பிழை திருத்தப்பட்ட கவிதைகள் —சிறுகதை

0
60

[கதையை படிப்பதற்கு முன்பே சொல்லிவிடுகிறேன் காதலுடன் ஹாரர் கலந்தது.இதை நான் கையாள்வது முதல் முறை.குறை,நிறைகளை படித்தவர்கள் பதிவு செய்யவும் ]

அழகான மாலை நேரம்.சாலை எங்கும் மலர்களை தூவி மரங்கள் காதலர்களை அந்த சாலை ஓர நாற்காலிகளுக்கு அழைப்பு விடுத்தது.மணி சரியாக 5.23 ஆகும் போது அங்கிருந்த நாற்காலிகள் காதலர்களால் நிரம்பிவிட்டது.அப்போது மெல்லிய தென்றல் அங்கிருந்த பெண்களின் கூந்தலை வருட காதலர்கள் கவிஞர்களாகி போனார்கள் .சில நொடி பொழுதில் சாலையின் அந்த நடுப்பகுதியில் சின்ன வட்டமாய் சுழல் காற்று வர அது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.ஒரு சில நொடிகளில் அது விஸ்வரூபம் எடுத்தது .அங்கிருந்தவர்கள் மனதில் பயம் குடியேறியவுடன் அது வேகம் கூடி அங்கிருந்த நாற்காலிகளை ஒன்றின் பின் ஒன்றாக வீசி எறிந்து துவம்சம் செய்ய அங்கே இருந்தவர்கள் அலறியபடி ஓடி மறைந்தனர்.வினாடிகளுக்கும் சாலை அமைதி அடைந்தது .ஒரேயொரு நாற்காலி மட்டும் மிச்சபட்டிருந்தது.அப்போது சாலையில் கிடந்த மலர்கள் மெல்ல நகர்ந்து நாற்காலியின் மீது விழுந்தது .

தனது வீட்டில் இருந்து போலிஸ் ஸ்டேஷனுக்கு அதே சாலை வழியாக சென்று கொண்டு இருந்த அருண் பிரகாஷ் அந்த சாலை நிலைகுலைந்து கிடப்பதை பார்த்தப்படி தனது பைக்கில் போகும்போது உடைபடாத அந்த நாற்காலியை கடக்கும் போது பைக் திடீரென்று நின்று போனது .இறங்கி அதை ஸ்டார்ட் செய்து கிளம்பும் போது மனதில் ஏதோ ஒரு வித எண்ணம் தோன்றியது.அருண் பிரகாஷ் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் .

இரவு வேலை முடிந்து வீடு திரும்பியதும் அருண் பிரகாஷ் .தனது மனைவி அஞ்சலி மற்றும் நான்கு வயது பெண் குழந்தை அகல்யாவுடன் விளையாடி கொண்டு இருக்கும் போது அகல்யா அடிக்கடி வாசலை பார்த்து கொண்டே இருந்தாள் .அருண் அவளிடம் “குட்டிம்மா யாரடா பாத்துட்டு இருக்கீங்க ?அங்க யாரும் இல்லையே ?”என்றதும் அவள் மெளனமாகி தனது அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.அருணுக்கு அவளது நடவடிக்கை புதிராய் இருந்தது .நள்ளிரவு நேரம் அருண் யாரோ பேசிக்கொண்டு இருப்பது போல் உணர்ந்து எழுந்து பார்க்கும் போது அஞ்சலி தனியாக பேசிக்கொண்டு இருந்தாள் .கனவு என நினைத்து அவளை தொட்டு “யேய் படுடி.இன்னும் சின்ன புள்ள மாதிரி வாய் உளறிட்டு”என்றதும் அவனது கையை உதறியவள் வேகமாய் போர்வைக்குள் புகுந்தாள் .அருண் மேற்க்கொண்டு எதுவும் பேசாமல் படுத்து கொண்டான் .

மறுநாள் காலை அஞ்சலி நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள்.அருண் அகல்யாவுக்கு டிபன் செய்து கொடுத்து ஸ்கூல்ல விட்டுட்டு வீட்டுக்கு வந்தான் .அஞ்சலி எழவேயில்லை .தொடர்ந்து அவளை எழுப்ப முயற்சி செய்தான் .அப்போது அவள் அலறிக்கொண்டே எழுந்து “என்னை விட்று .ப்ளீஸ் “என்று யாரும் இல்லாத சுவரை பார்த்து அழுது கெஞ்சி கொண்டு இருந்தாள் .ஒரு நிமிடம் எதுவுமே புரியாமல் அருண் திகைத்து போய் நின்றான் .பின்பு அவளை கட்டியணைத்து கொண்டு”என்னடா ஆச்சு .யாருமே இல்ல பாரு .போலிஸ்காரன் பொண்டாட்டி இப்படி அழற?”என்றதும் அவள் “இல்ல அருண் .இங்க அவ இருக்கா .என்னை பாத்துட்டே இருக்கா .பயமா இருக்கு”என்றதும் அருண் திரும்பியதும் அங்கே யாருமே இல்லை.அவளை சமாதானப்படுத்தினான்.

இரவு அருண் தனது மனைவி மற்றும் மகளுடன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அகல்யா சாப்பிட்டவுடன்”குட்டிம்மா போய் ரூம்ல படுங்க.அப்பா அம்மாட்ட கொஞ்சம் பேசிட்டு வர்றேன் .ரூம் கதவ சாத்திக்கோ”என்றதும் அகல்யா ரூம்குள்ள போனதும் அஞ்சலியிடம்”நீ யார் ?உனக்கு என்ன வேணும் ?அஞ்சலிய ஏன் தொல்லை பண்ற?”என்றதும் இதை எதிர்ப்பார்க்காத அஞ்சலி அருணை பார்க்கும்போது திடீரென அவள் குரல் மாறி”நீங்க எனக்கு கடன் பட்டிருக்கீங்க சார் .அதை நீங்க சரி பண்ணியே ஆகணும் இல்லைன்னா உங்க மனைவி உங்ககிட்ட ஒரு விஷயத்த உங்க பிறந்த நாள் அன்றைக்கு சொல்லணும்னு நினைச்ச விஷயத்த நான் சொல்றேன் உங்க அஞ்சலி இப்ப கர்ப்பமா இருக்கா .என்னை அழிக்க நினைச்சா நானும் பதிலுக்கு அழிச்சிடுவேன்.உங்க குழந்தை இந்த உலகத்துக்கு வராது “என்றதும் துடித்து போன அருண் “உனக்கு என்ன வேணும்?”என்று கத்தியவுடன் அவள் “நீங்க இங்க டிரான்ஸ்பர் ஆகி வந்தவுடன் அட்டண்ட் பண்ணுன மூணாவது கேஸ் .இன்னும் முடியல .போய் கண்டுபுடிங்க.எனக்கு என் சாவோட மர்மம் தெரிஞ்சுக்கணும்.உங்களுக்கு வெறும் 48 மணி நேரம் தான் டைம் .அதுக்குள்ள முடிக்கணும்.இல்ல நான் முடிச்சிருவேன்”என்றதும் அஞ்சலி மயங்கினாள்.அவளை தூக்கிட்டு போய் ரூம்குள்ள படுக்க வச்சுட்டு தனது பைக்கை எடுத்துகிட்டு ஸ்டேஷனுக்கு போய் அந்த பைலை தேடி எடுத்தான்.அது ஒரு ஆக்சிடண்ட் கேஸ் .இறந்தது அருணா.இதே ஏரியால இருக்குற காலேஜ்ல இரண்டாவது வருட மாணவி.ஆக்சிடண்ட் பண்ணியவன் சரண்டர் ஆகி இப்ப விடுதலையும் ஆகிட்டான்.இந்த கேஸ்ல என்ன இருக்கு?யோசிக்க ஆரம்பித்தான் .அருணா தான் இப்ப அஞ்சலிக்குள் இருப்பதை உணர்ந்தான் .

காலையில் எழுந்தவுடன் அருணாவின் பெற்றோரிடம் இருந்து மீண்டும் விசாரணையை ஆரம்பித்தான் .அருணாவின் அறையில் தேடியதில் அவனுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கல .அவளுடைய வகுப்பறை நண்பர்களை ஒருவர் பின் ஒருவராக விசாரிக்கும் போது அருணாவின் காதல் விவகாரம் தெரியவந்தது .அவன் பெயர் அருள் என்பதையறிந்து அவனை தேடி போனான் .அருள் வீட்டில் அவனது மனைவி அபர்ணா தான் இருந்தாள் .அருள் வரும்வரை காத்திருந்து அவன் வந்தவுடன் “அருள் எனக்கு அருணாவை பற்றி தெரிஞ்சுக்ணும்”என்றதும் அருள்”அருணா என் காலேஜ் ஏஞ்சல் சார் .எல்லாத்துக்கும் அவள புடிக்கும் .அவளுக்கு என்னவோ என்னை மட்டும் தான் புடிக்கும் .படிப்பு எனக்கு ரோம்ப அவசியம் என் குடும்ப சூழ்நிலைக்கு .அதனால அவ காதல புரிஞ்சும் புரியாத மாதிரி இருந்தேன் .சுயநலமா இருந்தேன் .அவ பார்வைக்கு ஏங்கிட்டு இருப்பேன் ஆனா காட்டிக்க மாட்டேன் .சொல்ல போன அவள பாத்து பயந்து ஒதுங்குன நாள் அதிகம் .எத்தனை நாள் காதல் மறைச்சு வைக்க முடியும் .ஒரு நாள் அவ என்னை பாத்து “அருள் உன் மனசுல நான் இருக்கேன் அது கூட தெரிஞ்சுக்காம லவ் பண்ற முட்டாள் இல்ல .நீ நேசிக்குற உன் குடும்பத்த நானும் நேசிக்குறேன்.நீ எப்ப தோணுதோ அப்ப சொல்லு.அது பிரச்சினை இல்ல.ஆனா என்னை உன்கிட்ட இருந்து விலக்கி வைக்காத அது தான் வலிக்குது”என்று அவள் கண்ணீர்விட்டதும் தான் இத்தனை நாள் ஒரு பொண்ண எவ்வளவு ஆழமா காயப்படுத்தியிருக்கேன்னு புரிஞ்சது .அவகிட்ட மன்னிப்பு கேட்டேன் .படிப்பு முடிஞ்சு வேலை கிடச்சதும் காதல சொல்ல ஆசையா இருந்தேன் .

அவள காதலிச்ச அந்த இரண்டு வருஷத்துல அவகிட்ட பேசுனது கூட கிடையாது .நான் அழகா சேமிச்சு வச்சது அவளோட பார்வைகள மட்டும் தான்.கேம்பஸ் இண்டர்வியூல்ல பாஸ் பண்ணி அவகிட்ட காதல சொல்ல காத்திட்டு இருந்தேன் .பார்க் ரோட்ல என்னை பாத்துட்டே ரோட்ட கிராஸ் பண்ணும் போது தான் அவ என் கண்ணு முன்னாடியே ஆக்சிடண்ட் ஆகி இறந்துட்டா சார் .அதிலிருந்து இன்னும் நான் வெளிய வரவேயில்லை .எங்க வீட்ல வற்புறுத்தி அபர்ணாவ கல்யாணம் செஞ்சு வச்சாங்க .அவளும் ரோம்ப நல்லவ.என் மனநிலைய புரிஞ்சு நடந்துகிட்டா.இப்ப சந்தோசமாய் வாழ ஆரம்பிச்சிருக்கோம்”என்றதும் அருண் “சரிங்க அருள் தேவைப்பட்டால் வர்றேன் “என்று கிளம்பினான் .

எவ்வளவு தேடியும் அருணாவிற்கு நடந்தது ஆக்சிடண்ட் என்பது உறுதியானது .அருணா கொடுத்த நேரம் முடிய மிச்சம் ஒரு மணி இருக்கும் போது அருண் அஞ்சலியுடன் அதே பார்க் நாற்காலிக்கு அழைத்து வந்து உக்கார சொல்லி”அருணா நான் சொல்றத அமைதியா கேளு.தயவுசெய்து கோபப்படாத ப்ளீஸ் .இரண்டு நாள்ல உன்னை சார்ந்த எல்லோரும் இன்னும் எவ்ளோ நேசிக்குறாங்க தெரியுமா ?ஏன் தெரியுமா ?நீ ஒரு ஏஞ்சல் .உனக்கு நடந்தது ஆக்சிடண்ட் அல்ல நீ நினைச்ச மாதிரி அது ஒரு கொலை .உன்னோட காதல் அருளுக்கு புரியாத மாதிரி உனக்கும் இன்னோரு பொண்ணோட காதல் புரியல .அது உன் ப்ரண்ட் அபர்ணா .அவளுக்கும் அருள் மேல காதல் .உங்க காதல் தெரிஞ்சு விலகியிருக்கா ஆனா முடியல .ரோம்ப குழம்பி போயிருக்கா கடைசியா .நீங்க சேர போறத தாங்க முடியாத அவ தான் திட்டம் போட்டு ஆக்சிடண்ட் பண்ணிருக்கா.அருள் வீட்ல பேசி கல்யாணம் பண்ணிருக்கா . இது யாருக்கும் தெரியாது .ஏன் இது எனக்கும் கூட தெரியாது .உன்னை சுத்தி இருந்த எல்லாரும் உன்னை உண்மையா நேசிக்கும் போது எதிரிய எங்க போய் தேடுறது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவளே என்னை நேர்ல பாத்து சொல்லி அழுதா .அரஸ்ட் பண்ண சொல்லி கெஞ்சுனா.”என்றவன் எதிர் திசையில் கைகாட்ட அபர்ணா நடந்து வந்து அருணா காலில் விழுந்து”சார் எல்லாம் சொன்னாரு.என்னை இங்கேயே கொன்னுருடி.தினம் தினம் செத்துட்டு இருக்கேன் .இன்னும் உன் அருள் இதயத்துல நீ தான் இருக்க.என்னால போகவே முடியல .அவர் என்கிட்ட உன்னை தேடுறார் அங்கேயே நான் தோத்துட்டேன்.என்னால இப்படி வாழ முடியல “என்று கதறி அழுதாள் .

அவளையே பார்த்து கொண்டிருந்த அருணா “அழகான வாழ்க்கை கிடச்சிருக்கு .போய் வாழ பாரு .என் சாவுக்கு யார் காரணம்னு தான் தேடுனேன். உன்னை கொல்றது நோக்கம் கிடையாது .உன் காதல் கொலை பண்ற அளவுக்கு பெருசா தெரிஞ்சிருக்கு நம்ம நட்பு பெருசா தெரியலையா?என் வாழ்க்கைக்குள் அருள் மட்டும் தானா என்னோட அம்மா,அப்பா இல்லையா ? உன்னை எதுவும் பண்ணமாட்டேன் நீ என் அருள் கூட வாழ்ந்திட்டு இருக்க.உன்னோட துரோகத்த அவனால தாங்க முடியாது.என் அருள் மனசுல நான் வாழ்ந்துட்டு தான் இருக்கேன் எனக்கு அது போதும்.நான் போய்ட்டு வர்றேன் . “என்றதும் அஞ்சலி சுயநினைவுக்கு திரும்பினாள் .அனைவரும் கலைந்து சென்றனர் .

அருணாவின் நினைவு நாள் அன்று நிறைமாத கர்ப்பிணியான அபர்ணா அருளோடு அதே பார்க் நாற்காலியில் அமரவைத்து பேசிக்கொண்டு இருக்கும் போது அவர்கள் மீது மஞ்சள் நிற மலர்களை அந்த தென்றல் வாரி இறைத்து வாழ்த்தியதை அபர்ணா உணர்ந்து கண் கலங்கினாள் .

[முற்றும் ]

நன்றிகள் !
வணக்கங்களுடன் !

நான்
உங்கள்
கதிரவன்!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here