மந்திரம் – 7
வசீக்கு அவன் கேட்டதை நம்பவும் முடியவில்லை , நம்பாமல் இருக்கவும் முடியவில்லை . ஒரே நாளில் இப்படி அனைத்துமே தலைகீழாக மாறும் என்று கொஞ்ச நேரத்திற்கு முன் யாரவது சொல்லி இருந்தால் கூட அவன் நம்பி இருக்க மாட்டான் . ஆனால் மாறிவிட்டதே ? இதோ நாளை அவனது துஜாவிற்கு வேறு ஒருவனோடு நிச்சியம் ….இத்தனை நாட்களாய் எந்த பெண்ணையும் பார்த்து காதல் கொள்ளாத அவன் மனம் ..எதற்காக இவள் வசம் சாயவேண்டும் ? காதலின் வலியை அவனுக்கு உணர்த்தவா ? கடவுளே ..இதற்காக தான் அவளை என் கண்முன் காட்டினாயா ?
மெளனமாக கண்ணீர் வடித்த இதயத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க பெரும் பாடுபட்டான் வசீ . முக்கியமாக அவன் தங்கைக்கும் அன்னைக்கும் தெரியாமல் மறைப்பது அவ்வளவு சுலபம் இல்லையே ? அவன் முயற்சிகள் அனைத்தையும் தவிடுபொடி ஆக்குவது போல , “என்னடா கண்ணா ..ஏன் ஒரு மாறி இருக்க ?” என்ற அவனது தாயின் கேள்வி அமைந்தது . அவருக்கு பதில் சொல்ல முடியாதவன் ..”வேல ஜாஸ்தி மா ..தல வலி ” என்று அவர் கண்ணை பாராமல் கூறிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டான் .
கட்டிலில் தலை சாய்த்தவனுக்கு ,காணும் இடம் எல்லாம் அவள் முகமே தோன்றியது .
காற்றாய் என் சுவாசம் நிறைத்தவளே !!
கண் சிமிட்டும் நேரத்தில் காணாமல் போனதேனோ !!
சுவாசம் இல்லையேல் ..
என் ஜீவன் ஏதடி??
தன்னுள் தோன்றிய வரிகளை நினைத்து அவனுக்கு உள்ளம் எல்லாம் கசந்தது . எழுந்து சென்று அந்த “என் ஆசை தேன்மிட்டாய்க்கு ” நோட்டை எடுத்து புரட்டினான் . மெளனமாக அதை மூடி வெய்தவனுக்குள் ஒரு முடிவு இருந்தது . அவன் காதல் ஏன் மடிய வேண்டும் ? துஜா அவனுக்கு மட்டும் தான் சொந்தம் …அவனுக்காக பிறந்து வளர்ந்தவள் அவள் …விதியே நினைத்தாலும் இதை மாற்ற முடியாது .
அடுத்த நாள் காலை , சீக்கிரமே கிளம்பி வெளியே சென்றவனை விசித்திரமாக பார்த்தாள் ரதிமலர் . அவன் நேராக சென்றது துஜாவின் வீட்டிற்கு . விசேஷ வீட்டுக்கான அனைத்து பொருத்தங்களும் அங்கு இருந்தது . வீட்டின் முன் வாழைமரம் கட்டப்பட்டு , சாணி மொழுகிய வாசலில் அழகாக வண்ண கோலம் இட்டு ,சிச்சிலரின் ஏவல் குரல்களோடு வீடே பரபரப்பாக இருந்தது .சாருவும் அந்த வீட்டினுள் செய்வதை வெளியில் நின்று பார்த்தான் வசீ .
நெறய கும்பல் இல்லை. நேராக அவன் வீட்டினுள் செல்ல , “யாருப்பா நீ ?” என்றபடி அவன்முன் வந்து நின்றார் துரைமுருகன் . “சாருவோட சொந்தம் சார் , என் வண்டி சாவிய மாத்தி தூக்கிட்டு வந்துட்டா ” என்றவன் பிசிறில்லாமல் கூற , “ஒ அப்படியா ?” என்றுவிட்டு அவர் நகர்ந்துவிட்டார் .
தன் கணவன் யாரிடமோ பேசி செல்வதை கண்ட பத்மா , அவரை நிறுத்தி “யாருங்க அந்த தம்பி ?” என்று வினவ “சாரு சொந்தமாம் டி ” என்று சொல்லிவிட்டு அவர் நகர முற்பட்டார் . அவரை போக விடாமல் தடுத்தவள் , “சாரு சொந்தமா ? அவளை நமக்கு எத்தனை வருசமா தெரியும் ? இந்த பையன அவ கல்யாணத்துல கூட நான் பார்கலையே ?” என்றவர் யோசித்துக்கொண்டே கேட்க , “அம்மா ” என்ற துஜாவின் அலறல் சத்தம் கேட்டது .
“என்னமா ?” என்று பதறி அடித்துக்கொண்டு பத்மாவும் துரைமுருகனும் ஓட , “என்னாச்சு டி ? ” என்றபடி அபியோடு சாருவும் ஜானவியும் ஓடி வந்தனர் .
துஜாவின் அறைக்கதவை திறந்த அனைவரும் , ஸ்தம்பித்து நின்று விட்டனர் . அங்கே துஜாவின் கழுத்தில் தாலியை கட்டி முடித்திருந்தான் வசீ .