விழி மொழியாள்! பகுதி-14
சார்.. என்ன ஆச்சி சார் போன் ஏன் கட் பண்ணிட்டீங்க பதட்டமா தான் கேட்டான் கணேஷ்.
ஆனால் மித்ரனுக்கோ இவன் யார் என்னையே கேள்வி கேக்க கோவம் வந்தது இருந்தும் கண்ட்ரோல் பண்ணிகிட்டான்.
கணேஷ்.., “
சார். “
நா இப்ப சொல்லுறத கவனமா கேளுங்க.
ஹ்ம் ” சரிங்க சார்.
என் ஆளு ஒருத்தன் உங்க வீட்டுக்கு வருவான். அவன் கொடுக்கிற
மாத்திரைய உங்க அம்மா எடுத்துகிற மாத்திரையோட கலந்து கொடுத்துடுங்க.. ஓகே ” வா.
சார்..???? இதால எங்க அம்மாக்கு எதுனா ஆகிடுச்சினா பயந்தான் கணேஷ். வேணாம் சார் வேற ஐடியா இருந்த சொல்லுங்க ப்ளீஸ்.
மித்திரன்க்கு கோவம் வந்தது. நோ மித்திரன் கண்ட்ரோல் யுவர் செல்ப் இப்போ கோவம் படறதுவிட நமக்கு காரியம் தான் முக்கியம் என்று தனக்குள் கூறி கொண்டான்.
டோன்ட் ஒர்ரி “கணேஷ் இது லைட்டா நெஞ்சு மட்டும் தான் வலிக்கும் மத்தபடி ஒன்னும் ஆகாது கணேஷ்.
நான் என் டாக்டர்கிட்ட கன்செல்ட் பண்ணிட்டு தான் சொல்லுறேன்” சோ ” டோண்ட் ஒர்ரி கணேஷ்.
சார்..? கணேஷ் க்கு மித்திரன் எவளோ சொல்லியும் மனம் சமாதானம் அடையவில்லை.
நாம சொன்னது கணேஷ்க்கு
உடன்பாடில்லைனு புரிஞ்கிட்டான். இவனை இவன் போக்கிலேயே தான் மடக்க முடியும்.
கணேஷ்...
சார்.”
என் மேல நம்பிக்கை இருக்கா இல்லையா?
என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க நம்பிக்கை இல்லாமலா கயல கட்டிக் கொடுக்க சம்மதிச்சேன்.
முட்டாள்.. “நீ சம்திச்சானால தான் கயல் எனக்கு கிடைக்க போகறாள நெவெர் ” மித்திரன் ஆசைப்பட்டத அடையாம விடமாட்டான்.. அவளால் தான் டா நீயே என்கிட்ட இந்த அளவுக்கு பேசுற இல்லனா நீயெல்லாம் எனக்கு ஈடா ” என மனதில் நினைத்து கொண்டான்.
எல்லாம் அவள் ஒருத்திக்காக கண்ட்ரோல் பண்ணிகிட்டான் டேமிட் டேபிள் மேல் கையை குத்திக் கொண்டான்.
கணேஷ் உங்களுக்கு அம்மா னா எனக்கு என் வருங்கால மாமியார். என் அத்தைக்கு எதுனா ஆக விட்டுடுவேனா சொல்லுங்க கணேஷ்.
கணேஷ்க்கு .. மித்திரன் தன் அம்மாவை அத்தைனு உரிமையோடு சொல்லவும் கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகம் எல்லாம் காணாமல் போய் குளிர்ந்து விட்டான். பின்ன எவ்ளோ பெரிய பணக்காரர் எங்க அம்மாவை அத்தைனு உரிமையோடு சொல்லுறாரு.
அதனாலேயே மித்திரன் சொன்ன ஐடியாவை செயல் படுத்த முடிவு செய்தான்.
சரிங்க சார் நீங்க சொன்ன ஆல் எப்போ வருவானு கேட்டான்.
இந்நேரம் வந்துட்டு இருப்பான் கணேஷ்.
ஓ….
அதே நேரம் ” வீட்டில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும், சார் வந்துட்டாரு போல என
அதிர்ச்சியாய் கூற,
ஹாஹா.. என்ன கணேஷ் ஷாக் ஆகிடீங்களா எஸ் இது தான் மித்திரன்..
ஓகே நான் சொன்ன மாதிரி பண்ணிட்டு எங்கிட்ட சொல்லுங்க என்று சொல்லி விட்டு கால் கட் செய்தான்.
அங்கே கோவிலில்;
தங்கையை அந்த காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றான் சுரேஷ்.
நம்ம கயலா இப்படி, அவனால் நம்ப முடியவில்லை.
சரவணன் பத்தி யோசித்து பார்த்தான். நல்ல பையன் தான் நல்ல வேலையில் இருக்கான். நிறைய வருமானம் வருது. குடும்பமும் நல்ல குடும்பம். கயல் விழியை நல்லா பாத்துகிற மாமியார். சந்தியா தோழியா இருக்கும் போதே கயல அன்பா பாத்துக்கிட்டவ இப்போ அண்ணியா ஆகிட்டா இன்னும் எப்படில்லாம் பாத்துபா.
அவன் மைண்ட் வாய்ஸ்:- டேய்ய் உன் ஆளு உனக்கு ஒகே சொல்லணுமே அதுக்கு நீ கொஞ்சம் அடக்கி வாசி புரிதா. எல்லாம் எனக்கு தெரியும் நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா என்ன இருந்தாலும் நான் அண்ணன்ல ஒரு கெத்து காமிக்க வேணாமா.
ஹாஹா…அவனும் சந்தியாக்கு அண்ணன் தான் அது நியாபகம் வச்சிக்கோ அவன் மைண்ட் வாய்ஸ் இடித்து உரைத்தது”.
அட ஆமால இத மறந்துட்டோமே.
டேய்ய் சுரேஷ் அடங்கு ஹ்ம் இது தான் சரி இப்பவாச்சும் என் பேச்ச கேக்கணும்னு தோணுச்சே..
சரி சரி ஓவரா பேசாத எல்லாம் எனக்கு தெரியும் நீ போ முதல்ல எப்ப பாரு நொய் நொய்னுட்டு. டேய் நேரம் டா என சொல்லி விட்டு மனசாட்சி மறைந்தது.
சந்தியா சுரேஷை பார்த்து விட்டாள்.
கயல்விழி ஊரை விட்டு போறோம்னு சொல்லி அழுதுட்டு இருந்தாள் அத பாக்க முடியாம வா கோவில்
போகலாம்னு சொல்லி அழைச்சிட்டு வந்தான் சரவணன்.
சரவணன் கூப்பிட்டு வந்தா வீட்டுல தப்பா நினைப்பாங்கனு கூடவே சந்தியாவையும் வர சொன்னான்.
அவளும் தோழியை பிரிய போகிறோம் என கவலைபட்டாள்.
கோவில் உள்ளே வந்ததும் நான் பிரகாரம் சுத்திட்டு வரேனு சொல்லி அவர்களை தனிமையிலே விட்டு சென்றாள்.
சுத்திட்டு வரும் போது சுரேஷை பார்த்து பயந்து விட்டாள்.
அய்யயோ கயல் அண்ணா பாத்துட்டாரே அவள் ஓடிப்போய் சொல்லுறதுக்கு முன்னே, அவர்கள் முன்னாடி சுரேஷ் போய் நின்றான்.
இருவரும் சுரேஷை சற்றும் அங்கே எதிர் பார்க்காமல் கண்களில் மிரட்சியுடன் பார்த்தனர்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…