யானையின் வேறு பெயர்கள்

0
1641

யானை தமிழ்ப்பெயர்கள்
அஞ்சனாவதி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, இருள், உம்பர், உம்பல் (உயர்ந்தது), உவா (திரண்டது), எறும்பி, ஒருத்தல், ஓங்கல் (மலைபோன்றது), கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்), கயம், கரி (கரியது), கரேணு, கள்வன் (கரியது), களிறு, கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது), குஞ்சரம் (திரண்டது), கும்பி, கைம்மலை (கையை உடைய மலை போன்றது), கைம்மா (துதிக்கையுடைய விலங்கு), சிந்துரம், தந்தாவளம், தந்தி, தும்பி (துளையுள்ள கையை உடையது), தும்பு, தூங்கல், தோல்,நாக, நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது), புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது), புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது), பெருமா (பெரிய விலங்கு), பொங்கடி (பெரிய பாதத்தை உடையது), போதகம், மதகயம், மதாவளம், மதோற்கடம்(மதகயத்தின் பெயர்), மந்தமா, மருண்மா, மாதங்கம், யானை/ஏனை (கரியது), யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்), வயமா, வல்விலங்கு, வழுவை (உருண்டு திரண்டது), வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது), வேழம் (வெள்ளை யானை)

பெண் யானையின் பெயர்கள்
அத்தினி, அதவை, கரிணி, பிடி, வடவை

யானைக்கன்றின் பெயர்கள்
கயந்தலை, கயமுனி, களபம், துடியடி, போதகம்

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here