. – 9
அவனோட காரின் முன் சீட்டில் அமர்ந்து துஜா செல்ல , அவளை தடுக்கும் வழி அறியாமல் , கையை கட்டிக்கொண்டு வேடிக்கை தான் மற்றவர்களால் பார்க்க முடிந்தது .
” என்னங்க …என்ன இவ பாட்டுக்கு கெளம்பிட்டா …எனக்கு பயமா இருக்குங்க …அவன் யாரோ எவனோ ? குணம் எப்படியோ ? குடும்பம் எப்படியோ ? எதையுமே யோசிக்காம அவ கெளம்பிட்டாலே ? நாம சொல்றதையும் கேக்கல …எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க …” என்று பத்மா , துரையிடம் புலம்ப , “எனக்கும் அதே கவலை தான் பத்மா …அம்மா ஜானவி அந்த வண்டி சாவிய எடுத்துட்டு வாமா …” என்றவர் ஏவுவதற்குளாகவே சாவியோடு வந்தாள் ஜானவி .
ஒரு தலையசைப்போடு வசீயை பின்தொடர வண்டியை கிளப்பினார் துரை .
காரில் எதுவும் பேசாமல் , ஜன்னல் வழியே வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டு வந்தால் துஜா …எண்ணமெல்லாம் அவன் மீதே இருந்தது .அவன் தான் அவளை கவர்ந்தவன் …நிச்சியத்திற்கு அவன் வந்ததும் அவனுக்கு போக்கு காட்டி அவனை சுத்தலில் விடனும் …மோதிரம் போடும் போது அவனை பார்த்து கண்ணடிக்கனும் …நிச்சியம் முடிந்ததும் அவன் நம்பர் வாங்கி தினமும் அவனை பேசியே கொல்லனும் ….ஐ லவ் யூ சொல்ல சொல்லி அவனை இம்சிக்கணும் …கல்யாணத்துக்கு தேவையானது எல்லாம் சேந்தே பர்ச்சஸ் பண்ணனும் …..கல்யாணத்தப்போ ..அவன் கைபிடிச்சு அக்னி வலம் வரப்போ அவன் கைய கில்லனும் …அப்பப்பா …ஒரே நாளில் எத்தனை கனவு …அத்தனையையும் இவன் ஒருவனின் ஆசைக்காக தவிடு பொடி ஆக்கிவிட்டானே …பெருமூச்சை தொடர்ந்து உள்ளே நெஞ்செல்லாம் காந்தியது ..
சீ ..எவ்ளோ சுயநலம் பிடிச்சவன் …அவனுக்கு இருக்க ஆசைக்காக என் வாழ்க்கைய அழுச்சுட்டானே …இவன்லா என்ன தான் ஜென்மமோ ? கேட்டா காதல்னு நடிப்பான் …உண்மையா காதலிச்சு இருந்தா என் மனச மதிச்சு நடந்திருப்பான் …இப்டி ஏறி மிதிச்சுருக்க மாட்டான் ….ஆத்திரம் அவளது சூடான மூச்சு காற்றில் வெளிப்பட்டதோ …அதன் வெப்பம் அவனை தாக்கியதோ …
“துஜா …நா ஏன் இப்படி ….” என்றவன் விளக்கம் தர தொடங்க , காதை இறுக்கமாக மூடிக்கொண்டாள் துஜா . அவன் மனம் அரைவாங்கியது .
அந்த ஒதுக்கத்தையும் காரின் வேகத்தில் காண்பித்தான் வசீ ..”ச்சை ..சரியான காட்டுமிராண்டி …மொதல்ல நெனச்ச மாறி பிரம்மராட்சஸனே தான் …..” என்றவள் அதற்கும் கடுப்பானாள் .
நேராக அந்த வீட்டு வாசல் முன் , கிரீச்சு என்ற பயங்கரமான சத்தத்துடன் அந்த கார் நிற்க …சீட் பெல்ட் அணியாமல் கடுப்புடன் அமர்ந்திருந்த துஜா, முட்டிக்கொண்டாள் ..பதற்றத்தோடு அவன் அவள் நெத்தியில் கை வெக்க வர …சட்டென தனது கைப்பையை எடுத்து நடுவே வைத்துக்கொண்டால் .
தோளை குலுக்கிவிட்டு அவன் இறங்கவும் , அப்போது தான் சுற்றியும் பார்த்தாள் துஜா .. இந்த கால நாகரீகத்தோடு கட்டப்பட்ட அழகிய பங்களா ..சுற்றிலும் தோட்டம் ..அதில் அழகான டிசம்பர் பூக்களும் , அரளியும் , பவள மல்லியும் ஆங்காங்கே …நடுவில் ஒரு சின்ன குடில் …டி அருந்தும் நேரத்திற்காக போல …அதன் மேல் ஜாதி மல்லி கொடி ..ரம்மியமான அழகுடன் இருந்தது ..சீராக வெட்ட பட்ட புல் தரையில் , கால் வைக்க அவளுக்கு ஆசையாக இருந்தது …அவள் வீடும் அழகு தான் ..ஆனால் இது போல விஸ்தாரமாக இருக்காது …அந்தி வானம் சிவந்து தென்றல் தீண்டும் நேரத்தில் இங்கே நாட்டியமாடினால் எப்படி இருக்கும் ? என்றவள் கலைமனம் சிந்திக்க தொடங்கியது …
அதற்குள் யாரோ மூவர் அவளை விசித்திரமாக பார்ப்பது அவள் பார்வை வட்டத்தினுள் வந்தது …அவர்களிடம் வசீ ஏதோ சொல்ல , அவனை அந்த பெரியவர் அரைய கை ஓங்கினார் ..அவன் தந்தை போலும் …பார்க்க ரொம்பவும் வயதானவர் போல தெரியவில்லையே …ஒரு வேலை அவரது டி ஷிர்ட்டும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேரும் அவர் வயதை கம்மியாக காட்டுகிறதோ …? இருக்கும் இருக்கும் ..அந்த அம்மா கூட இளமையாக தான் தெரிந்தார் ..அழகான காட்டன் சுடிதார் அணிந்து கூந்தலை தூக்கி கொண்டை போட்டிருந்த விதமும் ..அழகாக ஒளி வீசும் அந்த ஒற்றை கல் மூக்குத்தியும் ..கழுத்தின் பட்டை சங்கலியும் ..கையில் இருந்த சன்னமான பிரெஸ்லெட்டும், அவரை நாகரிகம் கலந்த பண்பாடு மறக்காத பெண்ணாக அவளுக்கு தோன்ற செய்தது .
அவருக்கு அருகே அவரது ஜாடையில் ஒரு பெண். கல்லூரிக்கு செல்பவள் போல , கையில் பையுடன் நின்றுகொண்டிருந்தாள் . பார்த்ததும் ரசிக்க தோன்றும் ஒரு அமைதியான முகம் …நல்ல அழகி …அவன் குடும்பம் போல …அவன் குடும்பம் என்றானதும் , அவளது இத்தனை நேர ஆராய்ச்சி எல்லாம் காணாமல் போய் விட்டது …அவர்களின் குணமும் அவனை போல தானே இருக்க வேண்டும் ..
காரில் இருந்து இறங்கி , அவர்கள் அருகே சென்றாள் ..கிட்டே செல்ல செல்ல அவர்கள் பேசுவது ..இல்லை இல்லை அவனை திட்டுவது அவளுக்கு நன்கு கேட்டது …
” என் பிள்ளையாடா நீ …எதுக்குடா இப்டி ஒரு காரியத்தை செஞ்ச ? அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்காமா …என்ன இதெல்லாம் …நாளைக்கே உன் தங்கச்சிய இப்படி திடிர்னு ஒருத்தன் வந்து நிச்சியம் பண்றப்ப தாலிக் கட்டி கூட்டிட்டு போனா …நீ சும்மா இருப்பியா ? மொதல்ல அவகிட்ட மன்னிப்பாச்சு கேட்டியா ? இல்ல கற்காலமனுஷன் மாறி தாலி கட்டுனதும் …வாடினு அவளை இழுத்துட்டு வந்துட்டியா ?” என்றவன் அன்னை மணிமேகலை அவனை திட்ட , “நானே தான் வரேன்னு சொல்லி வந்தேன் ” என்று உணர்ச்சி அற்ற குரலில் இடைபுடுந்தாள் துஜா .
“பாருமா நீ இந்த காலத்து பொண்ணு …பழைய பட்டிக்காடு இல்ல …தாலி கட்டுனா அவன் கூட தான் வாழணும்னு இல்ல …உனக்கு விருப்பம் இல்லாதது ஏத்துக்கணும்னு கட்டாயமும் இல்ல மா …” என சொல்ல , “அம்மா” என்று ஆத்திரத்தோடு இடை புகுந்தான் வசீ …அவள் கைவிட்டு போய்விடுவாளோ என்ற பயம் அவனுக்கு .
“நான் இந்த காலத்து பொண்ணு தான் மா …ஆனா அதுக்காக சில விசயங்கள என்னால மாத்திக்க முடியாது …நா இவர் கூட வாழறனோ இல்லையோ ..அது வேற விஷயம் …ஆனா நா சாகுற வரைக்கும் இனி இவர் தான் …அத என்னால மாத்திக்க முடியாது ” என்றவள் உறுதியான குரலில் கூறவும் ” என்னமா நீ இப்படி இருக்க ? வாழுறதுக்காக தான டா வாழ்க்கையே ?” என்றவள் பார்த்து கேட்டார் மேகலை ..
அப்போது அங்கே வந்தார் துரை ..”நா துரைமுருகன்ங்க ..துஜாவோட அப்பா …” என்றவரே தன்னை அறிமுக படுத்திக்கொள்ள , அவரை அங்கே எதிர்பார்த்தவள் போல , புன்னகைக்க முயன்றால் துஜா . அவள் தலையை ஆதரவாக தடவியவர் , “நீங்க என்ன சொன்னாலும் அவ அவ கொள்கைய மாத்திக்க மாட்டாங்க …அது அவ குணம் ” என்று சொல்லி அவர் பெருமூச்செறிந்தார் …
“அம்மா …என்னமா ? நிக்க வெச்சே பேசறீங்களே ? ” என்று ரதி இடைச்சொருக ,வாங்க என அனைவரையும் உள்ளே அழைத்து சென்றார் சுப்பிரமணி , வசீயின் தந்தை .
இருக்குடும்பம் நடந்துவிட்ட தவறுக்காக ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாக பேசிக்கொள்ள , கோர்த்திருந்த கைகளை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் துஜா . அவள் அருகே அமர்ந்திருந்த ரதி , அவளது கைகளை பற்றி அவளை பார்த்து புன்னகைக்க , மெலிதாக உதடுகளை இழுத்து வைத்தால் துஜா .
கடைசியாக ..”இன்னிக்கு சாய்ந்தரமே வீட்டுக்கு வறோம்ங்க …அங்க பேசி மத்தத முடிவு பண்ணிக்கலாம் ” என்று சொல்லி கொண்டே துரையுடன் சுப்ரமணியும் எழ , ” என்ன பேசி முடிக்க போகிறார்கள் ?” என்று புரியாமல் அவள் தந்தையை நிமிர்ந்து பார்த்தாள் துஜா .