பொறுப்பான கணவர்

0
55

தினமும் ஒரு குட்டி கதை

நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவம் வாய்ந்தவராக இருக்கலாம்.. அறிவு ஜீவியாக இருக்கலாம்.

ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப் போட்டு கணிக்கவும்.அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக் கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவறக் கூடாது.

மாலையில் நடைப் பயிற்சியைமுடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தனர்.வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்…

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத் தொடங்கினர். கணவர் வேகமாக ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும்போது தான் மனைவி பாலத்தை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள்.அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்…

இருட்டில் எதுவும் தெரியவில்லை. மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது…தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள்.கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது.இப்படி பயந்து அழைக்கிறேன்,. என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே என மிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்து விட்டாள்… கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக் கொண்டு இருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு எதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாக தோன்றும்…

ஆனால், உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போதுதான் அவரின் உண்மையான அன்பு தெரிய வரும்.

ஆம்.,நண்பர்களே..,

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.தூரத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்க்கையை பார்த்தது உண்டா நாம்?நாம் எப்போதும் இந்த கோணத்தில்தான் அனைவரிடம் பழகவேண்டும்.

அப்போதுதான் கோபம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்…

வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here