நேரம் காலை பத்து மணியை நெருங்கி கொண்டு இருக்க பரபரப்பாக காணப்பட்டது அந்த வீடு. பத்து செண்ட் இடத்தை அந்த வீடு விழுங்கி இருக்க உள்ளேயும்,வெளியேயும் அதன் பிரம்மாண்டம் பார்த்தவர்களை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கும்.அதே போல முன்பு காலி இடத்தில் இருக்கும் வட்டவடிவிலான பூந்தோட்டம் இதை சுற்றியபடி கார் செல்ல வழி வரிசையாக நான்கு கார்கள் நிற்பதற்காக நிறுவப்பட்டிருக்கும் போர்ட்டிகோ எதுவுமே அந்த வீட்டின் பிரம்மாண்டத்திற்கு இது சாதாரணம் எனக்காட்டும் விதத்தில் இருந்தது. ” பாரதி எல்லாம் ரெடியா இருக்கா இன்னும் கொஞ்ச நேரத்தில் ஐயர் பூஜை செய்ய வந்திடுவாரு”என தனது மருமகளிடம் கேட்க, “ஆச்சு அத்தே எல்லாம் ரெடியா இருக்கு ஐயர் வந்ததும் பூஜையை தொடங்கிடலாம். எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு தரம் வந்து செக் செய்திடுங்க” .
“நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும் பாரதி இந்த சின்னவன் வருவான்தானே இன்றைக்கு நடக்கறது பூஜை அவனுக்காகதான் கொஞ்சம் கூப்பிட்டு சொல்லேன்”.
“அத்தை போன் பண்ணினேன் எடுக்கலை என்னபண்ண மறுபடியும் அழைக்கறேன் என்னோட நம்மரை பார்த்து ஃபோனை கட் பண்ணறான் அத்தை”.
“அபியை வச்சி கூப்பிட்டு பாரு உன் வீட்டுக்காரன் எங்கே”? என்ற கேள்வியோடு ஹாலை தாண்டி வீட்டிற்குள் சென்றார்.
“அபி கண்ணா சித்தாக்கு போன் பண்ணுடா ப்ளீஸ் குட்டி கேம் ரொம்ப நேரம் விளையாடக்கூடாதுன்னு சொல்லி இருக்கறேனே”.அபி நந்தன் இவளுக்கும் அருணுக்கும் பிறந்த செல்ல,செல்வ புத்திரன் இரண்டு வயது முடிந்து இருக்க வீட்டில் அனைவருக்கும் செல்லம் அதுவும் பிரவுக்கு இவன் என்றால் உயிர்.
“அம்மா இதோ கூப்பிடறேன் மா” என அழைக்கும் போதே முழுவதுமாக ரிங் போய் கட் ஆனது அம்மா சித்தா எடுக்கலை மாழலையில் சொல்ல..சரிடா நானே வர்றேன் என பதிலுக்கு சத்தமாக உறைத்தாள்.
அந்த நிமிடம் அந்த ஹாலில் பெரிய ஹோமம் வளர்க்க ரெடியாக அனைத்தும் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. சுற்றிலும் அமர என சிறு துணிகளை விரித்து இருக்க இன்னமும் மாடியில் இருந்து அருண் இறங்கி வரவில்லை. அருண் பாரதியின் கணவன் அந்த ஏரியாவின் தற்போதய எம்எல்ஏ ,மாவட்ட செயலாளர், இளைஞர் அணித்தலைவன் இந்த பதவிகள் அனைத்தும் தந்தையின் வழியே வந்தது. கொஞ்சம் அல்ல நிறையவே நல்லவன். அங்கே அந்த ஊரின் பிரபளம் இவனது குடும்பத்தார் இல்லாமல் அங்கே எந்த நிகழ்வுமே நடப்பது இல்லை.
ஏற்கனவே நல்ல வசதி கூடவே அரசியல் இருப்பது பணம் இங்கே எப்போதும் அவர்களுக்கு பிரச்சினை ஆனது இல்லை. எதுவுமே ,கேட்காமலேயே கிடைத்தது அண்ணண் தம்பி இருவருக்கும், பாரதி சொந்த மாமன்மகள் உறவு விட்டு போகக்கூடாது என இவளை பெரியவனுக்கு முடித்து வைத்தார்கள் இந்த வீட்டில் ஒருவகையில் தூணை போன்றவைகள் சிறு வயது முதலே இங்கே வீட்டில் இவளும் ஒருத்தியாக வளர்ந்தவள் அருணை விடவும் பிரபுவிடம் நல்ல நட்பு இருந்தது.
திருமணம் முடிக்க என பேசி திருமணம் முடியவும் வழக்கம்போல பாரதி என்ன அழைக்க வந்து பிறகு அண்ணி என அழைக்க பிரபு திணருவதை பார்த்து அப்போதே சொல்லி விட்டாள். பிரபு கஷ்டப்படாதே நான் எப்போதும் உன்னோட ஃப்ரெண்டு தான் எப்பவும்,எப்போதும் போல கூப்பிடு என, அருணின் சிரிப்பு கூட சம்மந்தமாக வந்து விழுந்தது.ஏனென்றால் சிறு வயது முதலே இருவரையும் பார்க்கிறானே இரண்டு பேரும் சேர்த்து செய்த லூட்டிகளை பாரதி குறும்பு செய்ததாக எங்கெல்லாம் வந்து கம்லைன்ட் செய்கிறார்களோ அங்கெல்லாம் பிரபுவும் இருப்பான் அந்த அளவுக்கு இருவரும் பிரபளம்.அப்போது இருந்தே அப்படி தான் முடியாது என ஒவ்வொரு முறையும் பிரபு மறுக்கும் போது நடுவில் வந்து சம்மதிக்க வைக்க பாரதி வேண்டும் இன்றும் அது போல அழைக்க சொல்லிவிட்டு நகர்ந்து இருந்தார் இவளின் செல்ல அத்தை.
அந்த பகுதியில் நடக்கும் அனைத்து நல்லது,கெட்டது எதுவாகினும் முதலில் அழைப்பது இவர்களது குடும்பத்தை தான் அது இவர்களுக்கு கொடுக்கும் மரியாதை. அதே போல் தினமும் அருணும்,தந்தையும் செல்ல என ஏதாவது பங்சன் இருந்து கொண்டே இருக்கும். செல்ல எப்போதும் தயங்கியதோ,சலித்துக்கொண்டதோ இப்போது வரைக்கும் கிடையாது. அரசியலில் இருப்பாதலேயே கிடைக்கும் அனைத்து தொகுதிநிதி மட்டும் அல்ல, கட்சி நிதி கூட பெரும்பாலும் மக்களுக்கே செலவு செய்வதால் எப்போதும் அங்கிருக்கும் மக்களிடம் இவர்களுக்கு நல்ல பெயர் இருந்தது. இது இங்கே மட்டும் தான் பிரபு இந்த விஷயத்தில் நேர் எதிர் தான். தவறு என்றால் யோசிக்காமல் அடிக்கும் குணம் கொண்டவன். தங்குவது இங்கே என்றாலும் ஐந்து கிலோமீட்டர் தாண்டி அவனது உழைப்பால் வாங்கிய வீடு ஒன்று அவனுக்கு உண்டு. நினைத்து நேரம் அங்கேயும் சில நேரம் தங்கி விடுவான்.நேற்றும் அது போல அங்கே தங்கிவிட இங்கே பூஜைக்கு ஏற்பாடு செய்தது அவனுக்கு தெரியவில்லை. தெரிந்தாலும் வரும் எண்ணம் எப்போதும் அவனுக்கு கிடையாது பக்தி அவ்வளவாக அவனுக்கு கிடையாது என்பதை விட சுத்தமாக கிடையாது என்றே சொல்லலாம். மனிதனின் முயற்சி தான் அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணம் என்பது அவனது முழுமையான முடிவு.இங்கே இப்படி யோசித்துக்கொண்டு இருக்க…
அதேநேரம் பிரபுவின் ஆபீஸில்
கண்களை மூடி இருக்கமாக அமர்ந்து இருந்தான் பிரபு சித்தார்த் அவனது அலுவலக அறையில் முகத்தில் மருந்துக்கும் கூட சிரிப்பு இல்லை. இங்கு வந்து முழுமையாக ஒரு மணிநேரம் தாண்டி இருக்க கார்த்திக் அவன் அருகில் வருவதும் மறுபடியும் நகர்ந்து போவதுமாக இருந்தான்.கண்களை திறக்காமலேயே “என்ன கார்த்தி நடை ரொம்ப நேரமாக போகுது என்ன விஷயம்”,என கேட்க..
“அண்ணா உங்களுக்கு தெரியாதா வீட்டில் இருந்து ஃபோன் வந்திட்டே இருக்கு என்னால பதில் சொல்ல முடியவில்லை ஒரு தடவை ஃபோன் அட்டென் பண்ணி பேசுங்கணா.” தற்போது கார்த்திக் தங்கி இருப்பது பிரபு வாங்கிய வீட்டில் தான் நினைக்கும் நேரம் அங்கே தங்க மாடியில் அவனுக்கு எனவே அனைத்து வசதிகளோடும் இவனது ரசனைக்கேற்ப கட்டி இருந்தான்.
அவனை பார்த்தபடியே ஃபோனை எடுத்து பார்க்க இருபதிற்கும் மேல் மிஸ்ட்ஹால் வந்து இருந்தது. இவங்களுக்கு வேற வேலையே இல்லையா கார்த்தி ஒரு தடவை சொன்னால் புரியாதா திரும்ப,திரும்ப அழைக்கறாங்க.. எனக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது அங்கே ஏதாவது பூஜை வைக்கறேன்னு கூப்பிடுவாங்க இதுதானே வழக்கம் இன்றைக்கும் அது போல தான் ஏதாவது இருக்கும் நான் நிச்சயமாக போக போறது இல்லை.அப்புறம் ஏன் என்ன கூப்பிடணும். அங்கே போனா சும்மாவா இருப்பாங்க..நிச்சயமா ஏதாவது பொண்ண பார்த்து வச்சி இருப்பாங்க அந்த பொண்ணு உனக்கு ஒகேவான்னு கேட்டு எனவே கடுப்பேத்துவாங்க.கடுப்பாகுதுடா..
சொன்ன பிரபுவுக்கு இந்த மாதம் வந்தால் இருபத்தியெட்டு வயது துவங்கி விடும்…பணம் இவன் பிறந்தது முதலே அதில்தான் விளையாடியது எனலாம் அதனாலேயே அதிக திமிர்,கவர்வம் அவனுக்கு யார் என்ன செஞ்சிடுவாங்க பார்த்திடலாம் என்பது போல..அவன் மனம் போலவே அவனது வேலையும் அமைந்து விட்டது..
படித்தது இன்ஜினியரிங் படிப்பிற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்பது அவனது எண்ணம். இதோ கோயம்புத்தூர் பேரூர் தாண்டி இவர்களது வீடு.நகரமும் அல்லாது கிராமமும் இல்லாத பகுதி அது.இவனது வேலை ரியல் எஸ்டேட் கூடவே நகரில் முக்கிய இடங்களில் இவன் பேரில் பத்து பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது அனைத்திற்குமே வேலைக்கு மட்டுமே ஆட்களை நியமித்து பார்த்து கொள்கின்றனர் .
பெரும்பாலும் விற்பனை பிரிவில் வேலை செய்வது பெண்கள் மட்டுமே
ஆண்கள் சூப்பர் வைசர் என இருவர் ஆபிஸில் நால்வர் அவ்வளவு தான் ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கிலுமே இந்த முறை தான்.மறுபடியும் ஃபோன் அடிக்க அட்டென் செய்தபடி பாரதி என கோபமாக அழைக்கும்போதே சித்தா நான் பேசறேன் என்ன மழலை குரல் காதில் விழுந்தது.
சத்தம் கேட்டதும் கோபம் எல்லாம் மொத்தமாக வடிந்து இருந்தது “அபிக்குட்டி சொல்லூங்க என்ன வேணும்”கொஞ்சியபடி வந்து விழுந்தது இவனது பேச்சும்.
“சித்தா வா சித்தா வீடு எல்லாம் புகை”என்ன கூற அதற்குல்லாக பாரதி ஃபோனை வாங்கிஇருந்தாள். பிரபு கிளம்பி வாடா இங்கே அம்மா ரொம்ப வருத்தப்படறாங்க.
“பாரதி எனக்கு இது மேல நம்பிக்கை கிடையாது உனக்கே தெரியுமே இப்போது எதற்காக அபியை அங்கே வச்சிட்டு இது மாதிரி பண்ணறிங்க அவனுக்கு மூச்சு விட கஷ்டமா இருக்கும் தானே”.
“டேய் ஒவரா பண்ணாமல் வந்து சேரு இன்றைய பூஜையே உனக்காக தான் புரியுதா”.
“உண்மையை சொல்லு பாரதி அங்கே பொண்ணு எதையும் அழைச்சிட்டு வரலையே”.
“பிரபு எதிர் பார்க்கறையா என்ன, நான் வேணும்னா அத்தைகிட்ட சொல்லவா பொண்ணு பார்க்க சொல்லி, அவங்க ஹேப்பி ஆகிடுவாங்க”.கிளம்பி வா பிரபு டைம் ஆச்சு.
” கொன்னுடுவேன் பொண்ணு பார்க்கறாங்களாம்ல… என்னு இப்படியே விட்டுடுங்களேன் எனக்கு இது தான் பிடிச்சு இருக்கு..அம்மாகிட்ட சொல்லு அவங்க திருப்திக்காக வரேன் ஆனால் இது தான் கடைசி இன்னொரு முறை இதமாதிரி பண்ணினா வரமாட்டேன் அம்மாகிட்டு சொல்லிடு”என்றபடி ஃபோனை கட் பண்ண எதிரில் புறப்பட்டு தயாராக கார்த்திக் நின்றிருந்தான்.”அண்ணா போகலாங்கலா என்றபடி “டேய் நீதான் ரொம்ப ஆர்வமாக இருக்கற முதலில் உன்னை கவனிக்கணும் போலயே”,பிரபு சிரித்தபடியே சொன்னபடி புறப்பட்ட…”நீங்க வேற ஏன்னா அங்கே போனா வாங்கிக்கட்டப்போறது நான் தான் முடியவில்லை ணா.அண்ணி, அம்மான்னு சொல்லி முடிக்கறதுக்குல்ல நான் டயர்ட் ஆகிடுவேன் ஏன்னே சீக்கிரமே கல்யாணம் பண்ணினாத்தான் என்ன?
“டேய் வேலையை பாருடா இன்றைக்கு வரச்சொன்ன ஆள் எங்கே வருவானா மாட்டானா”.
“வந்து பார்த்துக்கலாம்ணா,இல்லை ணா நாளைக்கு வரச்சொல்லலாம் இப்போது போகலாம் ணா”என வேகமாக படி இறங்கினான் .வண்டியை எடுக்க அடுத்து அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வாசலில் வண்டியை நிறுத்தினான், நிறுத்தியதுமே இவள் இறங்கும் முன்பே அபி வாசலுக்கு வந்து நின்றிருந்தான் “சித்தா தூங்கு” என்ன கைநீட்டியபடி..
“வாடா” தங்ககட்டி என்றபடி தலைக்கு மேல் தூக்கி தோளில் உட்காரவைத்து உள்ளே நுழைய அங்கே பாரதி இவனை பார்த்தவள் அத்தே பிரபு வந்தாச்சு என்ன சத்தமிட்டாள்.
“பாரதி இதுதான் லாஸ்ட் இது தான் லாஸ்ட் இன்னோரு முறை இதை மாதிரி பண்ணின உன்னை விட்டுடுவேன் அருண் தான் மாட்டுவான் பார்த்துக்கோ”..
“அவன் உன்னோட அண்ணன் டா நீயாச்சு அவனாச்சு நான் எப்போதாவது நடுவில் வந்து இருக்கறேனா”போடா போடா போய் வேலையை பாரு.
“என்ன பண்ணனும்”.
“வந்து உட்காருடா முடியவில்லை எத்தனை பேருக்கு பதில் சொல்ல”.
“இப்போது எதுக்காக இந்த பூஜை”.
“திட்டக்கூடாது இந்த பூஜை பண்ணினா நீ கல்யாணத்துக்கு சம்மதிப்பேயாம் அத்தையோட நம்பிக்கை “.கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் பூஜைக்கு அமர்ந்தான் பிரபு. அன்னையின் நம்பிக்கை, அனைவரது ஆசையும் இனி வரப்போகின்ற நாட்களில் இயல்பாக நடக்கப் போவதை அப்போது அறியவில்லை.
யாசிக்காதே தொடரும்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…