சுரேஷ் உள்ளே வந்தவுடன் அம்மாவை தேடுனான்… அம்மா அம்மா……
என்னடா வந்ததும் வராததுமா கத்திட்டே வர அப்படி என்ன முக்கியமானத சொல்ல போற.
ஆமா முக்கியமான விசியம் தான். எதுக்கு இந்த வீட்ட விட்டுட்டு சென்னைக்கு போகணும்.
நான் எங்க சென்னைக்கு போலாம்னு சொன்னேன் எல்லாம் உன் அண்ணன் பண்ற வேலை.
எனக்கு மட்டும் இங்கிருந்து போகணும்னு ஆசையா என்ன எதுவா இருந்தாலும் அவனை போய் கேளு. கோவமா சொல்லிட்டு இருந்தாள்.
ஓஹோ… அப்போ உங்களுக்கு இதுல முழுசா விருப்பம் இல்லையாமா..
இல்லை டா….
ஹ்ம்… அண்ணன் கிட்ட பேச வேண்டியது தானே மா .
எங்க என் பேச்சு எடுபடுது…. தோ.. உள்ள தான் இருக்கான் பார் எத கேக்குறதுனாலும் அவன்கிட்ட போய் கேளு.
பெருமூச்சுடன் அங்கிருந்து சென்றாள்.
ஓஹோ அண்ணா இங்க தான் இருக்காரா… இத பத்தி அம்மாகிட்ட சொல்லுறதுக்கு முன்னாடி … நாமளே போய் என்னென்னு கேப்போம் அண்ணா கிட்ட… மேல வந்தான் .
அண்ணா அண்ணா.. கூப்பிட்டுக்கொண்டே… அவன் அறையில் எட்டி பார்த்தான். அறையில் இல்லாததை கண்டதும் மாடிக்கு போயிருப்பார் என நினைத்து அங்கே சென்றான்.
கணேஷ் யார் கூடவோ சீரியசாக பேசி கொண்டிருந்தான். அவர் முகத்தை பார்த்ததும் ஏதோ முக்கியமானது பேசுறார் என்று புரிந்து கொண்டான்.
அவர் பேசி முடிக்கட்டும்னு காத்து கொண்டு இருந்தான்.
கணேஷ் பேசும்போது அவனுடைய முகம்பாவத்தை கவினிச்சிட்டே நின்று கொண்டிருந்தான். …
ஓகே சார் அப்படியே செய்யுறேன் என்று சொல்லி கால் கட் செய்து விட்டு திரும்பியவன் அங்கே தம்பிய கண்டதும்,
ஹே சுரேஷ் நீ எப்போ வந்த டா…….
ஹம். இப்ப தான் வந்தேன்.
ஓகே சரி வா பேக் பண்ணனும் டைம் இல்லை ஈவினிங் வண்ணடிக்கு சொல்லிருக்கேன் அதுக்குள்ள அரேன்ஜ் பண்ணனும் வா வா அவசரப்படுத்தினான் கணேஷ்.
எங்க கிளம்பணும் சுரேஷ் சாவகாசமா மாடி திண்ணைல உக்காந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான்.
ஹேய் என்னடா லூசுசா நீ நாம சென்னைக்கு போறோம் அதுக்கு தான உனக்கு காலேஜ் ல பேசி சென்னைக்கு மாத்துனது. என்னமோ புதுசா கேள்வி படுற மாதிரி கேக்குற. கிளம்பிவா டைம் இல்லை எரிச்சல் பட்டான்.
நா எவ்ளோ டென்ஷன் ல இருக்கேன் இவன் இப்படி கூலா உக்காந்து கிட்டு கேள்வி கேக்குறான்.
சுரேஷ் அண்ணனையே தீர்க்கமா பார்த்து கொண்டே சொன்னான் நாங்க யாரும் சென்னைக்கு வரபோறது இல்லை அண்ணா.
சுரேஷ்……? கணேஷ் அதிர்ச்சியாய் பார்த்தான்.
அவன் அறிந்து சுரேஷ் இவளோ தைரியமா என் முன்னாடி பேசமாட்டான். எங்கிருந்து வந்தது இவனுக்கு இவளோ தைரியம்.
கணேஷ்க்கு சுறு சுறுனு கோவம் வந்து விட்டது. டேய் நீ யார்கிட்ட பேசுறேன்னு நியாபகம் வச்சிட்டு பேசு.
ஓ நல்லா நியாபகம் இருக்கு என் அண்ணா கிட்டாதான் பேசிகிட்டு இருக்கேன்.
கணேஷ்க்கு கட்டுகடுங்காம கோவம் வந்துவிட்டது. டேய்னு அடிக்க கை ஓங்கி விட்டான்.
கணேஷ் அடிக்க வந்தும் அசராம அவனையே நிமிர்ந்து பார்த்தான்… ஏன் அண்ணா அடிக்க வந்து அடிக்காம விட்டுட்டே..
அப்போ தான் கணேஷ் க்கு புரிந்தது.. கோவத்துல என்னபண்ணுறோம்னு தெரியாம அடிக்க கை ஓங்கிட்டோம்னு சட்டுனு கைய இறக்கி விட்டான்..
கணேஷ் பொறுமையை கடைப்பிடித்து கேட்டான் நேத்து வரை இங்கிருந்து போறது பத்தி நீ மறுப்பு சொல்லலையே இன்னைக்கு என்ன வந்துச்சி உனக்கு.
சுரேஷ் எழுந்து நின்றான்.
என்ன கேட்ட அண்ணா ஆமா நேத்து வர சென்னைக்கு வரேன் தான் சொனேன் என் அண்ணா எது செஞ்சாலும் எங்க நல்லதுக்கு தான்னு நினைச்சிட்டு இருந்தேன்….ஆனா இப்போ….. ?
இப்போ என்ன கெட்டுபோச்சி. இப்பவும் உன் நல்லதுக்கு தான போலாம்னு சொல்லுறேன்… சுரேஷ் அது பெரிய காலேஜ்டா அதுல படிச்சா பியூச்சர் ல பெரிய இடத்துக்கு போக வாய்ப்பு இருக்கு. அதுக்கு தேவயானது எல்லாம் உனக்கு ரெடி பண்ணி வச்சிட்டேன்.
நீ எதுக்கும் கவலைபடாத நா பாத்துக்கிறேன் நாம சென்னைக்கு போனா எல்லாம் மாறிடும் நம்ம ஸ்டேட்ஸ் வேற மாதிரி ஆகிடும் டா சொல்லுறத புரிஞ்சிக்கோ.
பொருமையாக எடுத்து சொன்னான் கணேஷ்.
அண்ணா இதெல்லாம் நீ ரெடி பண்ணியா இல்லை உன் பாஸ் ரெடி பண்ணதா சொல்லு அண்ணா..
கணேஷ்…அதிர்ச்சியாய் பார்த்தான்….
இவனுக்கு பாஸ் பத்தி என்னமோ தெரிஞ்சி இருக்கு அதுதான் என்கிட்ட இவ்ளோ தைரியமா பேசுறான்.
கணேஷ் யோசிச்சான்
இவனை இப்படியே பேசவிட்டா நாம நெனைச்சா படி சென்னை க்கு போகமுடியாது. என்ன சொன்ன வழிக்கு வருவான் சிந்தித்தான்…
அண்ணா…. நா கேட்டதற்கு பதிலே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்..
.
என்ன கேட்ட…
இது எல்லாம் நீ ரெடி பண்ணியா..
இல்லை உன் பாஸ் பண்ணதா… அதே கேள்விய திருப்பி கேட்டான்..கூர்மையாய் பார்த்தபடி… . .
ஏன் கேக்குற இப்படி நான் தான் எல்லாம் பண்ணேன் அவன்கிட்ட இருந்து தடுமாற்றமா பதில் வந்துதது..
நீயா நீயா… பண்ணின யார்கிட்ட காது குத்துற இதெல்லாம் உன் பாஸ் ஏற்பாடு தான் எனக்கு நல்லா தெரியும் என்று கூறினான்.
கணேஷ் அதிர்ச்சியை வெளிகாட்டி கொள்ளாமல்;
சரி டா பாஸ் நம்ம குடும்ப நல்லதுக்காக பண்ணிற்காரு டா இதெல்லாம்.
சரி அண்ணா நீ சொன்ன மாதிரி எனக்கு நல்லது, அம்மாவையும் நீ பாத்துப இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
கயல்…? கயல் பத்தி சொல்லு.
அவளை என்ன பண்ணலாம்னு இருக்க, சொல்லு அண்ணா கோவமாக கேட்டான் சுரேஷ்.
இந்த கேள்வியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை கணேஷ். என்ன சொல்லி சமாளிக்கலாம் என யோசித்து கொண்டிருந்தான்.
சுரேஷின் ஆவேசம் குறையாமல் தொடர்ந்தான்.
உன் பாஸ் கிட்ட கயல விக்க பாக்குறியா சீ…ச்சீ.. நீயெல்லாம் ஒரு அண்ணனா இப்படி கூட புறந்தவளா கூட்டி கொடுக்கறதுக்கு தான் உன் பாஸ் இவ்வளவும் பண்ணுறானா தடித்த வார்த்தையை கொட்டினான்….
கணேஷ் எதுவும் பேச முடியாமல் பேய் அறைந்த மாதிரி இருந்தான்.
தம்பி சுரேஷ் இவ்வளவு காட்டமாக பேசுவான் என்று சிறிதும் நினைக்கவில்லை.
ஆமா உனக்கு தான் தங்கச்சினு பாசம் இருந்தா தானே அவளை நினைச்சு பாத்து இருப்ப….
நீ தான் அவளை எதிரி போல பாக்குற ஆளாச்சே. ச்சே உன்கூட சேர்ந்து நானும் அவளை என்னவெல்லாம் பண்ணேன்.
உனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சு நீ வரும் போதுலாம் உன் கண்ணுல படாம தான இருந்தாள் இதுவரை.
உன்னையும் என்னையும் பத்தி அம்மாகிட்ட எதுனா தப்பா சொல்லிருப்பாளா. எவளோ உதாசீனம் படுத்தினாலும் கண்ணீரோட நம்மளை ஏக்கமா பாக்குமே….
அந்த நினைவு வந்ததும் அவன் இதயத்தை சுக்கு நாராக கிழித்தது போல உணர்ந்தான் சுரேஷ். தாங்க முடியாமல் கண்கலங்கினான். கண்ணீரை துடைத்துக் கொண்டான் .
போதும்… கயல் கஷ்டப்பட்டது இனிமே எந்த கஷடமும் பட விட மாட்டேன். நான் இருக்கேன் அவளுக்கு என்று மனசுக்குள் முடிவெடுத்துக் கொண்டான் சுரேஷ்.
வேகமாக திரும்பி கை நீட்டி எச்சரிக்கை செய்தான்.
கணேஷ் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இனிமே கயல்க்கு நான் இருக்கேன் அவளுக்கு எதுனா ஒன்னு ஆச்சு உன்னையும் சரி உன் பாஸயும் சரி உயிரோட விட மாட்டேன்… ஜாக்கிரதை…… எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
கணேஷ்க்கு சுரேஷ் பேசியதை நம்ப முடியாமல் திக் பிரமை பிடிச்சது போல் அப்படியே உக்காந்து விட்டான்.
........ வளரும்.!