மின்னல் விழியே – 3

வினு கூறியதை விக்கியும் ஒத்துக் கொள்ள சரியாக அகிலிடம் இருந்து விக்கிக்கு போன் வந்தது… அதை அட்டென்ட் செய்தவன்… அண்ணா என்க…

“விக்கி எங்க போய்ட்டு இருக்க.. வினு கிட்ட போனை கொடு….” என்று கூறவே போனை ஸ்பீக்கர் மோடில் போட்டவன் அண்ணா என வினுவிடம் உதடசைத்து கூற….

யார் சென்று பேசினாலும் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் கூறுபவன் இன்று அவனாகவே அழைக்கவும் கலங்கிய கண்களோடு வினு… சொல்லுண்ணா என்றாள்…

“வினு குட்டி…. ஏன் டா இப்படி பண்ற??, உனக்கு இந்த கல்யாணம் பிடிக்காட்டி நான் எதாச்சும் செஞ்சு நிறுத்துறேன் டா… நீ திரும்ப வந்துடுறியா????” சில பல வருடங்கள் கழித்து அவனிடமிருந்து கேட்கும் வினு குட்டியில் வினுவிற்கு கண்ணீர் பெருக…. அதை துடைத்துக் கொண்டவள்… “இல்லண்ணா… எனக்கு வேலைக்கு போகணும்” என்றாள் தீர்க்கமாக…

“வேலை தானே டா… நான் இங்க உனக்கு பிடிச்ச மாதிரி வேலை ஏற்ப்பாடு பண்ணித் தரேன்.. நீ அந்த ஊருக்கு போக வேண்டாம் டா என அகில் கெஞ்ச… விக்கியோ ஒன்றும் புரியாமல் முழித்தான்…

“சாரிண்ணா… நீ சொல்றத என்னால கேட்க முடியாது… நான் கொஞ்ச நாள் தனியா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண கத்தக்கணும்…. சீக்கிரம் நானே என் வேலை முடிஞ்சதும் வந்துடுறேன்” என்றவள் இதற்கு மேல் பேசினாள் இறங்கி வீட்டிற்கு சென்று விடுவோம் என பயந்து போனை கட் செய்தாள்….

தன் போனை வாங்கியவன் வினுவை உற்றுப் பார்த்தான்… “வினு என்கிட்ட எதாச்சும் மறைக்கிறியா????”

அவன் கேள்வியில் தடுமாறினாலும் தன்னை சமன் படுத்திக் கொண்டவள்… “என்னடா உளறுற??? “

“அண்ணா என்னடான்னா அந்த ஊருக்கு போக வேண்டாம்னு சொல்றாங்க.. நீ என்னடான்னா அங்க தான் வேலை பார்ப்பேன்னு ஒத்த கால்ல நிக்கிற… எனக்கு புரியல….”

“ம்ம் ரொம்ப யோசிக்காம தூங்குடா… படிச்சி முடிச்சதும் நம்ம அட்டென்ட் பண்ணின பர்ஸ்ட் இன்டிர்வியூல கிடைச்ச வேலை அதனால வேற எத பத்தியும் யோசிக்காமா வேலைய மட்டும் பத்தி யோசி…” என்றவள் அவன் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டு தூங்குவது போல் ஜன்னல் கம்பிகளில் தன் தலையை சாய்த்துக் கொண்டாள்…

விக்கியும் வேறு வழியில்லாமல் தூங்க ஆரம்பித்தான்… மறுநாள் அதிகாலையில் பெங்களூரை அடைந்தவர்கள் ஆட்டோ பிடித்து அனு தங்களுக்காக அவள் தோழியின் மூலம் ஏற்ப்பாடு செய்திருந்த ப்ளாட்டிற்கு சென்றனர்… மூன்றாம் தளத்தில் இருந்த தங்களின் ப்ளாட்டிற்கு வந்தவர்கள்… ப்ளாட்டை சுற்றிப் பார்த்து… பின் பால்கனி உள்ள அறை தனக்கு தான் என அடி வைத்து இறுதியில் விக்கியே அதில் ஜெயித்து என ஒரு வழியாக செட்டிலாக, காலை ஏழு மணியளவில் சுதா அடித்த போனில் அடித்து பிடித்துக் கொண்டு வினு எழும்பினாள். …

தாயிடம் சிறிது பேசிவிட்டு விக்கியின் அறைக்கு சென்றவள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த விக்கியை எழுப்பி குளியலறையில் தள்ளிவிட்டு தானும் தயாராக சென்றாள்… ஏற்கனவே அனு தன் தோழியிடம் கூறி வீட்டில் தேவையான பொருட்களை வாங்கி போட்டிருந்ததால் ஈவ்னிங் காய்கறி வாங்கி வர வேண்டும் என முடிவெடுத்து விக்கியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள்….

ஆபிஸ் போகும் வழியில் ஒரு சிறிய உணவகத்தில் தங்கள் காலை உணவை முடித்தவர்கள் சரியாக ஒன்பது முப்பதிற்கு அலுவலகத்தில் இருந்தனர்…

எஸ்.ஆர்.எஸ் சாப்ட்வேர் சொலுஷியன்ஸ் என்ற பெய்ர் பொறிக்கப்பட்டிருந்த அந்த ஏழு அடுக்கு மாடி கட்டிடத்தை வெளியே நின்று அன்னாந்து பார்த்தவர்கள்… உள்ளே சென்று ரிசப்ஷனில் தாங்கள் நியூ ஜாய்னி என்று கூற… அந்த பெண்ணும் ஐந்தாம் தளத்தில் இருந்த அவர்களின் ஹெச்.ஆர்-ரை சென்று சந்திக்குமாறு கூறினாள்… ஐந்தாம் தளத்தை அடைந்து ஹெச்-ஆர்ரின் கேபினுள் அனுமதி வாங்கி நுழைய… அவர்களை புன்சிரிப்போடு வரவேற்றார் அந்த நாற்பதுகளில் இருந்த மனிதர்…

“ஹாய் காய்ஸ்…. ஐ யம் ராபர்ட்…” என்றவரிடம் இருவரும் கை குலுக்கி தங்களை அறிமுகம் செய்துக் கொண்டவர்கள்…. பின்பு வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களை பொதுவாக பேசினார்கள்… அவர்களிடம் பேசிய அரை மணி நேரத்தில் திறமையானவர்கள் தான் என அனுபவசாலியான ராபர்ட் புரிந்துக் கொள்ள… தன் அருகில் இருந்த போனில் ஒரு எண்ணை தட்டியவர் யாரையோ உள்ளே வருமாறு அழைக்க… கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தான் நவின்… அந்த கம்பெனியில் டெஸ்டிங் பிரிவில் ஜூனியர் இஞ்சினியராக பணிபுரிபவன்…

“காய்ஸ் இது நவின்… நவின்… இவங்க நியூ ஜாய்னி… உங்க டீம் ல தான் போட்டுருக்காங்க… இவங்க கூட இருந்து கைட் பண்ணுங்க” என்றவர் வினுவிற்கும் விக்கிக்கும் ஒரு ஆல் தி பெஸ்ட்டை வழங்கினார்….

நவினோடு வெளியே வந்தவர்கள் அந்த தளத்தை சுற்றிப் பார்க்க… சிறிது சிறிதாக தடுப்பு சுவர்களோடு சிறிய கேபின் போன்ற அமைப்பில் இருவர் இருவராக ஒவ்வொரு கேபினுள் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தனர்…

“ஹாய் ப்ரெண்ட்ஸ்… கம்பெனி எப்படி இருக்கு பிடிச்சிருக்கா???? “என்றவனின் பார்வை விக்கியை விட வினுவின் மேலே அதிகம் இருந்தது… நவினும் இரு வருடங்களுக்கு முன்பு தான் தன் படிப்பை முடித்துக் கொண்டு இந்த கம்பெனியில் வேலையில் சேர்ந்திருந்தான்…

“ஹம்ம் நல்லா தான் இருக்கு ப்ரோ… பட் வர்க் பண்ணி பார்த்தா தான் தெரியும் இந்த அட்மாஸ்பியர் எங்களுக்கு செட்டாகுமான்னு ப்ரோ” வார்த்தைக்கு இரண்டு ப்ரோவை வினு சொல்ல… நவினுக்கு சிரிப்பாக இருந்தது..

“என்னங்க… இப்படி எல்லாரும் ப்ரோன்னு சொல்லிட்டா என்ன மாதிரி பசங்க என்னங்க பண்றது???”, என்றவன் விக்கி அவனை முறைப்பதை பார்த்ததும் “எனிவேய்ஸ் என்ன ப்ரோன்னு கூப்பிட்டுட்டிங்க ஸோ இன்று முதல் நீங்க இந்த நவினோட தங்கை” என அந்தர் பல்டி அடிக்க … வினுவுக்கும் விக்கிக்கும் அவனை பிடித்து போனது….

“அதான் சிஸ்டர்னு சொல்லிட்டியே ப்ரோ… அப்புறம் எதுக்கு இந்த வாங்க போங்க… சும்மா வா போன்னே பேசு” என வினு நட்பின் முதல் அடியை எடுத்து வைக்க… நவினும் அதை பற்றிக் கொண்டான்…

“நீங்க ரெண்டு பேரும் லக்கி பா… ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல வேலை கிடைச்சிருக்கு…” நவின் பொறாமை போல் கூறினாலும் அவன் குரலில் நிச்சயம் பொறாமை இல்லை….

“அட நீ வேற டா… நானே இவ கூட இருக்கிறதுனால ஒரு பொன்ன கூட சைட் அடிக்க முடியலையேன்னு ஃபீலிங்ஸ்ல இருக்கேன் இதுல இவன் வேற….” என மனதில் நினைத்து புகைந்தாலும் நவினிடம் சிரித்த முகமாகவே நின்றான் விக்கி…. ( உன் பீலிங்ஸ் எனக்கு புரியுது டா விக்கி..)

“நம்ம ப்ராஜக்ட் ஹெட் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு… அதுக்க அப்புறம் நீங்க என்னப் பண்ணணும்னு அவர் சொல்வாரு”

“நம்ம ப்ராஜக்ட் ஹெட் எப்படி??? ரொம்ப நல்லவரா???” தாங்கள் யாரின் கீழே வேலை செய்ய போகிறோம் என அறிந்துக் கொள்ளும் ஆவலில் வினு கேட்க…. ( வேலைய பத்தி எதாச்சும் கேட்குதான்னு பாரு… டீம் லீடர் எப்படின்னு கேட்குது… )

“ம்ம் ரொம்ப நல்லவர் ஆனா என்ன கொஞ்சம் கோவக்காரர்….தப்பு பண்ணின கோபம் வந்துடும்… செம்ம டேலன்ட்… அவரோட டேலன்ட்க்கு அவர் சொந்தமாவே கம்பெனி தொடங்கலாம் ஆனா அவர் இந்த கம்பெனியில வர்க் பண்றார்… அவர் தான் இந்த கம்பெனியோட வைஸ் பிரஸிடன்ட் ஆனாலும் அந்த பந்தா கொஞ்சம் கூட இல்லாம நம்ம டீம்க்கு டீம் லீடராவும் இருக்கார்….” என நவின் புகழ்ந்துக் கொண்டே போக,… வினுவும் விக்கியும் யார்டா அந்த அப்பாடக்கர் என்பது போல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்… ( கொஞ்சம் அடக்கி வாசிப்பா நவின்… என்னாலையே தாங்க முடியல..)

“ரொம்பவே புகழ்றிங்க பாஸ் உங்க பாஸ்ஸ” …. விக்கி கேலியாக கூற….

“அவர் கூட வர்க் பண்ணி பாருங்க அப்புறம் நீங்களே எங்க திரு சாரோட புகழ பாடுவிங்க….” தங்கள் டீம் லீடரை விட்டுக்கொடுக்காமல் நவின் உரைக்க… திரு என்ற பெயரை கேட்டவுடன் வினுவின் கண்களில் ஒரு மின்னல்…

“ஹேய் என்ன நேம் சொன்ன???” ஆர்வத்தில் வினு கேட்டுவிட…

“திரு… திருநாவுக்கரசு….” என்று நவின் கெத்தாக கூற…. விக்கி விழுந்து விழுந்து சிரித்தான்…. “வாட்??? திருநாவுக்கரசா??? ஹா ஹா ஸச் எ ஓல்ட் நேம்…..” என்றவன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க… வினு அவன் முதுகில் ஒரு அடியை வைத்தாள்…. (ஓல்ட் இஸ் கோல்ட்)

முதுகை தேய்த்தவாறே நவினை பார்த்தவன் அவனது முறைப்பில் “சாரி சாரி… நேம் கேட்டதும் சிரிப்பு வந்திடுச்சு…”.

“நேம் மட்டும் தான் விக்கி ஓல்ட் மத்தபடி சார் சும்மா சூப்பரா இருப்பாரு… இங்க இருக்க பொண்ணுங்க எல்லாருக்குமே சார் மேல ஒரு கண்ணு… ஆனா சார் தான் யார்க்கிட்டயும் பேச மாட்டாரு… அவ்ளோ சைலண்ட்…. ஆனா அவர் அழுத்தமா ஒரு பார்வை பார்த்தாலே அப்படி ஒரு நடுக்கம் ஓடும் உடம்புல… அவர்கிட்ட பேசவே எல்லாரும் பயப்படுவாங்க…”. என்றவன் திருவை பற்றி புகழ்ந்துக் கொண்டே போக மீண்டும் வினுவும் விக்கியும் ரொம்ப ஓவரா இருக்கே என்பது போல் பார்த்துக் கொண்டனர்….

“ஹப்பா போதும் நவின் நீ உங்க சார் பத்தி பேசுறதுல என் காதுல ரத்தமே வந்துடும் போல இருக்கு…. ப்ளீஸ் நாங்க தெரியாம கேட்டுட்டோம் எங்கள விட்டுடு…” என்றவள் கையெடுத்து கும்பிடுவது போல் பாவனை செய்ய…. அவளை பார்த்து சிரித்தாலும் பின்னால் வந்துக் கொண்டிருந்த திருவை பார்த்தவன்… “ஹேய் நம்ம டீம் லீடர் வந்தாச்சு” என உரைக்க…. நவின் கொடுத்த பில்டப்பில் யார் அந்த லூசு என்பது போல் திரும்பி பார்த்வர்கள் உறைந்து நின்றார்கள்…. அங்கே தன் கம்பீர நடையுடனும் அழுத்தமான பார்வையுடனும் வந்துக்கொண்டிருந்தான் அவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஹிட்லர் என்னும் திருநாவுக்கரசு. (வந்துட்டாரா ஹீரோ)

அந்த இடத்தில் ஹிட்லரை சற்றும் எதிர்ப்பாராத வினுவும் விக்கியும் உறைந்து நிற்க… அவர்களை கண்டுக்கொள்ளாமல் நவினே… “திரு சார் இன்னைக்கு மார்னிங் தான் சென்னை ஹெட் ஆபிஸ் போய்ட்டு திரும்ப வந்தார் ஆனாலும் லீவ் போடாம வந்துட்டாரு…. ரொம்ப சின்சியர்” நவின் சிலாகிக்க… வினுவிற்கும் விக்கிக்கும் இது அவனாக இருக்காது என்ற சிறிய நப்பாசை தூள் தூளானது….

இருவரும் உறைந்து நிற்கும் போதே அருகில் வந்த திரு… நவினை என்ன என்பது போல் பார்க்க…

“குட் மார்னிங் சார்… இவங்க வினு ஆண்ட் விக்கி… நியூ ஜாய்னி… நம்ம டீம்ல தான் போட்டுறுக்கிறதா ராபர்ட் சார் சொன்னாங்க… உங்கள மீட் பண்றதுக்காக வெயிட் பண்றாங்க” படபடவென்று நவின் ஒப்பிக்க… இருவரையும் பார்த்தவனின் கண்கள் வினுவின் மேல் நிலைத்தது… இன்னும் அதிர்ச்சியில் கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்… கண்கள் வழியே அவளின் இதயத்தையே சென்று பார்ப்பவன் போல் அவளை அவன் ஊடுருவிப் பார்க்க, வினுவினால் அவன் கண்களை சந்திக்க முடியவில்லை…. கண்களில் இருந்து பார்வையை இறக்கியவனின் கண்கள் அவளது உதட்டில் அம்சமாக இருந்த அவளது மச்சத்தில் ஒரு நொடி தயங்கி மீண்டும் அவள் கண்களையே பார்த்தது…

ஓரிரு நொடிகளுக்கு மேல் இருவரையும் அளவிட்டவன் எதுவும் கூறாமல் தன் கேபினுக்குள் நுழைந்துக் கொண்டான்… அதிர்ச்சியில் உறைந்திருந்தவர்களை உலுக்கிய நவின்… “இப்போ ஒத்துக்குறிங்களா எங்க சார் செம்ம ஸ்மார்ட்னு”

“ரொம்ப ஸ்மார்ட் தான்” அதிர்ச்சியில் பதிலளித்தான் விக்கி….

“சரி வாங்க… உங்க சீட்ட காமிக்கிறேன்…” என்றவன் அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த சிறிய தடுப்பில் இருந்த இரண்டு இருக்கைகளை காண்பித்தான்… இருவரும் சென்று தங்கள் இருக்கையில் அமர நவின் அங்கிருந்து நகர்ந்தான்…

அவன் சென்றதும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தவர்கள்… “டீ வினு என்னடி இப்படி ஆகிடுச்சு… இவர் தான் நம்ம டீம் லீடராம் வைஸ் பிரசிடன்ட் வேறயாம்…. அவர் நினைச்சா நம்மள ஈசியா வேலைய விட்டு அனுப்பிடலாம்….” பயத்தில் விக்கி உளறிக் கொட்ட…. அவன் கைகளை பற்றிக் கொண்டவள்..

“ரிலாக்ஸ் டா… அந்த ஹிட்லர் தான் நம்மள தெரிஞ்ச மாதிரி காமிச்சிக்கலையே அதனால நாமளும் அவர மறந்துட்டு வந்த வேலைய பார்ப்போம். ஒரு வேளை நம்மள மறந்துட்டாரா இருக்கும்.” எதோ திரு ஷார்ட் டெர்ம் மெம்மரி பேஷண்ட் போல் வினு கூற… விக்கி அவளை முறைத்தான்… ( ஏம்மா நீ நிஜம்மா இன்டர்வியூல பாஸாகி தான் வேலைக்கு வந்தியா மா??? இப்படி எல்லாம் காமெடி பண்ற??)

“நீ லூசா டி…. நேத்து நைட் தான் அவர அடிச்சிட்டு வந்துருக்கோம் அதுக்குள்ள நம்மள எப்படி மறப்பாரு??? கண்டிப்பா நம்மள வச்சி செய்ய போறாரு… வந்த வேகத்துல வீட்டுக்கு பெட்டிய கட்ட வேண்டியது தான். “

“டேய் புலம்பாம அமைதியா இருடா… அப்படியெல்லாம் நம்மள அனுப்ப முடியாது….” விக்கியிடம் தைரியமாக பேசினாலும் வினுவிற்கும் உதறலெடுக்க தான் செய்தது… எப்போது வேண்டுமானாலும் திரு தங்களை அழைக்கலாம் என படபடப்பாக காத்திருந்தவர்களை திரு அழைக்கவேயில்லை மாறாக அவன் பார்க்க சொல்லியதாக கூறி நவின் தான் இரண்டு பைல்களை கொண்டு வந்து வினுவிடம் கொடுத்துவிட்டு சென்றான்.

அழைப்பான் அழைப்பான் என இருவரும் காத்திருக்க மதிய இடைவேளை நெருங்கும் வரை கூட அவன் அழைக்கவேயில்லை…ஒருவேளை தங்களை பற்றி மறந்துவிட்டான் போல என எண்ணிக் கொண்டு அந்த பைல்களை பார்க்க தொடங்க… சரியாக மீண்டும் அரை மணி நேரத்தில் திரு அழைக்கிறான் என்ற செய்தியோடு வந்து நின்றான் நவின்….

இருவரும் தயங்கியவாறே திருவின் கேபினுள் நுழைய…. சரியாக அங்கிருந்த மற்றொருவனின் கன்னத்தில் பளார் என்று அறைந்தான் திரு… வினுவும் விக்கியும் பயத்தில் ஒட்டிக் கொண்டு நிற்க… அறை வாங்கியவனோ சாரி சார் என்று விட்டு வினுவையும் விக்கியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட்டான்… இது தான் திரு,, அவனது கோர்ட்டில் மன்னிப்போ…இரண்டாம் வாய்ப்பு என்பதோ எப்போதும் கிடையாது.

ஒருவனை அடித்துவிட்டோம் என்ற உணர்வு எதுவும் இன்றி திரு அசால்ட்டாக கையை உதறிவிட்டு தன் சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்து வினுவையும் விக்கியையும் பார்த்தான்….. கைகள் இரண்டையும் கோர்த்துக் கொண்டவன்,

“ஸோ ரெண்டு பேரும் டூவின்ஸ்????” கேள்வியாக அவன் நிறுத்த விக்கியின் தலை தானாக ஆம் என்பது போல் ஆடியது…

“எதுக்காக இந்த கம்பெனில ஜாய்ன் பண்ணிருக்கீங்க???” கேலியா ஏளனமா ஏதோ ஒன்று அவன் கேள்வியில் இருந்தது..

“ஏன் எங்க கூட வர்க் பண்ற அளவுக்கு உங்க கம்பெனிக்கு தகுதி இல்லையா??,” வினு துடுக்காக கேட்க… திரு அவளை ஆழ்ந்து பார்த்தான்… அவன் முகத்தில் இருந்து வினுவிற்கும் ஒன்றும் புரியவில்லை அந்தளவிற்கு உணர்ச்சிகளின்றி கடுமையாக இருந்தது…

“ஏன் அப்படி பார்க்கிறான்… விட்டா கண்ணுக்குள்ள புகுந்து இதயத்துக்குள்ள போய்டுவானோ…..” அவன் பார்வையில் முதுகு தண்டு சில்லிட்டது போன்ற ஒரு உணர்வில் வினு தத்தளிக்க…

“சென்னைல அவ்வளவு கம்பெனி வச்சிட்டு இங்க வந்துருக்கீங்க ரெண்டு பேரும்… ஒரு வேளை உங்க தொல்லை தாங்காம சென்னைல இருந்து விரட்டிடாங்களா??” கண்ணுக்கே தெரியாத அளவில் இதழோரம் ஏளனமாக வளைய அவன் கேட்க… ( இனியாச்சும் சென்னை நல்லா இருக்கட்டும்)

அதில் வினுவிற்கு சுர்ரென்று கோபம் ஏற, திருவை விட படு நக்கலாக முகத்தை வைத்துக் கொண்டு “ஓ… இது தான் நீங்க இங்க வர்க் பண்றதோட ரீசனா சார்??? எங்கள மாதிரி உங்களையும் விரட்டிட்டாங்களா???” எதோ பல நாள் பழகியவன் போல வினு அவனோடு வார்த்தைக்கு வார்த்தை பதில் பேச… விக்கி தான் எதுவும் புரியாமல் முழித்தான்…

“வாட்??? என்ன ஏன் தொறத்தப்போறாங்க…. உங்கள மாதிரி ரவுடிங்கள தான் தொறத்தனும்…” உணர்ச்சிகளின்றி இருந்த முகம் கோபத்தை தத்தெடுத்திருந்தது. எப்போதும் உணர்ச்சிகளை காட்டாத தன்னை அவள் பேச வைக்கிறாள் என்ற உண்மை தாக்க மீண்டும் உணர்ச்சிகளின்றி முகத்தை பாறையாக வைத்துக் கொண்டான்.

அவன் ரவுடி என்றதும் வினுவிற்கும் கோபம் வர… “நான் ரவுடின்னா நீங்களும் ரவுடி தான்…” என்றாள் கெத்தாக…

“வாட் டூ யூ மீன்???”

“நீங்க கார்ல வந்து விழுந்த பொண்ண அடிச்சிங்க… நான் என்ன அடிக்க வந்த உங்கள அடிச்சேன் இதுல என்ன தப்பு இருக்கு…” அலட்சியமாக கூறியவள் திருவின் கண்களை நேராக பார்க்க… அதில் நீ ரொம்ப பேசுற… இதுக்காக ரொம்ப அனுபவிக்கப் போற என்ற செய்தியில் உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும் வெளியே தைரியமாகவே நின்றாள்.

“அந்த பொண்ண அடிச்சதுல என்னோட தப்பு எதுவும் இல்ல…” எதற்காக அவளிடம் தன்னை நிருபிக்க முயல்கிறோம் எனத் தெரியாமல் அவன் கூற,

“அப்போ உங்கள அடிச்சதும் என்னோட தப்பு இல்ல.. சாரி சொன்ன அப்புறம் கூட அடிக்க கை ஓங்கினது நீங்க தான்…”

சிறு பெண்… தன் முன் நின்று தன்னை எதிராக பேசுவதா என்னும் ஈகோ தலை தூக்க, நாற்காலியில் சாய்வாக அமர்ந்தவன்… “இதோட பின்விளைவுகள் தெரிஞ்சி தான் பேசுறியா??? “

தங்களின் வேலையை பற்றி தான் ஜாடையாக கூறுகிறான் என்பது புரிந்தாலும் அதை கண்டுக் கொள்ளாமல், “பெருசா என்ன பண்ணிடுவிங்க… வேலைய விட்டு தூக்குவிங்க… அவ்வளவு தானே…. இந்த கம்பெனி இல்லாட்டி எங்களுக்கு வேற கம்பெனி இதுக்கெல்லாம் இந்த வினு பயப்படமாட்டா….” ( படிச்சிட்டு வர்றவனுக்கு எந்த குவஸ்டின் வருமோன்னு ஆயிரம் கவலை… படிக்காதவனுக்கு குவஸ்டின் பேப்பர் மாறி வந்தா கூட நோ டென்ஷன்..)

“ம்ம் நைஸ் நல்லா பேசுற… ஆனா நான் இந்த கம்பெனிய விட்டு உங்கள அனுப்ப மாட்டேன் பட் நான் கொடுக்கிற டார்ச்சர்ல நீங்களே என்கிட்ட ரிசைன் லெட்டர் எடுத்துட்டு வருவிங்க.” என்றவன் நக்கலாக வினுவையும் விக்கியையும் பார்க்க… விக்கி எனும் சிலைக்கு அப்போது தான் உயிர் வந்தது….

“இல்ல சார்.. வீ ஆர் சாரி… உங்கள அடிச்சது தப்பு தான்,….” பிரச்சனையை சுமுகமாக தீர்க்க அவன் முயல… அவனது இரட்டை சகோதரியோ “குட் லக்…. உங்களோட ஆசை நடக்கனும்னு நானும் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்..”. என்றிருந்தாள்….

விக்கி வினுவை அதட்ட அதையெல்லாம் அவள் கண்டுக் கொண்டதாகவே இல்லை…அவர்கள் இருவரையும் இகழ்ச்சியாக பார்த்தவன் போகலாம் என்பது போல் சைகை வைக்க… இருவரும் வெளியேறினர்… கேபின் வாசல் வரை சென்றவள் திரும்பி மீண்டும் திருவிடம் வர… விக்கி கலவரமாக கதவு அருகே நின்றுக் கொண்டு வினு என்ன செய்ய போகிறாள் என்பது போல் பார்த்தான்…

காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த திரு என்னவென்பது போல் புருவம் சுருக்கி பார்க்க… அவன் முன்பு போடப்பட்டிருந்த மேசை மேல் தன் இரு கைகளையும் ஊன்றி அவனை கூர்ந்து பார்த்தவள்… “நீங்க எப்பவுமே இப்படிதான???” என்றாள்…..

அவள் என்ன கேட்கிறாள் எனப் புரியாமல் திரு பார்க்க…. அவளோ, “எப்பவும் சிடு சிடுன்னு கோபமா… எல்லாரையும் எரிக்கிற மாதிரி பார்த்துட்டு… கண்ணாலே தள்ளி நில்லுன்னு எச்சரிக்கிற மாதிரி பேசுறது…. இது தான் நீங்களா????”

தன் கண்னையே உற்றுப் பார்த்து அவள் கேட்ட கேள்வி அவனுக்கு புரிந்தாலும் புத்திக்கு எட்டவே இல்லை…. என்ன சொல்கிறாள் இவள் என்பது போல தான் பார்த்தான்… அதையே சாதகமாக எடுத்தவள், “நீங்க இப்படியே இருங்க மிஸ்டர் அரசு…. எனக்கும் இது தான் பிடிச்சிருக்கு பிகாஸ் ஐ திங்க் ஐ யம் இன் லவ் வித் யூ….” அவன் கண்களை நேராக பார்த்து அவள் கூற… இப்போது அதிர்வது அவன் முறையானது. ( அடிப்பாவி மூணாவது எபிஸோட்லையே லவ் யூ சொல்லிட்டியே மா…. என் ஹீரோ எப்படி மா தாங்குவான்…)

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago