மந்திரமென்ன மங்கையே -12

0
256

மந்திரமென்ன மங்கையே -12

கோபமும் சிரிப்பும் சரிவிகிதமாக அவனை ஆட்கொள்ள , முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டுதான் அறைக்குள் நுழைந்தான் வசி .

அறைமுழுக்க அவன் ஒட்டிவைத்திருந்த அவனுக்கு பிடித்த கால்பந்தாட்ட வீரர்கள் …அவனது குடும்ப புகைப்படங்கள் …அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவனது வெற்றி கோப்பைகள் பதக்கங்கள் …எவை ஏன் அவனது மெத்தை விரிப்பு முதற்கொண்டு அனைத்தும் மாற்றப்பட்டிருந்தது .

இவத்திற்கெல்லாம் மணிமுகுடம் போல பால்கனியின் கதவருகே அவனது படுக்கை விரிப்பும் ஒரு தலையணையும் மட்டும் கிடந்தது …போர்வை கூட இல்லை .

அனைத்தையும் நோட்டம் விட்டுக்கொண்டே பூனை போல அறைக்குள் நுழைந்தவன் , முதுகை காட்டியவாறு திரும்பி அமர்ந்திருந்த துஜா அருகே சென்றான் .

அவனது மடிக்கணினியில் ஏதோ மும்முரமாக அவள் வேலை செய்துக்கொண்டிருக்க , காலடி சத்தம் கூட அவள் காதிற்கு எட்டாத வகையில் பின்பக்கமாக நின்று எட்டிப்பார்த்தான் .

கணினியின் முகத்திரையில் இருந்த அவனது படத்தை அழித்துவிட்டு வேறு ஏதோ படத்தை வைப்பதற்கான முயற்சியில் அவள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தால்.

திரையை பார்த்தவன் , அதில் தென்பட்ட அவளது விதவிதமான புகைப்படங்களில் லயித்து பெருமூச்சுவிட….அவனது லயிப்பை கலைக்கும் விதமாக அங்கே மற்றொரு புகைப்படம் ..

நாட்டிய போஸில் அழகாக அவள் சிரித்துக்கொண்டிருந்த படத்தின் அருகே கொலேஜ் முறையில் மற்றொரு ஆடவனின் புகைப்படத்தை அவள் இணைக்க முயற்சி செய்ய …அத்தனை நேரம் அவனுள் உறங்கிக்கொண்டிருந்த மிருகம் வெளிவந்தது .

அது அவனின் புகைப்படம் அல்லவா ? அவளை நிச்சியம் செய்ய வந்த அந்த ஆடவன் ..அவன் பெயர் கூட ….ஆஹாங் கௌதமன் ….அவனது …என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் கழுத்தில் அவன் கட்டிய தாலியோடு மனதில் வேறொருவனை நினைத்து இந்த புகைப்பட சேர்க்கையை நிகழ்த்துவாள் ?

பொங்கிய ஆத்திரம் வழக்கம் போல அவனது புத்தியை மழுங்கடிக்க , ஆவேசமாக அவளை பற்றி இழுத்தான் வசி .

அவனை எதிர்பாராது முதலில் ஸ்தம்பித்து விழித்தவள் , அவன் கைகள் அவளது கையை அழுத்தமாக பற்றி இருப்பதை கண்டு …அவனை பொருள்பொதிந்த பார்வை பார்த்தாள் .

அந்த பார்வையே , ” என்னை தீண்டினால் நான் என்ன செய்வேன் என்பதை மறந்துவிட்டாயா ?” என்றவனை கேட்பது போல தோன்ற , அதை அலட்சியம் செய்தவன் …அவளை இழுத்து தன்னோடு இறுக கட்டிக்கொண்டான் .

“இப்போ என்னடி செய்வ ?” என்றவன் உள்ளம் கூக்குரல் இட , அவள் முகத்தை அவன் நிமிர்த்த முயற்சித்த போதே , அவன் முகம் ரத்தபாசை அற்றதுபோல வெளுத்தது .

ஏனெனில் …இம்முறை அவள் தாக்கியது அவனை ..

தற்காப்புக்காக …இப்படி நடந்தால் தேவைப்படும் என்றெண்ணி அவள் கையின் இடுக்கில் முன்பே எடுத்து வைத்திருந்த பிளேடால் அவன் நெஞ்சில் கீறிவிட…வழியிலும் எரிச்சலில் அவளை விலக்கியவன் ..

“ஏண்டி ?ஏன் ?” என்று கேட்டு பரிதாபமாக விழிக்க ..

“நல்லவேணும் …அன்பவி ராசா அனுபவி ..இது வெறும் ட்ரைலர் தான் ..மெயின் பிக்சர் இனிதான் ….இனி துஜாவின் ஆட்டம் ஆரம்பம்ல ” என்று மனதோடு மட்டும் எண்ணிக்கொண்டவள் , வாய்விட்டு எதையும் வெளிப்படுத்தவில்லை .

சற்று நேரம் ஒரு வெற்றி புன்னகையோடு அவனை பார்த்தவளால் , அதற்கு மேல் அவன் வழியில் தகிப்பதை காண சகிக்காமல் கீழே சென்றுவிட்டாள் .

பழி தீர்க்க செய்தது தான் …ஆனால் இது அவளது இயல்பும் அல்லவே ?

அவன்பால் தோன்றிய இரக்கத்திற்காக தன்னையே நொந்தவள் நேராக ரதியின் அறைக்கு சென்றாள் .

டொக்டொக் என்று கதவு தட்டும் ஒலியில் குழம்பிய ரதி , கதவை திறக்க அங்கே நின்ற துஜாவை கண்டதும் அவள் முகம் குழப்பம் நீங்கி மலர்ந்தது .

“உள்ள வாங்க அண்ணி ” என்றவள் அழைக்க ,

உதட்டை கடித்துக்கொண்டு ஒருநொடி தயங்கியவள் ,

“ரதிமலர் ..உங்க அண்ணா ரூம் கிளீன் பண்றப்போ உடம்புல கீறிக்கிட்டாரு …நீ போய் கொஞ்சம் அவருக்கு மருந்து போட உதவி செய்யறீயா ?” என்று தயங்கி தயங்கி கேட்க …ரதிக்கு ஒன்று புரிந்தது .

அறைக்குள் சென்று முதல் உதவி பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தவள் ,

“இந்தாங்க அண்ணி …நீங்களே அண்ணாவுக்கு மருந்து போட்ருங்க …ஏனா நாளைக்கு எனக்கு பரீட்சை …இப்போதான் படிக்க ஆரம்பிச்சேன் …அதுனால தான் …”என்றுவிளக்க …

துஜாவிற்கு கோவம் வந்தது .

“உங்க அண்ணனை விட எக்ஸாம் தான் உனக்கு முக்கியமா ?” என்று ஆற்றாமையோட அவள் வினவ , ரதிக்கு சிரிப்பு வந்தது .

“அண்ணனை என்னைவிட நல்லபாத்துக்க தான் இப்போ மனைவி நீங்க இருக்கீங்களே..எனக்கென்ன கவலை அண்ணி …” என்றவள் …துஜா மீண்டும் பேச வாய்திறக்கும் முன்பே ,

“சாரி அண்ணி …காலைல பேசுவோம் ..இப்போ படிக்கணும் ” என்று சொல்லி கதவை மூடிவிட்டாள் .

மூடிய கதவையே வெறித்துக்கொண்டு நின்றாள் துஜா .

“அப்பா …இந்த குடும்பமே இப்படி தான் போல ..சரியான திமிர் பிடிச்சவ ..” என்று எண்ணி கொண்டவள் …’ இப்போது என்ன செய்வது ? முதலுதவி பெட்டியுடன் சென்றால் அவள் அவனை காயப்படுத்தியதற்கு அர்த்தமே இல்லையே ?பேசாமல் அத்தையையும் மாமாவையும் உதவிக்கு அழைத்தாள் என்ன ? ‘ என்றவள் சிந்தனை செய்ய ..

மீண்டும் ரதியின் கதவு திறந்தது .

‘ஒருவேள மனசு மாறிட்டாலோ ?’ என்றெண்ணியபடி துஜா அவளை பார்க்க ..ரதியோ அவள் மனதை படித்தவள்போல “அண்ணி …அப்பா அம்மாவை எழுப்ப வேணாம் ..அவங்க மாத்திரை சாப்டுட்டு தூங்குவாங்க ..நீங்க சீக்கிரம் போய் அண்ணாவை பாருங்க ” என்ற சொல்ல ..

‘அவளை அறைக்குள் அடைத்து நாலு சாத்து சாத்தினால் என்ன’ என்று வந்தது துஜாவிற்கு .

“உன் உபதேசத்திற்கு ரொம்ப நன்றி ” என்றவள் கடுப்புடன் மொழிய, புன்னகை முகமாக கதைவை சாத்திக்கொண்ட ரதிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை .

“பாவம் அண்ணி …” என்றெண்ணி கொண்டவள் , அதன் பின் புத்தகத்தினுள் தலையை நுழைத்துக்கொண்டாள் .

துஜாவோ என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறி நின்றாள்.

கடைசியில் முதலுதவி பெட்டியை மட்டும் அருகே வைத்துவிடலாம் …வைத்தியம் அவனே பார்த்துக்கொள்ளட்டும் என்ற முடிவுக்கு வந்தவள் அவர்களது அறைக்குள் செல்ல …அங்கே வசி ரத்தம் பொசிக்கொண்டிருந்த சட்டையை கழற்றாமல் கூட ஏதோ நோட்டில் எதையோ எழுதிக்கொண்டிருந்தான் .

சத்தமான காலடிகளோடு அவள் உள்ளே நுழைய , வலியில் சுருங்கிய முகத்தோடு அவளை ஏறெடுத்துப் பார்த்தவனை காண அவளுக்கே பாவமாக இருந்தது .

தனது இலக்கத்தை அவனிடம் காட்டக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டவள் , உர்ரென்ற முகத்தோடு அவனருகே பெட்டியை வைத்துவிட்டு பால்கனிக்கு சென்றுவிட்டாள் .

அவள் செல்வதை ஒரு வித தவிப்போடு கண்டவன் , மீண்டும் தனது கவிதை நோட்டை பார்த்துவிட்டு ..ஒரு ஏக்கத்தோடு மீண்டும் வலை பார்த்தான் .அவள் முதுகு மட்டுமே தெரிந்தது .

எழுந்து குளியல் அறைக்குள் சென்றுவிட்டான் வசி .

அவன் செல்வதை உணர்ந்தவள் , அவனையே யோசனையோடு பார்க்க …காற்றில் காகிதம் உரசும் மெல்லிசை கேட்டு திரும்பிப்பார்த்தாள் .

சற்றுமுன்பு அவன் எழுதிக்கொண்டிருந்த நோட் ..காற்றில் பக்கங்கள் பறந்துகொண்டிருந்தது . மெதுவாக அதன் அருகே சென்றவள் அதை கைகளில் எடுத்துப் புரட்டினால் .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here