மௌன மொழி 3
ராமின் உறுதியை நினைத்து கொண்டு இருந்தான் சிவா….
அவன் சிந்தனையை கலைத்தது புனிதவதியின் குரல்….
சிவா…. சிவா… சீக்கிரம் வா..
என்னம்மா என்ன ஆச்சு…..
சிவா இன்னிக்கு கோவில்ல காப்பு கட்றாங்க பா….. நம்ம வீட்டு சார்பா நீயும் ராமும் போய்ட்டு வாங்க என்றார்…
அப்பா எங்க மா.. வந்ததுலேர்ந்தே பார்க்கல…. எங்க போயிருக்காங்க…
வயல்ல அறுவடை நேரம்… அதான் பா அப்பா வேலையா இருக்காங்க நீங்க போங்க… மதிய சாப்பாட்டுக்கு சீக்கிரம் வந்துடுங்க பா… சரிமா என்றபடி இருவரும் கோவிலை நோக்கி சென்றனர்…
காப்பு கட்றதுனா என்ன சிவா….
திருவிழால முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கும்… அதை காப்பு கட்றதுனு சொல்வாங்க… என கூறிக்கொண்டே கோவிலை அடைந்தனர்…
மாவிலைத் தோரணமும்… சாம்பிராணி வாசமும் வாசலில் வரவேற்க... சூலத்தை தாண்டி கோயிலின் உள்ளே நுழைந்தனர்.. அங்கு அகில உலகையும் ஒரு குடை நிழலில் ஆட்சி புரியும் தாயாகிய அங்காளபரமேஸ்வரி கருணை நிறைந்த சிரிப்புடன் காட்சி அளித்து கொண்டு இருந்தாள்…. அவளை வணங்கி விட்டு காப்பு கட்டும் இடத்திற்கு வந்தனர்….. கொடி மரத்தில் மாவிலை … பூ.. மங்கள காப்பு கயிறு கட்டி… பக்தர்களின் ஆரவார கோஷங்களுடன் காப்பு கட்டி கொடி ஏற்றப்பட்டது.
நண்பர்கள் இருவரும் இணைந்து கடைகள் இருந்த பக்கம் வந்தனர்… அங்கு ரத்னா சிறுவர்களுக்கு ஐஸ்வாங்கி கொண்டு இருந்தாள்… அனைத்து சிறுவர்களும் அவளை சூழ்ந்துகொண்டுஇருந்தனர்.
அனைவருக்கும் கொடுத்து விட்டு சிறு தலையசைப்புடன் விடை பெற்றுக் கொண்டாள்..அவளை கவனிக்காத சிவாவிடம் திரும்பி….. சிவா நான் கொஞ்சம் காலாற நடந்துட்டுவரேன்..நீ எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் எனஅவன் பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தான்….
ரத்னாவின் பின்னே அவள் அறியாமல் தொடர்ந்தான்…. அவளின் விளையாட்டு…. சிறு சிறு குறும்பு… அவளின் கண் பேசும் மௌன மொழி என அனைத்திலும் தன்னை தெரிந்தே தொலைத்துக் கொண்டு இருந்தான்..அன்றைய பொழுது அவளை பற்றி அறிந்து கொள்வதில் காதலால் நிறைந்தது…
மறுநாள்…. காலை..
கோவிலில் தெய்வபாடல் ஒலித்துக் கொண்டிருந்தது… அந்த சப்தத்தில் எழுந்த ராம்….. கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான் அது விடியற்காலை 4:30 என காட்டியது….
திரும்ப தூங்க முடியாமல்…. அப்படியே வெளியே வந்தான்…. அதிகாலை வேளையில் பெண்கள் அனைவரும் வீட்டு வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு கொண்டு இருந்தனர்… அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தவன்..
ஒரு வீட்டு முன்பு தன்னை மறந்து நின்றான்….
எவ்வளவு அழகா கோலம்போட்டு இருக்காங்க என ரசித்து கொண்டு இருந்தான். அப்போது இடையில் தூக்கி சொருகிய தாவணியுடன் கோலம் போட்டு கொண்டு இருந்த ரத்னாவை கண்டு மகிழ்ச்சியுடன் அவளின் முன் நின்றான்…(அடப்பாவி இப்டி பொசுக்குனு போய் நின்னுட்டியேடா… ? )
அவனை கண்டவளின் மைவிழி தன்னை மறந்து அவனிடம் சென்றது…தன்னிலை மறந்து நின்ற ராம் முன்பு கை அசைத்து அவனை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தாள். அசடு வழிய அவளிடம் ஹாய் எப்படி இருக்கீங்க…. என்ன நியாபகம் இருக்கா என கேட்க…
அவளோ இவனை புரியாத பார்வை பார்த்து கொண்டு இருந்தாள்….
அட… என்னங்க இது…. நான் சிவாவோட பிரென்ட்… அன்னிக்கு பஸ்ல பார்த்தோமே…. என்க
ஏதோ நினைவு வந்தவளாய் ஆம் என்பது போல் தலை அசைத்தாள்… அதற்குள் வெளியே வந்த அவள் பெரியம்மா அவளை வசைபாட ஆரம்பித்தாள்…
அங்க என்னடி பண்ற. சீக்கிரம் இங்க வா.. வீட்ல போட்ட வேல போட்ட படியே இருக்கு… மசமசனு நிக்காம பின் பக்கம் போய் பாத்திரம் கழுவு… மாட்டுக்கு தீவனம் கலந்து வை..வீட்ல உக்கார்ந்து தண்டசோறு திங்க நினைக்காத என வேலைகளை அடுக்கி விட்டு சென்றார்…. கண்ணை விட்டு வெளியேவர இருந்த கண்ணீரை விடாது உள்ளிழுத்துகொண்டவள்..இவனை திரும்பி வெற்று பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டாள்..
இவனோ மனதில்… ரத்னா டார்லிங் இதெல்லாம் இன்னும் ஒரு வாரம் தான்… அதுக்கப்புறம் யாரும் உன்னை இத மாதிரி பேச இல்ல .. நினைக்க கூட விட மாட்டேன் என நினைத்து கொண்டு அங்கிருந்து சென்றான்….
இவர்களை ஒரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டிருக்க… அவற்றால்
இனி வரும் மாற்றம் எப்படியோ… பொறுத்திருந்து பார்ப்போம்……??
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…