மித்ரன் பட்டுனு கேட்டதும் கணேஷ்கும் கோதைக்கும் … ஒன்னும் புரியாமல் முழிக்கவும்…
என்ன ஆண்ட்டி எதுவும் பேசாம இருக்கீங்க … உங்களுக்கு என்ன மருமகனா ஆக்கிக்க விருப்பம் இல்லையா…
மித்ரன் மனதில்:அடேய் என்னடா அவசரம் பொறுடா யோசிக்கறாங்கல உன் அவசர குடுக்கையாள இல்லனு சொல்லிட போறாங்க கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இரு…
மித்ரன் கணேஷ் முகத்தை பார்த்து என்ன உங்க அம்மா இப்டி யோசிக்குறாங்க…கேட்க… கணேஷ் கண்மூடி அமைதியா இருக்கும் படி செய்கை காட்டினான்.
அம்மா…. கணேஷ் கூப்பிடவும்.
ஹான் .. என்ன பா..
இல்ல பாஸ் கேட்டதற்கு ஒண்ணுமே சொல்லாம அமைதியா இருக்கீங்க மா..
அத பத்தி தான் டா யோசிச்சிட்டு இருக்கேன்..
கணேஷ் மித்ரனை ஒரு பார்வை பார்த்துட்டு இதுல யோசிக்க என்ன இருக்கு அம்மா.. பாஸ் பத்தி உங்களுக்கு சொல்லிருக்கேன்.. அப்பறம் என்ன யோசனை….பண்ண வேண்டியிருக்கு .
கணேஷ் சொல்லுறதும் சரி தான் நா பாத்தா வரை மித்திரன் தம்பி நல்ல பையனா தான் தெரியுறாரு ..ஆளும் பாக்க அழகா தான் இருக்காரு .. கயல்க்கு ஏத்த மாதிரியே இருக்காரு…
என மனதுக்குள் பேசி கொண்டாள்.
கோதையின் முக குறிப்பில் மித்ரன் சந்தோசம் அடைந்தான் ..
வாவ் ஆண்ட்டி க்கு சம்மதம் தான்னு நினைக்கிறேன்… இருந்தாலும்
ஆண்ட்டியே சொல்லட்டும்னு காத்து இருந்தான்.
அங்கே ஊரில் …
சரவணன் திலகத்திடம் அம்மா நீங்க போய் கோதை அத்தை கிட்ட பேசுங்க அம்மா … சொல்லி கொண்டிருந்தான்.
டேய் அவங்களுக்கே உடம்பு சரியில்ல டா, என்னடா அவசரம் கயல் வேற இன்னும் படிப்பே முடிக்கல… எதுக்கு இவளோ அவசரப்படுற உனக்கு தான் கயல்னு முடிவாகிடுச்சே அப்பறம் ஏன் டா…
திலகம் எவளோ சொல்லிப்பார்த்தும் … சரவணன் விடாப்பிடியாய் அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்துட்டான்…..
சென்னக்கு வந்ததும் சுரேஷ்க்கு கால் போட்டான்…
ஹேய்.. மச்சான் எங்கடா போன சொல்லாம கொள்ளாம… உன்ன எங்கெல்லாம் தேடிட்டு இருக்கேன்…
ஊருல இருக்கேன் மச்சான்…
ஊருக்கு போனா சொல்லிட்டு போற பழக்கம் லாம் இல்லையா… என்ன டா ஊருல இருந்து வந்த பையன காணோமேன்னு தேடிட்டு இருக்கேன்…
நீ என்னடா நா ஹாயா சொல்லாம போய்ட்டு.. ஊருல இருந்து வர … ஒரு வார்த்தை சொல்லிட்டு போக முடிலல உன்னால. அட்லீஸ்ட் கால் பண்ணி யாவது சொல்லிருக்கலாம்ல கடுகு போல பொறிஞ்சி தள்ளிட்டு இருந்தான் சுரேஷ்…
மச்சான் சாரி டா … ஊர்ல முக்கியமான வேலை வந்துடுச்சு அத தவிர்க்க முடியல அதான் சட்டுனு போய்டேன்.
அப்படி என்ன….. பொல்லாத வேல சொல்லாமகொள்ளாம போற அளவுக்கு முக்கியமான வேலை…?
சுரேஷ் மச்சான் எல்லாம் அப்புறம் சொல்லுறேன் …
இப்போ எதுக்கு கால் பண்ணேனு கேளு மச்சான்… அத விட்டுட்டு வேற எதையோ பேசிட்டு இருக்க…
நேரம் டா மச்சான் நீ சொல்லாம கொள்ளாம போய்டுவ …. அத நான் கேட்டா உனக்கு பிடிக்காதே…
நீ வாமச்சான் உன்மேல கயல் செம கோவத்துல இருக்கு…
அது கிட்டஎன்ன சொல்லி தப்பிக்கிறனு நானும் பாக்குறேன்.
மச்சான்… அதல்லாம் நான் பாத்துக்கிறேன் கயல எப்படி சமாளிக்கனும்னு எனக்கு தெரியும்.. நான் ஒரு சந்தோஷமான விசியம் சொல்ல தான் கால் பண்ணேன்…
என்ன மச்சான் சந்தோஷமான விசயம்… சொல்லு.
சுரேஷ் மச்சான் நான் மட்டும் சென்னைக்கு வரல அம்மாவையும் கூட கூட்டிட்டு வரேன்..
மச்சான் ஆண்ட்டி அம்மாவ பாக்க வராங்களா ..
இதுல என்ன இருக்கு சந்தோஷ பட… புரியலையே என இழுக்க….
அய்யோ மச்சான் எனக்கும் கயலுக்கும் சம்பந்தம் பேச வராங்க…
ஓ.. சூப்பர் மச்சான்.. ஆனா உங்க அப்பாவும் கூட வராம அம்மாமட்டும் வந்தாக்க…. அம்மா … தப்பா புரிஞ்சிப்பாங்களே உங்க அப்பாக்கு விருப்பம் இல்லையேன்னு..
அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது … அப்பாக்கும் சம்மதம் தான் … கடையில் முக்கியமான ஆர்டர் ஒன்னு இருக்கு . பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வராங்களாம்…
அதனால அங்க போய்டு கால் பண்ணு கோதை தங்கச்சி கிட்ட நான் பேசிக்கிறேன்னு சொல்ல சொன்னார் மச்சான் ….
சரிங்க மச்சான் … சென்னைக்கு வந்தாச்சா எங்க இருக்கீங்க… நான்
வேணா வரவா…
வேணாம் மச்சான்..
நாங்களே வந்துகறோம் அட்ரஸ் மட்டும் சொல்லு போதும்.
அது வந்து… சுரேஷ் தயங்கவும்…
என்ன மச்சான் அட்ரஸ் சொல்லு…
சரவணன் மச்சான்… இப்போ அம்மா கயல் அண்ணா
எல்லாரும்… மித்ரன் வீட்டுல தான் இருக்கோம்…
என்ன சொல்லுற சுரேஷ்… ஏன் அங்க இருக்கீங்க … உங்களுக்கு தான் வீடு பாத்து வச்சு தான கணேஷ் கூட்டிட்டு போனாரு.. அப்புறம் எதுக்கு அவன் வீட்டுல இருக்கீங்க.. கடுப்போட கேட்டான்..
மச்சான்… அத ஏன் கேக்குற … என்னமா பிளான் பண்ணுறான் தெரியுமா… சொல்லறேன்கேளு ஹாஸ்பிடல்ல நடந்தது… அப்புறம் வீட்டுல நடந்தது ஒண்ணுவிடமா சொல்லி முடித்தான்..
சரவணன்க்கு ஒன்னும் மட்டும் நல்லா புரிந்தது கயல் குடும்பம் மொத்தமும் மித்ரன் கண்ட்ரோல்லதான் இருக்குனு…
எல்லாம் அந்த மித்ரன் பிளான் பண்ணி செஞ்சிருக்கான்… பல்லை கடித்தான்..
மித்ரன்… உன்கிட்ட மாட்டிகிட்டேனு என்ன சீப்பா எடை போட்டுட்டல வரேன் நான் யாருனு உனக்கு காட்டுறேன்…
ஹ்ம்” …
சரி அந்த அட்ரஸ் சொல்லுங்க சுரேஷ்…
மச்சான்னு சொல்லாம சுரேஷ்னு சொல்லவும் சரவணன்க்கு தன் மேல கோவம்னு புரிந்து கொண்டான்…
மச்சான் நான் எவளோ தடுத்து பார்த்தேன் ஆனால் எங்க என் பேச்சு எடுபபடுது.. எல்லாம் அந்த மித்ரன் அப்புறம் என் அண்ணா கணேஷ் சொல்லுறது தான் வீட்டுல..
ஹ்ம்ம்… மச்சான் மித்ரன் மேல ஒரு கண் வச்சிக்கோங்க கயல்விழியை பத்திரமா பாத்துங்கங்க நான் வர வரை…
ஹ்ம்.. மச்சான்… பாத்துக்கறேன்…
அவளை முடிஞ்சா அளவு தனியா விடாம கூட யாராவது இருக்குற மாதிரி பாத்துக்கோங்க…
சரவணன் ரொம்ப சீரியசா பேசவும்….
சரவணன் மச்சான் எதுனா என் கிட்ட சொல்லாம மறைக்கிறீங்களா… சொல்லு மச்சான் … அப்ப தானா கயல்விழியை காப்பாத்த முடியும்…
அத நான் பாத்துக்கறேன் நீங்க கயல் வீட்டுல இருக்கும் போது மட்டும் பாதுகாப்பா பாத்துக்கோங்க
நான் வரேன்… வந்ததும் ஒரு முக்கியமான வேலை இருக்கு …. அதுக்கு உங்க உதவி எனக்கு தேவை…
என்ன மச்சான் இப்படி சொல்லிட்டீங்க … வாங்க என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் நான் இருக்கேன் மச்சான் டோன்ட் ஒர்ரி…
ஹ்ம்… நீங்க இருக்கீங்கனு தைரியத்துல தான் நான் கிளம்பி வரேன் …
சரி மச்சான் வாங்க…
கோதை யாரை மாப்பிள்ளையாக முடிவு செய்கிறாள்?
மித்திரன் வலையில் இருந்து கயலை மீட்பானா சரவணன்?
இந்த கேள்விகளுக்கு பதில் அறிய காத்திருங்கள்.
……. விழி விரியும்!