வரம்—சிறுகதை.

0
86

1960 -ஆம் ஆண்டின் துவக்கம் அது.மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருந்த தருணம்.எங்களது கிராமம் முழுவதும் விளைநிலங்கள் நிறைந்தது .பச்சை நிற உடையில் எங்கள் வீட்டு நிலங்கள் புன்னகை செய்த வசந்த காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் சிறுகதை வடிவில் உங்கள் பார்வைக்கு .

சுத்தி கிடந்த அத்தனை ஊருக்கும் என் ஊரு தான் பெருசு.வாரம் தவறாமல் எங்க மந்தையில் தான் சந்தை கூடும் .எங்கப்பா ஊர்ல பெரிய தலைக்கட்டு.விவசாய பூமிய சாமிய மதிச்ச பரம்பரை .நான் பொறந்த வருஷத்துல எங்கம்மா இறந்து விட நான் ஒத்தை பெண் வாரிசாகி போனேன் . என் பேரு அமிர்தம்.பெருமாள் கோயில் பாடசாலையில தான் படிப்பு .ஆசான் சொல்றத கண்ணும் காதும் பத்திரமா சேமிச்சு வைக்கனும்.அது தான் கல்வி.என் கூட படிக்க வந்தவ தான் களஞ்சியம் .கருப்பட்டி ஏவாரி மகள்.அவள அம்புட்டு புடிக்கும் எனக்கு .நாள் தவறாம பாடசாலைக்கு அவளுக்காகவே போவேன்.ஒட்டு பொறப்பு இல்லாத குறையே தெரியாது .அவ கொண்டு வர்ற கருப்பட்டிய பகிர்ந்து தின்போம்.உசுரோடு கலந்த உறவாகி போனாள்.

ஒருத்தி பின்னாடி ஒருத்தியா சடங்காகி போனோம் .அடைப்பட்டு போனோம் .சந்தை,திருவிழான்னு இரண்டு தடவ பாத்திருப்போம்.கொஞ்ச நாள்ல என்னையும் வாகான இடத்துல கெட்டி கொடுத்துட்டாக.சின்ன பிள்ளையா கிடந்தேன்.வீட்டு மனுஷன் தங்கமான ஆளு.உலகத்த புரிய வச்சாரு.சிரிச்ச முகராசிகார மனுஷன்.அந்த அரும்பு மீசையில கிறங்கி கிடந்தேன் பல சமயம்.மனுஷன் பார்வை அம்புட்டு பேசும்.முந்தானை சரிஞ்சா போதும் மனுஷனுக்கு நேரம் காலம் கிடையாது .மறுத்து சொன்னாலும் உசிரு ஏங்கி தான் கிடக்கும் .

கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ல என் மாமியாரும்,நாத்தனாரும் தள்ளி போகுதான்னு?கேட்க நான் இல்லைன்னு சொல்ல முணுமுணுக்க ஆரம்பிச்சுட்டாங்க .மாசம் வருஷம் ஆச்சு.வயித்துல எதுவுமே தங்கல.வேண்டாத தெய்வம் இல்ல .திங்காத மருந்து இல்ல.ஊருக்கு பதில் சொல்லி உறக்கம் போச்சு .உணவும் இறங்கல.நல்லதுக்கு போக தோணல.அவரும் முடங்கி போனாரு.என் மேல உள்ள பிரியத்துல யார் எது சொன்னாலும் காதுல வாங்கல.எனக்கும் அவர பிரிஞ்சு வாழ முடியல.ஊர் திருவிழாக்கு அய்யா வந்து வாதாடி எங்கள அழைச்சிட்டு போனாரு .ரேம்ப வருஷம் செண்டு போனேன்.மாட்டு வண்டி உருளும் போது என் மண்ணுல நான் சுத்தி திரிஞ்ச ஞாபகம் வருது.என் களஞ்சியத்த மனசு தேடுது.அவள பாத்த ஆறுதலா கிடக்கும்னு தோணுது.மாலை நேரம் பனையடிக்கு அவள தேடி போனேன்.முதல்ல பத்து குடிசை நிக்கும் இப்ப ஒத்த மட்டும் தான் தெரியுது.வாசல்ல நின்னு கூப்பிட்டேன்.உள்ள இருந்து வெளிய வர்றா எனக்கு மட்டுபடவே இல்ல.மாறி கிடக்கா.சாயம் போன தாவணி.எண்ணெய் படாத தலைன்னு மாறி கிடக்கா .என்னை பாத்ததும் ஓடியாந்து கட்டி புடுச்சு அழுதுட்டே”அய்யா தவறி போனாரு புள்ள.கையோட ஆத்தாளும் போயிருச்சு.சொந்த பந்தம் எதுவுமே ஆதரிக்கல.எனக்கு பின்னாடி சமஞ்சது இரண்டு நிக்குது.கூலி வேலை செஞ்சு வயித்த கழுவுறோம்.உங்க அய்யா தான் உதவுறாரு.என் கஷ்டத்த நான் தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன்.நீயே வாரிசு இல்லாம மருகிட்டு கிடக்க”என்றதும் அவளை சமாதானப்படுத்தி அவள் கையால் சமைத்து சாப்பிட்டு விட்டு கிளம்பினேன்.ஊரில் இருந்து தகவல் வந்தது என் புருஷனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க போறாங்கன்னு.ராத்திரி பூரா உறக்கமே இல்ல.காலையில எழும்பி பனையடிக்கு போயி களஞ்சியத்த பாத்து”இங்க பாரு புள்ள எனக்கு என் புருஷன் கூட வாழனும்.என் வம்சத்துக்கு வாரிசும் வேணும் .இனி காலம் கடத்த முடியாது .உனக்கு உன் தங்கச்சிகள கரை ஏத்தனும்.எல்லா பிரச்சனையும் முடிச்சிரலாம்.நான் சொல்றது தப்பா இருந்தா அடிச்சு புடு.என் வீட்டு வாரிச என் பெத்து கொடுக்கனும் ஊருக்கு தெரியாமல் .நான் மாசமா இருக்கேன்னு ஊர நம்ப வைக்கிறேன்.ஆனா நீ யாருன்னு என் புருஷனுக்கு தெரியக்கூடாது.நான் சொல்ற மாதிரி செய்வியா?”என்றதும் களஞ்சியம் கோவத்தில் வீட்டுக்குள் போனாள் .வாடிய முகத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.பேசுனத நினைச்சு மனசு குத்தி கிடந்தது .மறுநாள் களஞ்சியம் தங்கச்சி வந்து கூட்டிட்டு போனா.களஞ்சியம் சம்மதிச்சா.எனக்கு தெரியும் அவ எனக்காக ஒத்துகிட்டானு.இதை செய்ய தனி மனசு வேணும் .தைரியம் வேணும் .திருவிழா கூத்து பாக்க ஊரே மந்தையில் கூடி கிடக்கையில் நான் புருஷன் கால்ல விழுந்து அழுது புலம்பி களஞ்சியம் வீட்டுக்கு கூட்டிட்டு போனேன் .எங்கள பாத்ததும் களஞ்சியம் விளக்க அணைச்சிட்டா.அவர குடிசைக்குள் அனுப்பிட்டு காத்திருந்தேன்.முழுநிலா பிரகாசமா இருக்க.மனசேல்லாம் பதறி போய் கிடந்தேன் .கொஞ்சம் நேரம் கழிச்சு அவர் வெளியே வர நான் அவரோட வீட்டுக்கு வந்துட்டேன் .மறுநாள் அவர ஊருக்கு அனுப்பிட்டேன்.நான் இங்கயே தங்கி அவள கவனிசிட்டு இருந்தேன் .அவளுக்கு நாள் தள்ளி போனதும் சந்தோசத்துல அவள கட்டிப்புடிச்சு முத்தமா கொடுத்தேன் .நான் உண்டான மாதிரி மருத்துவச்சிய சொல்ல வச்சேன்.என் புருஷனும் ஒத்துழைச்சார்.சீக்கிரமா களஞ்சியத்த வேறு ஊருக்கு கொண்டு போனோம் .அவளோட தங்கச்சிகள நல்ல இடமா பாத்து கெட்டி கொடுத்தோம்.

ஊருக்கு தெரியாக நான் மட்டும் போய் அவளுக்கு வேணும்கிறத செஞ்சேன்.என் மேல யாருக்கும் சந்தேகம் வரல.களஞ்சியத்துக்கு வயிறு வலி வந்தது .அத்தனை அம்சமா ஒரு ஆண் வாரிச பெத்து கொடுத்தா.உடனே தூக்கிட்டு வந்து எனக்கே பொறந்த மாதிரி நம்ப வச்சேன்.என்னை கவனிக்க வந்த மாதிரி களஞ்சியத்த வர வச்சு மறைச்சு பால் ஊட்ட வச்சேன் .என் புள்ள இந்த பால் சுரக்காத மார நம்பி ஏமாறும் போது எல்லாம் இதயம் பதறும்.அவர் வரும்போது எல்லாம் களஞ்சியத்த அனுப்பி வச்சிருவேன்.எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் .களஞ்சியத்துக்கு மாப்பிள்ளை பாக்க அய்யாகிட்ட சொன்னேன் .இந்த விஷயம் தெரிஞ்ச களஞ்சியம் எங்கேயோ கிளம்பி போயிட்டா.பல வருஷம் ஆகியும் எந்த தகவலும் இல்லை.

ஒரு நாள் ஒரு கடிதாசி வந்திச்சு அதுல”நான் நல்லா இருக்கேன் புள்ள.என்னை தேடாத.நீ வருஷம் வாழ்ற வாழ்க்கைய என் ஒரு வருஷத்துல வாழ வச்சுபுட்ட அது போதும் எனக்கு .புள்ளையையும்,அவுகளையும் பத்திரமா பாத்துக்க”அவ்ளோ தான் இருந்தது அதில் .அவ அந்த ஒரு வருஷம் என் வாழ்க்கைய வாழ்ந்திருக்கான்னு புரிஞ்சது.

[பல வருடங்களுக்கு பிறகு]

முதுமையின் முடிவில் மரணத்தின் கடைசி நொடிகளில் இந்த உயிர் அகலாமல் காத்திருந்தது.அத்தனை பேரன் ,பேத்திகள் பால் ஊற்றியும் விடை பெறாத உயிர் திவ்யா வந்து ஊற்றியதும் அவள் முகத்தை உற்று பார்த்த அமிர்தம் சிரித்தபடியே உயிரைவிட்டார்.திவ்யா களஞ்சியத்தின் அச்சு அசல் நகலாக இருந்தாள் குணத்திலும்.தான் செய்த தவறுகள் அனைத்திற்கும் இறுதியாய் ஒரு நேர்மையான மன்னிப்பை அமிர்தம் பார்வையில் காலம் கடந்து கேட்டார் .

(முற்றும் )

[சில தலைமுறைகளின் உருவாக்கம் இப்படியும் இருந்தது டெஸ்ட் டியூப் இல்லாத காலத்தில் ]

நன்றிகள்!
வணக்கங்களுடன் !

நான்
உங்கள்
கதிரவன்!
[என்னோட வாட்ஸ்அப் நம்பர் 9600532669 ]

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here