ஆறுதலான கரம் தோள் தொட அந்த கைகளுக்கு சொந்தக்காரன் யார் என்பதை தோள் தொட்டதும் உணர்ந்தவள்… வா ப்ரவின் காலேஜிற்கு கிளம்பிட்டயா..
நான் புறப்பட்டாச்சு… நீ தான் இன்னும் இடத்தை விட்டு எழுந்திருக்க மனம் இல்லாம இருக்கற…மறுபடியும் மொபைல்ல தேடாத… அவன் நினைத்து இருந்தால் நேராகவே சொல்லிவிட்டு போக முடியும் அவன் சொல்லல எனும் போது நீ இதுல தேடறது வேஸ்ட்…
எப்பவுமே குறைய மட்டும் தான் சொல்லுவியா… ஒரு வேளை அவனுக்கு யாராலயாவது ஏதாவது ஆகி இருந்தா..அதனால கூட காணாமல் போகலாம் இல்லையா.. இந்த மாதிரி பொது பிரச்சினைக்காக போராட்டம் பண்ணறவங்களுக்கு எதிரிங்க நிறைய பேர் இருப்பாங்கன்னு கேள்விபட்டு இருக்கிறேன் அவங்களால கூட காணாம போய் இருக்கலாம் இல்லையா…நமக்கு என்ன தெரியும். ஆனாலும் பாரேன் யாருமே அவரை தேடவே இல்லை அதுதான் கஷ்டமா இருக்கு…
அக்கா ஒரு விஷயம் தெளிவாக புரிஞ்சிக்கோ… இது அவசர யுகம் இங்கே உன்னையும் என்னையும் ஏன் யாரையுமே யாரும் தேடிட்டு இருக்க மாட்டாங்க… அவனோடு சுற்றின பாதிபேர் இத பொழுது போக்காதான் செஞ்சு இருப்பாங்க அப்படி இருக்கும் போது அவனை எப்படி தேடுவாங்க…
இவன் இல்லைன்னா இன்னொருத்தங்கல தேடி போய்கிட்டே இருப்பாங்க அவ்வளவுதான்.
அதுக்காக நாமலும் அப்படியே விடணுமா என்ன? ??நமக்காக எவ்வளவு செஞ்சி இருக்கறாரு.. அப்பா அம்மா தவறி போன அன்றைக்கு யார் நமக்கு உதவினா… சொல்லும் போதே கண்கள் களங்கி இரண்டு சொட்டு கண்ணீர் கன்னத்தில் வழிந்து இறங்கியது.
எப்போதுமே தாய் தந்தையை பற்றி பேச்சு திரும்பினால் தன்னை அறியாமல் கண்ணீர் விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தாள். அதனாலேயே பெரும்பாலும் நியாபகபடுத்தாமல் தவிர்த்து விடுவான்.
இன்று அழவும் ஒரு நிமிடம் செய்வது அறியாமல் பார்த்து கொண்டிருந்தான். அப்போதும் எங்கோ ஒழிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடும் சூர்யா மேல் தான் கோபம் வந்தது மகேஷிற்கு…
அவனை பொறுத்தவரை சூர்யா ஒரு சுயநலவாதி ,சந்தர்பவாதி இவன் அவனை அறிந்து கொண்டது. ஆனால் இதை கூறினால் அவனது அக்கா நம்புவாளா… மாட்டாளே அவளை பொறுத்தவரையில் அவன் நல்லவன் தியாகி விட்டால் உலகை காக்க வந்தவன் என்று கூட கூறுவாள்.
சமீப காலமாய் அவன் இங்கு வந்து இவளை பார்ப்பதை குறைத்திருக்க
பிரவின் உண்மையிலேயே நிம்மதியாக இருந்தான். மிருதுளாவை அவன் எந்த ஒரு பிரச்சனைக்குள்ளும் இழுத்து விட்டுவிட கூடாது என அவனை கவனித்து கொண்டே வந்து கொண்டிருந்தான். கடைசியாக அவன் பங்கு பெற்ற அணைத்து போராட்டத்திற்கும் கூட மிருதுளாவோடு இவனும் துணைக்கு சென்று கொண்டிருந்தான்.
அதற்கும் கூட நக்கலாக ஒரு முறை இவனிடம் கேட்டிருந்தான் சூர்யா…
என்ன பிரவின் அக்காவுக்கு முழுநேரமும் காவல் இருக்கற போல…
என்ன செய்யறது சூர்யா ஸார். அவளுக்கு ஊர் உலகம் புரியவில்லை. வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கறாளே…
ரியலி… அப்படி யாரை பாலுன்னு நினைக்கறா…சூர்யா கேட்க..
சூர்யா ஸார் நேற்று கூட பாருங்க ரோட் ஓரமாதான் போனேன் வழி இருந்தும் கூட யோசிக்காமல் சேரை அடிச்சிட்டு போறாங்க.. இப்ப அப்பாஅம்மா ரெண்டு பேரும் இல்லை குறையா ஓரு வார்த்தை யாரும் சொல்லிட கூடாது பாருங்க.
மற்றவங்க பேசறத பற்றி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்ட பிரவின்… வளர்ந்துட்டான் போல இருக்கு பயப்படாத உன்னோட அக்காவை யாரும் எதுவும் சொல்லிடற மாதிரி வச்சிக்கமாட்டேன் நீ நிம்மதியாகவே இரு இன்னும் கொஞ்ச நாள் தான் முக்கியமான ப்ராஜெக்ட் ஒன்று போயிட்டு இருக்கு அதுமட்டும் க்ளிக் ஆச்சுதுன்னா இப்படி இனி வர வேண்டியது இருக்காது. உன்னோட அக்காவும் கலந்துக்கற கடைசி நிகழ்ச்சி இது தான்.
இருபது நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு குலக்கரையை கிளின் செய்வதற்காக கூடி இருந்தபோது கடைசியாக இவனிடம் பேசியது.அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் இவர்கள் மட்டுமே சென்று வந்து கொண்டிருந்தனர். மொத்தமாக வருபவர்களிடம் வேலையை பிரித்து தருபவன் அதன் பிறகு இவர்கள் புறப்படும் நேரம் பார்த்தே வருவான்.
அனைவருமே மகிழ்ச்சியாக சகோ அடுத்து எங்கே ஃகிளின் பண்ணறிங்கன்னு வாட்ச்அப்ல தகவல் சொல்லுங்க …யார் யாரால வர முடியும்ன்னு முன்னமே சொல்லிடறோம் என மகிழ்ச்சியாகவே களைந்து சென்றனர் அந்த இரண்டு வாரமுமே இவளிடமும் பேச வில்லை. பிரவினிடமும் எதுவும் சொல்ல வில்லை. புறப்படுகையில் வருகிறேன் என சொல்லி விட்டு வந்ததோடு சரி.. அடுத்த வாரம் முதலே அவன் காணாமல் போய் இருந்தான்.
பிரவினுக்கு கூட இன்னும் கூட அவனை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்திருக்க வேண்டுமோ என யோசிக்க ஆரம்பித்தான். அவனின் மேல் ஏனோ இந்த நிமிடம் கூட நல்லவிதமாக அவனால் யோசிக்க முடியவில்லை. அவனது உண்மை முகம் தெரிந்தால் மிருதுளாவின் இன்றைய கவலை மறைந்து விடுமோ இதை யோசிக்கவும் ஏன் அவனை பற்றி தெரிந்து கொண்டால் தான் என்ன?
தொடரும்.