மின்னல் விழியே குட்டித் திமிரே 7

0
803
1551018907221|679x452

மின்னல் விழியே 7

அகில் கூறியதில் தன் அலைபேசியை வெறித்தவாறு நின்றவள், அவன் தன் பதிலுக்காக காத்திருப்பது புரிய, ”நீயா அண்ணா இப்படி சொல்ற??? எதுக்காகவும் பயந்து ஓடக் கூடாது… துணிஞ்சு நிற்க்கணும்னு சொல்வியே அண்ணா???….” அதிர்ச்சியாக கேட்டவள்….தன் மனதை தேற்றிக் கொண்டு ,

“இங்க பாருண்ணா…நாளைக்கு உன் தங்கச்சி யார் முன்னாடியும் அவமானப்பட வேண்டாம்னு நீ நினைச்சா ஹெல்ப் பண்ணு… உன்னோட மெயில் ஐ.டி க்கு கோடிங்க அனுப்புறேன்… இல்ல நான் அவமானப்பட்டாலும், நீ நினைச்ச மாதிரி நான் பெங்களூர் விட்டு வரணும்னு நினைச்சா அப்படியே விட்ரு…” கோபமாக அகிலிடம் கத்தியவள் போனை ஆப் செய்துவிட்டு, மீண்டும் தன் கணினி முன்னால் வந்து அமர்ந்தாள்… விக்கி ஏற்கனவே அவள் அருகில் சோபாவில் தூங்கியிருந்தான்….

அடுத்த நாள் விக்கி ஆபிஸிற்கு கிளம்ப, வினு இன்னும் அந்த கோடிங்கோடு போராடிக் கொண்டிருந்தாள்…

“வினு லேட்டாச்சு…” விக்கி குரல் கொடுக்க, தயாராகாமல் கணினியை வெறித்தவாறு அமர்ந்திருந்தவள், நிமிர்ந்து அவனை ஏறிட்டாள்.…

“நீ கிளம்பு விக்கி.. பத்து மணிக்கு தானே மீட்டிங்… நான் அதுக்குள்ள வந்துடுவேன்… அதான் என்னோட ஸ்கூட்டி ரெண்டு நான் முன்னாடி வந்திடுச்சே…..”

“சரி வினு கவனமா வந்துடு… நான் ஆட்டோ பிடிச்சி போய்க்கிறேன்…” என்றவன் கிளம்பிவிட்டான்….

விக்கி மட்டும் ஆபிஸிற்கு வருவதை பார்த்த திரு கேலியாக அவனை பார்க்க… விக்கியோ வினு மேல் இருந்த நம்பிக்கையில் துணிவாகவே அவனைப் பார்த்தான்…

“என்ன….?? ரெட்ட வால் குரங்குல ஒன்னைக் கானோம்… எங்கயாச்சும் ஒடி ஒளிஞ்சிடுச்சா???” புருவம் ஏற்றி கண்களில் நக்கலும் கேலியும் கலந்து அவன் கேட்க.,

“எங்க அக்காக்கு அப்படி ஓடி ஒளிய எல்லாம் தெரியாது மச்சான்… கண்டிப்பா வந்திடுவா… நீங்க ரொம்ப டென்ஷனாகாதீங்க…” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கூறியவன் திருவை கடந்து சென்றுவிட… திருவும் தன் தோள்களை குலுக்கிவிட்டு சென்றான்…

மணி பத்தை நெருங்கும் வேளையில் அனைவரும் மீட்டிங் ரூமில் அசெம்பிள்ள ஆகிவிட….. சிறிது நேரத்தில் கம்பெனியின் சீ.இ.ஓ வும் மற்ற டீம் ஹெட்டும்களும் வந்தனர். திருவின் டீமிற்கு அவன் தான் லீட் என்பதால் அனைவரையும் பொதுவாக வரவேற்று அமர வைத்தவன் தன் டீம் மெம்பர்கள் ஒவ்வொருவரையும் பிரசென்ட் செய்ய பணிந்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.

அவர்களின் ஆபிஸில் இந்த மாதிரி மீட்டிங் மாதம் ஒரு முறை ஒவ்வொரு டீமிற்கும் நடக்கும். அதில் மற்ற டீம் ஹெட் கலந்து கொள்வார்கள்… இதன் மூலம் தங்கள் கம்பெனியில் வொர்க் செய்பவர்கள் அப்பேடட்டடாக இருக்கிறார்களாக… புதிதாக வந்தவர்கள் சரியாக தங்கள் டீமோடு பொருந்திவிட்டார்களா….. எனக் கண்டுப்பிடித்து விடலாம் என்பதோடு ஒவ்வொருவரும் தங்களின் தனித் திறமையை இதில் காண்பிக்கலாம்…

ஒவ்வொருவராக தங்களின் திறமையை காட்ட., விக்கி வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தான்… நேரம் செல்ல…செல்ல… மனதுக்குள் பதட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது… திருவின் கண்களும் நொடிக்கொரு தரம் வாயிலையும் தன் கைக்கடிக்காரத்தையும் பார்வையிட்டபடியே இருந்தது..

‘எங்க போனா??? நம்மக்கிட்ட அவ்வளவு வீர வசனம் பேசிட்டு ஆளைக் காணோமே…. வர மாட்டாளா??? சே திரு என்னடாப் பண்ற??? உனக்கு அவளை பிடிக்காது… அவ வந்தா என்ன??? வராட்டி உனக்கென்ன..???. சரியான இம்சை…’ மனதில் வினுவை பற்றி யோசிக்கக் கூடாது என நினைத்தாலும்., நொடிக்கொரு தரம் அலைபாயும் கண்களையும் மனதையும் தடுக்கும் வழி தெரியாமல் நொந்துக் கொண்டான் திரு….

திரு தவித்துக் கொண்டிருக்க, விக்கியின் முறை வந்தது.. விக்கியும் தன் பிரசென்டேஷனை நன்றாகவே செய்தான்… அப்போது தான் திருவும் தன்னைப்போல் வாயிலை அடிக்கடி பார்ப்பதை கவனித்தவன் முதலில் ஏன் என்று யோசிக்க, மூளைக்குள் மணி அடித்தது.

‘ஹேய் ஹிட்லர் நம்ம அக்காவை தேடுறார்… வினு… நீ எங்க இருக்க??? சீக்கிரம் வந்து இந்த கண்கொள்ளா காட்சியை பாரு….’ திரு தேடுவதை பார்க்க வினு இங்கு இல்லாமல் போய்விட்டாளே என்று மனம் வருத்தம் கொண்டாலும்… வினுவிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டும் என குறித்துக் கொண்டான்.

தன் உரையை முடித்தவன். வந்து அமர்ந்துவிட, அடுத்து நவீன் தன் பிரசென்டேஷனை தொடங்கினான்…. நவினிற்கு அடுத்ததாக வினு தான் பிரசென்ட் செய்ய வேண்டும் என்பதால் விக்கியின் பதட்டம் அதிகரிக்க… திருவும் அதே பதட்டத்தோடு அமர்ந்திருந்தான்…

சரியாக நவின் தன் பிரசன்டெஷனை முடிக்க, அனைவரையும் பதற வைத்துவிட்டு சரியாக கடைசி நொடியில் வினு வர, விக்கியின் முகம் ஒளிர்ந்தது… திருவிற்கு கூட ஏனென்று தெரியாமல் நிம்மதியானது…

தாமதித்திற்க்காக மன்னிப்புக் கேட்டவள், திருவை பார்த்துவிட்டு தன் பிரசென்டேஷனை தொடங்க… திரு அவளை பார்வையால் அளந்தான்…

எப்போதும் ஜீன் குர்தி என வருபவள் இன்று மிகவும் ப்ரொபஷனலாக வந்திருந்தாள்… சந்தன நிறத்தில் மேல் சட்டையும் கறுப்பு நிறத்தில் முட்டியை விட்டு சற்று இறங்கிய ஒரு டைட் ஸ்கேர்ட்டும் அணிந்து சட்டையை டக் இன் செய்திருந்தாள். தினமும் போனிடெய்லில் வருபவள் இன்று மட்டும் தலையை விரித்துவிட்டிருந்தாள்… அவசரமாக வந்ததில் முடி சற்றுக் கலைந்திருந்தாலும் அதுவும் அவளின் பொலிவை அதிகரிக்கவே செய்தது… தன்னையுமறியாமல் அவனின் கண்கள் அவளை சிறை பிடித்துக் கொண்டிருக்க., அவள் கண்களில் தெரிந்த அலைப்புறுதல் அவனை புருவம் சுருங்க செய்தது..

‘என்னாச்சு… ஏன் பதட்டமா இருக்கா??? நல்லா தானே பிரசென்ட் பண்றா??? அப்புறம் எதுக்கு இந்த டென்ஷன்…’ யோசனையாக பார்த்தவன், மீண்டும் அவளை கூர்ந்துப் பார்க்க… அவள் பேசும் போது தன் முடியை முன்னே வரவிடாமலும் தன் உடலை முடிந்த வரை நேராக நின்றே அவள் பிரசென்ட் செய்ய முயற்சிப்பதும் தெரிய… திருவிற்கு எதுவோ தவறாகப் பட்டது…

ஒரு வழியாக பிரசென்டேஷன் முடிய, சீ.இ.ஓ அவளின் பிரசென்டேஷனை பாராட்டி பேசினார்… அவரின் பாராட்டை சின்ன சிரிப்போடு ஏற்றுக் கொண்டவளின் கண்களில் எப்போது இதெல்லாம் முடியும் என்ற தவிப்பு இருந்தது… அதை சரியாக திரு படித்தாலும் ஏன் என்று தான் புரியவில்லை…

வினுவே கடைசியாக பிரசென்ட் செய்ய இருந்ததால் அவள் முடித்ததும் அனைவரும் திருவிடம் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு கிளம்பிவிட, வினு கவனமாக திருவின் அருகே சென்று நின்றுக்கொண்டாள்.

தன் அருகே நெற்றியில் வழியும் வியர்வையை துடைத்தவாறு பதட்டத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளை விசித்திரமாக பார்த்தவன் எதுவும் கூறாமல் மற்றவர்களிடம் பேசி அனுப்புவதில் கவனமானான்.

பேச்சு மற்றவர்களிடம் இருந்தாலும் பார்வை வினுவிடம் தான் இருந்தது. என்ன என்னவென்று மண்டையை குடைந்து யோசித்தவன்., அவள் தன் முடியை மீண்டும் மீண்டும் ஒதுக்குவதில் சந்தேகப்பட்டு யாரும் கவனிக்கா வண்ணம் எதர்ச்சையாக செல்வது போல் அவளின் பின்னால் செல்ல., அப்போது தான் வினுவின் சட்டையின் பின்பக்கம் லேசாக கிழிந்திருப்பதையும் …உள்ளாடை தெரிந்தும் தெரியாமலும் அவளின் அழகை பறைசாற்ற முயல்வதையும் அதை அவளின் கூந்தல் மறைத்திருப்பதையும் கண்டான்… அதைப் பார்த்தவன் அதிர்ந்தே போனான்…

திரு வினுவின் பின்னால் செல்லவும் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தவள் மேலும் நடுங்கி அருகிலிருந்த சுவரோடு ஒன்ற., அனைவரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தால் அவளை கவனிக்கவில்லை.

அடுத்த ஐந்து நிமிடத்தில் மும்முரமாக திரு அனைவரையும் மீட்டிங் ஹாலைவிட்டு வெளியேற்ற., எப்போதும் கம்பெனி சீ.இ,ஓ வொடு உடன் இருந்து வழியனுப்பி வைப்பவன் வினுவை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல் மற்ற டீம் லீடர்களோடு அனுப்பி வைத்துவிட்டான்.

தன்னால் முடிந்த வரை மற்றவர்களின் பார்வையில் இருந்து வினு ஒதுங்கியே நின்றாள்… திருவும் அவள் முன்னால் வந்து அவளை மறைத்தவாறு நின்றுக் கொண்டான்… விக்கி நவினோடு பேசிக் கொண்டிருந்ததால் வினுவை கவனிக்கவில்லை.

விக்கியை அழைக்க முடியாமலும்.. எப்படி இங்கிருந்து செல்வது என தெரியமலும் வினு முழிக்க…அவளுக்கு பயத்தில் வேர்த்துக் கொட்டியது… கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது…

தன் அண்ணனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் தளர்ந்து போயிருந்த வினு, கடைசி நொடியில் அகில் அழைத்து, கோடிங்கை முடித்துவிட்டேன் என்று கூறவும், சந்தோஷத்தில் அவனுக்கு ஆயிரம் நன்றிகளை கூறினாள்.

அதன்பின் நேரமாகுவதை உணர்ந்து, வேகமாக கிளம்பி தன் ஸ்கூட்டியில் வந்தவள்… அவசரத்தில் கார்ப் பார்க்கிங்கில் ஸ்கூட்டியை விட்டுவிட்டு திரும்ப, அங்கு கம்பெனியின் முதல் தளத்தில் கண்ணாடி தடுப்பு சுவர் அமைப்பதற்க்காக வாங்கி வைத்திருந்த பெரிய கண்ணாடியில் சிக்கி அவளின் மேல் சட்டை லேசாக கிழிந்தது… தன் தலையில் அடித்துக் கொண்டவள் அப்படியே கிளம்ப எத்தனிக்க… அவ்வாறு செய்தால் திருவை தினமும் இதே போல் அருகில் இருந்து சந்திக்க முடியாது என்பதாலேயே போனி டெய்லாக போட்டிருந்த தன் முடியை பிரித்துவிட்டு எதை பற்றியும் யோசிக்காமல் மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்துவிட்டாள்..

ஹாலின் உள்ளே நுழையவும் அவளுக்கு எதிர்புறம் தான் அனைவரும் அமர்ந்திருந்ததால் அவளுக்கு அது சாதகமாக தோன்றினாலும்., அங்கு அத்தனை பேரையும் பார்த்த பின்னர் தான் அவளுக்கு தான் இப்படி வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது. எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் செய்திருக்கிறோம் என புத்திக்கு உரைத்தது. அதன் பின் பதட்டத்துடனே தன் உரையை துவங்கினாள்.

தனது ஆர்வக்கோளாறை எண்ணி வினு நொந்துக் கொண்டிருக்க, விக்கியுடன் பேசிக்கொண்டிருந்த நவினும் வெளியேறிவிட்டான். அவன் வெளியேறவும் அந்த ஹாலில் திருவும், வினுவும், விக்கியும் மட்டுமே இருந்தனர்… வினுவை மறைத்தவாறு திரு நிற்ப்பதை பார்த்த விக்கி,

“ஹேய் வினு !!! சூப்பரா பிரசென்ட் பண்ணின… மச்சானைப் பாரு அதிர்ச்சியில் ஷாக் ஆகிட்டார்… நான் சொன்னேனே மச்சான்… எங்க வினு எப்பவுமே ஓடி ஒளிய மாட்டா” வினுவை பற்றி பெருமையாக கூறியவன், வினு இன்னும் அவன் பின்னால் நிற்ப்பதை பார்த்து….

“வினு அங்க என்னப் பண்ற?? இங்க வா” என்றான்..

என்ன செய்வது எனப் புரியாமல் நின்றவள், விக்கி தன்னை வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்து பாரமாக இருந்த கால்களை நகர்த்தி திருவை தாண்டி முன்னேறினாள்…

‘இவள் என்ன பைத்தியமா” என கோபமாக பார்த்த திரு, அவள் தன் முன்னே வரவும் சட்டென்று பின்னிருந்து அவள் இடையோடு கைக் கொடுத்து அணைத்துக் கொண்டான்… விக்கியும் வினுவும் திருவின் செயலில் அதிர…. வினு தலையை குனிந்துக் கொள்ள அவளுக்கு புரிந்து போனது.. திரு கவனித்துவிட்டான் என்று..

“நீ என்ன லூசா டி…. அரைவேக்காடு” அவளின் காதருகில் அர்ச்சித்தவன் விக்கியை நோக்க… பே என்று இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவனை பார்க்க எரிச்சல் பெருகியது…

“விக்கி கெட் அவுட்” சத்தம் அதிகம் இல்லாவிட்டாலும் அழுத்தமாக திரு கூற.,.

“என்னது கெட் அவுட்டா??? வா வினு நாம போகலாம்…” திருவின் அணைப்பில் இருப்பவளை அழைத்தான் விக்கி.

அதில் திருவிற்கு கோபம் வர, .” ஐ ஸே கெட் அவுட் விக்கி…” மேலும் அழுத்தம் கூட்டி விக்கியிடம் கட்டளையிட்டான்.

வினுவையும் திருவையும் மாற்றி மாற்றி பார்த்தவன், “இல்ல… என் அக்காவை விடுங்க… எதுவா இருந்தாலும் என் முன்னாடியே பேசுங்க பர்ஸ்ட் அவளை விடுங்க…” என்னத்தான் வினு திருவை காதலித்தாலும் இருவருக்குள்ளும் சுமூகமான நிலை இல்லாத போது இவ்வாறு திருவின் அனைப்பில் வினுவை விட்டுச் செல்ல விக்கிக்கு விருப்பம் இல்லை…

“நீங்க அக்கா தம்பியாவே இருங்க… உன் அக்காவ நான் எதுவும் செய்ய மாட்டேன்… வெளியே போ விக்கி… உன் அக்காவோட…” அவளின் துணி கிழிந்திருக்கிறது என எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் திரு பாதியில் நிறுத்திவிட….

“விக்கி நீ வெளிய வெயிட் பண்ணு நான் வரேன்….” அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள் அவசரமாக விக்கியிடம் சொல்ல… விக்கி திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்றான்..

என்னத்தான் தன் உடன்பிறந்த சகோதரனிடம் தான் ஒருவன் முன்பு ஆடை கிழிந்த நிலையில் நின்றிருப்பதை அவளால் கூற முடியவில்லை.. ஒரு வேளை திரு மட்டும் இவ்விடத்தில் இல்லாவிட்டால் நிச்சயம் தன் தம்பியிடம் கூறியிருப்பாள் ஆனால் திருவின் முன்பே கூற அவளின் பெண் மனம் ஒப்பவில்லை. அதோடு அதை புரிந்துக் கொண்டு திரு கூறாமல் இருந்தது அவன் மேல் இருந்த காதலை அதிகப்படுத்தியது.

விக்கி சென்றதும் வினுவின் கையை பிடித்து தர தரவென அழைத்து போன திரு., மீட்டிங் ரூமிலிருந்து தன் கேபினுக்கு செல்லும் கதவை திறந்து தன் கேபினுக்குள் அவளோடு நுழைந்தான். அவளை அங்கேயே விட்டவன், தான் எப்போதாவது மீட்டிங் நேரங்களில் ஆபிஸிலையே தங்குவதால், தனக்காக எப்போதும் மற்றொரு செட் துணி வைத்திருப்பான். அதிலிருந்து சட்டையை மட்டும் எடுத்தவன் அவள் கைகளில் திணித்தான்.

“மாத்திக்கோ…” என்றவன் அவளிடம் தன் அறையில் இருந்த வாஷ்ரூமை காட்டிவிட்டு திரும்பி நின்றுக் கொள்ள, அவனையும் சட்டையையும் பார்த்தவள் குடு குடுவென வாஷ் ரூமிற்குள் நுழைந்து, தன் சட்டையை மாற்றினாள்.

அவனது சட்டையை அணிந்தவள், அதில் அவன் வாசம் வருவது போல் இருக்க, சட்டைக் காலரை இழுத்து முகர்ந்துப் பார்த்தாள். அப்படியே சிறிது நேரம் நின்றவள் வெளியே திரு காத்திருப்பதால் அவசரமாக சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள். அவனது சட்டை அவளுக்கு தொள தொனவென்று இருக்க, தன் ஸ்கேர்ட்டிற்குள் டக் இன் செய்து கொண்டாள். ஆனாலும் லூசாகத்தான் இருந்தது.

வெளியே வந்தவள் அவனை தேட… யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான்…அவள் வருவதை பார்த்தவன் போனை வைத்துவிட்டு திரும்பி அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கோபத்தை காட்டினான்…

“அறிவில்லையா டி உனக்கு??? லூசா நீ… இப்படி தான் டிரெஸ் கிழிஞ்ச அப்புறம் கூட மீட்டிங்க்கு வருவியா??? அந்த அளவுக்கு இந்த மீட்டிங் என்ன முக்கியமா??? எல்லார் முன்னாடியும் இப்படி வந்து நிற்கிற??, யாராச்சும் பார்த்திருந்த… எவ்வளவு பெரிய அசிங்கம்???” அப்படி ஒரு சூழ்நிலையில் அவளை நினைத்துக் கூட பார்க்க முடியாமல் அவன் சீற.,

“ஆமா முக்கியம் தான்…” அவன் கண்களை நேராக பார்த்து அவள் கூறியதில் திட்டிக் கொண்டு இருந்தவன் திகைப்புடன் அவளை பார்க்க., வினுவோ அதைக் கண்டுக் கொள்ளாமல்., “இந்த மீட்டிங் அட்டென்ட் பண்ணினா மட்டும் தான்., இங்க உன்கூட இருக்க முடியும்.. அதனால தான் எதை பத்தியும் யோசிக்காம வந்தேன்… அந்த நேரம் இதெல்லாம் பெருசா தெரியலை.. உன்னை விட்டுடக் கூடாதுன்னு மட்டும் தான் தோணுச்சு. கண்டிப்பா கடவுள் என்ன கைவிட்டுட மாட்டார்னு எனக்குத் தெரியும்….” அவனின் கோபத்திற்கு நிகராக அவளும் கோபப்பட, திரு விழித்தான்.

அவள் ஆமா என்றதிலையே அதிர்ந்தவன் அடுத்து கூறியதில் முற்றிலுமாக உறைந்திருந்தான்…

‘யார் இவள்???? ஏன் தன்னை துரத்துகிறாள்???’, அவளைக் காணும் போதெல்லாம் தனக்குள் எழும் கேள்வியின் கணம் தாளாமல்., எதுவும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தான்….

“மிஸ்டர் அரசு… மூணு நாள் வேலை பார்த்ததுல நான் ரொம்ப டையர்ட்… எனக்கு லீவ் வேணும்…. கிளம்பவா???” அவனின் முதுகின் பின் நின்று வினு கத்த…

அவளை திரும்பி கூட பாராமல், “போய் தொலை” என்றவன் தன் கேபினை விட்டு வெளியேறினான்… அவன் செல்வதையே காதலோடு பார்த்திருந்தாள் அவள்….

தன் கேபினை விட்டு வெளியே வந்தவன்., மீட்டிங் ஹால் முன்பு விக்கி நிற்ப்பதை பார்க்க…. மெலிதாக சிரிப்பு எட்டிப் பார்த்தது…..

‘சரியான ரெட்டவாலுங்க’ அவர்களை நினைத்து முனுமுனுத்தவன் விக்கியை கடந்து செல்ல… விக்கியோ, ‘இவர் என்ன இங்க இருந்து போறாரு அப்போ வினு எங்க???’ அவசரமாக தான் நின்றிருந்த மீட்டிங் ஹாலின் கதவை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தவன்., அங்கு யாரும் இல்லை என்றதும் வினு எங்கே என கண்களால் தேடினான்.

மீட்டிங் ஹாலின் உள்ளே தலையை விட்டிருந்தவனின் முதுகில் வினு ஓங்கி ஒரு அடி வைக்க, அதில் பதறியடித்துக் கொண்டு திரும்பி பார்த்தான் விக்கி. முதுகை தேய்த்துவிட்டவன்.,

“பிசாசே எதுக்கு டி அடிச்ச??? இங்க தானே டி போன.. இப்போ மேஜிக் ஷோ மாதிரி வெளியே இருந்து வர்ற??, குழப்பமாக கேட்டவன் அவளது உடை மாறுதலில்., “யாரோட ஷர்ட் டி இது?? நீ வரும் போது வேற போட்டிருந்தியே??,” முகத்தில் குழப்ப ரேகையோடு விக்கி பார்க்க.,

“அதெல்லாம் போற வழியில சொல்றேன். வா கிளம்பலாம்…. இப்போ நமக்கு உன் ஹிட்லர் லீவ் குடுத்துட்டாரு….” என்றவள் சுற்றும் முற்றும் பார்க்க, அனைவரும் சாப்பிட சென்றிருந்ததால் அந்த தளம் வெறிச்சோடி இருந்தது. யாரும் பார்க்கும் முன் விக்கியை இழுத்துச் சென்றவள் செல்லும் வழியில் அனைத்தையும் கூற, திருவை போல விக்கியும் அவளை கடிந்துக் கொண்டான் அதோடு திருவின் மேல் விக்கிக்கு மதிப்பும் கூடியது.

மறுநாள் வார இறுதி நாளாக இருந்ததால் விக்கியை அழைத்துக் கொண்டு வினு மாலிற்கு செல்ல… விக்கி தான் பயங்கர உற்சாகத்தில் இருந்தான்… பெங்களூர் வந்த இத்தனை நாட்களில் இருவருக்கும் திருவை சுற்றவே நேரம் சரியாக இருந்ததால்., ஒரு நாள் கூட ஊரை சுற்றிப் பார்த்தது இல்லை. அதனால் வினு அழைத்ததும் சரியென்று கிளம்பிவிட்டான்….

முதலில் உற்சாகமாக வந்தவன்., வினு எதுவும் வாங்க ஆர்வம் காட்டாததிலும்… இருக்கும் அனைத்து ஃப்ளோர்களை ஏறி இறங்க வைத்ததிலும் காண்டாகிவிட,

“ஹேய் வினு என்னடி பண்ற??? ஷாப்பிங்னு சொல்லிட்டு.. இது வரைக்கும் ஒரு கர்ச்சீப் கூட நீ வாங்கல… போ நான் இந்த நிமிஷத்துல இருந்து தனியா ஷாப்பிங் பண்ணப் போறேன்…” அவள் ஒன்றும் வாங்ககாததோடு தன்னையும் எதுவும் வாங்க விடாத கடுப்பில் விக்கி உரைக்க.,

“டேய் விக்கி வேணாம்… நீ சின்னப் பையன்… உன்ன ஏமாத்திடுவாங்க… வேணாம்….” விக்கியிடம் பதில் சொன்னாலும்., வினுவின் பார்வை யாரையோ தேடிச் சுழன்றது.

அவள் தேடுதலை உணராதவன், சின்னப் பையன் என்றதில் தன்மானம் பொங்க, “போடி நான் ஒண்ணும் சின்னப் பையன் இல்ல… என்னால தனியா சமாளிச்சிக்க முடியும்…. நான் போறேன்….” ரோஷமாக உரைத்தவன் திரும்பி நடக்க…

வினுவோ, “போடா போ… என்ன தனியா விட்டுட்டு போற தானே… எதாச்சும் பொண்ணு கையால அடி வாங்கிட்டு உட்கார்ந்து அழு….” இன்ஸ்டன்டாக அவனுக்கு சாபம் கொடுத்தவள் தான் வந்த வேலையை பார்க்க தொடங்கினாள்…

வினுவிடம் சண்டையிட்டுவிட்டு வந்த விக்கி, நேராக ஒரு ஐஸ்கிரிம் பார்லருக்குள் நுழைந்தான். இரண்டு கிண்ணங்களில் ஐஸ்கிரிமை வாங்கியவன், ஒரு டேபிளிள் சென்று அமர்ந்து அதை ரசித்து சாப்பிட ஆரம்பித்தான்…

பொதுவாக பெண்கள் தான் ஐஸ்கிரிம் விரும்பி சாப்பிடுவார்கள் ஆனால் வினுவின் வீட்டில் அகிலும் விக்கியும் தான் நிறைய ஐஸ்கிரிம் சாப்பிடுவார்கள்…. இதனால் வினுவிற்கும் விக்கிக்கும் வீட்டில் பெரும் பிரளயமே நடக்கும்.

“ஹப்பா… இந்த வினுவை கழட்டி விட்டுட்டு வந்ததும் நல்லா தான் இருக்கு… கலர் கலரா பொண்ணுங்க. ப்ளஸ் நினைச்ச மாதிரி நிறைய ஐஸ்கிரிம்…” மனதுக்குள் குதுகலித்தவன், அங்கு வந்து சென்றுக் கொண்டிருந்த பெண்களை சைட்டடித்துக் கொண்டு இருந்தான்…

அவனுக்கு எதிர் டேபிளில் கொஞ்சம் காலேஜ் பெண்கள் அமர்ந்திருக்க, அதில் இருந்த பச்சை நிற சுடிதார் அணிந்திருந்த பெண் அவனை திரும்பிப் பார்க்க வைத்தாள்…. அவளது தோழிகள் அனைவரும் ஜீனில் இருக்க, அவள் மட்டும் சுடியில் அம்சமாக இருந்தாள்… அதுவே அவனை அவளை கவனிக்க வைத்தது… ஐஸ்கிரிமையும் அந்த பச்சை சுடி பெண்ணையும் ரசித்துக் கொண்டிருந்தவன் அப்போது தான், அந்த பெண் அருகே பக்கத்து டேபிளில் தனியாக அமர்ந்து அவனை முறைத்துக் கொண்டிருந்த அந்த பெண் குழந்தையை கவனித்தான்…

“ஹாய் க்யூட்டி…” அந்த குழந்தைக்கு அவன் கை அசைக்க… அது அவனை முறைத்தது…..

‘என்ன இப்படி முறைக்குது இந்த குழந்தை… ஹம்ம் பார்க்க நம்ம வினுவ சின்ன வயசில பார்த்த மாதிரி இருக்கு… அப்படியே நம்ம வினு செராக்ஸ் தான்….எத்தனை வயசிருக்கும்?? மூணு இல்லாட்டி நாலு வயசு இருக்கும்.’ பார்ப்பதற்க்கு வினுவை போல் இருந்த குழந்தையை சிறிது நேரம் பார்த்தவன், ஐஸ்கிரிம் வாங்க எழும்பி கவுண்டர் அருகே சென்றான்.. அங்கே அவன் முன்பு அந்த பச்சை சுடி பெண் நிற்க, அவளை பார்த்தவாறே நின்றிருந்தான்….

‘ரொம்ப அழகா இருக்காளே இந்த பொண்ணு… தமிழ்நாட்டுக்காரியா இருப்பாளோ…கொஞ்சம் சைட் ஆங்கிள்ல பார்த்த அப்படிதான் இருக்கு…’ அந்த பச்சை சுடி பெண்ணை சைட் அடித்து கொண்டிருந்தவன் முன்னால் சரியாக அந்த குழந்தை வந்து நிற்க… அந்த குழந்தையை பார்த்து சிரித்தான்.

ஆனால் அந்த குழந்தையோ அவனை பார்த்து சிரிக்காமல் முறைக்க., அவன் என்ன என யோசிப்பதற்கு முன்பு விக்கியின் முன்னால் நின்றிருந்த பெண்ணின் துப்பட்டாவை பற்றி இழுத்த குழந்தை ஓடி விட்டது… விக்கி என்ன நடந்தது என யோசிப்பதற்குள் அந்த பச்சை சுடி சடாரென்று திரும்பி விக்கியின் கன்னத்தில் அறைய…. விக்கி அதிர்ச்சியில் அவளை பார்த்தான்..

“பொறிக்கி ராஸ்கல்… இதுக்காவே வருவிங்களா டா.. பொண்ணுங்கன்னா எல்லாருக்கும் கிள்ளுக்கீரையா போச்சு….” விக்கியை வாயில் வந்தவாறு திட்டியவள் அங்கிருந்து சென்றுவிட, அந்த குழந்தை மீண்டும் அவனை பார்த்து சிரித்துவிட்டு ஓடிவிட்டது…. விக்கிக்கு ஒன்றுமே புரியவில்லை…. யார் இந்த குழந்தை எதற்க்காக தன்னை இப்படி மாட்டிவிட்டது என புரியாமல் கன்னத்தில் கை வைத்தவாறே விக்கி திகைத்து நிற்க…. தனியாக கன்னத்தில் கை வைத்து நின்றிருந்த விக்கியை விக்கியை கவனித்து விட்டு வினு அவன் அருகில் வந்தாள்..

“ஹோய் ப்ரோ ….. என்னடா மியூசியம்ல நிக்கிற பொம்மை மாதிரி நிக்கிற????” கன்னத்தில் கை வைத்து உறைந்து நின்றவனின் தோளில் அவள் தட்ட…. விக்கியோ,

“வினு என்ன ஒரு பொண்ணு அடிச்சிடுச்சு…”. சிறுபிள்ளை போல் அவன் சிணுங்க… வினுவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது…. தான் கொடுத்த சாபம் இவ்வளவு சீக்கிரம் நடந்துவிட்டதா என்பது போல் வினு சிரிக்க…

“சிரிக்காத டி… எல்லாம் உன்னால தான்…” என்றவன் நடந்ததை கூற… வினுவிற்கு அந்த குழந்தையின் புத்திசாலித்தனம் பிடித்திருந்தது… இருந்தாலும் தன் தம்பியை சமாதனம் செய்ய வேண்டும் என்பதால்,

“விடுடா… நீ ஏன் பச்சை சுடிய சைட் அடிச்ச??? ஒரு வேளை அந்த பொண்ணுக்கு தெரிஞ்ச குழந்தையா இருக்கும்…”

“இல்ல டி அந்த குழந்தை தனியா தான் இருந்துச்சு…. ஆனா வினு… அந்த குழந்தை பார்க்கிறதுக்கு அப்படியே சின்ன வயசுல உன்னை பார்த்த மாதிரி இருந்துச்சு”

“எல்லா குழந்தைங்களும் சின்ன வயசுல அப்படி தான் டா இருப்பாங்க…. ஆளாலும் ஒரு பொண்ணுகிட்ட அடி வாங்கிட்டியே டா….” மீண்டும் வினு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க…விக்கி அவளை முறைத்தான்…

“சரி சரி கோச்சிக்காத…. நீ என்ன இதுக்கு முன்னாடி பொண்ணுங்க கிட்ட அடி வாங்காதவனா என்ன_???? நம்ம கூட படிக்கிற பொண்ணுங்க எத்தனை பேர்கிட்ட அடிவாங்கியிருக்க??? ஸோ ரொம்ப பீல் பண்ணாத….” விக்கியை இலகுவாக்க அவள் கிண்டல் போல் கூற அவள் சொல்லிய விதம் அவனை சிரிக்க வைத்தது…

கல்லூரியில் விக்கி தான் அவர்களின் வகுப்பிற்கே செல்ல பிள்ளை… எந்த உதவி என்றாலும் அவனிடம் தான் எல்லாரும் கேட்பார்கள். அவனும் அனைவரிடமுமே அன்பாக இருப்பான்… அதனால் மற்ற பசங்களுக்கு அவன் மேல் பொறாமை கூட உண்டு….

“சரி டி நீ இவ்வளவு நேரம் என்ன பர்ச்சேஸ் பண்ணிண????” பச்சை சுடியை மறந்து விக்கி கேட்க,…. திரு திருவென்று முழித்தாள் வினு.

“அதுவா டா… அது வந்து….” என்ன சொல்வது என்பது போல் வினு இழுக்க.. விக்கிக்கு அவள் மேல் சந்தேகமாக இருந்தது…

“வினு… உண்மைய சொல்லு… எதுக்காக இங்க வந்தோம்…..”

“அது… திரு இன்னைக்கு இங்க அவன் ப்ரெண்ட்டை மீட் பண்ண வர்றதா போன்ல அன்னைக்கு பேசிட்டு இருந்தான்… அதான்….” முப்பத்திரண்டு பற்களையும் ஈஈஈஈ என காட்டியவாறே வினு கூற… விக்கி அவளை கொலைவெறியோடு பார்த்தான்…

“இத முதல்லையே சொல்லியிருந்த ஹிட்லர தேடியிருக்கலாமே டி… நான் வேற தேவை இல்லாம அடியெல்லாம் வாங்கிட்டேனே…..”

“சாரி டா… ரொம்ப நேரமா தேடிட்டே இருக்கேன் ஆனா அரசுவ காணோம் டா….” விழிகளை சுழலவிட்டவாறே வினு உரைக்க… தன் தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டவன் திரும்பி பார்க்க அங்கு திரு யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான்…

“அதோ அங்க இருக்கார்…” விக்கி திரு நிற்கும் திசையை காண்பிக்க… வினு முகத்தில் பல்ப் எரிந்தது… வேகமாக அவன் முன்னால் சென்று நின்றவள் “பேபபபப” என கத்த…திரு ஒரு நொடி ஸ்தம்பித்து போனான்…. கையிலிருந்த கைப்பேசி நழுவ பார்க்க.. அதை பற்றிக் கொண்டவன் அவளை எரிப்பது போல் பார்த்தான்…

“ஹேய் அரசு பயந்துட்டியா….” கைத்தட்டி வினு சிரிக்க…. திரு அவளின் செய்கையை ஒரு அதிர்வோடு பார்த்தான்….. சிரிக்கும் அந்த இதழில் இருக்கும் மச்சமும் அவனை பார்த்து சிரிப்பது போல் இருக்க… தன் தலையை உலுக்கிக் கொண்டான்…

“இடியட்…. சண்டே கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா????” தன்னை தடுமாற வைக்கிறாள் என்பதால் அவள் மீதே அவன் கோபத்தை காட்ட…. அவளோ அவன் ஏதோ காதல் வசனம் பேசுவது போல் அவனை கண்சிமிட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தாள்….

“லவ்க்கு ஏதுடா சண்டே மண்டே… எல்லா டேயும் ஒண்ணு தான்…” தத்துவஞானியாக மாறி அவள் தத்துவம் பேச, விக்கியும் அவள் அருகே வந்திருந்தான்…

தன்னை சமன்படுத்திக் கொண்ட திரு, விக்கியை பார்த்ததும் அவனிடம் சாடினான்… “இவளுக்கு தான் அறிவில்லை, நீயாச்சும் இவளுக்கு புரிய வை டா… என் பின்னாடி சுத்துறத விட்டுட்டு தயவு செஞ்சு ரெண்டு பேரும் வேற எதாச்சும் வேலை இருந்தா பாருங்க…” எவ்வளவு தான் பொறுமையாக சொல்ல முயன்றும் சீற்றமாக தான் வந்தது திருவிற்கு.

அவன் சொல்ல வருவதை மறுத்து வினு எதோ சொல்ல வர…. அதற்குள் “டேடிடிடிடிடிடி” என்று கத்தியவாறு ஓடி வந்தாள் அந்த குழந்தை,…..

யார் என்பது போல் வினுவும் விக்கியும் திரும்பி பார்க்க….. விக்கியை முறைத்த அந்த குழந்தை தான் ஓடி வந்தது…. இருவரும் அதிர்ச்சியாக பார்க்க…. திரு அந்த குழந்தையை கையில் அள்ளி அணைத்துக் கொண்டான்….. தன் நெஞ்சோடு சேர்த்து பொத்தி வைப்பது போல் அவன் அணைத்துக் கொள்ள…. வினுவிற்குள் எதுவோ உடைவது போல் இருந்தது….

அதிர்ச்சியில் நின்றவள் குழந்தையை சுட்டிக் காட்டியவாறே… “அரசு…..” என்க… கண்களோ யாரிது என்ற செய்தியை தாங்கி அவனை பார்த்தது…..

அவள் கண்களில் தெரிந்த குழப்பம்…. பயம்….யாரிது என்ற கேள்வி எல்லாவற்றையும் கவனித்தவன்…. குழந்தையை அணைத்தவாறே பெருமையாக, “மீட் மை டாட்டர் ஹனி.” என்றான்…..

விழிகள் தொடரும்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here