வழிமாறி சென்றுவிட்ட
வாழ்க்கையின் பாதைகளில்
வசந்தத்தை பெற்றேனடி
உந்தன் அன்பினால்…..
கானல்நீராய் வழிந்த
கண்ணீர் துளிகளில்
சிரிப்பும் வருகிறது
உன்னை கண்டபின்பு
அழுத வேளையிலே
ஆறுதலாய் உன் மொழிகள்
அப்படியே உயிர் பெற்றது
என் மீது காதலும் உனக்கு
ஆயினும்……..
கிழிந்த ஓவியங்கள்
உடைந்துபோன சிறகுகள்
கலைந்து போன கோலங்கள்
காயம்பட்ட சுவடுகள்
மேல்பூச்சில் மறைக்கப்பட்டு
ஆசையோடு அணைத்தாலும்
அவளின் உருவத்தையே
கண்ணில் காண்கிறேனடி
முள்ளாய் அவள் நினைவும்
விலக்கமுடியா உன் அன்பும்
சத்தமில்லாமல் கொல்கிறதே
தீயின் மீது புழுவாக நானடி
போதுமடி கண்மனியே
உன் மொத்த காதலும்
என் மீது சாய்ந்தாலும்
என்னுள்ளம் மறவாதே
என்னவளின் காதலதை.!!!
கார்மேகம் கலைந்தாலும்
கண்ணீர் குறையவில்லை
கனவுகளில் வாழ்கின்றேன்
விட்டுச்சென்ற அவளோடு
மன்னித்து விடு தோழியே
மரணத்தை கூட ஏற்றுவிடுவேன்
மனதில் இன்னொருத்தியை
மாற்றிக்கொள்ள முடியவில்லை……
- சேதுபதி விசுவநாதன்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…