விழி மொழியாள்! பகுதி-20

0
485

மித்திரன் புயல் போல் உள்ளே நுழையவும்..சரவணன் வெளியே வேகமா போறதை மித்திரன் கவனித்து விட்டான் …டாமிட் ஆத்திரத்தோட கைகுத்திக்கொண்டான்…

கயல்விழியை தேடியவன்
அவளின் சிவந்த முகத்தை பார்த்ததும் நிதானித்தான்.

.
தன்னையே திட்டி கொண்டான்,முட்டாள் நீ போயிருக்க கூடாது..

வரட்டும் இது தொடர விட கூடாது… எங்கே போனான் ….. இந்த கணேஷ் இவனை நம்பிதானே விட்டு போனேன் . …. யூஸ் லெஸ் பெல்லோ..

மித்ரன்னை அந்த நேரத்தில் கயல் விழி எதிர் பாக்கத்தால்
அவன் முகத்தை பாக்கவே சங்கடம் பட்டாள்.

மித்ரன் அவளின் நடுகத்தையும்… சிவந்து நிற்பதையும் பார்த்துக் கொண்டே அருகில் சென்றான்.

அந்நேரம் பார்த்து
கோதை முழித்து கொள்ளவும் சட்டென்று அம்மாவிடம் சென்று விட்டாள்.

அண்ணா எங்கமா கயல்விழியிடம் கேட்டு கொண்டே கோதை மித்ரனை பார்த்தாள் …

என்ன தம்பி .. மறுபடியும் வந்து இருக்கீங்க எதுனா முக்கிய விசயமா … கணேஷ பாக்க வந்தீங்களா..

கோதை இப்படி கேட்டதும் என்ன சொல்லுறதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்த மித்ரன் … உடனே ஆமாம் ஆண்ட்டி முக்கியமான ஆபிஸ் வேலையா கணேஷ் கிட்ட பேச வந்தேன்…

ஓ.. சரிப்பா.

ஆண்ட்டி உங்க கிட்ட ஒன்னு கேப்பேன் நீங்க முடியாதுனு சொல்லக்கூடாது ..

சிரித்து கொண்டே என்ன தம்பி கேக்க போறீங்க … என கேட்டாள்.

நீங்க மாட்டேன்னு ப்ரோமிஸ் பண்ணுங்க … அப்போ தான் சொல்லுவேன்

கோதை”
ஆச்சிரியம் பட்டாள் எவளோ பெரிய கோடிஸ்வரன் …தான வந்து எவளோ பெரிய உதவி எல்லாம் செஞ்சிருக்கார்.. அவர் கேக்குற மாதிரி என்ன இருக்கு நம்ம கிட்ட… ப்ரோமிஸ் லாம் கேக்குறாரே … ஐயோ என்ன தம்பி இதுக்கெல்லாம் சத்தியம் கேட்டுகிட்டு நீங்க முதல்ல என்னென்னு சொல்லுங்க..

அது வந்து ஆண்ட்டி நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு வரணும்னு ஆசைப்படுறேன் …

சொந்தம்னு சொல்லிக்க எனக்குனு யாரும் இல்லை ஆண்ட்டி .. உங்க கூடலாம் பழகினதுக்கு அப்பறம் தான் எனக்கும் சொந்தங்கள் இருக்கு னு நெனைச்சிக்கிறேன்… என்னமோ தனிமையாய் இருக்குற மாதிரி பீலிங்கா இருக்கு ஆண்ட்டி.

ஒரு ரெண்டு நாள் வந்து எங்க வீட்டுல தங்கிட்டு போனாக்க நான் ரொம்ப சந்தோசம் படுவேன் … ப்ளீஸ் ஆண்ட்டி ஒகே சொல்லுங்க … கண்கலங்க பேசினான்.

ஐயோ என்ன தம்பி இதுக்கெல்லாம் போய் கண்கலங்கிட்டு … எங்களுக்கு எவளோ உதவிலாம் பண்ணிருக்கீங்க கோதையும் கண்கலங்க கூறினாள்.

கணேஷ் வரட்டும் தம்பி கேட்டுட்டு சொல்லுறேன் …

கோதை கணேஷ்னு சொன்னதும் … மித்திரன் ஆசுவாசப்பட்டான் … கணேஷ்தானே ஆண்ட்டி… நான் சொன்னா மறுப்பு சொல்ல மாட்டான் ..ஆண்ட்டி .

இருந்தாலும் ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன் தம்பி தப்பா எடுத்துக்காத பா..

சரிங்க ஆண்ட்டி…

கணேஷும் சுரேஷும் உள்ளே வந்ததும், அம்மா நாம வீட்டுக்கு போகலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு கிளம்பலாம் அம்மா ..கணேஷ் சொல்லவும் ..

கணேஷ் ..

சொல்லுங்க அம்மா.

மித்திரன் தம்பி நம்ம எல்லாரையும் அவர் வீட்டுக்கு கூப்பிடறார் டா .. ஒரு இரண்டு நாள் அவர் வீட்டுக்கு வந்து தங்க சொல்றார் டா.
நீ என்ன டா சொல்லுற ..

கணேஷ் க்கு அதிர்ச்சி என்னது பாஸ் வீட்டுக்கா … அம்மா சொன்னதும் நம்ப முடியாமல் மிதுரனை பார்த்தான் ..

கண்ணால் குறிப்பு காட்டினான் மித்ரன்…

ஓ … புரிந்து கொண்டான்.
இருந்தும் உடனே ஒத்து கொண்டாள் … கூடவே இருக்குற சுரேஷ் க்கு சந்தேகம் வரும் நாம தான் ஏதோ பிளான் போடுறோம்னு நினைப்பான்….எதுக்கு வம்பு நம்ம கொஞ்சம் பில்டப் பண்ணா தான் அவன் நம்புவான்…

ஹ்ம் அதெல்லாம் வேணாம் அம்மா உங்க உடம்பு சரியானதும் போய்கலாம்.

மித்ரன் …
முறைக்கவும் கண்மூடி அமைதியாய் இருக்கும் படி ஜாடை காட்டினான்.

டேய் கணேஷ் என் உடம்பு நல்லா தான் டா இருக்கு அந்த தம்பி ஆசைப்படுது போய்ட்டு வரலாம் டா சரியா …

அம்மா னு கணேஷ் இழுக்கவும்…

நீ சும்மா இரு …

மித்ரன் தம்பி நாங்க எல்லாரும் வறோம் … சந்தோசமா இப்போ.. கோதை கேட்கவும் .

ரொம்ப சந்தோசம் ஆண்ட்டி … வாங்க போகலாம்..

கணேஷ்…. போலாமா.

ஹ்ம்.. ” போலாம் பாஸ்.

மித்திரன் வீட்டை பார்த்ததும் நால்வரும் பிரமித்து போனார்கள் … அது வீடுனு சொல்லுறத விட அரண்மனைனு சொல்லலாம் …. பிரமாண்டமான பங்களா இந்த மாதிரிலாம் சினிமாவில் தான் பார்த்து இருக்கிறார்கள்.

கோதை ஆச்சிரியம் பட்டு போனாள்… எவ்ளோ பெரிய மாளிகையில சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லாம இருக்கானே…..பாவம் மித்திரன் மேல ஒரு தாயாய் பரிவு ஏற்பட்டது கோதைக்கு.

மித்ரன் வேலை ஆட்டக்கள கூப்பிட்டு இவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப வேண்டியவங்க .. இவங்க இருக்குற வரை வேண்டிய உதவிகள் செய்யணும்..புரிதா ஆர்டர் போடவும்.

சரிங்க ஐயா என கூறி விட்டு அவர்கள் அங்கே தங்க தேவையான வசதிகளை செய்து கொடுத்து, பம்பரமாய் சுழன்று அவர்களை கவனித்து கொண்டார்கள்.

மித்ரன் கயல்விழியே பார்த்துகொண்டிருந்தான் … நான் ஆசைப்பட்ட பொண்ணு என் வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டேன்.. நான் ஆசைப்பட்ட படி அவளை அடைஞ்சே தீரணும்… கையில் ரெண்டு நாள் இருக்கு மித்ரன் .. நீ நெனைச்சத சாதிக்க…. கயல் கூட எப்போ தனியா பேச டைம் கிடைக்கும்னு எதிர் பார்த்துகாத்துஇருந்தான்.

மாத்திரை போட்டதும் கோதை தூங்கவும்..

கயல்விழி … பங்களாவை சுத்தி பாக்கலாம்னு வெளியே வந்தாள்.

எப்போனு காத்திருந்தவன்போல் கயல் வெளியே வரவும்.. அவள் பின்னாடியே சென்றான்..

தோட்டத்தை பாத்ததும் கயல் அங்கேயே அமர்ந்துவிட…

அதை தொலைவில் இரசித்து பார்த்துகொண்டே அருகில் வந்தவன்

கயல் மென்மையாய் கூப்பிட்டான்.

சட்டென்று மித்ரன் அங்கு வருவானு கயல் எதிர் பார்காததால் அதிர்ச்சியாய் திரும்பி பார்த்தாள்.

என்ன பாத்தா மட்டும் தான் உனக்கு பயம் வருமா கயல் பேசிய படியே அருகில் உக்காந்து கொண்டான்.

அவள் அமைதியாய் இருக்கவும்…உன்கிட்ட தனியா பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன் .. பட் அதுக்குன்டானா நேரமே அமையல …. கயல்

கயல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் இவர் என்கிட்ட என்ன பேசணும் நெனைக்குறாரு யோசித்தபடியே.. மித்ரனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளின் பார்வையில் மித்ரன் தடுமாறினான்
மிதுரனுக்கே சந்தேகம் வந்தது .. நானா ஒரு பொண்ணு கிட்ட பேச இப்படி தயங்குறேன்.

மித்திரன் தயக்கத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் பேச்சை தொடர்ந்தான்.

கயல் எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு .. எனக்கு உன்ன தான் கல்யாணம் பண்ணிக்கணும் ஆசைபடுறேன் அது ஏன்னு எனக்கே தெரியல… உன்ன போட்டோவுல பார்த்ததுல இருந்து நான் நானாவே இல்லை.

கயல்…ஐ லவ் யு.

கயல் அவன் பேசுவதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

உன் அண்ணனுக்கும் இதில் சம்மதம் தான்.. கயல்.. சோ நீ பயப்படாம சொல்லு …

என்ன சொல்வது என தெரியாமல் கயல் அதிர்ச்சியில் இருக்க,

அவள் அமைதியாய் இருக்கவும்.

நீ சரவணனை விரும்பறனு எனக்கு தெரியும் கயல் .. மித்திரன் இப்படி சொன்னதும்.

கயல் பேரதிர்ச்சிக்கு உள்ளானாள். நம்மை பற்றி இவனுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது.
எதுவும் சொல்லாமல் அமைதியாய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

நீ யார வேணா லவ் பன்னிருக்கலாம் கயல் … பட் உனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என் கூட மட்டும் தான்.

நான் ஆசைப்பட்டதை அடஞ்சே பழக்க பட்டவன். உன்னையும் அடஞ்சே தீருவேன். தீர்க்கமாக கயலை பார்த்து அவன் கூறி கொண்டிருந்தான் ‌

அந்நேரம் பார்த்து சுரேஷ் அங்கே வரவும்.. மித்ரன் சட்டென்று விலகி நின்று கொண்டான்..

இவன் கயல் கிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்கான் யோசனையோடவே
கயல் சுரவணன் எங்க போயிருக்கானு தெரியுமா உங்கிட்ட எதாவது சொல்லிட்டு
போனானா என சுரேஷ் கேட்கவும்.

தெரியலயே அண்ணா அவர் எங்கிட்ட ஒண்ணுமே சொல்லயே.. ஏன் அண்ணா எதுனா ப்ராபளமா…
கயல் சுரேஷிடம் கேட்டு க்கொண்டிருக்கையில்..

சரவணன இனிமே எங்க தேடினாலும் கிடைக்க மாட்டான். அவன வர முடியாத இடத்துக்கு அனுப்பி வைக்க சொல்லிட்டேன் என மனதுக்குள் கோவமாய் சிரித்தபடி கூறி கொண்டான் ‌மித்திரன்….!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here