தினமும் ஒரு குட்டி கதை
கிருபானந்த வாரியார், ஒரு முறை ஏராளமான குழந்தைகளுக்கு மத்தியில் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்.
‘நாளைய அறிஞர்களும், மேதைகளும், அதிகாரிகளும், இதோ உங்களுக்குள் தான் இருக்கிறார்கள்.நீங்கள் தான் நாளைய உலகில் பல சாதனைகளைச் செய்யப் போகிறவர்கள். நீங்கள் எல்லோரும் எப்போதும் கடைபிடிக்கவேண்டியது,
‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’
பசித்திரு – சுறுசுறுப்பாய் உள்ளவர்களிடையேதான் பசி இருக்கும்
தனித்திரு – இதுதான் கற்றவற்றையெல்லாம் செயல்படுத்தத் தூண்டும்
விழித்திரு – எந்த ஒரு காரியத்திலும் விழிப்புடன் இருக்கப் பழக வேண்டும்’
என்று கூறி பேச்சை நிறுத்தினார்.
உடனே, ஒரு சிறுவன் ‘இப்படியெல்லாம்இருந்தால் என்னங்க கிடைக்கும்?’ என்று துடுக்குத்தனமாககேட்டானாம்.
உடனே வாரியார், ‘நான் கூறிய மூன்று பதத்தின் முதல் எழுத்துக்களை இணைத்துப் பார் உனக்கே புரியும்’ என்றாராம் நாசூக்காக.