அன்று

மாசற்ற மனத்துடனே
ஶ்ரீ ராமனைப் பாட
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஶ்ரீஹனுமானே

என்று பூஜை அறையில் அனுமந்த சாலிசா பாடிக்கொண்டு கண்களை மூடி பூஜையில் ஈடுபடிருந்த லலிதாவிற்கு மாடியிலிருந்து ஹைபிட்சில் ஒலித்த நாக்கு மூக்கா பாடல் காதை கிழித்தது.ஒரு நிமிடம் கண் திறந்து மாடியை நோக்கியவர் மறுபடியும் கண்களை மூடி அனுமனை மனதினில் நினைத்து பிரார்த்தித்தார்.

இந்தியாவின் மூன்றாவது முக்கிய பிரசித்திபெற்ற நகரமான பெங்களூரில்
எல்லா முக்கிய பெரும் பணக்காரர்களும் வசிக்கும்
பகுதியில் அமைந்த அந்த பங்களாவில் தான் இத்தனை ஆர்பாட்டமும் ,அட்டகாசமும் .

லலிதா அருணாச்சலம் தம்பதிகளின் மூத்த மகன் சிவா, அடுத்தவள் வைஷ்ணவி, இளையவள் காயத்திரி . இதில் மூத்தவன் துடிப்பு மிக்கவன் இளம் கன்று பயமறியாது என்ற சொல்லிற்கேற்ப எதற்கும் அஞ்சாதவன் .வைஷ்ணவி சென்னையில் அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் மாணவி குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் வைத்தவள். தந்தையையும் அண்ணனையும் முன்னோடியாக கருதுபவள் எந்த இடத்திலும் தன்னுடைய சுயகவுரத்தை விட்டு தலைகுனிய கூடாது என்று தன்னம்பிக்கையும் , தைரியத்தையும் ,விடாமுயற்சியும் வளர்த்து கொண்டவள்.(நம்ம ஹீரோயின் நம்ம பில்டப் பண்ணலண்ணா எப்படி கொஞ்சம் அதிகம் தான் இருந்தாலும் மன்னிச்சுடுங்க பிளிஸ்)இளையவள் படு சுட்டி ஆனால் தமக்கை இல்லாத நேரத்தில் தமக்கையின் சொல்படி அன்னைக்கு தொந்தரவு தராதவள் பன்ணிரண்டாம் வகுப்பு மாணவி .(இப்போ அங்க என்ன? நடக்குதுனு பார்போம் வாங்க )

பூஜை அறையை விட்டு
வெளியே வந்தவர் மேல் அறைக்கு காபியை கொண்டு சென்ற மல்லியை நிறுத்தினார் லலிதா .
“மல்லி எங்கே போற” லலிதா அந்த குடும்பதின் தலைவி என்ற ஆளுமையின் கம்பீரத்துடன் வினவினார்”.
“பாப்பாங்களுக்கு காபி எடுத்துட்டு போறம்மா”.
என்றாள் மல்லி பவ்வியமாக.
“உனக்கு எத்தனை முறை சொல்றது காலை 6 மணிக்கு எழுந்து வருகிறவர்களுக்கு தான் காபி கொடுக்க வேண்டும்முன்னு சொல்லி இருக்கேன் “.உன்னை சொல்லி குத்தமில்ல எல்லாம் அவ பண்ற வேலை இன்னைக்கு அவங்களுக்கு காபி இல்லை நீ இத எடுத்துகிட்டு போ “என்றார் கோபமாக. 40 வயதை கடந்திருந்த லலிதா அந்த வயதிற்கே உரித்தான அனுபவமும் கண்டிப்பும் காட்டும் தாயாக.

“இந்த பசங்க எப்போதான் பூஜை சாமின்னு மதிப்பு தருவாங்களோ என்னைக்காவது காலையில சூரிய உதயத்துக்கு முன்னாடி எழுந்து இருக்காங்கலா? போரா இடத்துல என் பெயரை நார்நாரா கிழிக்க போராங்க …என்னபொண்ண வளர்த்து வச்சிருக்கான்னு” என்று தன்னுடைய இருப்பெண்களையும் அர்ச்சித்துக்கொண்டு மகள்களின் அறைக்கு சென்றவர் மகள்கள் இருந்த நிலையை கண்டு அதிர்ந்து நின்றார் .
ரெண்டுபேரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க? காலங்காத்தால இப்படி முடிய விரிச்சி போட்டு மெத்தமேல நின்னு ஆடிக்கிட்டு இருக்கிங்க!!! மூத்தவளை முறைத்துக்கொண்டே அக்காவா உன்னை பார்த்து அவ கத்துக்கனும் ஆன நீயே இப்படி ஆட்டம் போடுற … முன் ஏர் ஒழுங்க போனாதான பின் எர் சரியா வரும்”.என்று கூறிக்கொண்டே ஹோம் தியேட்டரில் அலரிக்கொண்டிருந்த பாடலை ஆஃப் செய்தார் .

” இப்போ என்ன நடந்ததுன்னு
இப்படி உங்க FM ஆன் பண்றிங்கம்மா??? ஏன்ம்மா முடிகட்டாமா டேன்ஸ் ஆடுரது national offence எந்த ரிக்காடும் இல்லையே என்றாள் மூளையை தட்டி யோசிக்கும் பாவனையுடன்.

நீ இல்லன்னா சின்னவ இருக்க இடமே தெரியமாட்டது நீ வந்தாதான் இப்படி நடக்குது உன்னை தைரியம் தன்னம்பிக்கை வளத்துக்க சென்னை அனுப்பி படிக்க வைத்தோம் .ஆனா நீ அதல்லாம் விட்டுட்டு விளையாட்டு
தனத்தையும் சொல்பேச்சி கேக்காம இருக்கறது எப்படின்னும் கத்து வச்சிக்கிட்டு வந்து இருக்கே. என்றார் கண்டிக்கும் தோரனையுடன் .

தாயின் கோபம் அதிகரிக்கவே
தங்களுடைய விளையாட்டையெல்லாம் மூட்டை கட்டிய மகள்கள் இருவரும் ஓடிவந்து தாயின் கழுத்தை கட்டிக்கொண்டனர்
“அம்மா ஜஸ்ட் உங்கள சீண்டினா எப்படி ரியக்ட் பண்ணுவிங்கண்ணு பாத்தா இப்படியா எங்கள திட்டுவிங்க முடியலம்மா … ஆனாலும் அம்மா..என்னைப் பற்றி நல்லாவே ரிசர்ச் செய்து இருக்கிங்க என்று தாயை கேளி செய்துக்கொண்டே அவரின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

அம்மா … உங்க சின்ன பொண்ண ரொம்ப குறைத்து எடை பொட்டுட்டிங்கம்மா உங்களுக்கு BPஏத்த வேணங்கற நல்லெண்ணத்துல அமைதியா இருந்த என்னைய பச்சபுள்ள ரேஞ்சுக்கு ட்ரிட் பண்றிங்க ” என்று சிணுங்கியவள் வராத கண்ணீரை தாயின் புடவை தலைப்பில் துடைத்தாள் சிறியவள்.

“அடிங் கழுதைகளா உங்களுக்கு கொழுப்பு அதிகமகிடுச்சி எல்லாம் உங்க அப்பாவும்அண்ணனும் கொடுக்குற செல்லம்… என்னையே கலாய்கிரிங்களா?” என்று வாய் பேசினாலும் கைகள் மகள்களை அரவணைத்து இருந்தது.

விடுமுறை தினங்களில் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி அண்ணன் தங்கையுடன் கொட்டமடித்து விட்டு சென்னையில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறாள் வைஷ்ணவி .

வீட்டில் எவ்வளவு விளையாட்டு தனமோ அதை விட படிக்கும் இடத்தில் கெட்டிகாரி,கோபக்காரி, சண்டைக்காரி சண்டைக்காரின்னா வாய் பேசாது கைதான் பேசும் (பின் குறிப்பு) காதல் என்ற வார்த்தை கேட்டாலே காதா தூரத்துக்கு ஓடும் ரகம் அதற்காக காதலிப்பவர்களை பிரிக்கும் குணம் கிடையாது .

“ஹலோ…ஏய் வைஷூ என்னடி பண்ற??”ஸ்வேதா
“நான் என்னடி பண்ணப்போறேன் எல்லாம்
கல்ச்சுரலப்பத்தி தாண்டி யோசிச்சிகிட்டு இருக்கேன் “
“அது சரி இந்த நைட்டுல என்னடி கால் பண்ணி இருக்க! வைஷூ.
“அது வந்து… அது வந்து..வைஷூ”ஸ்வேதா.
“அடியே… என்னடி ஆச்சி உனக்கு …? இப்படி இராத்திரியில் போன் பண்ணி ஏன் இப்படி வந்து போயின்னு உளர்ற ஸ்வே” வைஷூ
” நான் இன்னும் மூனு மாசத்துல உங்க ஊருக்கே வந்திடுவேன் “என்றவளின் குரல் நாணத்தை அப்பட்டமாய் பிரதிபலித்தது.
” ஏய் எனி குட் நீயூஸ்ஸாடி ” என்றாள் மகிழ்ச்சியுடன் வைஷூ.
“ம் ….ஆமா இப்போதான் அப்பாக்கு போன் பண்ணாங்க அவங்க வீட்டிலிருந்து ” ஸ்வேதா.
“கங்க்ராட்ஸ் ஸ்வே எங்க ஊருக்கே வரப்போரா எனக்கு ஜாலிதான்”வைஷூ.
“ஷாலு பக்கத்துல இருக்காளா? “ஸ்வேதா.
அந்த படிப்ஸ் கூடத்தான் இருக்கு …புக்குக்குள்ள தலைய விட்டுகிட்டு …நான் சொல்லிக்கிறேன் நீ வை ஃபோனை” வைஷூ.
சிரித்தவள் “சரிடி நாளைக்கு காலேஜ்ல மீட்பண்ணலாம் பை டியர்”.

கல்லூரியில் நண்பர்கள் பட்டாளம் சூழ்ந்திருக்க ஒரே ஆட்டம் பாட்டம் தான் . கல்சூரல்ஸில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களிடையே கடும் போட்டியே நிலவியது.ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் தனிபிரிவாகவும்,குழுவாகவும் தம்தம் திறமைகளால் அரங்கையே அதிரச்செய்தனர்.

எப்போதும் கல்லூரி ஒன்றிருந்தால் நாலு நண்பர்கள் சேர்ந்து இருப்பது உலக நியதி இதற்கு அந்த பல்களைகழகமும் விதி விலக்கல்ல

வகுப்பறை வாசலில் நின்றிருந்த நால்வரில் ஒருவன்
“மச்சி உன் ஆளு வைஷூ எதிலடா கலந்துக்கறா? “

“டேய் அவ வாயால சொன்னாளாடா ? அவ அவனுடைய அளுன்னு அவள சொல்ல வைக்கட்டும்டா மச்சி நான் ஒத்துக்குறேன் அவ அவனோட ஆளூன்னு “
என்றான் அதில் ஒருவன்.

“காலேஜ் முடியறத்துக்குள்ள அவ என் ஆளூ மச்சி” என்றான் விமல்.தன் நண்பனின் பேச்சில் சற்று கோபம் கொண்டவன் சவால் விடும் தோரனையில்

“அவள மடக்கறது ரொம்ப கஷ்டம்டா மாப்ள அவ கூட இருக்கறவ ஒரு அடங்காபிடாறிடா ” என்றான் மற்றோருவன்.

“அதையும் பாக்கிறேன்டா என்னோட அளூக்கிட்ட லவ் சொல்ல போறேன் நடுவுள தடுக்க அவ யாரு ” விமல். கண்களில் அலச்சியத்துடன் அவள் யார் என்னை என்ன செய்து விடமுடியும் என்ற எண்ணத்தில்.

கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வைஷூ பாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டி சென்றாள்.வைஷாலி கவிதை கட்டுறை போட்டியிலும் வென்றாள் . ஸ்வேதா குழு நடனத்தில் பங்கு கொண்டு பரிசுகளை பெற்று மகிழ்ச்சியில் திளைத்தனர். கடைசி வருடம் என்பதால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆரவாரம் செய்தனர்.

அதுவரை விமல் அவர்களின் பின் சுற்றினானே தவிர அவளை நெருங்க முடியவில்லை .

கல்லூரி வாழ்க்கை முடிந்து தங்களுடைய தோழி ஸ்வேதாவிற்கு திருமண பரிசு தேர்ந்தேடுப்பதற்காக வைஷாலியும் , வைஷ்ணவியும் ஸ்கூட்டியில் பயணம் செய்தனர்.
இதுவரையில் அவர்களை தொடர்ந்தவன் இப்படியே விட்டால் முடியாது என்ற எண்ணம் வர தன் காதலை சொல்ல அவர்களை பின் தொடர்ந்தான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Madhumathi Bharath

Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

Share
Published by
Madhumathi Bharath

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago