எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வருஷ பிறப்பு அன்னிக்கு எங்க வீட்டுல அதி முக்கியமா செய்யும் ஒரு பண்டம் தான் மாங்காய் பச்சடி.
இது எல்லார் வீட்டுலயுமே, முக்கியமா வருஷ பிறப்பு அன்னிக்கி கண்டிப்பா பண்ணனும்னு சொல்லுறதுக்கு காரணம் இதில் உள்ள சுவையுடன் கூடிய ஒரு அர்த்தம்.சாப்பாடுனாவே அறுசுவைகள் தான். அந்த அறுசுவை என்ன னா
இனிப்பு – மகிழ்ச்சி
கசப்பு – துன்பம்
உப்பு – எதார்த்தம்
காரம் – கோபம்
புளிப்பு – அருவருப்பு/நெளிவுசுளிவுகள்
துவர்ப்பு -சகிப்புத்தன்மை
இந்த ஆறு சுவைகளுமே இந்த பண்டத்துல ஒன்னா சேர்ந்து இருக்கும். இந்த ஆறு சுவைகளையும் நாம சமமா எடுதுண்டாதான் சாப்பாடு திருப்தியா இருக்கும். ஏதாச்சும் ஒரு சுவைய மட்டும் நம்மால முழுக்க முழுக்க சாப்பிட முடியாதே. அதுபோல பிறக்கும் இந்த ஆண்டில் வாழ்வின் எல்லாவித சுவைகளும் சரிசமமாக இருக்கனும்னும், சரிசமமாக நாம எடுத்துக்கனும்னும் சொல்லாமல் சொல்வது தான் இந்த மாங்காய் பச்சடியும் அதில் சேர்க்கபடும் பொருளும் சொல்லும் அர்த்தம்.
எனக்கு என் அம்மா சொல்லி தந்த வழிமுறையவும் இங்க சொல்றேன்….
மூக்கு மாங்காய்-1
ப.மிளகாய் -2
கா.மிளகாய் -2
வெல்லம்- 1 கப்
கடுகு -1/4 ஸ்பூன்.
பெருங்காயம் -1 சிட்டிகை
உப்பு -தேவைக்கேற்ப
நெய் – 2 ஸ்பூன்
பச்ச வேப்பம் பூ- 1 கொத்து.
மாங்காய் தோல் சீவி, சின்ன சின்ன பத்தைகளாக வெட்டி உப்பு போட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேகவைக்கவும். பாதி மாகங்காயை குழைக்கவும். மீதி உருவமாக வைக்கவும். வெல்லம் 1/2டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி கொதிக்க வைத்து 2கம்பி பதம் வந்ததும், வேகவைத்த மாங்காயை வேகவைத்த தண்ணிரோடு சேர்த்து வெல்லப்பாகில் கொட்டி கிளறவும். 2 பச்சை மிளகாயை கீறி அதில் சேர்த்து கொதிக்க விடவும்.
கொஞ்சம் கெட்டி பட்டதும், தனியாக ஒரு குட்டி வாணலியில் நெய் 1ஸ்பூன் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்து மாங்காயில் சேர்க்கவும்.
பச்சடியை இறக்கிய பின் அதே வாணலியில் மீதி நெய்யை விட்டு வேப்பம் பூ கொத்தோடு போட்டு வறுத்து சேர்க்கவும்.(வேப்பம் பூ கொத்தோடு போடுவது, குழந்தைகளுக்கு பிடிக்கவில்லையென்றால் சுலபமாக எடுத்துவிடலாம். அதுக்கு தான்)
சுவையான, மணமான வருஷ பிறப்பு மாங்காய் பச்சடியோடு, புது வருஷத்தை வரவேற்று எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை பிரார்தித்து சரணடைகிறேன்.
சர்வே ஜனா: சுகினோ பவந்து::
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…