மந்திரம் – 16
அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல விடிந்துவிட , முகத்தில் பட்ட சூரிய ஒளியின் வெப்பம் வசியை கண்விழிக்க செய்தது .
அமர்ந்தவாறே உறங்கியபடியால் கைகால் எல்லாம் தசை பிடித்துக்கொள்ள சற்று நேரம் சோம்பல் முறித்து வார்ம் அப் செய்தவன் , மெல்ல அறைக்குள் தனது பார்வையை சுழல விட்டான் .
கட்டிலில் துஜாவை காணாமல் , அறைமுழுக்க அவளை தேடி அவன் விழிகள் அலசின.
அவன் மனம்கவர்ந்தவள் , இன்று மனையாளாக அவன் அறையில் துயில்கொளவதை காண ஆவல் ஒருபுறம் இருந்தாலும் , நேற்றைய சம்பவம் அவனுள் ஒருவித தயக்கத்தையும் ஒதுக்கத்தையும் உண்டு செய்திருந்தது .
வசிக்கு கண்டதும் காதலில் நம்பிக்கை இல்லை தான் .
ஆனால் ஒரு நல்ல மகனாக தமையனான குடிமகனாக வளம் வந்த அவனை , ‘ எங்கே துஜா கைவிட்டு போய்விடுவாளோ?’ என்ற பயமே சிந்தியாமல் செயல்பட வைத்துவிட்டது என்பதை அவனால் உணர முடிந்தது .
ஒவ்வொரு முறையும் அதீத காதலால் அவள் முன் குற்றவாளியாக நிற்கும் தனது நிலை குறித்து வருந்தாமல் அவனால் இருக்க முடியவில்லை .
முக்கியமாக நேற்று இரவு அவளிடம் அவன் நடந்து கொண்ட முறை !
அதற்கு எவ்வித சமாதானமும் கூறி தன்னை நியாயப்படுத்திக்கொள்ள அவன் விரும்பவில்லை .
யோசனையுடே துஜா தன்னை மன்னிப்பாளா என்று எண்ணியவன் , முதல் முறையாக அவள் நிலையில் இருந்து தனது செய்லகளை ஆராய தொடங்கினான் .
முதலாவதாக அவள் நாட்டிய பள்ளியில் இருக்கையில் அவளிடம் அளவுமீறி வம்பளந்தது !
இரண்டாவது ..தன் காதலை சொல்லி புரியவைக்காது …பெற்றோர் உற்றோர் என்று எவரை பற்றியும் சிந்தியாது அவள் கழுத்தில் தாலி காட்டியது ..
அவன் தங்கைக்கு யாரேனும் இப்படி செய்திருந்தால் ,அவன் சும்மாவா இருப்பான் ??
வேறொருவனை மணாளனாக ஏற்று கொண்ட ஒருபெண்ணை அவள் மனம் புரியாது ,வேறொரு பந்தத்தில் கட்டிப்போட்ட தனது முட்டாள் தானம்.
திருமணம் என்ற பெயரில் அவன் மனைவியாக அவன் வீட்டிற்கு வந்ததும் அவள் அக்மார்க் பொண்டாட்டி யாக நடந்துகொள்ளவில்லை என்று கோவப்பட்ட மூர்க்கத்தனம் .
அனைத்திற்கும் சிகரம் போல நேற்று அவளை பலவந்த படுத்திய அரக்கத்தனம் !!
தன் நடவடிக்கைகள் குறித்து அவனுக்கே அருவருப்பாக இருந்தது .
தனது அவசரத்தால் இன்று இருக்குடும்பத்தின் நிலையும் ஒரே நாளில் மாறிப்போனதை எண்ணி துடித்தான் .
அவனால் அதுமட்டும் தான் அப்போதைக்கு செய்யமுடிந்தது .
குளித்து முடித்து சோர்வாக அவன் மாடி இறங்க , கீழே உணவு மேஜையில் துஜாவின் குரல் உற்சாகமாக கேட்டது .
“ஏய்ய் ரதி …எது தான் நீ சாப்பிடற லட்சணமா ? முழுசா ரெண்டு இட்லி கூட சாப்பிடல ? இந்த ரேஞ்சுல சாப்பிட்ட …வாலாற்றவனையெல்லாம் எப்படி தூக்கி போட்டு மிதிப்ப ?” என்று சொல்லிக்கொண்டே அவள் தட்டில் மற்றொரு இட்லியை வைத்தாள் .
“அப்போ உங்க வீட்ல இப்டி அடைச அடைசலா சாப்பிட்டு இதுவரை எத்தன பேரை மா விலாசிருக்க ? ” என்று மேகலை வினுவும்போதே அங்கே வசி வந்துவிட்டான் .
அவனை மையலாக பார்த்துக்கொண்டே, ” இப்போ வர யாரும் இல்ல அத்தை …இது வர என்கிட்ட வாலாட்டுனது ஒருத்தவங்க தான் …அவங்களும் இப்போ அவங்களானதுனால அடிக்க முடியாதே ” என்று சோகமும் வெட்கமும் சிரிப்பும் கலந்த குரலில் கூறிவிட்டு களுக்கென நகைத்தாள் துஜா .
வசிக்கு மயக்கம் வரும்போல இருந்தது .
இதெல்லாம் கனவா இல்லை நிஜமா ?
புரியாமல் அவன் தொடையை கிள்ள , அவன் தந்தை ” அஹ்ஹா ” என்று அலறினார் .
மயக்கத்தில் அருகில் அமர்ந்திருந்த தந்தையின் தொடையை கிள்ளிவிட்ட தன்னை எண்ணி அசடுவழிந்தவனை , விசித்திரமாக பார்த்த அவன் தந்தை தட்டோடு எழுந்து மனைவி அருகே சென்று அமர்ந்துகொண்டார் .
அவன் எதிரே தட்டை வைத்தவள் , காதருகே குனிந்து ” எல்லாமே நிஜம் தான் வசி …தாராளமா நம்பலாம் ” என்று சொல்ல …
எப்படி ரியாக்ட் செய்வது என்றுபுரியாமல் குழந்தை போல அவளை ஏறிட்டவனை கண்டவளுக்கு , சிரிப்பு வந்தது .
மற்றவர் அறியாமல் , அவன் இடுப்பை கிள்ளியவள் “போந்தாக்கோலி ” என்று சிணுங்கிவிட்டு செல்ல , அவனுக்கு வியர்க்க தொடங்கியது .
” என்னண்ணா பேன் கிழ ஒக்காந்தும் இப்படி வேற்குது ??” என்று வினவிய ரதியை ..
“வாயமூட்ரா கொரங்கு ” என்றவன் மைண்ட் வாய்ஸ் வைய்ய …முகத்தில் மட்டும் சமாளிப்பாக ஒரு புன்னைகையை தவளவிட்டான் .
பேசிக்கொண்டே மேகலையும் சுப்ரமணியும் எழுந்து சென்று கைகழுவ , வசியையும் அண்ணியையும் மாறி மாறி பார்த்த ரதியும் அவர்களை பின்பற்றி எழுந்துவிட்டாள் .
தனிமையில் இருந்த இருவரின் உள்ளமும் வெவ்வேறு நிலையில் தகித்துக்கொண்டிருந்தது .
நாற்காலியை இழுத்துப்போட்டு அவன் காலோடு கால் உரச அமர்ந்தவள் , அவனது தட்டில் இருந்தே இட்லியை எடுத்து உண்ணத்தொடங்கினாள் .
மெளனமாக அவள் உண்பதை வேடிக்கை பார்த்தவன் , அவள் கடைசி வாய் வைக்கையில் அவளது கைகளை பற்றினான் .
மென்னகையோடு அவனை ஏறிட்டவள் ..அந்த கடைசி துண்டை அவனுக்கு ஊட்ட அவன் வாய் அருகே கொண்டுசெல்ல ,
தலையை மறுப்பாக அசைத்தவன் ” எதுக்கு இப்படி நடிக்கற தே…துஜா ? ” என்று வெளிப்படையாக வினவ ..அவனை பார்த்து மர்மமாக புன்னகைத்தவள் கையை உதறிக்கொண்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டாள் .
அவளை யோசனையோடு பின்தொடர்ந்தது அவனது பார்வை .
வசியின் மனம் அன்று முழுவதும் , தனது வேளையில் லயிக்க வில்லை .
அவளது கோவம் ஒதுக்கம் அவமதிப்பு அனைத்தையும் எதிர்பார்த்தவனுக்கு , அவளது வெட்கமும் சிரிப்பும் அதிர்ச்சியாக இருந்தது .
ஏன் இப்படி நடிக்கிறாள் ? என்று ஒரே கேள்வி அவன் மூளையை வண்டாக கொடைந்தது .
நிச்சியம் நடிக்கிறாள் ..என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு ..ஆனால் காரணம் தான் பிடிபடவில்லை .
இதுஒரு பக்கம் அவனை சோதித்தது என்றால் , அவள் அவனிடம் காலையில் பேசியது , சிணுங்கியது ,வெட்கப்பட்டது , கிள்ளியது என்று அவை ஒருபுறம் அவனை சோதித்தது .
சும்மாவே அவளை விட்டு விலக முடியாதவனை , மேலும் சீண்டுவது போல அமைந்த அவளது நடவடிக்கைகள் …அவனை பாடாக படுத்தியது .
ஒரு ஏக்க பெருமூச்சோடு ..தனது அலுவலக கணினியை ஆப் செய்துவிட்டு, தனது மடிக்கணினியை அவன் திறக்க …அதில் லோக் இன் செய்யும் இடத்தில் முகப்பு படமாக து.ஜாவின் படம் இருந்தது .
ஒருவிரலால் அந்த படத்தை அளந்தவன் , தன் விரல்களை கட்டுப்படுத்திக்கொண்டு …பாஸ்வ்வ்ர்டை அடிக்க , அது தவற என்று காட்டியது .
இரண்டு மூன்றுமுறை முயற்சி செய்த்தவன் , பின்பு ஒரு யூகமாக “தேனு” என்று அடிக்க , அதுவும் தவறு என்றே வந்தது .
தலையை கைகளில் தாங்கியபடி அமர்ந்தவனுக்கு தீடிரென ஒன்று தோன்ற “போந்தாக்கோழி ” என்று அடித்தான் .
“பாஸ்வார்ட் கரெக்ட் ” என்று கணினி உள்ளே சென்றது .
“அடிப்பாவி ….எதுக்கு தான் என்ன எப்படியெல்லாம் சோதிக்கறாலோ ?” என்று புலம்பிக்கொண்டே உள்நுழைந்தவனுக்கு அடுத்த சோதனை தயாராக இருந்தது .
பிங்கும் நீளமும் கலந்த ஷிப்பாண் புடவையில் அழகாக தன் அழகை செல்பி எடுத்து அவனை காண்டாகினாள் துஜா .
“ஷீட் ” என்றபடி , கணணியை வேகமாக மூடியவன் , அதன்மேலையே தலைவைத்து படுத்துகொண்டான் .
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…