[உண்மையில் இதுவரை நான் பயணிக்காத களம். வரலாற்று சான்றை மையமாக கொண்டு எழுதப்பட்ட கற்பனை சிறுகதை இது]

அது ஆறாம் நூற்றாண்டு .மக்கள் தங்களுக்குள் கிடந்த ஒற்றுமையை இழந்த காரணத்தால் கண்ணுக்கு புலப்படாத ஆண்டவனும் ,கழனியை ஆள அரசனும் பிரமாண்டமாய் உருவாக்கப்பட்டனர்.விதைத்தவன் வரி அளித்தான்.மாதம் மூன்று முறை மேகம் தவறாது மழை கொடுத்தது தாய் சேய் உறவாய், தாய்ப்பால் மழையாய்.மனிதன் மண்ணை உறவாக்கி கொண்டான் .

செழுமையான பகுதியின் அரசன் பாகமல்லன்.தனது மக்கள் மீது உரிமை கொண்டவன் அதனால் தானோ என்னவோ கடுமையான கட்டுபாடுகளை சாசனமாக்கி வைத்திருந்தான்.சிறு குற்றம் புரிந்தோரும் ஊனமாகி போனார்கள் அவன் ஆளுமையில் .அவனுக்கு நான்கு மனைவிகள் .எட்டு குழந்தைகள் .ஆனால் ஆண் வாரிசு பந்துமல்லன் ஒருவனே.அரச வாரிசுகள் தனது ஆறாம் வயதிலேயே தாயை பிரிந்தே ஆக வேண்டும் .அவனுக்கு தனியோரு தேசத்தில் எல்லா பயிற்சிகளும் வழங்கப்படும் .பந்து மல்லன் எல்லா பயிற்சிகளும் ,கல்வியும் கற்று திரும்பும் போது அவனது வயது இருபது .அரண்மனை திரும்பி இளவரசன் பதவியுடன் அவையில் அமர்த்தப்பட்டதும் அவனுக்கு தன்னுடைய நாட்டின் ஒரு பகுதியை அவன் வசம் ஒப்படைத்து அரசாள சொன்னான் பாகமல்லன் அனுபவம் பெற வேண்டி .தந்தையின் சொற்படி தனக்கான தேசம் நாடி சென்றான் பந்துமல்லன் .

அவன் சென்றடைவதற்குள் அழகான அரண்மனை காத்துக்கொண்டு இருந்தது அவன் வருகைக்காக.அதுமட்டுமின்றி அரண்மனை சார்ந்து அந்தப்புரமும் அமைக்கப்பட்டிருந்தது.நாட்டில் உள்ள அழகான பெண்களை தேடிப்பிடித்து அவர்களின் கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட்ட பின்பு அந்தபுரத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.பந்துமல்லன் தன்னுடைய பகுதி முழுவதும் பயணம் செய்து வளமான பகுதிகளை தேர்வு செய்து அந்த நிலத்தில் மண் வளம் ஆராய்ந்து பயிரிடும்படி உத்தரவிட்டான் .வரியில் சலுகையும் அறிவித்தான்.மக்களின் உணர்வுகளை மதித்தான்.ஒரு நாள் அந்தப்புரம் செல்ல தீர்மானித்து புறப்பட்டான் .அவன் வருகைக்கு அந்தப்புரம் காத்திருந்தது .அழகிகள் அணிவகுத்து நின்றனர் .ஒருவர் பின் ஒருவராக கடந்தானே தவிர யாரையும் தேர்வு செய்யவில்லை .ஒரு இடத்தில் அவன் கால்கள் நின்றது .அவன் எதிரே நின்ற அழகி மற்ற பெண்களை கர்வமாய் பார்த்து சிரிக்க அவனோ அவளை விலக்கி விட்டு அந்த அறையில் திரை மறைவில் நிற்கும் அந்த பெண்ணை நாடி சென்றான் .மெதுவாக திரையை விலக்கினான்.அவள் ஒரு இளம் தேவதை .கருமையும் ,வெண்மையும் மிகத்துல்லியமாய் கலந்த அழகி .கூர்மையான கண்கள் .அடர்ந்த புருவம்.மகரந்த இதழ்கள் .அவள் அவனுக்குள் ஆழ் மனதில் பதிவாகிக்கொண்டு இருந்தாள் .அவன் அவளது கரங்களை பற்றியதும் ஏதோ இனம் புரியாத கண்ணீர் இமைகளை பிளந்து வழிய பந்துமல்லன் விலகி நின்று “ஏன் அழுகிறாய் பெண்ணே ?எதற்கு இப்படி கண்ணீர் சிந்துகிறாய்?”என்றதும் அவள் “நான் உங்களுக்கானவள் தான்.என் குலம் அறிவேன்.இருந்தும் ஒரு ஆண்மகன் அரசனாய் இருந்தாலும் உரிமையின்றி தீண்டுகையில் பெண்மை கொஞ்சம் கலங்கத்தான் செய்கிறது “என்றதும் அந்த அறையை விட்டு வேகமாய் வெளியேறினான்.

மறுநாள் அரண்மனை தலைமை அதிகாரியை அழைத்து “உடனடியாக அந்தபுரத்தை அகற்றுங்கள்.அங்குள்ள பெண்களுக்கு அரசில் பணி அமர்த்த ஏற்பாடு செய்யுங்கள் .இன்று முதல் எனது ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் விலைமகள் முறையை தடை செய்கிறேன் “என்று அறிவித்தான் .அவனது சட்டம் நாடு முழுவதும் எதிரோலித்தது.மறுநாள் அந்தப்புரத்து அழகிகள் அனைவரும் புறப்பட்டு தங்களது பகுதியை நோக்கி போனார்கள் .அந்த தேவதையும் தயாராகி வெளியேறும் போது ஒரு கை பலமாக அவளை இழுத்து திரைக்குள் மறைத்து கொண்டது .பயந்த போனவளின் கண்களில் அவன் இதழ்கள் முத்தமிட விழிகள் விரைந்து தாழ் திறந்தவுடன் பந்துமல்லன் அவளிடம் “என் உடற்பசி போக்க ஆயிரம் அழகிகள் தேவைப்படலாம் ஆனால் இதயத்தின் பசி நீக்க என் மரணம் வரை இந்த ஒற்றை அழகி போதுமானவளே.இந்த ஆயுளின் ஒற்றை துணையாள் நீ மட்டுமே .நீ விரும்பினால், என்னை நம்பினால், இந்த அரண்மனை இனி தான் மகாராணி “என்றதும் அவள் அவன் பாதத்தில் விழுந்ததும் விழி நீர் அவன் பாதம் தீண்டியது.

இரவு அந்த நிலவின் முழுமையான ஒளி தூறலில் அவன் தன்னுடைய ஆசனத்தில் படுத்துக்கொண்டு அந்த நிலவின் அருகில் அவனுடைய காதலி செந்தாமரைவள்ளியை ஒப்பிட்டு கொண்டு இருக்கும் போது அறையின் விளிம்பில் அந்த கொலுசு மணிகளின் மென்மையான உரசலில் இசையை உணர்ந்து திரும்ப அவள் கையில் விளக்குடன் அவனை நெருங்கி வந்து அவள் உடலில் இருந்த மென்மையான ஆடைகளை ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்ந்தாள் .அந்த நிலவின் ஒளியில் அவள் தேகம் ஒளிர்ந்தது.ஆடையில்லாத நிர்வாணம் அவளுக்குள் வெட்கத்தை படர செய்ய இரு கரங்களும் அவன் பார்வை படர்ந்த அதரங்களை மறைத்து கொள்ள அவள் அருகே வந்தவன் “செந்தாமரை என்ற மலரை உரிமையோடு ஏற்றுக்கொள்கிறேன்.என் தேசம் முழுவதும் உன்னை என் மனைவி என்ற அங்கிகாரம் அளித்த பிறகே உன்னோடு இணைவேன்.தாய் மேல் ஆணையிடுகிறேன் “என்றவன் அறையை விட்டு வெளியேறினான் .செந்தாமரை அவனை வியப்புடன் பார்த்து கொண்டு இருந்தாள் .இருவருக்குள்ளும் காதல் இதயத்தின் ஆழம் வரை சென்றடைந்தது.பந்துமல்லன் அரண்மனையை விட்டு வெளியேறினால் செந்தாமரை அரண்மனை தாழ்வாரத்தில் அவன் வரும்வரை காத்திருந்தாள் .அவளுக்காக அவனும் விரைவாக அரண்மனை திரும்பினான் .தீண்டுதலே இல்லாத ஒரு கண்ணியான காதலை பந்துமல்லன் வாழ்ந்து காட்டினான் அவளோடு .அன்பை பரிசுத்தமாக பரிமாறினான்.

பாகமல்லன் செவிகளுக்கு பந்துமல்லன் காதல் விவகாரம் தெரிந்து விட மகனை நாடு திரும்ப ஆணையிட்டார்.பந்துமல்லன் செந்தாமரையுடன் திரும்பி வந்து தந்தையிடம் “என் காதலி இவள் .என் மரணம் உடன் வருவாய் என்று உறுதியளித்திருக்கிறேன்.மாறுவதற்கு இடமில்லை .கைவிடும் எண்ணமும் இல்லை.அஞ்சி விலகும் வம்சம் அல்ல எனது “என்று கூறியதும் அரசன் “அவகாசம் தேவைப்படுகிறது .எனது ஒரே வாரிசு நீ , அவசரத்தால் உன்னை இழக்க விரும்பவில்லை “என்று வழிஅனுப்பி வைத்தார் .

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு அந்நிய தேசத்தின் நட்பில் விரிசல் விழ போர் மேகம் சூழ்ந்தது.பந்து மல்லன் முதல் போருக்கு தயார் ஆனான் .மனைவியாய் செந்தாமரை வழியனுப்ப தயார் ஆனாள் .அவன் கிளம்பும் போது அவள் விழி ஈரமாக அவன் அவள் இதழ்களில் முத்தம் பதித்தான்.அதிர்ந்து விழித்தவளிடம்”இந்த ஈரம் நான் திரும்புவேன் என்ற நம்பிக்கையை விதைத்து கொண்டே இருக்கும் .திரும்பி வந்ததும் மாலையிடுவேன் என் உயிரே”என்றவன் படையோடு போர்களம் நோக்கி புறப்பட்டான் .

தினம் தினம் அரண்மனை தாழ்வாராத்தில் அவன் வருகைக்கு அவள் காத்திருந்தாள் .நான்காம் நாள் அவளை பாகமல்லன் அழைத்து வர சொன்னான் .அவளிடம் “அரசனுக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு .இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறு .என் தலைமுறையில் பிழை ஏற்பட விடமாட்டேன் .”என்றவன் அரண்மனை ராஜவைத்தியரை அழைத்து “இவளது அழகை நச்சு மூலிகை கொண்டு அழித்து இவளது தலைமுடியை மழித்து நாடு கடந்த ஏற்பாடு செய்யுங்கள் “என்ற உத்தரவிட்டான்.அதன்படி அவள் முகம் தீயில் கருகியது போல் அழிக்கப்பட்டு சிகை நீக்கி நாடுகடத்தப்பட்டாள்.ஆறுமாத கால போருக்கு பிறகு பந்துமல்லன் நாடு திரும்பினான் .அரண்மனை வந்தவுடன் தாழ்வாராத்தில் அவளை எதிர்ப்பார்த்து அவள் இல்லை என்றவுடன் மனதில் ஏதோ நிகழ்ந்திருப்பதை உணர்ந்தான் .வாடிய முகத்துடன் அரண்மனைக்குள் போனவன் அவளை பற்றி யாரிடமும் விசாரிக்காமல் அவள் தங்கியிருந்த அறைக்குள் சென்று படுத்து கொண்டான் .அவன் பிறந்ததில் இருந்து அவன் கண்கள் கலங்குவதை அவனே உணர்ந்தான் .இது இதயத்தின் தூண்டுதல் என்பதாய் உணர்ந்தான் .

நாட்கள் கடந்தும் அறைக்குள் இருந்து திரும்பவில்லை அவன் .அவனே நினைத்தாலும் உணவையும்,உறக்கத்தையும் உடல் ஏற்கமறுத்தது.கால்கள் தளர்ந்தது .ராஜவைத்தியரின் மருத்துவம் தோல்வியடைந்தது.பசியும்,உறக்கமும் அவனை நெருங்கவேயில்லை.பாகமல்லனிடம் வைத்தியர்”அரசே இது மனநோய் .இதயத்தின் இறுக்கத்தின் விளைவு .இளவரசரின் ஆயுள் பெளர்ணமி வரையில் மட்டுமே .”என்றதும் பாகமல்லன் அவரிடம் “ஒரு அரசனாய் சிந்தித்து தந்தையாய் தோற்று போனேன் என் மகனின் காதலிடம்.”நான்கு திசையிலும் காவலர்களை அனுப்பி செந்தாமரையை அழைத்து வர உத்தரவிடுங்கள்.மரணத்திற்கு முன்பு அவன் அவளை பார்த்தே ஆகவேண்டும் “என்றதும் ஆட்கள் நான்கு திசைக்கும் விரைந்தனர்.

பந்துமல்லன் மரணத்தின் விளிம்பிற்கு வந்தான் .அரண்மனை வாசலில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தான் .ஒருவர் பின் ஒருவராக வந்து மக்கள் அவனை பார்த்தப்படி சென்று கொண்டு இருந்தனர் .அந்த வரிசையில் முகம் மறைத்தபடி செந்தாமரை யாருக்கும் தெரியாதபடி பயந்தபடி மறைந்து மறைந்து வந்து கொண்டு இருந்தாள் .அவனை நெருங்க நெருங்க உடல் நடுங்க ஆரம்பித்தது அவளுக்கு.சிதைந்த முகத்திலும் கண்ணீர் அருவியானது.பந்துமல்லன் பாதங்களை தொட்டாள்.அவன் விழிகள் அசைவின்றி கிடந்தது .அரண்மனை காவலன் அவளை நகரும் படி சொல்ல அவளும் மனமின்றி நகர அவளது சேலையை அவன் விரல்கள் அழுத்தி பிடித்திருந்தது.இதமான தென்றல் அவள் முகத்திரை விலக்க சுற்றிஇருந்தவர்கள் அதிர்ந்து நிற்க ,அவள் அவன் அருகில் நெருங்கியதும், அவன் தனது கடைசி சக்தியை ஒன்றுதிரட்டி “என்னை தேடி வரவழைத்தேன் பார்த்தாயா?நம்மை பிரிப்பது ஆழ்கடலை பிரிப்பதற்கு இணையானது.பலனின்றி போகும் “என்றதும் அவன் முகத்துடன் முகம் புதைத்தாள்.சுற்றியிருந்த மக்கள் அனைவரும் தங்களது கரஒலிகளால் காதலர்களை மனமார வாழ்த்தினர்.பாகமல்லனும் வாழ்த்தினான் உளமார .

செந்தாமரைக்கு ராஜவைத்தியர் சிறந்த மூலிகைகளை கொண்டு அவள் அழகை திருப்பி தந்தார் .பந்துமல்லன் உடல் நலம் தேறியவுடன் மிகவும் சிறப்பாக மணவிழா நடந்துமுடிந்தது.

[பந்துமல்லன் என்ற கதாபாத்திரம் வோல்காவில் இருந்து கங்கை வரையில் இருந்து பெறப்பட்டது.மற்றவை எனது சிந்தனை ]

[முற்றும் ]

நன்றிகள் !
வணக்கங்களுடன் !

நான்
உங்கள்
கதிரவன் !

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago