அந்த ஒரு நொடிப்பொழுது, எனக்குள்
ஏதோ ஒரு மாற்றம் உண்டானது
இதுவரை நான் கண்டிராத உலகம்
எனக்குள் வசமானது போன்ற உணர்வு
உச்சந்தலையில் நீ கொடுத்த முத்தம் – என் உள் உள்நுணர்வுகளில் பாய்ந்தோடி – என் பதம் தொட்டு-பாதாளம் வரை பெயர்த்தெடுத்து – ஆகாயத்தில் அசுவாசப்படுத்துகிறது – என்னை
எனக்கு தெரியாமல் என்னுள் இருந்த – உன்னை ஒரு நொடி பொழுதில் வெளிக்கொணர்த்தாய் உன் ஒரு முதத்திற்கே இவ்வளவு வீரியமா?!! – வியக்கிறேன்!! இன்னும் என்ன என்ன விந்தை செய்யபோகிறாயோ!!
புரியாத புதிராக இருதேன் – புதியதொரு புதினமாக மாற்றிவிட்டாய் – என் பிறப்பிற்கு ஒரு புனிதத்தை கொடுத்துவிட்டாய்
ரவியின் (சூரியன்) வரவுக்கு காத்திருக்கும்
தாமரை போல ……………….. இந்த
பாஸ்கரனின் (குட்டி நிலவு) வரவுக்கு காத்து நிற்கிறேன்.
எனக்குள் நீ வந்தது ஒரு விந்தையானால்
உன்னில் நான் உறைந்தது புதியதொரு விடியலுக்கே
மலரட்டும் நாளை நல்லதோர் உலகம்
விடியட்டும் புதியதொரு தருணம்.