மனதின் கனவுகள்

0
143

அந்த பூங்காவில் அவள் தனித்திருந்தாள். அமர்ந்திருந்த அந்த இருக்கைக்கை அருகில் இருந்த மரத்திலிருந்து மஞ்சள் நிற மலர்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து சிலரது அருகிலும் ஒரு சிலதோ தலையிவும் விழுந்து கொண்டிருந்தது.
எதுவுமே அவளை பாதிக்க வில்லை. மனம் முழுவதும் விரக்தி ஒன்றே குடி கொண்டிருந்தது.

திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் முடிந்திருக்க தன்னுடைய கணவன் தன்னை முழுவதுமாக புரிந்து கொள்ள வில்லை. இதுவே அவளை மிகவும் பாதித்தது. சின்ன சின்னதாய் ஆரம்பித்த சண்டை இன்று சற்றே பெரிதாக நீ எனக்கு தேவையில்லை. எங்காவது சென்றுவிடு என கோபமாக சென்றிருந்தான்.

அவள் அமர்ந்திருந்த இடம் பூங்காவின்
பின் பகுதி ஆதலால் அவள் அமர்ந்திருந்தது பலருக்கும் தெரியும் வாய்ப்பில்லை. தன்னை அறியாமல் கண்கள் மூட அவளையும் அறியாமல் அவளை தூக்கம் ஆற்கொண்டது.

அந்த திருமண மண்டபம் கூட்டம் அலைமோத திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தது . கெட்டிமேள சத்தம் காதை பிளக்க மணமேடைக்கு மாப்பிள்ளையை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் இளம் விஞ்ஞானியான கிருஷ் தனது கண்டு பிடிப்பான காலத்தின் பின்நோக்கி செல்லும் தனது டைம் மெஷினை இயக்கிக் கொண்டிருந்தான்.
அதுவும் விரக்தியில் அமர்ந்திருந்த அந்த
இடத்தில் யாரை வைத்து முதலில் ஆராய்ச்சி செய்யலாம் என யோசிக்க…. இதை பார்த்தவளுக்கோ தானே சென்றாள் என்ன என தோன்ற ஆரம்பித்தது.

அவனிடம் கூற அவனும் மகிழ்வோடு அனுமதித்தான். அந்த மெசினை பற்றி அவளுக்கு விளக்க ஆரம்பித்தான். புரியும்படி அவளுக்கு சொன்னதும்…
அவள் போக விரும்பும் இடத்தை கேட்டான்.

அவள் கூறியது தனது திருமணம் நடக்கும் அந்த மண்டபத்திற்கு என அவனும் மகிழ்ச்சியான அனுப்பி வைத்தான். அன்றைய நாளை பார்க்க விரும்புறாங்க போல….

சில நிமிட இடை வேளையில் பின்னால் வந்த அவளது கணவனிடம் தனது கண்டு
பிடிப்பை கூற அவனுக்கு தெரிந்து விட்டது. பாரதி சென்று இருப்பது திருமணத்தை பார்க்க அல்ல தனது திருமணத்தை நிறுத்த சென்றாள் என.

உடனே தானும் அங்கே செல்ல வேண்டும் என கூற இருவரும் தனது திருமணத்தை
மறுபடியும் பார்க்க ஆசைபடுகிறார்கள் என்ன நினைத்து மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தான். அதிலும் சிறு தவறு நேர அவன் சென்றதோ இருபது வருடம் பின்னால் அங்கோ அவனுடைய மனைவி அவ்வளவு மகிழ்ச்சியில் நின்றிருந்தாள்.

தனது மகள் யூனிவர்சிட்டியில் முதல் மாணவியாய் தேர்வாகி இருக்கும் ஆளுயர கோப்பையுடன் மகிழ்ச்சியில் வந்து கொண்டிருந்தாள். அவன் பார்க்க பார்க்கவே சிறிது நேரத்தில் மொத்தமும் மறைய பதறியபடி மறுபடியும் கடந்த காலத்திற்கு விரைந்தான்.

அங்கோ தாலி கட்ட நிமிடங்கள் இருக்க
வேகமாக சென்று கொண்டிருந்தாள். அவனது மனைவி பாரதி…. கடைசி நிமிடத்தில் நிறுத்தியவன். பாரதி போகாத …..

இல்ல. இந்த கல்யாணம் நடக்க கூடாது. நான் நடக்க விடமாட்டேன். பின்னாடி பிரச்சனையோட வாழறதுக்கு இது எவ்வளவோ மேல்.

அவள் முன்னாள் செல்ல இவன் இழுக்க
இது நடந்ததோ மண்டபத்தின் மொட்டை மாடியில் இறுதியில் பாரதி இப்ப தான் நான் நம்மோட எதிர் காலத்துக்கு போயிட்டு வரேன். அங்க நம்ம குழந்தை
கையில் கப்போட நிக்கறா அத பொய்யாகிடாத. அந்த ஒரு நிமிடம் தன்னை அறியாமல் நிற்க அவளை உளுக்கி கொண்டிருந்தான்.

பாரதி பாரதி என்ன பாரு…..தூக்கத்தில் இருந்தவள் விழித்து பார்க்க அருகில் அவளது கணவன் கண்கள் கலங்க
அமர்ந்திருந்தான். இப்ப தான் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்தேன். எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா. எழுந்திரு. வீட்டுக்கு போகலாம் . இனிமே நமக்குல்ல சண்டையே வராது. நீ ஏன் முதல்ல சொல்லல. இந்த டயமில் கோபம் அதிகமாக வருமாம். அதனால தான் சண்டை போட்டியா. பாரதி கனவில் கண்டது போல எதிர் காலத்தில் தனது மகள் கையில் வெற்றி கோப்பையுடன்
நிற்பது போல் தோன்ற சிரித்தபடி கணவனின் தோலில் சாய்ந்தபடி இல்லம் சென்றாள்.

???????????

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here