மந்திரம் -15
தன்னை தோளோடு அணைத்தவாறு அமர்ந்திருந்த கணவனின் கையணைப்பு துஜாவை சிந்திக்க விடாமல் குழப்பியது .
நேற்றுவரை இவன் யார் ? அவளுக்கும் அவனுக்கும் என்ன பந்தம் ? மனதால் வேறொருவரனை கணமேனும் கணவனாக எண்ணி மகிழ்ந்த அவளால் எப்படி இவனை கணவனாக ஏற்க முடியும் ?
தன் விருப்பம் ஒன்றே மதியாக , அவளது உணர்வுகளை ஆசைகளை கொன்ற இவனோடு எப்படி இணைவது ?
அது அவளுக்கு அவளே செய்யும் அநியாயம் அல்லவா ?
இவனை மனதளவில் ஏற்பது கூட தவறு .
பின்பு அவன் அவளுக்கு இழைத்த அநியாயம் , நியாயம் ஆகிவிடும் .பத்து வரிகளில் கவிதை எழுதிவிட்டால் அவன் உண்மையான காதலில் கசிந்துருகியவன் என்றாகிவிடுமா ?
ஏன் இந்த கவிதைகள் கூட அவளை கவிழ்க்க அவன் கையாளும் சுதாக இருக்கலாம் ..
அவள் வரும்போது வேண்டும் என்றே ..நான் பார்க்கவேண்டும் என்றேகூட அதைவைத்து எழுதி இருக்கலாம் …இருக்கலாம் என்ன ? அப்படி தான் இருக்கும் .
மனதின் எண்ண ஓட்டங்களை துண்டிப்பது போல , அவனது மூச்சு காற்று அவளது கழுத்தை வருடி சென்றது .
தீ சுட்டார் போல விசுக்கென்ன எழுந்துவிட்டால் துஜா .
அத்தனை நேரம் தன் கைவளைவில் கட்டுண்டு கிடந்தவளின் நெருக்கம் தந்த தாக்கத்தில் , தாபத்தோடு மழையின் மாயமும் சேர்ந்துவிட …பதமாய் அவளை நெருங்கிய வசிக்கு , இந்த விலகல் கோவத்தை உண்டாக்கியது .
அவனை உஷ்ணமாய் பார்த்த துஜா , யாதொன்றும் கடிந்து கூறாது மௌனமாகவே அவ்விடம் விட்டு விலகினாள் .
ஏனெனில் , இம்முறை தவறு அவள்பாலும் உள்ளதாகவே அவளுக்கு தோன்றியது .
மனதில் அவனுக்காக பரிதாவப்பட்டதே தவறு .
அவனுக்காக பரிந்து மழையில் அவனை காக்க சென்றது அதைவிடவும் பெரிய தவறு .
கடைசியாக அவன் கையணப்பை ஏற்றது மகா பாதகம் .
எதிர்ப்பொன்றும் இல்லாமல் போகத்தானே அவனுக்கு நெருங்க தோன்றியது .
அமைதியாக சென்றவளின் பாவனையை கண்ட வசிக்கு , அவள் வேண்டும் என்றே அவனை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக தோன்றியது .
சுர்ரென்று மோகத்தோடு கோவமும் தலைக்கேற , அவள் கையை பற்றி இழுத்த வசி , அவளை கட்டிலில் தள்ளி தன் எண்ணத்தை நிறைவேற்ற தொடங்கினான் .
துஜாவின் போராட்டங்கள் அனைத்தையும் ஆனாக்ஷியமாக முறியடித்தவன் , முன்னேற முன்னேற துஜாவின் முகத்தோடு மனமும் கல்லாகத் தொடங்கியது .
தனது செயலில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஜடம் போல கிடந்தவளை கண்ட வசி , அவளை உதறி எழுந்துவிட்டான் .
பேசாமல் சென்று பால்கனியின் கம்பியை இறுக்கமாக பற்றிக்கொண்டு மழையை வெறித்தவனின் முதுகை துஜாவின் பார்வை துளையிட்டது .
இவனுக்கான தண்டனை என்ன ? என்ன ? என்றவள் உள்ளம் இப்போது வெகுவேகமாக சிந்திக்க தொடங்கியது .
அவளை அடையவேண்டும் என்ற ஆசையில் தானே அவன் நடந்துகொள்வது எல்லாம் …அந்த ஆசையை கருக்க வேண்டும் .
அவன் வாழ்வில் ஒட்டுண்ணி போல ஓட்டிக்கொண்டே அவனை அழிக்க வேண்டும் . எப்படி அவளது ஆசையை கொன்றானோ அதே போல அவனது ஆசையும் மக்க வேண்டும் …!!!
இவனால் அவள் குடும்பம் சந்திக்கும் அவலங்களை அவன் குடும்பமும் சந்திக்க வேண்டும் .
சில திட்டங்கள் மனதில் உருவெடுக்க தொடங்க , தனது இந்த புதிய அவதாரத்தை எண்ணி மனதின் ஒரு ஓரத்தில் மருகியவாறே …கண்முடி படுத்துகொண்டாள் துஜா .
அன்றிரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்தவனாய் நடை பயின்று கொண்டிருந்தான் வசி .
தனது செயலால் மேலும் மேலும் அவள் தன்னை வெறுக்குமாறு நடந்துகொள்ளும் தனது புத்தியை என்ன செய்தால் தகும் ? என்று எண்ணி எண்ணி நொந்தான் அவன் .
தனது சுயமே மாறிவிடும் அளவிற்கு இவள் என்ன மந்திரம் செய்தால் ? ஏன் நான் இப்படி ஒரு அரக்கனாக இன்று நடந்துகொண்டேன் ? இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் செல்வது ? என்னைப்பற்றி என்னவெல்லாம் மோசமாக எண்ணி இருப்பாள் ?
கடவுளே !! எனக்கு என்னதான் ஆகிவிட்டது ?
புரியாமல் மனதோடு புலம்பிக்கொண்டிருந்த வசிக்கு ஒன்று தோன்றியது .
அதை எப்படி செயல்படுத்தலாம் என்ற யோசனையோடேவே அவனும் ஊஞ்சலிலேயே அமர்ந்தபடி உறங்கிவிட்டான் .
இருவரையும் பார்த்த மழை கூட மின்னலென கண்சிம்மிட்டி இடி இடியென உரக்க சிரித்தது .