வீடு முழுவதும் சுமியை தேடியவன் அவளை காணததும் குழந்தை அருகே வந்து அமர்ந்தான்.. பக்கத்தில் எங்காவது போயிருப்பாள் என அவன் எண்ணிக் கொண்டிருக்க, குழந்தையின் அருகில் இருந்த கடிதம் அவன் கண்ணில் பட்டது..
அதை பார்த்ததும் எதுவோ தவறாக பட, அதை எடுத்து வாசித்தான்.. சுமி தான் எழுதியிருந்தாள்… அவனது கேள்விகளுக்கான விடை அதில் இருந்தது.. தான் அகிலிடம் ஏமாந்ததை எழுதியிருந்தவள் இறுதியாக.,
“என்னால இங்க இருக்க முடியல அண்ணா… என்னால தான் அப்பா இறந்துட்டாங்கன்னு ஒவ்வொரு நிமிஷமும் மனசு கொல்லுது… என்னால உன் முகத்தை பார்த்து எதுவும் சொல்ல முடியல.. என்னை மன்னிச்சிடு.. ஹனியை பார்த்துக்கோ அண்ணா.. அவளை என்கூட அழைச்சிட்டு போனா… எங்க அவளையும் கொண்ணுட்டு நானும் செத்துடுவேனோன்னு பயமா இருக்கு… நீ பயப்படாத அண்ணா.. நான் எதுவும் பண்ணிக்க மாட்டேன்.. கண்டிப்பா ஒரு நாள் என் பொண்ணை பார்க்க நான் திரும்ப வருவேன்.. அகிலை பத்தி தெரிஞ்ச அப்புறம் அவனை பழி வாங்க போறேன்னு என் பொண்ணை அனாதையாக்கிடாத அண்ணா… அவனுக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறதே தெரியாது.. கடைசி வரைக்கும் தெரியவும் வேண்டாம்… நான் போறேன் அண்ணா என்னை மன்னிச்சிடு…” என முடிந்திருந்தது அந்த கடிதம்.. அதோடு இன்னொரு பேப்பரில் ஹனியின் மொத்த உரிமையும் திருவுக்கே என்றும் எழுதி கையொப்பமிட்டிருந்தாள்…
அதை முழுதாக படித்தவனுக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது.. நண்பன் என்று நினைத்து துரோகியிடம் தன் குடும்பத்தை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறோம் என துடித்தான்.. இப்போதே கிளம்பி சென்று அவனை ஒன்றில் இரண்டு பார்க்க வேண்டும் என்ற வெறியில் கிளம்பியவனை கட்டிலை விட்டு இறங்க விடாமல் அவன் சுண்டு விரலை தன் மொத்த கையால் பிடித்திருந்தாள் ஹனி..
மீண்டும் அவள் அருகில் அமர்ந்தவன் ஹனியை கையில் ஏந்திக் கொண்டு கண் கலங்கினான். இந்த குழந்தை என்ன பாவம் செய்தது.. அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..
“குட்டிம்மா.. உன் அப்பாவுக்கு நீ இருக்கிறதே தெரியலை.. உன் அம்மா அவளோட நிம்மதிய தேடி போறாளாம்.. உன்னையும் என்னையும் அநாதையாக்கிட்டு எல்லாரும் போய்ட்டாங்க… இனி உனக்கு நான்.. எனக்கு நீ… இந்த டேடி உன்னை பத்திரமா பார்த்துக்குவேன்..” ஹனியிடம் உறுதியளிக்க ஹனி அவன் விரலை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்..
அன்று தொடங்கியது அவர்களின் உலகம்…அகில் மீது மட்டும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்த்து போராடாமல் கோழையாக ஓடிப் போன தங்கையின் மீதும் கோபம் கொண்டான்… அவளாக திரும்பி வரும் வரை தானாக அவளை தேட வேண்டாம் என முடிவு எடுத்தவன் இனி ஹனிக்காக வாழ்வது என உறுயெடுத்துக் கொண்டான்..
அடுத்த பதினைந்து நாட்களில் ஹனியின் கார்டியன் என்ற முறையில் அவளுக்கு பாஸ்போர்ட் எடுத்து, ஹனியோடு அமெரிக்காவிற்கு கிளம்பினான்… ஒரு நண்பனால் அவன் குடும்பமே சிதைந்துவிட்டது என்பதால் அவன் நண்பர்களிடம் இருந்த தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டான்…
ஏர்போர்டில் ஒற்றை ஆளாக ஹனியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை, ஹனியும் தொல்லை செய்யாமல் அவன் கைகளில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
ஹனி தூங்கும் அழகை கண்கொட்டாமல் பார்த்திருந்தவன் தன்னருகில் அமர்ந்து ஹனியின் கையை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை பார்த்து புன்னகைத்தான். அந்த குழந்தையும் அவனை பார்த்து புன்னகைக்க அவளது குடும்பம் அவளுக்கு அடுத்ததாக அமர்ந்திருந்தது. அவர்களும் அவள் குழந்தையிடம் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்தார்கள்..
“அங்கிள்… மே ஐ???” குழந்தையை தூக்கி கொள்ளவா என்பது போல் அந்த சிறுமி கேட்க திருவும் புன்னகைத்தவாறு அவள் மடியில் ஹனியை கொடுத்தான்.. அந்த சிறுமியும் தன் தாய் தந்தையிடம் ஹனியை காண்பித்து மகிழ்ந்துக் கொண்டிருக்க, திரு ஏதோ நெடுநாள் பழகிய குரல் கேட்டு திரும்பி பார்த்தான்… அங்கு அகில் யாரிடமோ சண்டையிட்டுக் கொண்டிருந்தான்… அவனை பார்த்ததும் அவன் செய்த துரோகமும் ஞாபகம் வர, கண்களில் ரௌத்திரத்துடன் அவனை பார்த்தான்.
அருகில் இருந்த சிறுமியின் குடும்பத்தினரிடம் ஹனியை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, அகிலின் அருகே வந்தவன் அவன் முன் சென்று நிற்க., அகிலும் அவனை அங்கு எதிர்பாராமல் திடுக்கிட்டான்…
“உனக்கு என்னடா பாவம் செஞ்சேன் என் குடும்பத்தையே அழிச்சிட்டியே டா… உன்னையெல்லாம் சும்மாவிடக்கூடாது…” என்னத்தான் அகிலை தேடி அவன் செல்லவில்லை என்றாலும் கண் முன் நிற்கும் துரோகியை அப்படியே விட்டுச் செல்ல முடியாமல், அகிலின் கழுத்தை நெறித்தான் திரு…..
“என் அப்பாவை கொண்ணுட்ட.. என் தங்கச்சி வாழ்க்கையை சீரழிச்சிட்ட… எல்லாம் பண்ணிட்டு நீ மட்டும் எப்படி டா கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கிற??? இதே நிலைமை உன் தங்கச்சிக்கு வந்திருந்தா சும்மா இருந்திருப்பியா டா???” ஆவேசமாக கத்தியவன் அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்…
அனைத்தையும் அகில் வாங்கிக் கொண்டானே தவிர எதிர்த்து எதுவும் பேசவில்லை… எதோ அதிர்ச்சியில் உறைந்திருப்பவன் போன்று அவன் நிற்க, அவன் அருகில் நின்றிருந்தவன் திருவை அவனிடமிருந்து விலக்கினான்… அதோடு ஹனியின் அழுகுரலும் கேட்க, தன்னை நிலைபடுத்திக் கொண்டவன், அகிலை பார்த்து,
“ஒரு நாள் திரும்ப வருவேன் டா.. என் குடும்பத்தை சிதைச்ச மாதிரி உன் குடும்பத்தையும் அழிப்பேன்.. என் தங்கச்சி கஷ்டப்படுற மாதிரி உன் தங்கச்சியும் கஷ்டப்படுவா… கஷ்டப்படுத்துவேன்…” கண்களிலும் குரலிலும் சீற்றத்தோடு கூறியவன் அவனை திரும்பி பாராமல் செல்ல, அகிலையும் அவன் அருகில் நின்றிருந்தவன் இழுத்துச் சென்றான். அதுவே அவர்களின் கடைசி சந்திப்பானது…
அமெரிக்கா வந்த திருவும் சிறிது நாட்களில் ஹனியோடு ஒன்றிப் போனான்.. அடிக்கடி தன் தங்கையின் நினைவு வாட்டினாலும் அவன் மனதில் எல்லோரின் மீதும் கணன்று கொண்டிருந்த கோபம் அவனை யாரையும் பற்றி சிந்திக்க விடவில்லை… அகிலை பழி வாங்க வேண்டும் என துடித்த இதயம் ஹனியின் முகத்தை பார்க்கும் போது பறந்து போகும்.
வருடங்கள் கழிந்த போதும் தங்கையிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்றதும் பழிவெறி மறந்து ஹனியை தாய்க்கு தாயாக இருந்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் எஞ்சியிருந்தது. அதனால் தான் திரும்ப பெங்களூர் வந்தான். அகிலையோ சுமியையோ தேட அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை… ஹனிக்காக மட்டுமே வாழ ஆரம்பித்தான். ஆனால் அவன் உலகில் புயல் போல் உள்ளே நுழைந்து அவனை மொத்தமாக ஆக்கிரமித்தாள் வினு.. தன் கூட்டை விட்டு வெளியே வந்தவன் மீண்டும் அவள் அகிலின் தங்கை என்றதும் தன் கூட்டிலே அடைந்துக் கொண்டான்….
வினு அனைத்தையும் சொல்லி முடிக்கவும் சரியாக அவர்கள் சென்றுக் கொண்டிருந்த பஸ்சும் பஞ்சராகி நின்றது. அனைத்தையும் வாய் பிளக்காத குறையாக கேட்டுக் கொண்டிருந்தான் விக்கி…
“அப்போ ஹிட்லரை தேடி தான் நாம வந்தோமா???” விக்கிக்கு இன்னும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
“ம்ம்… ஆனா இங்க வந்த அப்புறம் தான் நாம தேடி வந்தது ஹிட்லரைன்னு எனக்கு தெரியும்.. எப்படியாச்சும் அகில் அண்ணாவோட ப்ரெண்ட் திருவை கண்டுபிடிச்சி அவர் தங்கச்சியையும் நம்ம அண்ணாவையும் சேர்த்து வைக்க தான் நாம வந்தோம்..”
“உனக்கு யார் இதையெல்லாம் சொன்னது???”
“அனு அண்ணி தான்.. அரசு, அகில் அண்ணா, அனு அண்ணி மூணு பேருமே ஒரே காலேஜ்ல படிச்சவங்க.. ஆனா அனு அண்ணி மட்டும் வேற டிபார்ட்மென்ட்… ஒரு தடவை அகில் அண்ணா தான் அனு அண்ணிக்கிட்ட அவன் சுமியை லவ் பண்றதை சொல்லியிருக்கான்… ஆனா அண்ணி பீ.ஈ முடிச்சதும் ஊருக்கு வந்துட்டதுனால டச் விட்டு போச்சாம்.. அப்புறம் இப்போ நாலு வருஷமா அகில் அண்ணா இப்படி சோகமா சுத்துறதுக்கும் சுமிக்கும் எதாச்சும் சம்பந்தம் இருக்கும்னு என்கிட்ட ஒரு நாள் சொன்னாங்க..”
“நான் தான் அண்ணாவோட லவ் சேரணும்னு சுமி அண்ணியை தேடிப் போக நினைச்சேன்.. அனு அண்ணியும் விசாரிச்சி பார்த்தாங்க, ஆனா எந்த நியூசும் கிடைக்கல… திரு அந்த கம்பெனில வொர்க் பண்றது மட்டும் தான் தெரிஞ்சுது.. அதனால தான் அந்த கம்பெனில வேலைக்கு சேர்ந்து சுமி அண்ணியை பத்தி கண்டுபிடிக்க ட்ரை பண்ணிணேன்… ஆனா அகில் அண்ணாவுக்கு சுமி அண்ணிக்கூட கல்யாணமாகி குழந்தை இருக்கிறது எல்லாம் எனக்கு திரு சொல்லி தான் தெரியும்…” வினு தனக்கு தெரிந்த அனைத்தையும் கூற, ஏதோ சினிமா பார்த்தது போல் உணர்ந்தான் விக்கி…
“நம்ம அண்ணா அப்படி சுமி அண்ணியை ஏமாத்தியிருப்பானா வினு???” விக்கியால் இன்னும் தன் அண்ணன் அப்படி செய்திருப்பான் என நம்ப முடியவில்லை.
“ம்ம்ஹூம் இருக்காது டா… அப்படி இருந்திருந்தா அண்ணா இப்போ கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்திருப்பானே.. ஏன் இப்படி தேவதாஸ் மாதிரி சுத்த போறான்.. இதுல என்னமோ இருக்கு.. அது அகில் அண்ணாவுக்கு மட்டும் தான் தெரியும்.. ஆனா அவன் தான் வாயை இறுக்க மூடிட்டு இருக்கானே….” பெருமூச்சு ஒன்றை விட்டவள் ஜன்னல் கம்பியில் சாய்ந்துக் கொண்டாள்… வெளியே மழை லேசாக சாரல் போட்டுக் கொண்டிருக்க, அதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்…
“எல்லாம் போச்சு… அகில் அண்ணாவோட வாழ்க்கையை எப்படியாச்சும் சரி பண்ணிடலாம்னு நினைச்சேன்.. ஆனா எல்லாம் போச்சு.. என்னோட அரசு கூட என்னை தப்பா நினைச்சிட்டான்…” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது…
அவளை ஒரு நொடி ஆழந்து பார்த்த விக்கி, “நீ இப்போ எங்க போற வினு” என்க, அவள் அவனை லூசா டா நீ என்பது போல் நிமிர்ந்து பார்த்தாள்…
“என்னடா கேட்குற??? அதான் நம்ம அண்ணன் ஊருக்கு இழுத்துட்டு போறது தெரியலையா???”
“நீ எதுக்காக இங்க வந்த வினு… உன் அண்ணாவோட லவ்வை சேர்த்து வைக்கத்தானே??? ஆனா இப்போ உன்னோட காதலையும் தொலைச்சிட்டு சென்னைல போய் என்னப் பண்ண போற??? நம்ம அண்ணாவும் சுமி அண்ணியும் பண்ணின அதே தப்ப நீயும் பண்ண போறியா???” விக்கி அவளிடம் கேட்க, வினுவிற்கு ஒன்றும் புரியவில்லை…
“என்னடா சொல்ற???”
“ம்ம் ஐஸ்கிரீம்க்கு ஐஸ் இல்லைன்னு…” கடுப்பாக விக்கி கூற, வினு ஙே என்று விழித்தாள்… அவள் பாவனையில் அவனுக்கு சிரிப்பு வர, அவள் கையை பற்றிக் கொண்டவன்,
“நீ யாரு?? தி கிரேட் வினு.. என்னோட அக்கா எப்பவும் பிரச்சனையை பார்த்து பயந்து ஓட மாட்டா…. அது அவளுக்கு தெரியவும் செய்யாது… உன்னை பார்த்து அந்த ஹிட்லர் என்னவெல்லாம் பேசிட்டாரு.. அவரை சும்மா விட்டுட்டு சென்னைல போய் நீ என்னப் பண்ண போற??? போ போய் உன் லவ்வர் பாய்க்கு நீ யாருன்னு புரிய வை… நீ சுமி அண்ணியையும் அகில் அண்ணாவையும் சேர்த்து வைக்க தானே இங்க வந்த??? அத முடிக்காமலே போகப் போறியா???” விக்கி கேள்வியாக அவளிடம் கேட்க, வினுவின் முகத்திலும் விக்கி சொல்வது சரி தானே என்று தோன்றியது…
“விக்கி… ஆனா அகில் அண்ணா…” பின்னால் அமர்ந்திருக்கும் அகிலை நினைத்து வினு தயங்க…
“அட நீ போ வினு.. அவனை எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்கு தெரியும்… பெங்களூர் விட்டு நீ வரும் போது ஹிட்லரோட தங்கச்சி நமக்கு அண்ணியா தான் வரணும்…” தீவிரமாக கூறியவன் பின்னால் திரும்பி பார்க்க அகில் ஜன்னல் கம்பியில் தலைசாய்த்து தூங்கிக் கொண்டிருந்தான்.. பார்ப்பதற்கே பரிதாபமாக தெரிந்தான்…
“போ வினு…. அண்ணா தூங்கிட்டு தான் இருக்கான்… ஹிட்லரை பார்த்ததும் எனக்கு ஒரு மெஸேஜ் மட்டும் பண்ணிடு…” என்றவன் வினுவிற்கு வழிவிட, வினுவும் புது உத்வேகத்தோடு கிளம்பினாள்.. விக்கியின் தலையை கலைத்துவிட்டவள் தன் அண்ணனை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு பஸ்சில் இருந்து இறங்கிவிட்டாள்.
பஸ் ஏற்கனவே பஞ்சர் என்பதால் ஓரமாக நிறுத்தி டையரை மாற்றிக் கொண்டிருந்தார்கள்.. வெளியே மழை மெலிதாக தூவிக் கொண்டிருந்ததால் யாரும் வெளியே இறங்கவில்லை. வெளியே பஸ்சின் டிரைவரும் இன்னொரு பையனும் சேர்ந்து டையரை மாற்றிக் கொண்டிருக்க, அவள் இறங்கியது அகிலுக்கு தெரியாமலே போனது.
பஸ் இன்னும் சிட்டியை தாண்டாததால் எளிதாகவே ஆட்டோ கிடைக்க… அதில் ஏறியவள் தன் அரசுவை நோக்கி பயணப்பட்டாள் மனம் முழுவதும் கோபத்தோடு…!!!!
விழிகள் தொடரும்…..