அடுத்த நாள் காலையிலேயே பிரவீனை தனது செல் பேசியில் அழைத்து இருந்தான் கிஷோர்.

என்ன கிஷோர் காலையிலேயே அழைத்து இருக்கற…

ஒரு முக்கியமான தகவல் கிடைத்து இருக்கு சூர்யா ஸாரை பற்றினது… நீ இங்கே வர்றயா…அக்கா எப்படி இருக்கறாங்க…

ம்… அக்கா பைன்.. அது தான் என்கிட்ட பிரச்சினையை சொல்லிட்டால்ல அதனால கவலை இல்லாம இருக்கறா.. சரி என்ன விஷயம்… போன்ல சொல்ல முடியாதா…

இது உனக்கு எந்த அளவுக்கு யூஸ் ஆகும்ன்னு தெரியலை வாயேன்…

இப்ப எங்க இருக்கற… ஹாஸ்டலுக்கு வந்திடவா..

ம் வாடா… நான் வெயிட் பண்ணறேன்.

காலேஜ் பத்து மணிக்கு தானே முன்னாடி வந்துடறேன். தனது அக்கா மிருதுளாவை பார்த்தவன்… அக்கா இன்றைக்கு சீக்கிரம் காலேஜ் போகனும். முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு..

இருடா பறக்காத.. சாப்பிடாம ஒடிடாத…
நீ பாட்டுக்கு பாதி நாள் சாப்பிடாம போயிடற… நான் யாருக்கு சமைக்கறேன்னே தெரிய மாட்டேங்குது..

புலம்பாத அக்கா இன்றைக்கு நான் சாப்பிட்டு தான் போவேன் ஓகே வா.

போடா அம்மா அப்பா போன பிறகு எதுக்காக வாழறோம்ன்னே அடிக்கடி சந்தேகம் வருது.

ஷ்… அக்கா இத மாதிரி யோசிக்க கூடாது நான் யாருக்காக இருக்கிறேன் உனக்காக தானே அதே மாதிரி தான் நீயும் சரியா… இனி அடிக்கடி ப்ரெண்ட்டுங்க கூட சுத்தமாட்டேன் உன் கூடவே இருக்கிறேன் ஓகே வா. வேணும்னா இந்த வாரம் பக்கத்தில் எங்கேயாவது போயிட்டு வரலாமா… மூவி டிக்கெட் போடவா..

பச்… வேணாம்டா…சலிப்பாக பதில் சொல்ல…

அப்படின்னா பக்கத்தில் கோவிலுக்கு போகலாமா…

வேணாம்டா… முன்னம்மாவது சூர்யா கூட எதையாவது சுத்தம் செய்யன்னு எங்கேயாவது சுத்துவோம் . நிறைய புது மனிதர்களை பார்த்தோம். இப்ப யாரை தான் பார்க்க…

இவ்வளவு தான் உன்னோட பிரச்சினையாக்கா… எங்க காலேஜ்ஜில் கூட இத மாதிரி குரூப்ஸ் இருக்கு அதில் சேர்ந்திடலாமா…

பிரவின் நீ சூர்யா எங்க இருக்கறான் அவனுக்கு என்ன ஆச்சுன்னு முதல்ல சொல்லு அதற்கு பிறகு உன் கூட வரேன்.

சரி சரி வாய் பேசாத சாப்பாட்ட தட்டுல போடு போயிட்டு வந்திடறேன். கதவை பூட்டிவிட்டு வேலைக்கு போயிக்கோ.. சாயங்காலம் பார்க்கலாம். சாப்பிட்டவன் தனது வண்டியை எடுத்து கொண்டு கிஷோரை காண புறப்பட்டான்.

நேரம் எட்டு மணியை தாண்டி இருக்க அவனது ஹாஸ்டலுக்கு சென்றவனை தனது அறைக்குள் அழைத்து சென்றவன் தனது லாப்டாப்பை ஆன் செய்தான்.

இந்த இடத்தை பாரு பிரவின்…அவன் காட்டிய புகைப்படம் வாவ் ..என சொல்லும்படி இருந்தது. சமீபத்தில்தான் அந்த வீட்டு மனைகளை கட்டி இருக்க வேண்டும். முன் புறத்தில் வரவேற்பாய் பெரிதாக தூண்கள் அமைத்திருக்க உள்புறத்தில் மிக பெரியதாய் நீண்டு விரிந்து இருந்தது. வீடுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக அமைந்திருக்க…

சூப்பரா இருக்குடா… புதுசா லான்ச் பண்ணி இருக்கறாங்களா… எந்த இடத்தில்… நமக்கு தெரியவே இல்ல பாரேன். அமென்ட் பெரிசா இருக்கும் இல்லை.

டேய்… இந்தா இந்த போட்டோவையும் பாரு..

என்னடா இது… இது ஏதோ குளம் மாதிரி இருக்கு…

ம்… அதே தான் அந்த குளத்தை தான்
மண் போட்டு முடிட்டு அந்த இடத்தில் இந்த பில்டிங் கட்டி இருக்கறாங்க… சூர்யா முதல் முதலில் இந்த பிரச்சினைக்காக தான் குரல் கொடுத்தது. கிட்டத்தட்ட ஒரு வருஷம் வரைக்கும் நடந்து இருக்கு … கடைசியா அவங்க பில்டிங் கட்ட அனுமதி வாங்கிட்டாங்க…

அந்த பில்டிங் தரமானதாக இருக்குமாடா…

டேய் இப்ப அது இல்லை மேட்டர் … நீ சொன்ன மாதிரி முதல்ல இங்க இருந்து நம்ம விசாரிக்க ஆரம்பிக்கலாம். ஒருவேளை அந்த சூர்யா நல்லவன் இல்லைன்னா…அங்கே போய் பேசும் போதே தெரிஞ்சிடுமே… எதிரிங்க அதிகம்னா முதல் எதிரி இந்த பில்டர்ஸ்சா தானே இருப்பாங்க…

ஆமாம்டா… இவங்க எங்க இருக்கறாங்க… நாம போய் கேட்டு பார்த்திடலாம்…

இவங்களோடது பக்கத்தில் தான் ஆபீஸ் இருக்கு இன்றைக்கு காலேஜ் விடவும் விசாரிச்சுட்டு வந்துவிடலாம் ஓகே வா … இப்ப கேண்டீன் போய் என்ன இருக்குன்னு பார்த்துட்டு கிளாஸ்க்கு போகலாம் வா…

மாலை வரை வகுப்பில் இருந்தவர்கள்
முடியவும் அந்த பில்டர்ஸ்சின் ஆபிஸை
நோக்கி சென்றிருந்தனர். அவர்களது ஆபீஸே மாக பெரியதாக இருந்தது.
வாசலில் நின்று பிரமித்து நிற்க…

கிஷோர் முதலாவதாக வாய் திறந்தான் எவ்வலோ பெருசு… பிரவின் இவங்க அவனை விட்டதே பெருசுடா..
இங்கேயே அடைச்சு வச்சாலும் தெரியாது போல இருக்கு… வா எதுக்கும் கேட்டுட்டே போய்விடலாம்.
கொஞ்சம் பிரமிப்போடு உள் நுழைய…
அவர்கள் கேட்கும் தகவல் அங்கு கிடைக்குமா….

மயங்காதே… தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago