காலை 3.30 மணி , இருந்தும் அந்த ஜங்க்ஷனில் மனிதர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தனர்..
ஏற்கனவே டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் மெதுவாக படி ஏறி வந்து கொண்டு இருந்தனர்.. ஒரு 55 வயது மதிக்கதக்க ஆணும்.. 25 வயதுடைய பெண்ணும்… அப்பாவும் மகளும் போல..
ரயில் இருக்கும் ப்ளட்பாரம் வந்து அடைந்தவர்கள்.. நின்று இருந்த ரயிலில் அவர்கள் பதிவு செய்த பெட்டியை தேடி சென்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளை வைத்தனர்…. வைத்த பெட்டிகளை ஒரு முறை சரி பார்த்துவிட்டு… இருவரும் கீழே இறங்கினர்…
நீங்க கிளம்புங்க அப்பா… வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணுங்க..
இன்னும் 15 நிமிஷம் இருக்கு மா.. ட்ரெயின் எடுக்க.. நீ கிளம்புனா உடனே நான் கிளம்பறேன்…
நான் போய்ப்பேன் பா.. இது வரைக்கும் நான் என்ன தனியா போனது இல்லையா ??
நீ போய்ப தான்… நான் என்ன உன்னோட ஹைதராபாத் வரைக்குமா வரேன்னு சொன்னேன் ?? ட்ரெயின் கிளம்பின உடனே நானும் கிளம்பறேன்… அப்போ தான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கும்…இதுவே உன்னை அங்கே கொண்டு வந்து விட்டுட்டு ஹாஸ்டெல் எல்லாம் எப்படின்னு பார்த்துட்டு. உண்ண அங்கே செட்டில் பண்ணிட்டு வந்து இருந்தா நிம்மதியா இருக்கும்…
இதையே இன்னும் எத்தனை தடவை அப்பா சொல்லுவீங்க ?? எனக்கு காசு ரெடி பண்றதுக்குல்லையே நமக்கு நேத்து ஆயிடுச்சு…
ம்ம்ம் .. என்ன பண்றது மா.. எல்லாம் விதி…
விதின்னு ஒண்ணு இருக்கு அப்பா.. அதுக்காக எல்லாமே விதின்னு சொல்ல முடியாது…. சரி டைம் ஆச்சு நான் போய் உள்ள உட்காருறேன்…
“இரு மா.. சாப்பிட ஏதாவது வாங்கிக்கோ… ” என்று கூறிவிட்டு விரைந்து அங்கே இருக்கும் கடைக்கு சென்று 2 குட் டே பிஸ்கேட் பாக்கெட்களும்… 1 தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்து அவர் மகளிடம் கொடுத்தார்…
அதை வாங்கியவளோ அவரை நன்றாக முறைத்துக்கொண்டு ” வீட்ல இருந்தே தண்ணி பாட்டில் கொண்டு வந்துட்டேன்.. அப்புறம் இது எதுக்கு அப்பா ??”
14 மணி நேரம் ட்ராவல் மா.. 1 லிட்டர் தண்ணி போதுமா ?? இதையும் வெச்சுக்கோ.. சீக்கிரம் உள்ள போ.. ட்ரெயின் எடுக்க போறாங்க..
“ம்ம் சரிப்பா.. நீங்க பாத்துப்போங்க… ” என்று கூறிவிட்டு அவள் எரிய 2 நிமிடத்தில் ட்ரெயின்னை எடுத்துவிட்டார்கள்.. படியின் அருகிலேயே நின்று இவள் அவருக்கு கை அசைக்க… அவரும் இவள் தலை மறையும் வரை கை அசைத்து கொண்டு இருந்தார்…
சீட்டில் வந்து அமர்ந்து ஜன்னனில் தலை சாய்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் கோடுகள் அவள் கன்னத்தை நினைத்தது….
இவ்வளவு நேரம் அவள் தந்தையுடன் பேசியவள் இப்பொழுது கடவுளிடம் பேச ஆரம்பித்தாள்…
‘ஏன் ?? எனக்கு மட்டும் இவ்ளோ சோதனை ?? நான் என்ன கார் வேணும் , நகை வேணும், வீடு வேணும்னா கேட்டேன்?? நிம்மதியும் சந்தோஷமும் தானே கேட்டேன்.. எனக்கு அதை கொடுக்கலைனாலும் பரவாயில்ல.. என்னோட அப்பா, அம்மா , தம்பி , தங்கைக்கு கொடு… அவங்களுக்கு கொடுக்க வேண்டிய எல்லா கஷ்டத்தையும் எனக்கு கொடு .. நான் தாங்கிக்கறேன்… ‘ எப்பொழுதும் போல் இன்றும் கடவுளிடம் அதே வேண்டுதல்…
கடவுளும்… எப்பொழுதும் போல்… அவர் அவர் கர்ம பயனை அவர் அவர் தான் அனுபவிக்க வேண்டும் என்று அதே பதிலை அவளிடம் கூறினார்.. பாவம் அவளுக்கு தான் என்றும் போல் இன்றும் அவர் கூறியது கேட்கவில்லை…
யார் இவள்?? அவளுள் ஏன் இவ்வளவு சோகம், அவள் எப்படி பட்டவள் என்று போக போக கதையின் போக்கில் அறிந்து கொள்ளலாம்..
காலை 10.30 மணி…
எங்க அந்த சிடு மூஞ்சி வந்துருச்சா ???
தேவி.. மெதுவா பேசு .. யார் காதுளையாவது விழுந்துற போகுது …
ஏன் ?? விழுந்தா என்ன?? நான் மட்டுமா சொல்றேன்?? ஆபீஸ்சே தான் சொல்லுது..
ஆபீஸ்சே தான் சொல்லுது ஆனா அவனுக்குன்னு 2, 3 ஜால்ட்ரா தட்டிட்டு சுத்தறாங்களே அவங்க யார் காதுல விழுந்தாலும் மாட்டிப்ப … அதுவும் சிடு மூஞ்சி எப்போ வேணும்னாலும் வரலாம்..
ஆமா அப்படியே கரெக்ட் டைமுக்கு வந்துட்டாலும்.. 10 மணி ஆஃபீஸ்க்கு 11.30 ஆடி அசஞ்சு வறது… யாரும் கேக்கறது இல்ல … அந்த திமிரு…
நீ ஏன் இப்போ காலைலேயே அவரு மேல எரிஞ்சு விளற??
“வேண்டுதல் டீ.. நேத்து ஒரு பார்ட் அவனோட ப்ரொஜெக்ட்ல முடிச்சிட்டு என்ன டெஸ்ட் பண்ண சொல்லி இருந்தான்.. அதுவும் ஒரு கேஸ் சொல்லி அதுல பக் கண்டு பிடிக்க சொல்லி இருந்தான்.. அவன் டேவலப் பண்ணும் பொழுது வந்துச்சாம்.. இப்போ அதை என்னை கொண்டு வர சொல்றான்.. நானும் நேத்து முழுசும் பண்ணி பார்த்துட்டேன்… ஆனா அது வரல. ” என்று அவள் சோக கதையை சொல்லி முடிக்க…
“வரலைன்னு சொல்லிடு டீ.. ” என்று நேஹா கூறி முடிப்பதற்குள் தேவி அவளை முறைக்க …
“சாரி டீ….. ” என்று பம்பினால்…
அவன் கிட்ட சொன்ன .. என்ன பண்ணுவானு உனக்கு தெரியாதா ?? கேவலமா நம்மளை ஒரு லுக் விடுவான்.. அதோட நின்னுச்சா ?? அவன் பேச்சை யார் கேக்கறது??
“என்னன்னு சொல்லு டீ .. நானும் ஹெல்ப் பன்றேன்.. ” என்று நேஹா சொல்ல … தேவி சந்தோஷம் அடைந்தாள்..
அப்பொழுது இவ்வளவு நேரம் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த ஆண்மகன் கதவை திறந்து கொண்டு உள்ளே வர இருவரும் கப் சிப் ஆகினர்….
வந்தவன் இவர்கள் இருவரையும் சிறிதும் சட்டை செய்யாமல் உள்ளே சென்றான்… ஏன் அங்கே இவர்கள் இருவரையும் உயிர் உள்ள ஜீவனாக கூட மதிக்காமல் சென்றான்… இவர்களை மட்டும்மல்ல அந்த ஆபீசில் இருந்து ஒரு சிலரை தவிர அவன் யாரையும் திரும்பிக்கூட பார்க்கவில்லை..
நேராக உள்ளே சென்று அவன் கேபினில் அமர்ந்தான்…
“குட் மார்னிங் ஜி…” அவன் அருகில் அமர்ந்து இருக்கும் சுதாகர் கூறினான்…
இவனும் பதிலுக்கு குட் மார்னிங் சொல்லிவிடு அமர்ந்தான்….
ஜெகன் ஜீ…
சொல்லுங்க சுதாகர்…
ஒரு சின்ன பிரச்சனை ஜீ…
சொல்லுங்க …
இந்த ப்ரொடக்ட் விக்கிற இடத்தில்தான் எனக்கு பிரச்சனை.. அதை எப்படி செய்யறதுன்னு தெரியல… கொஞ்சம் பார்த்து தறீங்களா??
ம்ம் ஓகே ஜீ… டீம் மீட்டிங் முடிச்சிட்டு வரேன்…
ரொம்ப நன்றி ஜீ…
இதுக்கு எதுக்கு ஜீ ??
பின்பு இருவரும் சிரித்துவிட்டு அவர் அவர் வேலையை தொடர்ந்தனர்…
“ஜெகன் …… ஜெகன்… ஜீ….. ” என்று ஒருவர் கூப்பிட..
சொல்லுங்க ஹரிஷ் …
குட் மார்னிங் ஜி..
குட் மார்னிங் ஹரிஷ் ….
ஜீ ஒரு ஹெல்ப் எனக்கு…
சொல்லுங்க ஜீ…
நாளைக்கு நிறைய நியூ ஜாயினர்ஸ் வரங்கா… லாஸ்ட் டைம் ரெடி பண்ணுனா பிபிடி சாம்பிள் இருந்தா தாங்க.. நான் யூஸ் பணிக்கறேன்…
இருங்க ஜீ… நான் பார்த்து மையில் பன்றேன்…
தான்க்ஸ் ஜீ.. மறக்காம பன்னிடுங்க..
அதை தேடி அனுப்பிவிட்டு.. அவன் வேலையை தொடர்ந்தான்…