மந்திரம் – 5
“அய்யயோ ..இந்த ஆத்தா கிழவி ,இதுக்கு தான் நாம உள்ள வந்ததும் குறுகுறுன்னு பாத்துச்சா …கடவுளே இந்த சின்ன வயசுல எனக்கு இவ்ளோ பெரிய சோதனையா ? இப்போ என்ன பண்ணலாம் …கேக் வேற வேஸ்ட் ஆகிருச்சே ….” என்றவள் எண்ண , “அட சோத்து சட்டி கேக் மட்டுமா வேஸ்ட் ஆச்சு ..உன் லைப்யும் சேத்து தான் வேஸ்ட் ஆகுது ..” என்றவள் மனசாட்சி அவளை பாத்து கேள்விகேட்டது …துஜாவின் புத்தியோ ,” அட இப்போ என்ன அவங்க பையனோட கல்யாணமே ஆயிருச்சா என்ன ? இப்போ தான என்னவே பாத்துருக்காங்க …அதுக்குள்ள நீ வேற வேஸ்ட் கீஸ்டுன்னுலா சொல்லி பீதிய கெளபாத பக்கி ” என்றதன் மண்டையில் தட்டி உள்ளே அமுக்கியது .
“துஜா ..எதா இருந்தாலும் காலம் தாழ்த்த கூடாது …வீட்ல இந்த சதிகார கூட்டம் இத பத்தி உங்கிட்ட இன்பார்ம் கூட பண்ணல …ஆல்ரெடி மாப்ள வீட்ல இருந்து வராங்கனு அவங்க சொன்னாப்பலாம் நீ பண்ண ராங்கியால தான் , இந்த தடவ சொல்லாம கொள்ளாம இறக்கிட்டாங்க …இன்னமும் நீ அசால்ட்டா இருந்தேனா ஆப்பு கான்பார்ம் ” என்ற முடிவுக்கு வந்தவள் , அவர்களிடம் என்ன சொல்லி விரட்டலாம் என்று சிந்தித்து கொண்டே நிமிர்ந்தால் , அவர்களோ அவளை கண்டுகொள்ளாமல் ,வெங்காய பக்கோடாவை அமுக்கி கொண்டிருந்தார்கள் .
“என்ன விட்டுட்டு பக்கோடாவா சாப்பிடறீங்க ? ” என்று ஆவேசமாக ஒரு அடி எடுத்து வைத்தவள் , பின்பு ஒரு ஏக்க பார்வையை பக்கோடா மீது வீசி விட்டு பெருமூச்சுடன் உள்ளறைக்கு சென்றாள் .அந்த பெருமூச்சில் அந்த அம்மாவின் ஒற்றை முடி ஆடியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் …துஜாவின் மூச்சின் சக்தியை !!
அனைவரும் ஹாலில் கலக்கலத்துக்கொண்டிருக்க, தன் செல்லை காதில் பொருத்திய வண்ணம் வெளியே வந்தாள் துஜா ..” ஐயோ , என்னடா இப்போ போய் கூப்பிடற …நானே இப்போ தான் வீட்டுக்கு வந்தேன் ..”என்று சோகமாக பேசிக்கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தாள் . அங்கு அமர்ந்திருந்த அனைவருமே , பேச்சை நிறுத்திவிட்டு அவளை கவனிக்க , மீண்டும் கிட்சனுள் இருந்து அறைக்கு நடந்து கொண்டே “நீ கவல படாத வசீ ..கண்டிப்பா நம்ம மேட்டர நா இன்னிக்கு வீட்ல ஓபன் பண்ணிறேன் ..அதுக்கான நேரமும் வந்துருச்சு …” என்று ரகசிய குரலில் பேச , நிசப்தமாக இருந்ததால் அவள் பேசியது அனைவருக்குமே கேட்டது .
அவர்கள் அனைவரது முகத்திலுமே ஒரு திகைப்பு . ” ஐயோ மாப்ள அம்மா அப்பா முன்னாடி மானத்த வாங்கறாளே ?” என்று அவள் தந்தை துரைமுருகனும் தாய் பத்மாவும் பதற , அந்த சமந்தக்காரர்களோ முகத்தில் எதையும் காட்டாமல் இடுச்சப்புளி போல அமர்ந்திருந்தனர் . போகிறபோக்கில் அவர்களது பேஸ் ரியாக்ஷனை கவனித்த துஜாவிற்கு , திருப்தி இல்லை …” அந்தா ஆத்தா கிழவியும் தட் சோடாபுட்டி சொட்ட அங்கிளும் கல்லுக்குண்டு மாறி மூஞ்சிய வெச்சுட்டு ஒக்காந்து இருக்காய்ங்களே …கைப்புள்ள டோஸ இன்னும் அதிகமாக்கிற வேண்டி தான் ” என்று எண்ணிக்கொண்டாள் .
மீண்டும் அறைக்குள் இருந்து கிட்சன் நோக்கி அவள் பவனி செல்ல தொடங்க , அவள் அண்ணி ஜானவி தன் செல்லை எடுத்து ஏதோ செய்ய ,
“உயிரே போனாலும் உன்ன தவிர வேற யாருக்கும் நா கழுத்த நீட்ட மாட்டேன் வசீ ” என்று வசனம் பேசிக்கொண்டிருந்தவளின் செல் ,
” மலர்களே மலர்களே இது என்ன கனவா ” என்று தன் ரிங்க்டோனை கக்கியது . தீடிரென காதில் அது ஒலிக்கவும் , துஜா அதிர்ச்சியில் துள்ள , போன் இப்போது மீண்டும் அந்த அம்மாவை நோக்கி பயணமானது .
ஸ்லொவ் மோஷனில் அனைவரும் அதை பிடிக்க பாய , துஜா உறைந்து நிற்க , அந்த அம்மா லாவகமாக நகர்ந்து கொள்ள , ” டொய்ங் ” என்ற சத்ததோடு அவரது கணவரின் தலையை அது பதம் பார்த்தது . ஆளாலுக்கு அவருக்கு என்ன ஆச்சோ என்று பதற , துஜாவோ ” சத்தம் செல்லில் இருந்து வந்ததா ? இல்லை அவரது காலியான காபாலத்தில் இருந்து வந்ததா ?” என்ற ஆராச்சியிசில் மூழ்கி இருந்தாள் .
“ஏய் துஜா ” என்றவள் அம்மா மூன்றாவது முறை அழைத்த போது தான் ,தன் ஆராச்சியில் இருந்து அவள் வெளியே வந்தாள் .அவளருகே வந்தவர் “ஒழுங்கா வாய்ய தொறந்து மன்னிப்பு கேளுடி ” என்று பற்களுக்குக்கிடையே சொற்களை கடித்து துப்ப , துஜா தனது ஆஸ்க்கார் பெர்பார்மன்ஸை கையில் எடுத்தாள் . “சாரி அங்கிள் …நெஜமாவே நா எதிர்பாக்கல …உண்மையா சாரி அங்கிள் ” என்று முகத்தில் நவரசத்தையும் கொண்டுவந்து மன்னிப்பு கேட்க , ” இது உண்மையான சாரினா அப்போ கேட்டது என்னமா ?” என்று அந்த ஆத்தா கிழவி கேட்க, “ஹீஈ …அதுவும் உண்மையான சாரி தாங்க ஆண்ட்டி ” என்று அசடு வழிந்தால் துஜா .
அவருக்கு பெரிதாக எதுவும் ஆகாததால் , முறைப்போடு நிறுத்திக்கொண்டார் துரைமுருகன் . அதற்கு பின் , அந்த ஆத்தாக்கிழவி துஜாவை பிடித்து அவரருகே அமர்த்திக்கொண்டு பேச தொடங்கினார் . எல்லாம் அவர்களின் குடும்ப புராணம் தான் . அவர்கள் பேசியதை கொஞ்ச நேரம் கவனிக்க முயன்றவள் , அதற்குமேல் கட்டுப்படுத்த முடியாமல் ஒரு கொட்டாவியை மறைவாக வெளியேற்றினாள் . அவள் நேர் எதிரே அமர்ந்திருந்த ஜானவிக்கு சிரிப்பு வந்தது . பேச்சினூடே தீடிரென அவள் தந்தை அவளை அழைக்க , நல்ல பிள்ளை போல ” என்னப்பா ?” என்று வினவினாள் .
” அவங்க இப்போ சொன்னதை கேட்டேள…யாருனு தெரியுதா ?” என்றவர் குண்டை தூக்கி போட , அவள் திருதிருவென விழித்தாள் . அவள் கவனித்திருந்தால் தானே ! மகளை பற்றி நன்கு புரிந்து வைத்திருந்த பத்மா, மனதிற்குள் கணவனை “வெவஸ்த்தைக்கெட்ட மனுஷன் ..” என்று திட்டிக்கொண்டே ” அதான் பாப்பா , நம்ம ஈரோடு கோபி சித்தப்பா இருகாருல , அவங்க மனைவி வழி ஒன்னு விட்ட பங்காளி வாரிசு தான் இவராம் ..உனக்கு தூரத்து மாமா முறை வேணும் ” என்று அவர் பங்குக்கு விளக்கம் கூற , எங்கையாவது தலையை பிய்த்து கொண்டு ஓடிவிடலாமா என்று தோன்றியது துஜாவிற்கு .
அவளையே பார்த்து கொண்டிருந்த அவள் அண்ணிக்கு , இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை . அதை கவனித்த துஜா கொஞ்சம் முதுகை பின்னே சாய்த்து , ஒரு விரல் நீட்டி ஏதோ எச்சரிக்க, அவளையே கவனித்து கொண்டிருந்த அபி ” அம்மா , அத்த ஏதோ செய்தாங்க ” என்று மழலையில் போட்டுக்குடுத்தாள் . துஜாவிற்கு பக்கோவின்றாகி விட்டது …”கடவுளே உனக்கு இன்னிக்கு வெச்சு செய்ய நான் தான் கெடச்சனா ” என்று உள்ளே நொந்து கொண்டாள் .
” என்னமா ?” என்று அவள் பக்கம் திரும்பி அந்த ஆத்தாக்கிழவி வினவ “என்ன நொண்ணம்மா …அப்பாலே போ சாத்தானே ” என்று மனதிற்குள் பொங்கியவள் , வெளியே அழகாக ஒரு புன்னகையை மட்டும் சிந்தி , “ஒன்னும் இல்லையே ” என்று படு கேசுவலாக கூறினாள் .
அதன் பின் ரொம்ப நேரம் அவள் பொறுமையை சோதிக்காமல் , அவர்கள் கிளம்பி விட , துஜாவிற்கு “அப்பாடா ” என்று பெருமூச்சு வந்தது . தாயின் மொரப்பில் வாசல் வரை சென்று அவர்களை அவள் வழியனுப்ப , போகிற போக்கில் ,தன் பர்சில் இருந்த தங்களின் மகனின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை அவளிடம் திணித்துவிட்டு , அவளுக்கு டாட்டா காட்டி சென்றனர் .”இவர்களே ரம்பம் …இதுல இவங்க பையன் வேற ” என்று அஸ்வாரஸ்யமாக அந்த போட்டோவை ஏனோதானோ வென்று முதலில் அலட்சியமாக பார்த்தவள் ,மீண்டும் ஒருமுறை கண்களை விரித்து போட்டோவை உற்று பார்த்தாள் . போட்டோவில் அழகாக சிரித்து கொண்டிருந்த அந்த வாலிபனை அவளுக்கு ஏனோ பிடித்தது .