கணேஷ் மறுப்பு தான் சொல்லுவான் னு நன்கு அறிந்த சுரேஷ் முந்திகொண்டு அண்ணன்கும் இதில் சம்மதம் தான் மா…
கணேஷை ஓர் பார்வை பார்த்துட்டே சொன்னான்..
அவன் பார்வையில்… கணேஷ் பயந்துட்டே ஆ.. ஆமாம் மா எனக்கும் சம்மதம் தான்..
சொல்லியவன் மித்ரன்கோவ பார்வையில் கதிகலங்கினான்…
அப்பறம் என்ன அக்கா ரெண்டு அண்ணன்களும் சம்மதம் சொல்லிட்டாங்க இன்னும் எதுக்கு யோசிக்கிறீங்க…
இதுல யோசிக்க ஒன்னும் இல்லை திலகம்… என் பையன்களுக்கும் பொண்ணுக்கும் பிடிச்சிருக்கும் போது எனக்கு பிடிக்காம இருக்குமா… எனக்கும் முழு சம்மதம்.. கோதை சொன்னதும்..
மித்ரன் முகம் ரத்தக்களரி ஆனது …
மித்ரன்னும் அங்க தான் இருக்கான்னு கொஞ்சம் யோசனை பண்ணி முடிவு சொல்லிருக்கலாம்… .அப்படி சொல்லிருந்தாள்….???
பின்னாடி வரும் அசம்பாவிதத்தை தடுத்து இருக்கலாம்… என்ன பண்ணுறது விதி,….
இது தான்
நடக்கணும் னு இருந்தா அதை யாராலும் மாத்த முடியாது……
ரொம்ப சந்தோஷம் அக்கா..
இன்னொரு நாள் நாங்க எல்லாரும் வறோம்…. நிச்சியம் பண்ண ….. சரிங்களா அப்போ நாங்க கிளம்பறோம்…..
சரவணன்பார்வை கயல்விழியை மீது உரிமையோடு படிந்துதது.. . என்னவள் டி இனிமே … எனக்கு சொந்தமானவள்…இதழ் ஒர குறும்சிரிப்போடும் உரிமையோடு அவன் பார்வை அவள் மேனியெங்கும் தழுவி சென்றது…
எப்படி பாக்குறான் பார் கள்ளன்… வெட்கத்தில் சிரித்தாள்…
அவனின் பார்வையின் வீச்சை தாங்கமுடியாமல்.. சிவந்து போனாள்……
இதெல்லாம் ஓர்வேட்டை நாயின் உக்கிரத்தோடு வன்மத்தோட பார்த்துக்கொண்டிருந்தான்… மித்ரன்.. இது வரை நான் ஆசை பட்டு கிடைக்காம போனது இல்ல… முதல் முறையா தோல்வியை சந்திக்க முடியாமல்… அங்கிருந்து சென்று விட்டான்…
அவன் கிளம்பனுதும் பயத்தில் கணேஷ் ஷும் பின்னாடியே ஓடினான்…
சரவணன் மித்திரன் போனதை யோசனையோடவே பார்த்துக்கொண்டிருந்தான்…
என்ன மச்சான் ஏதோ தீவிரமாக யோசிச்சிட்டு இருக்க மாதிரி தெறிதே சுரேஷ் கிண்டலா பேசவும்..
ஆஹ்ன்… ஆமா மச்சான்..
சரவணன் முகத்தை பார்த்து என்ன மச்சான் எதுனா சீரியஸான விசயமா… சுரேஷ் கேட்க.
மச்சான் பயமா இருக்கு..
என்ன மச்சான் பயம்..
கயல் இல்லைனா நான் இல்லை மச்சான்… சீரியஸ்ஸ பேசவும் ….
ஹேய் என்ன மச்சான் அதான் அம்மாவே ஓகே சொல்லிட்டாங்களே அப்பறம் என்ன பயம் .
அது தான் என் பயம்…
என்ன சொல்லுற மச்சான் எத சொல்லுறதுனாலும் புரியும்படியா சொல்லு..
அத்தை சம்மதம் சொல்லுவாங்கனு மித்ரன் எதிர்பாத்து இருக்க மாட்டான்… அவனுடைய கோவம் ஒன்னு அத்தை மேல திரும்பும்.. இல்லனா கயல் மேல திரும்பும்… ரெண்டுல எது நடந்தாலும் பாதிப்பு என்னமோ நமக்கு தான்.. கவலையாய் சொன்னான்….
அட மச்சான் தேவை இல்லாத போட்டு மனச குழப்பிக்காத மச்சான் .. எல்லாம் நல்லதே நடக்கும்.. கவலை படாத…
கடவுளிடம் எதுவெனலும் எனக்கே குடு கடவுளே.. என் உயிரான கயல்ல தண்டிச்சிராதா…… மானஸீகமா வேண்டி கொண்டான்.
மித்ரன் பத்தி அறிந்தவன் அவன் அடிபட்ட பாம்பு…சீற்றம் அதிகம் மா தான் இருக்கும்னு நன்கு புரிந்துகொண்டான்…
இனி…. விழி பேசுமா…