
மின்னல் விழியே குட்டித் திமிரே – 4
தன்னிடம் விளையாடுகிறாளோ என திரு அவளின் கண்களை கூர்ந்து பார்க்க அதில் விளையாட்டுத்தனம் என்பது துளிகூட இல்லை இருந்தாலும் லவ் என்ற பெயரை கேட்டாலே வேப்பங்காயை தின்றது போல் பார்ப்பவனுக்கு அது ரசிக்கவில்லை…. எவ்வளவு திமிர் என்று கோபம் உடைப்பெடுக்க,…
“ஹேய் யூ இடியட் உனக்கு சென்ஸ்னு எதாச்சும் இருக்கா இல்லையா??? என்னப் பேசுற நீ… நான் உன் டீம் லீடர்… இது ஒன்னும் நீ ப்ரொப்போஸ் பண்ணி விளையாடுற பார்க் கிடையாது….. இது ஆபிஸ்” என்றவனுக்கு இதயம் எக்குதப்பாக துடித்தது…
ஒரு கையை மேசையில் இருந்து எடுத்து தன் கன்னத்தில் ஒரு விரலால் தட்டி யோசிப்பது போல் பாவனை செய்தவள், “நீ சொல்றது கரெக்ட்… இது ஆபிஸ். நான் பேசாம வெளிய வச்சி ப்ரொபோஸ் பண்றேன்… ஓ.கே அரசு??? ரொம்ப லேட் பண்ணாம சீக்கிரம் ஒத்துக்கோ…” என்றவளின் கண்கள் மட்டுமல்ல முகமும் மின்னியது….
அவள் செய்த அந்த பாவனை அவனுக்கு யாரையோ ஞாபகப்படுத்த முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு… “டோன்ட் கால் மீ அரசு..”. என்றான் இறுக்கமாக…
நான் அப்படி தான் கூப்பிடுவேன் நீயும் சீக்கிரம் என்ன செல்லமா கூப்பிட ஒரு நேம் செலக்ட் பண்ணிக்கோ…” என்றவளை கொலைவெறியாக நோக்கியவன் “கெட் அவுட்” என்று கத்த… அவனை பார்த்து கண்ணடித்துவிட்டு சிட்டாக வினு வெளியேறினாள்…. கதவின் அருகே விக்கி நெஞ்சை பிடித்துக்கொண்டு சிலையாகி இருந்தான்…
“ரெட்ட வால் குரங்கு…இடியட் எங்க இருந்து தான் எனக்குனு இப்படி வந்து சேருதுங்களோ” வாய்க்குள்ளே வைத்து திரு முனக… விக்கி வெளியே செல்வதா வேணாமா என்பது போல் திருவையும் கதவையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான்… ( பாவம் பச்ச பிள்ளைய கூட்டிட்டு வந்து இந்த வினு எவ்வளவு கொடுமை படுத்துறா..)
அதை கவனித்த திரு, “நீ என்னடா வந்ததுல இருந்து அடிக்கடி சிலையாகிட்டு இருக்க…. உனக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்லணுமா… போடா வெளிய…..” வினுவின் மேல் உள்ள ஆத்திரத்தில் சரமாரியாக விக்கியை திரு திட்ட விக்கியும் வெளியே ஓடி விட்டான்.
இருவரும் வெளியேறியதும் மேசை மேல் இருந்த தண்ணீரை எடுத்து தன் தொண்டையில் கவிழ்த்தவன் தன் மனதை சமன் படுத்திக் கொண்டு மீண்டும் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்….
வெளியே வந்ததும் கலர் கலர் கனவுகளோடு அமர்ந்திருப்பவள் போல் வினு தன் பைலை பார்த்துக் கொண்டிருக்க அவள் அருகே வந்து அமர்ந்த விக்கி அவள் தலையில் தட்டினான்…
“ஸ்ஸ் என்னடா??? எதுக்கு தலைல அடிக்கிற??” தலையை தடவிக் கொண்டே வினு கேட்க…
“ஏன் டி உள்ள ஒரு கலவரத்த க்ரியேட் பண்ணிட்டு இங்க வந்து சொகுசா கால் மேல கால் போட்டுட்டு இருக்கியா??? எதுக்கு டி அப்படி சொன்ன??? அந்த ஹிட்லர கதிகலங்க வைக்க தானே அப்படி சொன்ன” என்றவனின் கண்களில் அப்படி தான் என சொல்லிவிடு என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது…
“ஹேய் என்னடா இப்படி சொல்லிட்ட??? நான் உண்மையா லவ் பண்றேன் டா… ஐ யம் சீரியஸ்… உன் மாமா எப்படி??? சும்மா ஸ்மார்ட்டா இருக்கானா??? “ ( ரொம்ப ஜிலு ஜிலுன்னு கூல்லா இருக்காரு மா)
“என்னடி இப்படி அணுகுண்ட தூக்கி போடுற??? அவர பத்தி என்ன தெரியும்னு நீ லவ் பண்றேன்னு சொல்ற???”
“ஒருத்தர பத்தி தெரிஞ்சி வரது லவ் இல்லடா… எனக்கு அவன பர்ஸ்ட் பார்க்கும் போதே ரொம்ப பிடிச்சிருந்துச்சு… இப்பவும் நாம அவன அடிச்சோம் அப்படின்னு தெரிஞ்சும் நம்மள வெளிய அனுப்பல பாத்தியா??? அந்த கேரக்டர் தான் டா என்ன இம்பிரஸ் பண்ணிச்சு….”
“ரொம்ப கோபக்காரர இருக்கார் டி…. அதோட இது மட்டும் அகில் அண்ணாக்கு தெரிஞ்சிது அவ்வளவுதான்… நாம சட்னி… அகில் அண்ணா லவ்க்கு எனிமின்னு உனக்கு தெரியாதா டி????”
“இனி அவன ப்ரெண்ட்டாக சொல்லு…. இந்த வினு ஒரு தடவ முடிவெடுத்தா அவளோட பேச்ச அவளே கேட்க மாட்டா…அப்புறம் இந்த விஷயத்த நீ அண்ணாகிட்டயோ வீட்லயோ யார்க்கிட்டயாச்சும் சொன்னன்னு தெரிஞ்சிது அவ்வளவு தான்… நான் தான் வீட்ல சமைப்பேன் அப்படிங்கறது ஞாபகம் இருக்கட்டும்….” கடுமையாக கூறுவது போல் கூறிவிட்டு வினு தன் பைலில் மூழ்கி விட.. விக்கிக்கு தான் தலையை சுற்றிக் கொண்டு வந்தது….
“ஹேய் வினு நான் ஏன் டி சொல்ல போறேன்??? நீ என் செல்ல அக்கா… உன்ன போய் மாட்டி விடுவேனா??? அதனால என் சாப்பாட்டுல கை வச்சிடாதே தாயே ப்ளீஸ்…”.விக்கி பாவமாக கெஞ்ச… பிழைத்து போ என்பது போல் ஒரு பார்வை பார்த்தவள் மீண்டும் தன் பைலில் மூழ்கிவிட்டாள்…
“இவ என்ன இப்படி பேசுறா??? இந்த ஹிட்லர பத்தி ஒண்ணுமே தெரியாம எப்படி தான் இவளுக்கு லவ் வந்துச்சோ….இவக்கிட்ட சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்குறா… பேசாம அந்த ஹிட்லர் கிட்ட பேசிப் பார்போம்… ஹய்யோ இங்க கூட்டிட்டு வந்து என்ன பாடா படுத்துறாளே இந்த குட்டி சாத்தான்… இவ எந்த பிரச்சனைல மாட்டிக்கிட்டாலும் அகில் அண்ணாவும் நிகில் அண்ணாவும் என்ன தான் கொல்லுவாங்க… அவங்க கையால சாகுறத விட இந்த ஹிட்லர் கையால செத்துடலாம்…. பிள்ளையாரப்பா…. சே சே வேணாம் அவர் கட்ட பிரம்மச்சாரி… முருகா… நீ தான் பா என்ன காப்பாத்தணும்….” ( நீ கடைசி வரைக்கும் பிரம்மச்சாரி தான் டா… பிள்ளையாரையே கிண்டல் பண்றியா??) மனதில் அனைத்து சாமிகளுக்கும் மனு போட்டு விட்டு தன் பைலை தூக்கிக் கொண்டு விக்கி திருவை பார்க்க கிளம்ப…
“எங்க போற??? விக்கி சட்டென்று எழும்பவும் வினு புருவத்தை உயர்த்த…
“ம்ம்.. அது ஒரு டவுட் அதான் கேட்டுட்டு வரலாம்னு….” விக்கி மாட்டிக் கொள்ள கூடாதே என இழுத்தான்.
“டவுட்டா என்ன டவுட் என்கிட்ட சொல்லு…. நான் க்ளியர் பண்றேன்….”
“ஏன் ஏன் நான் என்ன சின்ன பையனா??? என்னால எல்லாத்தையும ஹேன்டில் பண்ண முடியும்… நானே என்னோட டவுட்ட க்ளியர் பண்ணிக்கிறேன் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்…” வினுவின் மேல் எரிந்து விழுந்தவன்… விடு விடு வென திருவின் கேபின் அருகே செல்ல… அவ்வளவு நேரம் இருந்த துணிவு ஓடிப் போய்விட்டது… கதவுக்கு வலிக்காதவாறு மெதுவாக கதவை தட்டிக் கொண்டு விக்கி உள்ளே நுழைய தன் மடிக் கணிணியில் இருந்து பார்வையை திருப்பி விக்கியை பார்த்தான் திரு…
“ஹிட்… அய்யோ… ஹி .. ஹி…. சார்….” தலையை சொரிந்தவாறு விக்கி அழைக்க… திருவிற்கு அப்படியொரு கோபம்….
“யூ இடியட் உனக்கு ஒழுங்கா பேச வராதா??? நானும் அப்போதுல இருந்து பார்க்கிறேன்.. உன் ரெட்ட வால் குரங்கு தான் பேசுது…. உனக்கு என்ன திக்கு வாயா????” வினுவின் மேல் இருந்த கோபத்தில் விக்கி மேல் அவன் பாய…
“பேச எல்லாம் நல்லா வரும் சார். வினு நேத்து உங்கள அடிச்சது தப்பு தான்… அதுக்கு நான் சாரி சொல்லிக்கிறேன் சார்… இன்னைக்கு அவ பேசினதுக்கும் சாரி சொல்லிடுறேன் சார்….. ஆனா எங்க அக்காவ லவ் மட்டும் பண்ணிடாதிங்க சார்…..” வாத்தியாரிடம் மாட்டிக் கொண்டி மாணவன் போல் விக்கி சொல்ல அவன் சாரி கேட்கவும் சற்று சமன்பட்ட திருவின் மனது அவன் கடைசியாக சொன்ன வாக்கியத்தில் எவரஸ்ட் எரிமலையை விட அதிகமாக கொதித்தது.. (ஆமா சார் லவ் பண்ணாதிங்க சார் பின்ன உங்க உயிர்க்கு உத்திரவாதம் இல்ல சார்,)
“ஆர் யூ மேட் மேன்… உன் அக்கா என்ன பெரிய ஆளா நான் அவள லவ் பண்றதுக்கு… உன் அக்கா மட்டும் இல்ல டா உலக அழகியே வந்தாலும் நான் லவ் பண்ண மாட்டேன்…. அண்டர்ஸ்டன்ட்….” சீற்றத்தோடு திரு கத்த விக்கிக்கு கை கால் எல்லாம் அதிர்ந்தது…
மூச்சு வாங்க திரு கத்த விக்கியோ… நமக்கு இந்த சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன்… இப்போ புதுசா எவனோ ஆன்ட் மேன் தானே தெரியும் இவன் யாரு நமக்கு தெரியாதா மேட் மேன் என தன் ஆராய்ச்சியை மேற்கொள்ள…. அவனின் யோசனையான முகத்தை பார்த்த திரு தான் வாட் ???? என்றான் அவனை கலைக்கும் வண்ணம்….
“இந்த மேட் மேன் யாருன்னு யோசிச்சிட்டு இருக்கேன் சார்…..” திரு சட்டென்று கேட்டதும் விக்கி உளறிவிட…. திருவின் முகம் ஜிவ்வென்று கோபத்தில் சிவந்தது….
ஹய்யோ சார் கோபப்படுறாறே…. உனக்கு புத்தியே இல்லடா விக்கி… தன்னையே திட்டிக் கொண்டவன், “சாரி சார்… நான் கேட்டத மறந்திடுங்க…. ஆனா எங்க அக்காவ மட்டும் லவ் பண்ணிடாதிங்க…” என்றானே பார்க்கலாம்.
இப்போது திருவிற்கு பைத்தியம் பிடிக்கும் போல் இருந்தது…. யாரு இவர்கள் நேற்றிலிருந்து தன்னை ஒரு நிலையில் இருக்கவிடாமல் அலைக்கழிக்கிறார்கள் என சினம் எழுந்தாலும் அதை காட்டிக் கொண்டால் அவன் திரு இல்லையே, தன் சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக்கொண்டு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டவன்… “நான் லவ் பண்ற அளவுக்கு உன் அக்கா அவ்வளவு வோர்த்தி கிடையாது…. இன்ஸ்டன்டா லவ் பண்றதுக்கு வேற ஆள் கிடைப்பாங்க… டோன்ட் டிஸ்டர்ப் மீ… அதோட நேரத்தோட அருமை தெரியாம சில்லியா பிகேவ் பண்ணிட்டு இருக்க உங்ககூட விளையாட எனக்கு டைமும் இல்ல… ஸோ கெட் அவுட்..”. என்றவன் தன் கணினியில் மீண்டும் பார்வையை பதிக்க…
இம்முறை விக்கிக்கு கோபம் வந்தது… “ஹல்லோ சார்.. எங்க அக்காவுக்கு என்ன குறை??? ஏன் லவ் பண்ண முடியாது…. அவ என்ன விட ஆயிரம் மடங்கு நல்லவ… வோர்த்தி இல்லன்னு சொல்றிங்க… அவ கிடைக்க கண்டிப்பா நீங்க புண்ணியம் பண்ணிருக்கணும் இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க… எங்க அக்காவ தான் நீங்க கல்யாணம் பண்றிங்க… என்ன நீங்களே மச்சான்னு உங்க வாயால சொல்விங்க…. கண்டிப்பா நடக்கும்… வரட்டுமா மச்சான்….” அண்ணாமலை ஸ்டைலில் கூறியவன் கெத்தாக வெளியேற…. திரு அவனை பாவமாக ஒரு பார்வை பார்த்து விட்டு தன் வேலையை தொடர்ந்தான்….
வெளியே வந்த விக்கி நேராக தன் இடத்திற்கு செல்லாமல் வாஷ் ரூமிற்கு சென்று கண்ணாடி முன் நின்றவன்…. “என் வினுவ பார்த்து வோர்த்தி இல்லன்னு சொல்றாரு…. வேற ஆள பார்க்கனுமாமே… என் அக்கா என்ன அப்படி பட்டவளா??? காலேஜ் ஸ்கூல்னு எத்தனை ப்ரோபோசல்ஸ் எதையாச்சும் திரும்பி பார்த்திருப்பாளா அப்படி பட்டவள பார்த்து எப்படி இவர் சொல்லலாம்…” தன் முகத்தை தண்ணீரால் அடித்து கழுவியவனுக்கு கோபம் குறைவது போல் இருந்தது… கோபம் மெதுவாக விடைபெற அப்போது தான் விக்கிக்கு தான் எதற்க்காக ஹிட்லரை சந்திக்க சென்றோம் என்பதே புத்தியில் உரைத்தது. தன் தலையில் தானே அடித்துக் கொண்டவன் வினு அருகே சென்று சோகமாக உட்கார்ந்துக் கொண்டான்…
இஞ்சி தின்ற குரங்கு போல் முகத்தை வைத்துக் கொண்டு இருந்தவனை வினு குறுகுறுவென்று பார்க்க… அதில் எரிச்சலுற்றவன் “என்ன எதுக்கு இப்படி பார்க்கிற????”
“இல்லடா இப்போலாம் டவுட்ட பாத்ரூம்ல சொல்லித் தர ஆரம்பிச்சிட்டாங்களான்னு பார்க்கிறேன்….” வினு சிரிக்க…. விக்கி முறைத்துக் கொண்டு திரும்பினான்… சற்று நேரம் தனக்குள் போட்டு எதையோ யோசித்தவன்… வினுவிடமே திரும்பி… “வினு…. எனக்கு அந்த ஹிட்லர் தான் மச்சானா வரணும்…” என்றான் சீரியஸாக…..
“என்ன திடிர் மாற்றம்???”
உள்ளே நடந்ததை விக்கி கூற… புருவத்தை சுருக்கி யோசித்தவள், “அவன் எனக்கு தான் டா…. தன்னோட முகத்துல எதோ முகமூடி போட்டுட்டு அவன அவனே மறைச்சிக்குறான்… அது என்னன்னு நாம கண்டுபிடிச்சி அவன கரெக்ட் பண்றோம் டா..” ( அக்காவும் தம்பியும் சேர்ந்து கரெக்ட் பண்ணுங்க மா…)
“உனக்கு ஹிட்லர முன்னாடியே தெரியுமா டி??? எதோ அவர பத்தி தெரிஞ்ச மாதிரியே பேசுற????” விக்கி சந்தேகமாக வினுவை பார்க்க…
“ம்ஹும் எனக்கு தெரியாது டா ஆனா அவனோட முகத்த பார்த்தாலே எனக்கு புரியுது…. சரி சரி நீ இப்போ உன்னோட வேலைய பாரு..”. இதற்கு மேல் விக்கியை பேச விட்டால் அது சரி வராது என நினைத்துக் கொண்டவள் தன் பைலில் மூழ்கிக்விட்டாள்… வினு இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டாள் என்பதால் விக்கியும் தன் பைலை பார்க்க தொடங்கினான்….
ஈவ்னிங் வரை அந்த பைலை பார்த்தவர்கள்… அதில் ஏற்ப்பட்ட சந்தேகத்தையும் நவினிடம் கேட்டு தெளிந்துக் கொண்டார்கள்…. பின் அனைவரும் கிளம்பும் சமயம் தாங்களும் கிளம்பியவர்கள் வெளியே வர அங்கு திரு தன் காரை எடுக்க பார்க்கிங் நோக்கி சென்றுக் கொண்டிருந்தான். திருவை பார்த்ததும் வினுவின் கால்கள் தாமாக அவனை நோக்கி முன்னேற…. விக்கி அவளை தடுத்தான்…
“வேணாம் வினு…ஏற்கனவே காலைல இருந்து மாத்தி மாத்தி அந்த மனுஷன டென்ஷன் பண்ணிட்டோம்… வீட்டுக்கு போற நேரமாச்சும் விட்டுடேன்…”. பாவமாக விக்கி சொல்ல..
“ஹேய் என்னடா நீ… அவன் உன் வருங்கால மாமா டா…. அவனுக்கெல்லாம் பயப்படலாமா??? நாளைக்கு அவன ஃபாலோ பண்ணி அவன் வீட்டையே கண்டு பிடிக்க போறோம் நீ இதுக்கே பயந்தா எப்படி????”
“எனக்கு அவர விட உன்ன பார்த்தா தான் டி எப்போ என்ன பண்ணுவியோன்னு பயமா இருக்கு…..” புலம்பியவாறே வினுவை பின் தொடர்ந்தான்…..
காரை அன்லாக் செய்துக் கொண்டு இருந்தவனை மிஸ் செய்துவிடக் கூடாது என ஓடோடி வினு அவன் பின்னே வர…. அவன் அருகில் வரவும் அவள் கால் இடற…. திரும்பி நின்றவனின் முதுகில் சென்று மோதிக் கொண்டாள்…. சட்டென்று தன் முதுகில் எதோ வந்து விழவும் திருவும் பாலன்ஸ் இல்லாமல் கார் கண்ணாடியில் இடித்துக் கொண்டான்…. ஒரு நிமிடத்தில் அனைத்தும் நடந்துவிட வினு விழுந்த வேகத்தில் விலகி விட்டாள்…. திரு திரும்பிப் பார்த்து அவளை முறைக்க….
தன் தலையில் தானே தட்டியவள் மூக்கை சுருக்கி தலையை சாய்த்து அசடு வழிந்தவாறு சாரி என்க, திருவிற்கு இந்த பாவனை மீண்டும் ஏதேதோ நினைவுகளை தட்டியெழுப்ப நினைவுகளின் கணம் தாளாமல் எதுவும் கூறாமல் காரில் ஏறியவன் அசுர வேகத்தில் சென்றுவிட்டான்… வினு தான் செல்லும் அவனை பார்த்துக் கொண்டிந்தாள்….
பின் விக்கியும் வர இருவருமாக தங்கள் அப்பார்ட்மண்ட்டிற்கு கிளம்பினர்… அதற்கு முன் சமைக்க தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்…. முதல் நாளே ஏதோ மலையை புரட்டி போட்டதை போல் சோர்வு தாக்க விக்கி ஹால் சோபாவிலையே டீ.வி யை ஆன் செய்துவிட்டு சுருண்டு விட்டான்….
வினு தன் அறைக்கு சென்று தன் உடையை மாற்றிக் கொண்டு கிட்சனுக்கு சமைக்க செல்ல சரியாக அனு போன் செய்தாள்….
“சொல்லுங்க அண்ணி….”.
“வினு குட்டி…. பர்ஸ்ட் டே எப்படி இருந்துச்சு…. “
“ம்ம் நல்லா இருந்துச்சு அண்ணி…. எல்லாரும் நல்ல மாதிரி பழகுறாங்க…. தமிழியன்ஸ் நிறைய வர்க் பண்றாங்க அண்ணி… ஸோ ப்ராப்ளம் இல்ல….”
“ம்ம் ஓ,கே டா…. நான் சொன்னவங்கள பார்த்தியா???? அங்க தானே வர்க் பண்றாங்க???” மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் அனு கேட்க… அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் நின்ற வினுவின் மனதில் திருவை பற்றி இப்போது சொல்லலாம வேண்டாமா என்ற கேள்வி எழுந்து நின்றது.