விழி மொழியாள்! பகுதி-18

0
502

அண்ணா.. தயக்கத்தோடு கூப்பிட்டாள.

ஹ்ம் என்ன…?

அம்மாவ பாக்க போகலாமா அண்ணா…

போலாம் போலாம் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு நமக்கு வேண்டியவங்க வராத சொல்லிருக்காங்க…

யாரு வராங்க அண்ணா.

எல்லாம் நமக்கு வேண்டியவங்கனு சொல்லுறேன்ல போ சும்மா தொண தொணனு பேசிகிட்டு எரிச்சல் பட்டான்..

எதுவும் பேசாமல் உள்ளே போய் விட்டாள்….

விலை உயர்ந்த புது மாடல் ஆடி காரை ஓட்டி வந்தான் மித்திரன்.

வெளிநாட்டில் இருந்து வாங்கிய கூலிங்கிளாஸ் போட்டு கொண்டு ஸ்டைலாக வந்தான்.

வீட்டுக்குள் உள்ளே வந்த மித்திரன் கால்மேல் கால் போட்டு கணேஷை மிதப்போட பார்த்தான் மித்திரன் .

கணேஷ்க்கு கையும் ஓடல காலும் ஓடல … வா… வாங்க சார்… உக்காருங்க….

கயல் கயலு மா இங்க வா உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்…

எதாவது முக்கியமா இருந்தா தான் கணேஷ் தன் பேரை சொல்லி கூப்பிடுவான் என தெரியும் அதனால் வந்துட்டேன் நா என வேகமாக வந்தாள்.
.
மித்திரன் கண்கள் கயல்விழியை ஆசையாக தேடின…

புகைப்படத்தில் பார்த்தது இப்போ தான் நேரில் பார்க்க போகிறான்…. அவனுக்குள் ஒரு வித பதட்டம் வந்தது….
(அவனுக்குள்ளே சொல்லிக் கொண்டான் டேய் மித்துரா.. என்னடா ஆச்சு உனக்கு… என்னமோ பொண்ணுங்கள இப்போ தான் புதுசா பாக்குறமாதிரி பதட்ட படுற.. ரிலாக்ஸ்…ஹ்ம்….. ஆமா பொண்ணுங்க புதுசு இல்லை தான்…. ஆனா இவ மட்டும் எனக்கு புதுசா தெரியறாளே… என்ன பண்ணட்டும்…) அவள் வரும் வழியில் விழி பதித்து காத்து இருந்தான்……

கயல்விழி காபி போட்டு எடுத்து வந்தாள்.

கயல பாத்துட்டு மித்திரன் வச்ச கண் வாங்காமல் மெய்மறந்து நின்றான்.

வாவ்… எவ்ளோ அழகா இருக்கா வானத்து நிலவே பூமியில் நடந்து வர மாதிரி தோன்றியது.

என்னமா இருக்கா சான்ஸ்சே இல்லை நான் பாத்த பொண்ணுகளாம் இவ முன்னாடி நிக்க கூட முடியாது….

அவளுடைய கண் , காது மூக்கு கன்னம்.. இதழ், கழுத்து,… இன்னும்… இன்னும்.. அத்தனையும் ரசித்து பார்த்து கொண்டிருந்தான்…

அந்த நொடி தோன்றியது இவள் எனக்கு மட்டும் தான் யார்க்கும் விட்டு கொடுக்க மாட்டேன்…. இடையில யாராவது தடுக்க வந்தா .. அவங்கள இல்லாம பண்ணிடுவேன்…. வன்மத்தோட நினைத்து கொண்டான்.

ஏதோ அண்ணா சொன்னார்னு காபி போட்டு கொண்டு வந்தாக்க இப்படி பாக்குறான்…

முன்ன பின்ன பொண்ணயே பாத்தது இல்ல போல. முஞ்சியை பாரு… வீட்டுக்குள்ள தான இருக்கான் … கண்ணாடி போட்டுட்டு இருக்கான் சரியான லூசா இருப்பான் போல….

அவளுக்கு அவன் பார்வை பிடிக்கவில்லை, ஏனோ அவள் மனதில் நெருடலாக தோன்றியது.

அவள் போவதையே வெறித்து பார்த்தான்.

சார் “,,போலாமா என்று கேட்கவும்……

இவனுக்கு நேரம் காலமே தெரியாது எப்போ கேக்குறான் பாரு போலாமானு என்ன அவசரம்…
இப்போ தான் கயல்விழிய பாத்து அவ அழகை ரசிச்சு கிட்டு இருந்தேன் அதுக்குள்ள கழுதைக்கு மூக்கு வேர்த்த மாதிரி போலாம்னு சொல்றான்.
மரமண்டை….குரங்கு பையன்…

மித்திரன் நம்மள தான் மனசுல திட்டுறான்னு தெரியாம….

சார் “பவியமா கூப்பிட்டான்…

அஹன்….
“சுயஉணர்வு பெற்றான்.. .
ஹ்ம்… போலாம் போலாம் கயல்விழியும் நம்ம கூட தான வராங்க கணேஷ்.

ஆமா சார் ….

ஓ.. நைஸ்..
சந்தோசமாகவே கயல்விழியை பார்த்தான்… இவளும் வர லா வரட்டும் உன்ன இனிமே தனியே விட மாட்டேன்… நீ எனக்கானவள் . அவளின் ஒவ்வொரு அசைவும் நடக்கும் போது ஆடிய கூந்தலும் தேவதை தான் டி நீ… . ரசித்து கொண்டிருந்தான்…

கயல்விழி அங்க ஒருத்தன் இருக்கானு… நினைப்பு இல்லாம அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் …. அண்ணனிடம் … போலாம் அண்ணா அம்மாக்கு சாப்பாடு கொடுக்கணும் டைம் ஆகிடுச்சு… சொல்லவும்.

மித்துரனுக்கு தான் என்னமோ போல் ஆகி விட்டது..

கணேஷ் திரும்பி சார் போலாமா கேட்கவும் ..

ஹ்ம்” வாங்க
போலாம்… கயல்விழியே பார்த்துடே சொன்னான்..

கார் எடுத்தததும் கணேஷ் முன்னாடி வந்து உக்காரவும் கயல் பின்னாடி உக்கார்ந்து கொண்டாள்.

அத பாத்ததும் கணேஷ் மேல் கோவம் வந்தது …. அந்தக் கோவத்தை அப்படியே கார் மீது காட்டினான் …. போயும் போயும் இவன் உக்காந்து சவாரி செய்யவா நான் இருக்குற எல்லாம் வேலையும் விட்டுட்டு வந்தேன்…டாமிட் ஸ்டியரிங்கை குத்தினான்.

கணேஷ் வாயை வச்சிக்கிட்டு சும்மானாச்சும் இருந்து இருக்கலாம்… சார் கோவமா இருக்கீங்க போல தயக்கத்தோடு கேட்கவும் .

திரும்பி கயல்விழியை பார்த்தான் மித்திரன். அவள் வெளியில் வேடிக்கை பார்க்கவும் திரும்பி கணேஷை கோவத்தோடு பார்த்து கேட்டான் என்ன பாத்தா உனக்கு எப்படி தெரிது நா என்ன உன் வீட்டு டிரைவரா… ..

எதுக்கு கோவம் படுறாருனு கணேஷ் க்கு புரியாமல் சார் …. நான் என்ன பண்ணேன் . ஏன் கோவமா பேசுறீங்க… கேட்க..?

மித்திரன் கண்ட்ரோல் யுவர் செல்ப்… கோவத்தை கட்டுப்படுத்தமுயன்றான்..

கணேஷ் உங்க அம்மா கிட்ட பேசுங்க சீக்கிரமா…ஒகே வா..

கயல் சட்டென்று திரும்பி பார்த்தாள்… என்ன பேச சொல்லுறாரு.. அம்மா கிட்ட..???

அவளுக்கு புரியவில்லை.. நா எதுனா கேட்டு அண்ணா என்கிட்ட மறுபடியும் கோச்சிக்கிட்டா.. எதுக்கு வம்பு வேணாம் கயல் கம்முனு இரு உள்ளுக்குள் சொல்லி கொண்டாள்.

ஆஸ்பத்திரி வந்தது கயல் இறங்கியதும் நேரா அம்மாவை பார்க்க போய்விட்டாள்…

மித்திரன் கார் விட்டு இறங்காமல்அவள் போவதையே பார்த்து கொண்டிருந்தான்.

“சார் “. ..

ஷ்ஷ்… .. என்ன கணேஷ்… எரிச்சல்லோட கேட்டான்…
கொஞ்சமாச்சும் பாக்க விடுறானா பாரு எப்ப பாரு சாறு மோரு னு சொல்லிக்கிட்டு..

கயல் கண் பார்வையை விட்டு மறைந்ததும் கடுப்பாக கேட்டான் என்னனு சொல்லி தொலைங்க….

சார் “ஏன் நம்ம மேல இவளோ கோவமா பேசுறாருனு கணேஷ் க்கு ஒன்னும் புரியாமல் முழிச்சிட்டு இருந்தான்…

கணேஷ் முன் சொடக்கு போட்டு . …

“ஹலோ… இப்படியே உக்காந்து இருக்கலாம்னு உத்தேசமா…. .

இல்லை சார் “.

அப்போ வாங்க போலாம்.

ஹ்ம்.. ” எல்லாம் நா சொல்ல வேண்டியதா இருக்கு…

கணேஷ் தலை குனிந்து கொண்டான்.

உள்ளே வந்த மித்திரன் கண்கள் கயல்விழியை தேடின..

சார்…

மறுபடியுமா…
என்ன கணேஷ் பொறுமையை இழுத்து பிடிச்ச படி கேட்டான்…

சார் … வாங்க அம்மாகிட்ட உங்கள அறிமுக படுத்துறேன்…

ஸ்ப்பா… நீ பேசுனதுலயே இது தான் உருப்படியா பேசுற.

கணேஷ்.. அம்மா கிட்ட போனதும் … அம்மா இவர் தான் மா என் பாஸ். நா கூட உங்க கிட்ட சொன்னேனே…. அவர் தான்..

உங்கள எங்களுக்கு திருப்பி கொடுத்த தெய்வம் மா ..

அவர் இல்லனா என்ன ஆகி இருப்போமோ… அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்…

இங்க சென்னைல உங்க ட்ரீட்மெண்ட் க்கு ஏற்பாடு செஞ்சது சார் தான் மா.
அவருக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட சொல்லி நல்ல ட்ரீட்மெண்ட் கொடுக்க சொன்னார் மா. எவளோ பில்டப் பண்ண முடியுமோ அம்புட்டும் பண்ணான் கணேஷ்.

பின்ன பண்ணி தான ஆகணும் ஏற்கனவே சார் என் மேல கடுகடுன்னு இருக்காரு …..இப்பவும் சும்மா இருந்தா என்ன காலி பண்ணாலும் பண்ணலாம்….. அதுக்கு தான் இந்த எக்ஸ்டரா பிட்டிங்…

மிதுரனுக்கோ ஆச்சரியம்”.. கணேஷா பேசுறது…நம்ப முடியாமல் பார்த்தான்..

கோதை “…”கணேஷ் அவன் பாஸ் பத்தி முதல்ல சொல்லும் போது பயந்து தான் போனாள்…
யாரோ முகம் தெரியாத மனுஷன்.. நம்மளுக்கு ஏன் இ வ்வளவு உதவி பண்ணனும்னு நினைத்தாள்.

ஆனால் மித்திரனை பார்த்ததும்,
அதுவும் அவன் பண்ண உதவிகள் எல்லாம் கணேஷ் சொல்லவும் அவன் மேல் நல்லா அபிப்ராயம் உருவானது கோதைக்கு.

பாத்தா நல்லா பையனா தான் இருக்கான் … நாம தான் இந்த புள்ளைய தப்பா நெனைச்சுட்டோம்…..

வாங்க தம்பி உக்காருரங்க. கணேஷ் உங்கள பத்தி நெறைய சொல்லிருக்கான் ஆனா நேர்ல பாத்தது இல்லை..

ரொம்ப நன்றி தம்பி எங்களுக்கு பெரிய உதவிலாம் பண்ணிருக்கீங்க கையெடுத்து கும்பிட்டாள்.

அய்யோ…….
என்னமா என்ன போய் கும்பிடுறீங்க… நானும் உங்க குடும்பத்துல ஒருத்தன்னு நெனைக்கிறேன் ..எல்லாம் நமக்குள்ள ஒன்னு அப்படி நினைத்து தான் இதல்லாம் செஞ்சேன்…

என்ன கையெடுத்து கும்பிட்டு அந்நியமா ஆக்கிடாதீங்க மா….கண்கலங்க கைபிடித்து பேசி கொண்டிருந்தான். (ந டித்து )கொண்டிருந்தான் என்று தான் கூற வேண்டும்.

சரிப்பா. உன்னையும் என் மகனா தான் பார்க்கிறேன்…

கோதை சொல்லவும்,

“மிதுரனுக்கு திக்” என்று ஆனது……!!!

(மித்திரன்) ஆட்டம் தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here