ஹாஹா “”…. என் கஷ்டடியிலே இருந்து கிட்டு …. எனக்கே சவால் விடுறியா… பரவாயில்லடா… உன் மன தைரியத்தை பாராட்டுறேன்…..
லட்சத்துல சம்பளம் வாங்குற உனக்கே இவளோ இருக்குனா …
கோடிகணக்குல டான் ஓவர் பண்ணுற எனக்கு எவ்ளோ இருக்கனும்…. ..
மித்ரன் .ஒன்னு நெனச்சிச்சே நா அத அடையாம விட்டதே இல்லை…
ஆசை பட்டுடது எனக்கு கிடைக்கல நா அத இல்லாம பண்ணவும் தயங்க மாட்டான் இந்த மித்ரன்….
பொதுவா என் வலைல பொண்ணுங்கள ஈசியா விழ வச்சுத் தான் பழக்கம்.. பட்…
இதான் பர்ஸ்ட் டைம் ஒரு பெண்ணுக்காக நான் அவ பின்னாடி போறது..
என்னமோ தெரியல கயல் எனக்குரொம்ப ஸ்பெஷலா தெரியுறா..
என் முன்னாடி நிக்க கூட தகுதி இல்லாதவன்… நீ எனக்கு சேலன்ஞ் விட்ற…
ஹ்ம்ம்..
இதுவும் நல்லா தான் டா இருக்கு .
காச தூக்கி போட்ட நாய் மாதிரி வாலை ஆட்டிட்டு வரும் பொண்ணுகளை பாத்து பாத்து போர் அடிச்சி போச்சு..
ஒரே மாதிரி வாழ்க்கை போச்சுனா அதுல என்ன திரில் இருக்கும் சொல்லு…
இப்போ சொன்ன பாரு இது இது தான் எனக்கு வேணும்… ஐ லைக் இட்.
உன்னோட சேலன்ஞ் நான் ஏத்துகிறேன்..
சுடக்கு போட்டு …
இன்னும் ஒரு மாசத்துல கயல்விழி வாயாலயே மித்திரன தான் கட்டிப்பேனு சொல்ல வைக்கிறேன் பார்…டா..
பட் “…ஒன் கண்டிஷன்.. இது நமக்குள்ள மட்டும்தான் இருக்கனும்.
ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் ..
.இங்கு நடந்ததையோ இதுக்கு அப்பறம் நடக்குறதோ யாருக்கும் தெரியாம முடிச்சு காட்டணும்…
ஓகே வா டீல் .. கட்டை விரலை தூக்கி காட்டினான் . மித்ரன்.
என் கயல் மேலயும் காதல் மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்கு…மித்ரன்.
நீ நெனைச்சது நடக்காது..
ஹாஹா… பாக்கலாம்..
மித்திரனிடம்
தீர்க்கமாகபேசினான் ஒகே உன் டீலுக்கு ஒத்துக்கறேன்…
கை தூக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டு தூக்கி காட்டினான் சரவணன்.
ஒகே.. .மித்ரன் பக்கத்தில் ஒரு பார்வை பார்த்து சைகை காட்ட
ஒகே பாஸ்… சரவணன் கட்டை அவிழ்த்து விட்டான்…
மித்ரன் நேரா வீட்டுக்கு வந்ததும் கயல்விழியை தேடிபோனான்.
அந்நேரம் பார்த்து டிவியில் ஓடும் பாடலில் தன்னை மறந்து மூழ்கி கூடவே பாடி கொண்டிருந்தாள்.
என்னை நான்…… பெண்ணாக எப்பொழுதுமே உணரல…
உன்னாலே….. பெண்ணானேன் எப்படி அது புரியல… விலகி பழகிட தோணுமோ….
பாடிய படியே திரும்பியவள் அதிர்ச்சியில் கண்கள் விரிய அப்படியே நின்றுவிட்டாள்.
கயல்விழியை தேடி கொண்டே வந்தவன்…. பாட்டு சத்தம் கேட்கவும் யார் பாடுறது என வந்து பாத்தவன்… ஷாக் ஆகி நின்று விட்டான்….
அவனால் நம்பவே முடியல… கயல்விழியா பாடினது… எவ்ளோ அழகா பாடுறா… கதவில் சாய்ந்து கைகட்டி நின்று கொண்டுஅவள் பாடுவதையே ரசித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான்…
அப்படியே கயல் அழகையும்… அவள் விழி செல்லும் பாவனையும் ரசித்தான்.
மித்ரனை பார்த்தும் கயல்விழி பாடுறத நிறுத்தித்திவிட்டாள்.
.
அய்யோ இவர் எப்போ வந்தார்… ச்சே நா பாட்டுக்கு பாட்டு வேற பாடிட்டு இருந்தேன். மித்திரன் முகத்தை பார்க்கவே வெட்கப்பட்டு ….தலையை குனிந்து கொணடாள்.
வெட்கத்தில் அவள் சிவப்பதை ரசித்துக் கொண்டே அருகில் வந்தான்…
கயல்விழிக்கு பயத்தில் நாக்கு மேல் உதட்டில் ஒட்டி கொண்டது..
மித்திரன் சட்னு கிட்ட வந்துநிற்பார்னு நினைச்சு பார்காத கயல்..
ஓரடி பின் வாங்கினாள்.
அவளின் மிரட்சியான பார்வையில் மித்திரன் சுதாரித்தான்…. தன்னை கஷட பட்டு கட்டுபடுத்தி கொண்டான்.. இயல்பா முகத்தை வச்சுக்கிட்டு
அழகா பாடுற கயல்.. பாட்டுஎதுனா கத்துகிட்டுஇருக்கியா.
மித்ரன் கிட்ட வந்ததும் பயந்தவள் அவன் இயல்பாய்.. பேசவும் நிம்மதியாய் உணர்ந்தாள்.. ஓரளவு மித்ரன் முகத்தை பாத்து பேசவும் செய்தாள்.
அதெல்லாம் இல்லை சார் சும்மா தான் பாடுனேன் ….. சங்கோஜமாய் பதில் சொன்னாள்..
ஹாஹா …. நல்லா தான் பாடுற கயல்..
மித்திரன் இப்படி சொல்லவும்…
அவன் முகத்தை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்துக் கொண்டே வெளியே சென்று விட்டாள்.
அவளின் சிரிப்பில் தன்னை மறந்து நின்றவன்….
ஹ்ம்ம்ம் தலையை குலுக்கியபடி இது ஆகுறது.. இல்ல .. உடனே கயல் அம்மாவிடம் பேசணும் …
இந்த எண்ணம் தோன்றிய வினாடியே மித்திரன் கோததை முன் நின்றான்.
அந்நேரம்வரை … மித்ரனை பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தாள் கோதை.
இவளோ பெரிய பங்களால யாரும் இல்லாம தனியா இருக்காரே இந்த தம்பி … பாத்து பழகினதுல நல்ல தம்பியா தான் இருக்கார்….. பொறுப்பா கம்பெனியும் நடத்திக்கிட்டு இருக்கார்.
ரெண்டு நாள் தங்கிட்டு போங்கனு சொன்னவர் கிளம்பும்போது என்ன ஆண்ட்டி ரெண்டு நாள் சொன்ன ரெண்டே நாள் தான் தங்குவிங்களா…. நீங்கலாம் வந்ததுக்கு அப்பறம் தான்ஆண்ட்டி என் வீடேஎனக்கு வீடு மாதிரி கலையாதெரிஞ்சுது…
இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போலாமேஆண்ட்டி எனக்குன்னு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ஆண்ட்டி ப்ளீஸ்…. மித்ரன் இப்படி சொல்லவும்….
கோதையால் மறுக்கமுடியாமல் போயிற்று.
கணேஷ் உள்ளே வரவும் … என்ன அம்மா எதையோ தீவிரமா யோசனை பண்ணிட்டு இருக்கீங்க போலயே….?
ஹ்ம்.. ஆமா டா … !
கணேஷ்,…..
என்ன அம்மா…
இந்த மித்திரன் தம்பிக்கு கூட பொறந்தவங்க சொந்தம்னு யாருமே வா,… இல்லை..?
நான் வந்ததுல இருந்து பாக்கறேன் இந்த தம்பியைதேடி யாரும் வரவும் இல்லை போன் பண்ணவும் இல்லை ,…
எவளோ பணம் இருந்தும் என்ன டா பிரயோஜனம்…. இந்த தம்பிகிட்ட சொந்தம்னு சொல்லிக் கொள்ள யாரும் இல்லாம தான இருக்காரு….
ஆமா …… அம்மா பாஸ்ஸோட அம்மா அப்பா ஒரு விபத்துல இறந்துடாங்க. சொந்தங்கள் கடன் குடுத்தவங்க எல்லாம் இருக்குற சொத்தை பிரிச்சு கொண்டு போறதுதுலேயே குறி யா இருந்து இருகாங்க.
அதுவே பாஸ்க்கு
சொந்தம்னா வெறுப்பு வந்துடுச்சு. காசும் பணம் இருந்தா தான் மதிப்புனு முடிவுக்கு வந்தாரு.
யாரோட உதவியும் இல்லாம
கஷ்டப்பட்டு உழைச்சு மேல வந்து இருக்கார்…மா
அவர் கஷ்டபட்டபோ எந்த சொந்தமும் கை கொடுத்து தூக்கல … அதனாலேயே பாஸ்க்கு சொந்தங்கள் மேல வெறுப்பு வந்துருச்சு.
ஓ … பாவம் டா அந்த தம்பி… கோதை பேசிட்டு இருக்கும் போதே.
மித்ரன் உள்ளே வந்தான்.
ஆண்ட்டி இப்போ உடம்பு எப்படி இருக்கு டைம் இல்ல ஆண்ட்டி உங்கள கூட இருந்து பாத்துக்க முடியல .. தப்பா எடுத்துக்காதீங்க…
எதையோ பேச வந்துட்டு …அத தவிர வேற என்னமோ..பேசிட்டுகொண்டு இருந்தான்…
கணேஷ் .. மித்ரனின் முக குறிப்பில் எதையோ பேச வந்து இருக்கார்னு யூகித்து விட்டான்…
என்ன சார் அம்மா கிட்ட முக்கியமா பேச வந்து இருக்குற மாதிரி தெரியுதே என கணேஷ் கேட்கவும்.
ஆமா கணேஷ், ஆண்ட்டி கிட்ட முக்கியமான விசியம் பேச தான் வந்து இருக்கேன்.
நல்ல வேல கணேஷ்ஷும் இருக்காப்ல நாம வந்த வேலை சுலபமா முடியும் என நினைத்து கொண்டான்.
கோதையும் கணேஷும் ஒரு சேர மித்ரன் முகத்தை பார்த்தார்கள்.
அப்படி என்ன முக்கியமான விசயமா இருக்கும்னு என்கிட்ட கூட சொல்லமா வந்து இருக்கார்னு கணேஷ் நினைக்க..
இந்த தம்பி என்ன பேசப்போறாரு ..நம்ம கிட்ட .
அவர் முகத்தை பார்த்தா சீரியஸா பேச போற மாதிரி தெரிதே ..
ஹ்ம் ….. “அந்த தம்பியே சொல்லட்டும் … எதுக்கு அது இது னு நினைக்கனும் …
சொல்லுங்க தம்பி .. என்ன பேசணும்.
அது வந்து ஆண்ட்டி … என்னடா இப்படி சட்டுனு கேட்டுடாரேனு என்னை தப்பா எடுத்துக்க மாட்டிங்கல்ல..
என்ன தம்பி பீடிகை எல்லாம் பலமா இருக்கு.. தப்பாலாம் எடுத்துக்ககா மாட்டேன் .. சொல்லுங்க தம்பி.
எனக்கு …
கயல முதல் தடவையா பாத்த உடனே ரொம்ப பிடிச்சு போச்சு ஆண்ட்டி கல்யாணம்னு பண்ணினா அது கயல் விழிய தான் கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். என்ன உங்க விட்டு மாப்பிள்ளையா ஆக்கிக்க உங்களுக்கு சம்மதமா ஆண்ட்டி.
மித்திரன் சொன்னதை கேட்டு கொண்டிருந்த கோதையும் கணேஷும் என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டிருந்தார்கள்..
கோதை சம்மதம் சொல்வாளா?
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…