மந்திரம் -11
அன்று மாலை வசியின் குடும்பம் , துஜாவின் வீட்டிற்கு கிளம்பினார் . துஜாவினுள்ளே ஒரு போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது .
அவள் பிறந்து வளர்ந்த இடம் , காலையில் நடந்த ரசாபாசத்தில் அவளது சுற்றத்திற்கு கண்டிப்பாக விஷயம் பரவி இருக்கும் ..யார் யார் எப்படி எடுத்துக்கொண்டார்களோ ?
இந்த நிலையில் திரும்பவும் வீட்டிற்கு போகவேண்டுமா ? அவளுக்கு உள்ளே வருத்தமாக இருந்தது .
எதனை மகிழ்ச்சியாக கழிந்திருக்க வேண்டிய நாள் ? இப்படி ஆகிவிட்டதே ? தனது வாழ்விலேயே இது ஒரு கருப்பு தினம் என்று முடிவு செய்தவளுக்கு , இன்னொன்று தோன்றியது …
“எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா ? மறுபடியும் தாலி கட்டுர பாக்கியம் யாருக்கு கிடைக்கும் ” வசியின் குரல் அவளுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது .
என் சந்தோசத்தை அழுச்சுட்டு …உனக்கு சந்தோசமா ? விடுவனா ?
அனைவரும் கிளம்பி நடுக்கூடத்தில் அவளுக்காக காத்திருக்க , பொறுமையான அடிகளோடு படியில் இருந்து இறங்கி வந்தாள் துஜா .
அவள் வந்ததும் ஒரு மங்கோ லெஸி அவளுக்கு தரப்பட ,மறுக்காமல் அதை வாங்கி கொண்டவள் ஒவ்வொரு வாயாக ரசித்து ரசித்து குடிக்க தொடங்கினாள் .
அவளுக்காக ஏற்கனவே தனது குடும்பம் ஒரு மணி நேரம் காத்திருக்க , குடிக்கிறேன் பேர்வழி என்றவள் மீண்டும் காலம் தாழ்த்த வசிக்கு கோவம் வரத்தொடங்கியது.
அவன் முகம் சிவப்பதையும் …கைவிரல்களை அவன் இறுக்கமாக மூடி தன்னை கட்டுப்படுத்தி கொள்வதையும் கண்ட துஜாவிற்கு உள்ளே ஆனந்தமாக இருந்தது.
“ஓஹ் ….சாருக்கு கோவம் வருதா ? வரட்டும் வரட்டும் ….” என்று எண்ணியவள் , குடித்து முடித்ததும் எழுந்து மீண்டும் மாடி ஏற தொடங்கினாள் .
“துஜாவந்தி …..” என்று கோவத்தில் அவன் உறும , கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் மேலே மேலே சென்றுகொண்டிருந்தாள் அவள் .
அவள் மேலே சென்றதும் , மாடி பக்கம் வசி ஒரு அடி எடுத்துவைக்க , “நில்லுடா ” என்ற அதட்டலில் அவனை தடுத்துவிட்டார் மேகலை .
“என்னமா ?”
“எதுக்கு இப்போ கோவமா போற ?”
“நடந்ததை நீங்களும் தானே பார்த்தேங்க ? எவ்ளோ திமிரு இருந்தா அவ இப்படி பண்ணுவா ?”
“எப்படி பண்ணுனா ?”
“என்னமா ?புரியாதாமாரி கேக்கறீங்க ?நாமெல்லாம் அவளுக்காக காத்திருந்தா மஹாராணி அன்னநடை நடந்துவந்து குடுச்சுட்டு திரும்பவும் மேல போறாங்க ? புகுந்த வீடுன்னு ஒரு மரியாதை இருக்கா ?”
அவன் கோவமாக அவரிடம் விளக்கவும் சுப்பிரமணிக்கு சிரிப்பு வந்தது .
“எதுக்குப்பா இப்போ சிரிக்கறீங்க ?” என்று வசி கத்த .
“மெல்லமா சொன்னாலே எனக்கு காது கேக்கும் டா …ஏன் சிரிச்சேன் தான கேட்ட ? புகுந்த வீடுனுலா சொன்னியே அதுக்கு தான் …அவ என்ன விருப்பப்பட்டா இங்க வந்தா ? அது சரி அவ திமிரு பிடுச்சவன்னு சொல்லுறியே ? அவ அனுமதியே இல்லாம அவ வீட்டுக்குள்ளையே நுழைஞ்சு அவ கழுத்துல மூக்கணாங்கயிறு கட்டுன மாறி தாலி கட்டி கூட்டிட்டு வந்தியே ? அது பேரு என்ன பா திமிரா ?கொழுப்பா? இல்ல சர்வாதிகாரமா ?”
தந்தையின் குற்றச்சாட்டும் அவளுக்கு அவர் பரிந்து பேசியதும் வசிக்கு இன்னும் கோவத்தை கிளப்பியது .
இந்த கோவம் அவனது இயல்பு அல்ல …இன்று தான் அவனுக்கு ஏனோ எப்படி சடார் சடார் என்று கோவம் வருகிறது …அதற்கு காரணமும் துஜா தான் .
அவனோடு காரில் ஏறிய நொடி முதல் இந்த நொடி வரை அவனிடம் அவள் பேசவே இல்லை . அவள் தன்னை ஒதுக்குவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .
தந்து தப்பை உணராமல் , துஜா மீது கோவம் கொண்டான் அவன் .
அவன் யோசனையோடு நிற்கையிலேயே , வெளியே ஒரு கார் வந்து நின்றது .
“அப்பா …அண்ணியோட அப்பாலா வராங்க ” என்று ரதி சொல்லிக்கொண்டிருக்கும் போதே ,
“வாங்கப்பா ” என்று வாய்நிறைய சிரிப்போடு அவர்களை வரவேற்றவாறே கீழே இறங்கி வந்துகொண்டிருந்தாள் துஜா .
அவள் நடந்து வந்தால் என்பதை விட பறந்து வந்தால் என்றால் சரியாக இருக்கும் .சற்று முன்பு இருந்த அவளது கடுவன் பூனை முகம் மறைந்து புள்ளிமான் போல துள்ளி குதித்து வந்தவளை கோவம் தவிர்த்து ஆசையாக ரசித்தான் வசி .
என்னதான் கோவம் என்றாலும் அவனது அழகு மனைவி அல்லவா ?
“என்ன சார் நீங்களே வந்துடீங்க ? நாங்க தான் வரும்னு சொல்லி இருந்தோமே ?” என்று சிறு தங்களோடு மேகலை வினவ ,
“ஆமா மா …ஆனா பாப்பா தான் எங்களை வரச்சொன்னா …அவ அம்மாவும் இங்க வரணும்னு சொல்லிட்டு இருந்தார்களா ..சரிதான்னு நாங்களே கெளம்பி வந்துட்டோம் ..” என்றவர் சொல்ல ..
“ஆமா அத்தை …நா தான் வரச்சொன்னேன் …உங்கள கேக்கமா சொல்லிட்டேன் …கோவமா அத்தை ?” என்று தனது துறுதுறு விழிகளோடு குழந்தை குரலில் அவள் கேட்க …அவளை ரசித்த மேகலை “இப்போதான் மா தெரியுது ?ஏன் என்பையன் இப்படி கல்யாணம் செஞ்சான்னு ” என்று மனதிற்குள் எண்ணி கொண்டவர் ….அவளிடம் “அதெல்லாம் இல்ல டா ” என்று மட்டும் புன்னையோடு சொன்னார் .
அதன் பின் பெரியவர்கள் திருமணம் பற்றி பேசத்தொடங்க , சற்று நேரம் அமைதியாக இருந்தவள் “நான் ஒன்னு சொல்லலாமா ?” என்று பதிவிசாக கேட்டாள் .
“சொல்லுமா ” என்று அனைவரும் அவளை நோக்க , ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை வசி பக்கம் வீசியவள் , ” கல்யாணம் ஆனது ஆகிருச்சு ….என்ன பொறுத்த வர …ஊரு உலகத்துக்காக எதுக்கு இன்னொரு முறை பண்ணனும் …எனக்கு அதுல இஷ்டம் இல்லப்பா …உங்களுக்கெல்லாம் பண்ணனும் ஆசையா இருந்தா பண்ணுங்க” என்று அவள் பெருந்தன்மையாகவும் அதே சமயம் காரியமாகவும் சொல்ல , வசிக்கு புரிந்துவிட்டது .
மற்றவர்களும் அவள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்தனர் …இருப்பினும் ஒரு முறை தம்பதி சமேதராக இருவரின் திருமணம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிக்க எளிமையாக ஒரு வரவேற்பு மட்டும்வைக்கலாம் என்று முடிவு செய்தனர் .
இதற்கு துஜாவும் சம்மதம் தெரிவித்தால் .
பரிதாபம் என்னவென்றால் …வசியின் கருத்தை யாரும் கேட்க கூட இல்லை …
பேசி முடித்து அனைவரும் கிளம்பிச்செல்ல , அத்தோடு அவள் முகத்தில் இருந்த சிரிப்பும் போய்விட்டது .
இளக்காரமாக அவனை பார்த்து சிரித்தவள் , அவர்களின் அறைக்கு சென்றுவிட்டாள் .
அப்போதைக்கு வேலை இருப்பதாக சொல்லி வெளியே சென்ற வாசி ,நள்ளிரவின் தான் வீடு திரும்பினான் .
நேராக அவன் அறைக்கு அவன் செல்ல , அந்த அறையை கண்டவனுக்கு எப்படி அதை ஏற்றுக்கொள்வது என்றுதான் புரியவில்லை ?