ஆட்டோவின் அசைவில் லேசாக மயக்கத்தில் இருந்து விழித்தவள் கண்ணை கசக்கியபடி பார்க்க எதிரில் பார்த்தது கதிரின் கலங்கிய முகத்தை தான்.

கதிர் நீங்களா.. என்ன ஆச்சு இப்போது எங்கே போறோம்..

சரி தான் உனக்கு என்ன பிரச்சினை ஏன் நடுரோட்டில் உருண்டுட்டு இருந்த என்ன செய்யுது.

தலைவலி எப்பவும் வர்றது தான் இன்றைக்கு கொஞ்சம் அதிகம் ப்ளீஸ் வண்டியை வீட்டுக்கு திருப்புங்க இன்றைக்கு ஆபீஸ்க்கு லீவ் போட்டிருக்கலாம்.

அங்கிள்கிட்ட அப்போதே லீவ் சொல்லிவிட்டேன் நேரா ஹாஸ்ப்பிடல் போய் செக் பண்ணிக்கலாம்.

கதிர் ப்ளீஸ் எனக்கு ஹாஸ்ப்பிடல்னா ரொம்ப பயம் வீட்டில் ரொம்ப நாளா கூப்பிட்டுட்டு இருக்கறாங்க நான் தான் வரமாட்டேன்னு சொல்லிட்டு இருக்கிறேன்.

ஸாரி யாழினி இப்போது நேரா போய் எதுவும் இல்லைன்னா இனி தொந்தரவு செய்ய மாட்டேன். அங்கே பார்க்கும் போது எப்படி இருந்தது தெரியுமா.. என்னோட உயிர் என் கையில் இல்லை சொன்னா உனக்கு புரியாது.

அவன் சொல்லவருவது லேசாக புரிவது போல் தோன்ற குழப்பத்தோடு அவனை பார்த்தாள் அதற்குல்லாகவே அந்த பிரபலமான ஹாஸ்பிடலின் முன்பு ஆட்டோ நின்றிருந்தது.

வா என்றபடி முன்பு நடக்க கதிர் அப்பாவை வரச்சொல்லறேன் உங்களோட போனை கொடுங்கள் என்னோடத இன்றைக்கு வீட்டிலேயே விட்டுட்டு வந்திட்டேன் என கேட்க..

நம்பர் குடு நானே சொல்லிடறேன்.

ப்ளீஸ் கதிர் வீட்டுக்கு போயிடலாம் நிஜமாகவே ஹாஸ்ப்பிடலோட அட்மாஸ்பியர் எப்பவும் புடிக்கறது இல்லை.

பிடிக்கும் வா முதலில் ஒரு காப்பி குடிச்சிட்டு உள்ளே போகலாம். இங்கே டாக்டர் என்னோட ப்ரெண்டு தான் முன்னமே சொல்லிவிட்டேன்.

கதிர் எனக்கு மெடிக்கல் இன்சியூரன்ஸ் இருக்கு அதையாவது எடுத்துவிட்டு வரச்சொல்லறேன் அம்மா அப்பா கூட இருந்தா எனக்கு பயம் இருக்காது.இவள் சொல்லவும் சரி என தனது மொபைலில் அழைப்பு விடுத்தான். நடந்ததை சொன்னவன் இவளது முகம் பார்த்து எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க வீட்டில் சொல்லி உங்கள் வீட்டுக்கு பேச வரச்சொல்லவா..

வாய் வரை எடுத்து சென்ற காஃபியை அப்படியே நிறுத்தியபடி இவனை பார்க்க..

என்ன அப்படி பார்க்கற.. தப்பா எதுவும் கேட்கலை..

இந்த ஹாஸ்ப்பிடலில் வச்சா இத சொல்லணும் இவ்வளவு அவசரம் ஏன்?

ஏன்னா அங்கே உன்னை பார்த்ததும் தோன்றின பதட்டம் அது தான் என்னோட மனசை சொல்லிச்சு.. நீ என்ன சொல்லற..

நிஜமாகவே சிரிப்பு வருது கதிர் என்னோட வீட்டில் சம்மதிக்க மாட்டாங்க சோ தேவை இல்லாம முயற்சி செய்யாதிங்க அப்பா வந்ததும் நீங்க புறப்படுங்க..

நோ வே அவ்வளவு சீக்கிரம் உன்னை விடமாட்டேன். அப்போது மட்டும் அல்ல அவளது தகப்பனார் வந்த பிறகும் வேலை செய்யும் இடத்தில் இவளது முதலாளியின் பெயரை சொன்னவன் அவர் என்னுடைய அங்கிள் தான் இங்கே உங்கள் பொண்ணு கூட ஹெல்ப்க்கு இருக்க சொன்னாங்க என மாலை வரை இவளது அனைத்து டெய்ஸ்டுகளும் எடுக்கும் வரை கூட இருந்தவன் அடுத்த நாள் மறுபடியும் அழைத்து வரச்சொல்லி இருக்க புறப்பட்டு சென்றான்.

அடுத்த நாள் அதே போல் வந்து இருந்தவனுக்கு மருத்துவ மனையின் ரிப்போர்ட் வேறு சொன்னது. கேட்ட இவனுக்கு மட்டும் அல்ல யாழினியின் தாய் தந்தைக்கும் அதிர்ச்சி தான்.

தலையில் முளைக்கு அருகில் கட்டி இருப்பதாகவும் அதை உடனே அறுவைசீகிட்சை செய்து அகற்ற வேண்டும் என்றும் இனி தாமதித்தால் உயிருக்கு ஆபத்து என கூற..அத்தனை பேரின் தலையிலும் இடி விழுந்தது போல இருந்தது இந்த தகவல்..

அதுவும் பிழைப்பதற்கு வாய்ப்பு கூட சற்றே குறைவு என கூறவும் அத்தனை பேரின் முகத்தில் மகிழ்ச்சி முற்றிலுமாக மறைந்து இருந்தது.
ஒரு மனதாக அங்கேயே அட்மிட் செய்ய முடிவு செய்து அப்போது வீட்டிற்கு புறப்பட்டு வந்தனர்.

வீட்டிற்கு வரவுமே தனது பெயர் கூடவே தனது குடும்ப பின்னனி மொத்தமும் சொன்னவன் தனது விருப்பத்தை சொல்ல .. யாழினியின் தகப்பனாருக்கு கண்கள் கலங்கி இருந்தது. பெண்ணின் வாழ்வே கேள்விக்குறியாக இருக்க என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்தார்.

கதிர் தனது முடிவில் தெளிவாக இருந்தான் அங்கிள் என்னோட குடும்பத்தை அழைச்சிட்டு வரேன் முறைப்படி நிச்சயம் வச்சிக்கலாம். பிறகு கல்யாணம் பண்ணிக்கறேன். எனக்கு உரிமையான பொண்ணு அப்படிங்கற பேரோட அவள் ஆபரேஷனுக்கு போகட்டும்.

சொன்னது போலவே இரண்டு நாளில் வர இவன் எடுத்து வந்த பட்டுசேலையில் முக்கிய உறவினர்கள் முன்பு எளிய முறையில் நிச்சயம் முடிந்தது அடுத்த நாளே ஹாஸ்ப்பிடலில் இவளை சேர்த்தி இருந்தனர் அவளது குடும்பத்தினர்.

வாழ்விற்கும் சாவிற்கும் நடந்த போராட்டம் அது. கூடவே நகராமல் அவளோடு கூட நின்றான் கதிர் பயத்தில் இன்னும் உடல் மெளிந்து தெரிந்தால் யாழினி.. அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளை சிரிக்க எதிர் காலத்தில் நமது வாழ்க்கை இப்படி இருக்கும் என ஏதேதோ சொல்லி அவளை ஒருவாரு தேற்றி இருந்தான்.

கதிர்ன் வீட்டில் கூட இரண்டு முறை இவளை பார்த்து விட்டு சென்று கொண்டு இருந்தனர்.
அடுத்த நாள் விடிந்ததும் ஆபரேஷன் என கூறி இருக்க.. டாக்டர் தனியாக இவனை அழைத்து கூறி இருந்தார்.

ரிஸ்கியான ஆபரேஷன் சைட் எபக்ட் மாதிரி பழையது மறக்க கூட வாய்ப்பு இருக்கு சில நேரம் நேரடியாக கோமாவுக்கு போணாலும் போயிடலாம்.. நீங்க எதுக்கும் மனசை தயார் நிலையில் வச்சிக்கோங்க.. நாங்க டாக்டர் தான் கடவுள் கிடையாது மேக்கிசம் எங்களால் முடிஞ்சத செய்யறோம் என கூறி இருந்தார்.

அடுத்த நாள் விடியற்காலையில் இவர்களை அழைத்தவர் பார்த்து பேசிக்கோங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆபரேஷன் தியேட்டர் அழைச்சிட்டு போயிடுவோம் என்க ..முதல் முதலில் யாழினியின் தாய் தந்தை உள் சென்றவர்கள் அழுதபடி வெளியில் வர அடுத்ததாக கதிர் அவளை காண நுழைந்தான்.

நீண்ட நேரம் அழுத்தினால் முகம் வீங்கி இருக்க தலை மொட்டை அடித்து இருந்தது. இவனை பார்க்கவும் மறுபடியும் அழ அவள் அருகில் சென்றவன் தோளோடு அவளை இருக்கி அணைத்திருந்தான். அவளது கண்ணீர் அவனது சட்டையை நனைக்க அழாதே யாழ் சரி ஆகிடும் உனக்கு ஓன்றும் ஆகாது உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுட மாட்டேன்.

ம்…ம்… என்ற பதில் மட்டுமே அவளிடம் இருந்து வந்தது. அவளது நெற்றியில் முத்தமிட்டவன் இங்கே தான் இருப்பேன் உனக்காக காத்திட்டு என நகர..

அவனது கையை பிடித்து நிறுத்தியவள் இரு ஒரு செல்ப்பி எடுத்துக்கலாம் பின்னாடி போட்டோ பார்க்கும் போது சிரிப்பு வரும். ஒரு ஞாபகத்திற்காக…

அடுத்து வந்த இரண்டு நாட்களுமே நரக நாட்கள் இரண்டு பகல் இரண்டு இரவு முடியும் போது லேசாக அசைவு தெரிய.. அடுத்து அனைவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது. ஞாபகம் இருக்குமா இல்லையா என..

தாய் தந்தையை அடையாளம் தெரிந்து பேசியவளுக்கு இவனை தெரிந்தாக காட்டிக்கொள்ளவும் இல்லை ஏன் இவன் இருப்பதை திரும்பி கூட பார்க்க வில்லை. இரண்டு வார்த்தை பேசிவிட்டு நகர இவன் அருகில் செல்லும் போது புரியாத பார்வை பார்த்து வைத்தாள்.

டாக்கரோ வெயிட பண்ணுங்கள் கதிர் உடனே ஞாபகம் வராது கொஞ்சம் கொஞ்சமாக தான் வரும். அடுத்த இரண்டு நாட்கள் கூட இவனை தவிக்க விட்டு ஐந்தாவது நாள் இவனை அழைத்தவள்.. கொஞ்சம் சிரிக்கலாம் கதிர் இவள் சொல்லவும் அவனுக்கு லேசான சிரிப்போடு கண்களில் கண்ணீர் வழிந்தது.

பயந்திட்டேன் யாழினி..

அதெப்படி விட்டுட்டு போவேன் எனக்காக நீ இருக்கற அந்த நம்பிக்கை தானே என்னை உயிர் பிழைக்க வைத்து இருக்கு அவ்வளவு சீக்கிரம் உன்னை அம்மா அப்பாவை விட்டு போக மாட்டேன். என்னோட பொண்ணுக்கு நீ அழுததை சொல்லணும்ல்ல .

இருபது நாட்கள் வரை மருத்துவ மனையில் இருந்தவர்கள் வீட்டுக்கு வர அடிக்கடி அவளை சென்று பார்த்தவன் வேகமாக அடுத்த ஆறு மாதத்தில் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்து இருந்தான்.

இதோ விடிந்தால் திருமணம் எனும் நிலையில் நடந்ததை நினைத்தவள் அப்படியே நித்திரைக்குல் சென்று இருந்தாள்.

கனவில் கூட இவளது கை கோர்த்து வலம் வந்தான் இவளது நாயகன் ஆறு மணிக்கு எழுந்தவளை திருமணத்திற்கு அலங்காரம் செய்ய வந்து இருந்தனர் அழகு நிலைய பெண்கள்..

மணப்பெண் அலங்காரத்தோடு சரியாக முகூர்த்த நேரம் நெருங்கும் போது இவளது சங்கு கழுத்தில் மங்கள நானை அணிவித்து இருந்தான். அங்கே இவர்களின் மனம் சங்கமத்தை போலவே வேகமாக கெட்டிமேளசத்தம் இசையாய் ஒலித்தது .

சேருமா சேராதா என நினைத்த பூ மாலை அழகாய் கதிரில் தோலில் சாய்ந்து இருந்தது. இனி என்றும் பயம் இல்லை என்பது போல..

நாமும் நீண்ட நாள் வாழட்டும் என வாழ்த்தி விடை பெறுவோம்.

நன்றி.
கவி செளமி.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago