ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு
ஆப்பிள் வைத்திருந்தாள். அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்
வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள். பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து
போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த
முடியாமல் தவித்தாள்.
உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள். அம்மா இந்த ஆப்பிள் தான்இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்கோ என்றாள்….
நட்புக்களே, நீஙகள் யாராகவேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவமும்
இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும்
இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி
கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம்
தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல்
,அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம். மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…