மௌன மொழி
இளங்கதிர் தனது ஆயிரம் கைகளை விரித்து ஒளி வீசும் நேரம்.... காலை தென்றல் இதமாய் வீச.... தன் வீட்டிலிருந்து வெளியே வந்தாள் நம் கதையின் நாயகி.... ரத்னா.....
காண்போரை மறுமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகு… இதழில் என்றும் நீங்கா ஒரு இளநகை.…..,.. மை தீட்டா மான் விழியாள்…..அவளை மேலும் அழகாக காட்டும் தாவணி… என கிராமத்து தேவதையாக வலம் வந்தாள்…..
சென்னை: காலை உணவை தயார் செய்து கொண்டே ஏதோ தாளித்து கொண்டு இருக்கிறார்.. நம் நாயகனின் அம்மா கற்பகம்….
( வாங்க கிட்ட போய் கேட்டு பாப்போம்)
டேய்… எரும மாடு லீவ் நாள்ள தான் லேட்டா எந்திரிப்ப … இன்னிக்கு ஆஃபிஸ் போகனும்… இன்னிக்கும் இப்படி பண்ற நல்லாவா இருக்கு… டேய்ய்ய்ய்ய்…… நான் கத்தரத காதுல விழுதா இல்லையா… திட்டிக்கொண்டே அறை வாசலில் வந்து நின்றார்…. ???
இவர் பேசியதற்கும் (திட்டியதற்கும்) தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நன்கு நித்ராதேவியின் மடியில் துயில் கொண்டுள்ளான் அந்த ஆறடி அழகிய ஆண்மகன் “”ராம்””….
மகனின் அருகில் வந்து கையில் வைத்திருந்த கரண்டியால் ஒரு அடி…. அவ்வளவு தான் தூக்கம் தூர போக பதறி எழுந்து அமர்ந்து தனது மந்தகாச புன்னகையை சிதறவிடடான்… ராம்
போடா.. லேட் ஆயிட்டு போய் ரெடி ஆய்ட்டு சாப்ட வா…. அன்னையின் உத்தரவை ஏற்று அரை மணி நேரத்தில் தயாராகி டைனிங் டேபிள் முன் அம்சமாக ஃபார்மல் உடை அணிந்து அமர்ந்து இருந்தான்…
ஐ.டி துறையில் வேலை.... அவ்வப்போது வேலை நிமித்தமாக வெளியூர் பிரயாணம்... தந்தை இல்லை.... ராம் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் இறந்து விட்டார்...
அன்றிலிருந்து இன்றுவரை தாயே அவனுடைய தந்தை ஆனார்..
அம்மா இந்த வீக் என்ட் நா நம்ப சிவா கிராமத்துக்கு போறேன் மா… (அப்பாடா ஒரு வழியா நம்ப ஹிரோ பேசிட்டாறு) அவங்க ஊர் திருவிழாவாம்… ஏழு நாள் பங்சனாம் … நீயும் வரியானு கேட்டான்.. நீ என்ன சொல்றமா…
எனக்கும் ஆசை தான்… உன்னோட அத்தை வராங்க… நான் உன்கூட வந்த சரி வராது…. நமக்கு கஷ்டம்னப்ப உறுதுணையா இருந்தவங்க பா… நீ போய்ட்டு வா…..,
சரிமா ….. நான் ஆஃபிஸ் போறேன்….
பைய்…. “”””ஹாய் சிவா….. ஹாய் ராம்…
அம்மா என்ன சொன்னாங்க… வராங்களா
இல்லடா…. அத்தை ஊர்லேர்ந்து வராங்க…. அதான் நான் மட்டும் தான்டா வரேன் …சூப்பர் டா மச்சா….
( அங்கு நிகழ இருக்கும் சம்பவம் தெரியாமல் )
இருவரும் இணைந்து ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றனர்….
மொழி தொடரும் ?
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…