இதை முடிவு செய்ததுமே பிரவின் யோசிக்காது தனது அக்காவிடம் கூறி இருந்தான். வருத்தபடாதே மிரு…நான் உனக்காக அவனை பற்றி விசாரிக்கிறேன். ஒரு ரெண்டு நாள் டைம் கொடு அவன் எங்கே இருக்கிறான் இப்ப என்ன செஞ்சுட்டு இருக்கிறான் எல்லாத்தையும் விசாரித்து சொல்லறேன்.
எப்படி நீ காலேஜ் போன்றவன் எப்படி விசாரிப்ப ..
எங்க காலேஜ்லயும் உன்ன மாதிரி ஊருக்காக நல்லது செய்யறேன்னு புறப்படறவங்க நிறைய பேர் இருக்கறாங்க… நிச்சயமாக யாருக்காவது அவரை தெரியாம இருக்காது. அப்புறம் கம்ப்யூட்டர் நாலேஜ் இருக்கற ஆளுங்கல பிடிச்சா கடைசியாக எங்கே போணான்னு ஏதாவது க்ளு கிடைக்கும்.
யாருக்கு தெரியும் நாம தேடறதுக்குல்ல அவரே வந்தா கூட பிரச்சினை இல்லையே…சொல்லியபடி நகர்ந்தவன்…
சாப்பிட்டாச்சாகா…
இன்னும் இல்லைடா…
இரு எடுத்துவிட்டு வரேன் என சமையல் அறைக்கு சென்றவனை இவளது குரல் தடுத்தது. உனக்கு டயம் ஆச்சுன்னா கிளம்பிக்கோ நான் பார்த்துக்கறேன்.
என்ன பார்ப்ப… அப்படியே சாப்பிடாமல் கிளம்புவ அதுதானே…
எவ்வளவு வெயிட் லாஸ் ஆகி இருக்கற உனக்கு தெரியுதா… பார்க்கறவங்க எல்லோரும் என்னைய கேட்கறாங்க.. உங்க அக்கா சரியாக சாப்பிடறது இல்லையான்னு எத்தனை பேருக்கு பதில் சொல்லறது அவங்களுக்கு தெரியுமா… ஊர் பிரச்சினைக்கு உன் தலைய கொடுத்து சாப்பிடாமல் சுத்தறேன்னு சொல்லவா முடியும்.
தட்டில் எடுத்து வந்தவன் இவளது கையில் தந்தபடி சாப்பிடு ரெண்டு பேரும் ஒன்னாவே கிளம்பலாம். முதல் பிரியட் கட் ஆனா கூட பரவாயில்லை.
அடுத்து இருந்த இருக்கையில் அமர்ந்தவன்… இவள் சாப்பிடுவதை பார்த்தபடி நேரநேரத்துக்கு என்னோட வயிற்றை மட்டும் நிறைச்சி விட்டுடு. கரைக்டா சாப்பிடுகா… உடம்புக்கு ஏதாவது வந்துட்டா எனக்கு யார் இருக்கறா… சொல்லும் போதே லேசாக கண் களங்கியது.
டேய்… ஏண்டா காலையில இப்படி பேசற.. பாரு புல்லா சாப்பிட்டேன்…அவள் சாப்பிட்டு முடிக்கவும் கையில் தட்டை வாங்கியவர் இவளோடு வீட்டை பூட்டி விட்டு வெளியேறினான்.
வா கிளம்பலாம் என்றபடி….
இவர்களது வீடு கோவை நல்லாம்பாளையம் தாண்டி சற்றே ஒதுக்குபுறத்தில் இருந்தது. கொஞ்சம் அவுட்டர் தான் அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் நகரின் முக்கியபகுதிக்கு சென்று வந்துவிட முடியும். நான்கு சென்ட் அளவில் இவர்களது வீடு இருந்தது. வீடு கட்டும் போதே அழகாக திட்டமிட்டு இருவருக்கும் பிரித்தே கட்டி இருத்தனர் இரண்டு வீடுகளாக தற்சமயம் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டு இருந்தனர்.
எதிர்கால தேவைக்கும் இருவருக்குமே ஓரளவிற்கு சேர்த்து வைத்திருந்தனர் அதனால் பெரிதாக பண பிரச்சினை வந்ததில்லை இருவருக்கும்…
பிரவினின் உலகம் தாய் தந்தை இறப்பிற்கு பிறகு எல்லாமே மிருதுளா எனக்கு ஆகிப் போனாள் . அவளது மகிழ்ச்சியில் தான் தனது ஒட்டு மொதாத சந்தோஷமும் இருப்பதாக முடிவு செய்திருந்தான். அவளுக்காக என பலதையும் விட்டு தர முடிவு செய்திருந்தான். ஏன் சூர்யா விஷயத்தில் கூட அவளது ஆசை அது தான் என முடிவு செய்தால் மறுக்க கூடாது என முடிவு செய்திருந்தான்.
ஆனால் அதற்குல்லாகவே நிறைய நடந்து இருந்தது அவனுக்கு மட்டும் அல்ல அவளுக்கும் கூட தெரியாமல்…நேராக காலேஜ் வந்தவன் தனது நண்பனிடம் உதவி கேட்டான். கிஷோர் எனக்கு ஒருத்தரை பற்றினால் விவரம் வேணும் உன்னோட உதவி கிடைக்குமா…
என்ன கேள்வி இது நீ கேட்டு முடியாதுன்னு சொல்லி இருக்கறேனா… சொல்லுடா…
சூர்யானானு ஒருத்தர் மிஸ்ஸிங் அவரை பற்றினால் டிடெய்ல் தெரியனும். முக நூல்ல ரொம்ப பேமஸ்.. தன்னை அவர் முகநூல் போராளின்னு பேரை மாற்றிகிட்டு அங்கங்கே சுத்தம் செய்யறது அப்புறம் மக்களுக்கு நல்லது செய்யறேன்னு போராட்டம் பண்ணறது இது தான் அவரோட வேலை…
அவரோட படிப்பு இன்ஜினியரிங் முடித்து இருக்கறாரு.. இந்த ரெண்டு வருசமா கொஞ்சம் பேமஸ்… அவருக்கு நிறைய பேன்ஸ் பாலோயிங் உண்டு. முடிஞ்சா அவரோட முழு டிடெயிலையிம் முகநூல்ல இருந்து எடுத்து கொடு.. முதல் தடவை இவர் எங்கே இருந்து இந்த மாதிரி போராட்டம் பண்ண ஆரம்பிச்சாரு… இவருக்கு எதிரிங்க இருக்கறாங்களா
இதெல்லாம் தெரியனும்.
டேய் கேங் பண்ணனும் நிறைய வேலை இருக்கு நாளைக்கு சொல்லவா…நைட் கண்டு பிடிச்சிடலாம்.
சரிடா ரொம்ப அர்ஜென்ட் எல்லாம் இல்ல… டைம் எடுத்துக்கோ… ஓகே வா கிளாஸ்க்கு போகலாம்.
ஏண்டா ஏதாவது பிரச்சினையா..
அவன் மேல எனக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது அக்காவுக்கு தெரியாத ஒரு உண்மைய உன்கிட்ட சொல்லவா…
அப்பா அம்மா இறந்தப்போ கூட நின்றது இந்த சூர்யா தான் ஆனால்… ஆன செலவு அத்தனையும் அவருக்கு கொடுத்தாச்சு… செலவு ஆனதிற்கு மேல கிட்டத்தட்ட ஏழாயிரம் ரூபாய் அதிகமா வாங்கினான். அப்போ நான் சின்ன பையன் தானே பெருசா கணக்கு பார்க்க தெரியலை… இப்ப யோசித்து பார்த்தா சீ ன்னு இருக்கு. சாவு வீட்ல கூடவா காசை அடிப்பாங்க..
அப்போ இருந்தே அவன் மேல நம்பிக்கை போயாச்சு இது எங்க அக்காவோட திருப்திக்காக.. மற்றபடி இதில் இன்வால்வ் ஆக மாட்டேன்.
அக்காவ நீ எப்போதாவது பார்த்தா இத சொல்லி உளறிடாத… அக்கா வருத்தபடுவாங்க… சூர்யாவை முழு மனதாக தெரிந்து கொள்ள முயற்சி செய்ய துவங்கினான் பிரவின் இனி வரும் நாட்களில் சில ஆச்சர்யம் சில அதிர்ச்சி என மாறி மாறி பந்தாட போவதை அறியவில்லை அப்போது…
மயங்காதே…